திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சென்னை தினம் ஆகஸ்ட் 22.


சென்னை தினம் ஆகஸ்ட் 22.
*  உலகளவில் இன்று மிகவும் பிரப    லம் ஆகியுள்ள சென்னை ஆரம்பத்தில் மதராஸ் என அழைக்கப்பட்டது.
*  மதராஸ பட்டினம் அல்லது சென்னப்பட்டினம் எனும் கிராமத்தை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது.
*  17ம் நூற்றாண்டில், அதாவது 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி மதராஸ் பிறந்தது.
*  சென்னைக்கு இன்று 378வது பிறந்த தினம்.
*  சென்னை தினம் கொண்டாடும் ஐடியா 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.
*  சென்னை தினத்தில், நகரம் முழுவதும் விழாக்கோலம், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படும்.
*  பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து, சென்னை தின கொண்டாட்டங்கள் செப்டம்பர் வரை தற்போது நீடித்துள்ளது.
*  கிழக்கு கடற்கரை ஓரமாக, பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட 3 சதுர மைல் நிலப்பரப்பு இன்று சென்னையாகி உள்ளது.
*  தற்போது சட்டப்பேரவை செயல்படும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தான் அந்த சிறிய நிலப்பரப்பு.
*  காலனி ஆதிக்கம் அங்கிருந்து பரவத் தொடங்கியதும், சென்னை விரிவடையத் தொடங்கியது.
*  மூன்று நூற்றாண்டுகள் முடிந்த பின்னரே, சென்னை பிறந்த நாள் முதல் முறையாக அதிகாரபூர்வமாக கொண்டாடப்பட்டது.
*  ஆங்கிலேயரும், குறிப்பிட்ட சில உயர் அந்தஸ்து பிரிவினரும் இதை கொண்டாடினர்.
*  1989ம் ஆண்டு நடந்த 350ம் ஆண்டு விமரிசையான கொண்டாட்டத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
*  2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
*  காலனி பாரம்பரியமாக கருதி சென்னை தின கொண்டாட்டத்தை  தமிழக அரசு புறக்கணித்து வருகிறது.
*  ஒரே தின கொண்டாட்டமாக 2004ல் தொடங்கிய சென்னை தினம், பின்னர் வாரக்கணக்கிலும், அதன் பின் 10 நாள், 15 நாள் என அதிகரித்தபடி உள்ளது.

சென்னப்பட்டினம்

1639-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளரான பெரிதிம்மப்பாவின் உதவியுடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் மகன்களான அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து விலைக்கு வாங்கினர்.

அந்த இடத்தில் கோட்டையை கட்டி கோட்டைக்கு வடக்கு பகுதியில் உள்ள ஊருக்கு, இடத்தை விற்பனை செய்தவர்களின் தந்தையின் பெயரை கொண்டு, சென்னப்பட்டினம் என்று அழைத்தனர்.

377-வது சென்னை தினம்

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு இந்த மாகாணத்தின் தலைநகராக மதராஸ் ஆனது. 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், 1996-ம் ஆண்டு மதராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை தோற்று விக்கப்பட்ட 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதியை நினைவூட்டும் வகையில் தற்போது 377-வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக