பசுமைப் புரட்சியின் தந்தை பிறந்த தினம்! ஆகஸ்ட் 07

🌾 பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்.
🌾 இவர் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் என பல பதவிகளில் இருந்தவர்.
🌾 இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்த போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை ஈட்டி சாதித்துக் காட்டினார். அதனால், இதனை 'கோதுமைப் புரட்சி" என்று பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார்.
🌾 இவர் ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
🌾 வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 94வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
ரவீந்திரநாத் தாகூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக