திங்கள், 8 ஆகஸ்ட், 2016

தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 07.


தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 07.
ஆகஸ்ட் 7, 1905-ல் தான் கொல்கத்தாவில் சுதேசி போராட்டம் முன்னெடுக்கப் பட்டது, கொல்கத்தாவின் டவுன் ஹால் பகுதியில் பிரிட்டிஷ் பொருள்களுக்கு எதிராக உள்நாட்டு பொருட்களை ஆதரிப்பது என்கிற போரட்டம் நடைபெற்றது.

நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

கைத்தறியில் நெய்யப்படும் பட்டு சேலைகள், எந்த அளவிற்கு வேலைப்பாடுகளை கொண்டுள்ளன என்பது, அநேகமாக பலருக்கு தெரிவதில்லை. அதை வெளிக் கொண்டுவருவதே, இந்த செய்தியின் நோக்கம்.

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டு சேலைகளை, நெய்யும் கைத்தறி நெசவாளர்களின் வேலைப்பாடுகள் திறன் மிக்கவை. காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. மிகுந்த பொறுமையும், கடின உழைப்பையும் செலுத்தினால் மட்டுமே, ஒரு நல்ல பட்டு சேலையை நெய்ய முடியும்.

மெச்சத்தகுந்த வகையில் பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, ஆகஸ்ட் 7ம் தேதியை, தேதிய கைத்தறி தினமாக, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இந்த தினத்தை நெசவாளர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இருப்பினும், கைத்தறியில் ஒரு பட்டு சேலை உருவாவது தொடர்பான ஒவ்வொரு செயல்பாடு களையும் பார்க்கும் போது, இத்தனை கட்டங்களை கடந்து தான், ஒரு பட்டு சேலை தயாராகிறதா என, வியப்பில் கண்கள் விரிகின்றன.
'பாவு'க்கு சாயம் போடுவதில் துவங்கி, 'பெட்னி' ஏற்றி, 'வாட்டு' போட்டு, ஒவ்வொரு 'பலவை'யாக சேலையை நெய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் தான், சிறுவயதிலேயே, இந்த தொழிலுக்கு வந்தவர்களால் மட்டுமே, இன்றும் அச்சு பிசகாமல், ஒவ்வொரு ரக பட்டு சேலையையும் பக்குவமாக நெய்ய முடிகிறது.
மேற்குறிப்பிட்ட சில வேலைப்பாடுகளை தவிர, அச்சு பிணைப்பது; புட்டா வாங்குவது; தார் சுற்று வது; இழை பார்ப்பது; சேலை மடிப்பது என,
ஏராளமான வேலைகள் இதில் பொதிந்துள்ளன. அத்தனையும் கற்று, ஒரு சேலையை நெய்யப்பட்டு, உடுத்தும் போது தான், அதன் அழகும், வேலைப்பாடுகளும் வெளியே தெரியும். சேலையின் ரகத்திற்கேற்ப, நான்கு நாட்கள் முதல், 15 நாட்கள் வரை நெய்யப்படுகின்றன. இதற்காக, ஒரு குடும்பமே உழைக்க வேண்டியுள்ளது.
நாளை கொண்டாடப்படவுள்ள தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பட்டு சேலையும் எவ்வாறு நெய்யப்படுகிறது என, ஒவ்வொரு கட்டங்களாக பார்ப்போம்.

1பட்டு சேலையின் மூல ஆதாரமான பாவு, தறியில் தயாராக உள்ளது.
2சேலையின் மற்றொரு ஆதாரமான, 'சப்புரி' எனப்படும் பட்டு. நாடாக்கள் மூலமாக, சேலையின் குறுக்கே இவை நெய்யப்படுகிறது.
3பட்டு, பெருட்டம் எனப்படும் உபகரணத்தில் ஏற்றப் படுகிறது.
4பட்டு இழைகள் சுற்றப்பட்டு, வரிசையாக இருக்கும் பெருட்டங்கள்.
5நாடாவில் கோர்க்க வசதியாக, பெருட்டத்தில் உள்ள பட்டு, தாருக்கு மாற்றப்படுகிறது.
6பட்டு சேலை நெய்ய தயாராக உள்ள தார்கள்.
7பட்டு சேலை நெய்யும், ஒரு கைத்தறியின் முழுத்தோற்றம்.
8நாடா மூலம், பட்டு சேலை நெய்யப்படுகிறது.
9பட்டு சேலைகளில் ஆங்காங்கே காணப்படும், புட்டா எனப்படும் ஜரிகையால் ஆன டிசைன்கள் உருவாக்க, ஜரிகை கோர்க்கப்படுகின்றன.
10முழுவதுமாக கைத்தறியில் தயாரான பட்டு சேலை, தறியிலிருந்து, கறக்கப்படுகிறது.
11தறியிலிருந்து கறக்கப்பட்ட பட்டு சேலையின் முழுத்தோற்றம்.
12பட்டு சேலையை முறைப்படி மடிக்கும் முறை.
13முறையாக நெய்யப்பட்டு, விற்பனைக்கு தயாரான பட்டு சேலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக