உலக பூனை தினம் ஆகஸ்ட் 8.
உலகளாவியரீதியில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி
உலக பூனை தினமாக
கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில்,
பூனைகள் தொடர்பிலான
சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!
உலகில் 40 வகையான பூனை
இனங்களில் 500 மில்லியனுக்கும்
மேற்பட்ட பூனைகள் உலகில்
வாழ்கின்றன.
ஆய்வுத் தடயங்களின் பிரகாரம்,
உலகில் கி.மு 3600
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
வீட்டுப் பூனைகள்
வாழ்ந்துவருகின்றன என
கண்டறியப்பட்டுள்ளது.
பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில்
ஓடக்கூடியவையாகும்.
பூனைகளுக்கு சுவை
அரும்புகள் இல்லை.
பூனைகள் 100 இற்கும் மேற்பட்ட
வித்தியாசமான சத்தங்களை
எழுப்பக்கூடியவையாகும்.
சராசரியாக பூனை ஒரு நாளில் 16-18 மணித்தியாலங்கள்
உறங்குகின்றன.
மனிதர்களின் கைரேகையினைப்
போன்றே பூனைகளின் மூக்கு
ரேகைகள்
தனித்துவமானவையாகும்.
பூனையின் காதில்
அவற்றின் இயக்கத்தினை
கட்டுப்படுத்தும் 32 தசை
நார்கள் உண்டு. இதனால்,
பூனைகள் தமது காதினை
180° வரையும்
அசைக்கக்கூடியதுடன், அவை
தனது இரண்டு
காதுகளையும்
தனித்தனியாக
அசைக்கக்கூடிய
ஆற்றலினையும்
கொண்டவையாகும்.
பூனைகளின் மோப்ப சக்தி
மனிதர்களை விடவும் 14 மடங்குகள்
அதிகமானதாகும்.
விண்வெளிக்குச் சென்ற
முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ்
நாட்டினால் 1963ம் ஆண்டு
அக்டோபர் 13ம் திகதி
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட
இந்தப் பெண் பூனை தனது
விண்வெளிப் பயணத்தின்
முடிவில் உயிருடன் பூமியினை
வந்தடைந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கே சுவாரஷ்சியமான விடயம்
என்னவென்றால் Félix என்கின்ற பாரிஸ் நகர
தெருப்பூனையே விண்வெளிக்கு
அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த
ஆண் பூனை தப்பிச்சென்றமையினால்
கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண்
பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
32 மாடிகள் (320மீற்றர்கள்)
உயரத்திலிருந்து பூனைகள்
கொங்கிறீட் தரையில்
விழுந்தாலும் அவை
பெரும்பாலும் உயிர்பிழைத்து
விடுகின்றன.
பூனையை போற்றுதும்!
எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும், என்ன டென்சனாக இருந்தாலும், ரிலாக்ஸ் பண்ண சிலர் பார்ப்பது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனை இடம்பெறும் கார்ட்டூன் தான். பூனையின் கண்களும், அதன் மீசையும் ஒரு அழகு தான். பூனையை தூக்கி அதன் தலையை ஆசையுடன் தடவி விட்டு பார்க்கும் சுகம் தனி தான்.
சாதாரணமாக, பூனை குறுக்கே போனால் சகுனத் தடை, காரியத் தடை என்று சொல்வார்கள். 'சகுனம் சரியில்லை, போற காரியம் ஜெயமாகாது; உள்ளே வா, ஒரு டம்ளர் தண்னி குடிச்சுட்டு போ' என்கிறோம். இது முழுதும் சரி அல்ல. ஏனென்றால் பூனைக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அதிலும் கடுவண் பூனைக்கு அபார சக்தி உண்டு. கரும்பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.
பூனைகள் எகிப்தியர்களால் வழிபடப்பட்டது. பூனைக்கு பல ஆயுள்கள், மறுவாழ்வுகள் (பிறவிகள்) என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் சமூக தாக்கத்தை இன்றும் உணரலாம். வி.ஐ.பி.க்கள் கோரும் ‘ஜெட்-க்ளாஸ் செக்கூரிட்டி’ கருப்பு பூனைகளுக்கு புல்லட் புரூஃப் வெஸ்ட் தயவில் ஆயுள் கெட்டி. எவரெடி பாட்டரியின் உருளைபரப்பில் உறையும் கருப்புபூனைக்கும் ஒன்பது ஆயுள்.
உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. செல்லப் பிராணிகள் என்று பார்க்கும்போது பூனையையும் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். அது குட்டி ஈன்றி அதனைப் பராமரிப்பது என்பதும் நல்லதுதான். பழங்காலத்தில் பூனை இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், எலி இல்லாத வீடும் இல்லாமல்தான் இருந்தது. அதனால் பூனையை வீட்டில் வளர்ப்பது ஒன்றும் தவறில்லை.
மதிமேல் பூனை, ருசி கண்ட பூனை, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என நினைக்குமாம்- இப்படி பூனை பற்றிய பழமொழிகள் உலவுகின்றன.
சாதரணமாக அதிக உயரத்தில் இருந்து குதித்தால் அடி அதிகம் படும். குறைந்த உயரத்தில் இருந்து விழுந்தால் அடி குறைவாக இருக்கும். பூனைக்கு இந்த விதி தலை கீழ்.
முதல் மாடியிலிருந்து விழும் பூனையைக்காட்டிலும், ஏழாவது மாடியிலிருந்து தரையில் விழும் பூனை அதிக சேதாரமின்றி தப்பிவிடும் என்று பௌதீகஸ்தர்கள் நிறுவியுள்ளனர். காற்றின் வழியே விழுகையில் பூனை பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்கிறதாம். காற்றின் உராய்வையும், குடை போன்ற வடிவத்தின் கீழ் மேல்புறங்களின் அழுத்த வித்தியாசங்களினாலும் கிட்டத்தட்ட மிதந்தவாறே தரையை அடைகிறது. தலைகுப்புறத் தள்ளிவிட்டாலும் சுதாரித்து இந்த ’பாரசூட் நிலையை’ அடைந்து விடுமாம். முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டால், சுதாரித்துகொண்டு இவ்வாறு பாரசூட் போல விழுவதற்குள் தரையை தொட்டுவிடுவதால் அடி பலமாக வாய்ப்பு அதிகம்.
Advertisement
பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும். ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம் அடைந்ததால் மக்கள் கவலையிலுள்ளனர். ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக