திங்கள், 22 ஆகஸ்ட், 2016

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் ஆகஸ்ட் 25.


அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்  நினைவு தினம் ஆகஸ்ட் 25.
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.

1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் - நிலாவில் முதலில் இறங்கிய விண்வெளி வீரர்
 அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் (1930) பிறந்தார். முழுப் பெயர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங். தந்தை ஆடிட்டர். 6 வயதில் முதன்முதலாக தந்தையுடன் விமானத்தில் பறந்தார். விமானம் ஓட்டும் ஆசை இவருக்கு அப்போதே துளிர்விட்டது.

விமான ஓட்டுநர் உரிமம் பெற்றபோது இவருக்கு வயது 16. பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க கடற்படையின் உதவித்தொகை பெற்று பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியலில் சேர்ந்தார். நடுவில், கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

* கடற்படையில் 1952 வரை பணியாற்றிய பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* நேஷனல் அட்வைஸரி கமிட்டி ஃபார் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பின் (தற்போதைய நாசா) விண்வெளித் திட்டத்தில் 1962-ல் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் கமாண்ட் பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களைச் சோதனை செய்தார்.

* மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் 1969-ல் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அதன் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

* நிலாவில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர்.

* அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார்.

* சார்லட்ஸ்வில் நகரில் உள்ள கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகியாக 1971 வரை பணியாற்றினார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

* உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

* இவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்’ 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.
நன்றி- விக்கிபீடியா ,தி இந்து தமிழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக