ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ரக்ஷா பந்தன்


ரக்ஷா பந்தன்

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப்
பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணம்
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.

ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப் பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.
கிமு 326 ல் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப் பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.
இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப் படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம். தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.



சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

ராக்கி வரலாறு

ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும், அவர் எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் ‘சிர் ஹரன்’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார்,

பகவான் கிருஷ்ணன்.

ரக்ஷாபந்தன் விழா தொடர்பான மற்றொரு கதை, சித்தூர் ராணி கர்ணாவதி மற்றும் மொகலாய பேரரசர் ஹுமாயுனுடையது. விதவையான சித்தூர் ராணி கர்ணாவதி, தனது அரசாட்சியைப் பேரரசர் பகதூர் ஷா கைப்பற்ற போகிறார் என்பதை உணர்ந்த போது, அவர் பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். இதனால், பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும், அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார், பேரரசர் பகதூர் ஷா.
மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ரக்ஷாபந்தன் சிறப்பு

ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர். மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள். முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ரவன் மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை. இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.


சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷாபந்தன் #HappyRakshaBandhan

ஆ வணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது இந்த விழா. சொந்தத் தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்று மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்ஷா பந்தன். எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறுபாடுமின்றி சொந்தங்களாக என்னைக் கொண்டாடும் இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு.
இந்த நாளில், ஓர் ஆண் இந்த ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிக்கிறாள் என்று இந்த தினம் எடுத்துக்காட்டுகிறது. பல வண்ணத்தில் ராக்கி கயிறுகளும், இனிப்புகளும், பரிசுகளும் இந்த நாளில் பெருமளவு விற்பனையாவதுண்டு. கூடப்பிறந்த சகோதர சகோதரிகளுக்காக விசேஷ பிரார்த்தனைகளும், பரிசளிப்பும், பலமான விருந்துகளும் இந்த நாளில் நடைபெறுகிறது. வட இந்தியாவைத் தாண்டி தென் இந்தியாவிலும் இந்த நாள் தற்போது பிரபலமாகி சகோதர உறவுகளைப் பெருமைப்படுத்தி வருகிறது.
இந்த நாள் கொண்டாடப்பப்படுவதன் அடிப்படையே கண்ணன் பாஞ்சாலியின் மீது வைத்திருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது. ஒருமுறை போரில் காயம்பட்டு வந்தபோது, துடித்த பாஞ்சாலி சட்டென்று தனது புடைவைத் தலைப்பைக் கிழித்து கட்டுக் காட்டினாள். இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்து போன கண்ணன், பாஞ்சாலியின் அன்பை எண்ணிக் கலங்கினார். அதனால் எப்போதுமே தான் பாஞ்சாலியின் நல்வாழ்வைக் காக்க துணை இருப்பேன் என்று உறுதி கூறினார். அதனால்தான் சூதாட்டத்தின்போதுகூட பாண்டவர்களைக் காப்பாற்ற வராத கண்ணன், பாஞ்சாலியைத் துகிலுரிய முயன்றபோது காப்பாற்றினார். பாஞ்சாலி கண்ணனின் காயத்தைக் குணமாக்க புடைவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இன்றுதான் என்பதால் அது ரக்ஷா பந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
போர்க்காலங்களில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு மஞ்சள் நிற ரக்ஷா கயிற்றினைக் கட்டி அனுப்பி வைத்த செயல்கள் நமது வரலாற்றில் காணப்படுகிறது. சித்தூர் ராணி பத்மினி தனது நாட்டைக் காக்க அண்டைநாட்டு மன்னர்களுக்கு ரக்ஷா கயிறுகளை அனுப்பியதால் சகோதரியைக் காக்க அவர்கள் வந்தார்கள் என்றும் குறிப்புகள் காணப்படுகிறது. போரஸ் மன்னனின் மனைவி அன்பால் அலெக்ஸ்சாண்டருக்கு ராக்கி கயிறைக் கட்டியதால்தான் பின்னர் உண்டான போரில் போரஸ் மன்னர் அலெக்ஸ்சாண்டரைக் கொல்லாமல் விட்டு விட்டார் என்றும் ஒரு தகவல் வரலாற்றில் கூறப்படுகிறது. எது எப்படியோ, சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த இனிய ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின்
பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது.


ரக்ஷா பந்தன்: கீழ்ப்படிதலின் சின்னமா?
டி.எம். கிருஷ்ணா

உணர்வுரீதியில் இந்த தேசத்தை ஒரு இந்து தேசமாக நமது அரசு நகர்த்திச் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. உதிரிக் குழுக்கள் என்று சொல்லப்படுபவர்கள் காதைத் துளைக்கும் விதத்தில் கூச்சலை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாம் தவிர்த்துவிட்டாலும் அரசின் உறுதியான நகர்வுகளைப் பார்க்கும்போது இந்த நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேசிய அளவிலான ஆராய்ச்சி, கல்வி, கலாச்சார நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செய்யப்படும் நியமனங்கள், யோகாவை முன்னிறுத்திய மாபெரும் கொண்டாட்டம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சம்ஸ்கிருதத்துக்கான இணைச் செயலர் என்ற பதவியை உருவாக்கிய அபத்தம் எல்லாம் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
யோகாவும் சம்ஸ்கிருதமும் கலாச்சார அடையாளங்கள்தானே தவிர மதரீதியான கருத்தாக்கங்கள் அல்ல என்று வாதிடலாம்; அப்படி வாதிட்டால் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடச் செய்யலாம். ஆனால், இந்த இந்தியத் தன்மையின் தொன்மையான அடையாளங்களை மையப்படுத்தி நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள், திணிப்புகள், தேச வெறி போன்றவையெல்லாம் இந்தியா குறித்தல்ல, நிச்சயமாக ‘இந்து இந்தியா’ குறித்துதான் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நமக்குக் கண் தெரியாமலில்லை.
இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் இவர்களுடைய அபகரிப்பு நோக்கத்துக்கு அடுத்த பலி ரக்ஷா பந்தன் என்பதுதான். இந்த ஆண்டு ஆகஸ்டு 29 அன்று ரக்ஷா பந்தன் வரவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே ‘நமது சகோதரிகளுக்கு’ சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்க வேண்டும் என்பது குறித்து நமது பிரதமர் ஏற்கெனவே அறைகூவல் விடுத்திருக்கிறார். ரக்ஷா பந்தன் என்பது மதம் சாராத நிகழ்வு என்றும், முகலாயப் பேரரசர்களுக்கு ராஜபுத்திர அரசிகள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றும், அது மதச்சார்பற்றது என்பதால் அனைவராலும் பின்பற்றப்படுகிறது என்றும் சொல்லும் குரல்கள் என் காதுகளில் விழுகின்றன. கிறிஸ்தவர்களின் ‘வாலண்டைன் தின’த்துக்கு (காதலர் தினம்) போட்டியாக இந்து மதத்தின் மதச்சார்பின்மையைக் கொண்டாடும் விதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்; என்றாலும் இந்த விழாவின் மதச்சார்பற்ற அம்சங்களுக்கெதிராக நான் வாதிடப்போவதில்லை. இந்த விஷயத்தில் (அதாவது ரக் ஷா பந்தன் விஷயத்தில்) சில முல்லாக்களும் தங்கள் எதிராளிகளான இந்துத்துவர்களுடன் கைகோத்துக்கொள்வதுதான் வேடிக்கை. சரி நான் விஷயத்துக்கு வருகிறேன்.
ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாள மாகவும் மதம், சாதி போன்ற பிளவுகளை இணைக்கு பாலமாகவும் ராக்கியைப் பலரும் கருதுகிறார்கள். பாலுணர்வு சாராத வகையில் ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்வதற்குச் சமூகம் அளித்திருக்கும் ஒரு வகை ஒப்புதலாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் கட்டமைப்பில், சரியாகச் சொல்லப்போனால், ராக்கி கட்டுவதில் ஆண்-பெண் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதை நாம் அடையாளம் காண வேண்டும். தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒரு ஆணிடம் ஒரு பெண் கேட்பதன் அடையாளம்தான் ராக்கி. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த வனாந்தரத்தில் பெண்ணுக்குப் பக்கபலமாக ஒரு ‘சகோதரன்’ இல்லையென்றால் தன்னால் பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த முடியாது என்ற முடிவுக்கு அந்த ‘சகோதரி’ வருகிறார். சமூகத்தில் ஆணின் பலத்தையும் அதிகாரத்தையும் அவள் கொண்டாடுகிறாள்; அந்த ஆண் தனது சிறகுக்குக் கீழே அந்தப் பெண்ணை வைத்திருந்து அவளை எந்தத் தீங்கும் அணுகாதபடி பாதுகாக்குமாறு அந்தப் பெண் வேண்டிக்கொள்கிறாள். ஆக, ராக்கியின் வடிவத்தில் இருப்பது ஒரு ‘கண்ணி’தான்’. ‘கண்ணி’ என்பது மிகவும் கடுமையான வார்த்தையாக இருக்குமென்றால் ‘தாழ்ப்பாள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஒரு ஆணுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில்தான் பெண் என்பவள் பார்க்கப்படுகிறாள்; அது மட்டுமல்லாமல் அந்த ஆணைச் சார்ந்தவளாகவும் அவனுக்கு அடங்கியவளாகவும்தான் அந்தப் பெண் பார்க்கப்படுகிறாள். இதில் உள்ளர்த்தம் என்னவென்றால் பெண்தான் ‘பலவீனமான பாலினம்’; அவளுடைய மேம்பாடு என்பது ஆணின் ஆதரவாலும் அங்கீகாரத்தாலும் மட்டுமே ஏற்படுகிறது.
முகலாய மன்னருக்கு ராஜபுத்திர அரசி ராக்கி அனுப்புவதென்பது சரணடைவதன் அடையாளம்; அவரை ‘பெரிய அண்ண’னாக ஏற்றுக்கொண்டு, தனது நாட்டை அழிக்காமல் காத்தருள வேண்டும் என்று இறைஞ்சுவதன் அடையாளம். ரக்ஷா பந்தன் என்பது பந்தத்தின் விழாதான், ஆனால், சமமானவர்களுக்கு இடையேயான பந்தமல்ல அது. நான் சொல்வது சற்றுக் கடுமையானதாக தொனிக்கலாம். ஆனால், இந்த விழாவின் அடிநாதமாகக் கருதப்படும் ‘அன்பு’ ஒட்டுமொத்தமாக சமத்துவமே இல்லாத அன்பாகத்தான் தோன்றுகிறதல்லவா?
நிச்சயமாக, இது ஒரு இந்தியத் தன்மைதான். பெண்களை, ‘தாய்மார்கள்’, ‘சகோதரிகள்’ அல்லது ‘மனைவியர்’ என்று மட்டும்தானே குறிப்பிடுவோம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது மரியாதையான விஷயமாகத் தெரியலாம்; ஆனால், பெண்கள் மீது நாம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த அடையாளங்களெல்லாம் நமக்குத் துணைபுரிகின்றன என்பதை நாம் உணர வேண்டும். சமூகரீதியிலும் பொதுவெளியிலும் பாலினம் என்பது வெட்கக்கேடான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே, பெண்களை நாம் மதிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் உள்ள அந்தப் பாலின அடையாளம் களைந்தெறியப்பட வேண்டும். அப்படியென்றால் அவள் ஒரு தாயாகவோ தங்கையாகவோ மனைவியாகவோ இருந்தாக வேண்டும். ஒரு சகோதரனாகவோ மகனாகவோ கணவனாகவோ அந்த ஆண் பாதுகாப்பு தருகிறான். ‘பாதுகாப்பு’ என்பது பெரும்பாலும் ‘அடைத்துவைத்தல்’ என்பதற்கு மாற்றுச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக, ஒரு சகோதரியாகவோ தாயாகவோ மனைவியாகவோ இல்லாத சுதந்திரமான பெண் என்பவள் நம்பத் தகாதவள், திமிர் பிடித்தவள், நடத்தை கெட்டவள் என்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறாள். சுதந்திரமான பெண்ணைக் குறிக்க, பெரும்பாலும் ‘ஊர்மேய்பவள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தாய்/ சகோதரி/ மனைவி என்ற சமன்பாட்டைப் பெண்கள் மீறுவதால்தான் ஆண்களில் காமுகர்கள் உருவாகிறார்கள் என்றுகூட ஆண்கள் வாதிடுவார்கள். ஆண் என்றாலே வேறு மாதிரிதான்; அவனுடைய ஆண்மை என்பது அதிகாரம், சக்தி, மரியாதை ஆகியவற்றின் அடையாளம். அவன் பலம் மிக்கவனாகத்தான் இருந்தாக வேண்டும்; அவன்தான் பாதுகாவலன் ஆயிற்றே!
இந்த மாபெரும் பின்னணியில் வைத்துதான் ரக்ஷா பந்தனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ரக்ஷா பந்தன் என்பது அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் கயிறு கட்டுதல், சகோதரரின் நெற்றியில் திலகமிடுதல், அவருக்கு இனிப்பு வழங்கி அவரது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை மட்டுமல்ல என்பது நமக்குப் புரியும். ராக்கி என்பது அன்பின் கயிறு அல்ல; கீழ்ப்படிதலின் முடிச்சு.
இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரும் ரக்ஷா பந்தனைப் பற்றிய எனது மதிப்பீடு மிகவும் கடுமையானது என்று நினைக்கக்கூடும். இது கோணல் புத்தி என்றும், அழகான ஒரு நிகழ்வைப் பெண்ணியக் கூச்சல் மூலமாக நான் சிதைக்கிறேன் என்றும் சிலர் சொல்லக்கூடும். ஆனால், இந்த விழா குறித்து மதிப்பிடும்போது தங்கள் சொந்த அனுபவங்களையும் நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்க்கும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ‘உங்களை’ என்று நான் கேட்பது ஆண், பெண் ஆகிய இரு தரப்புகளையும்தான்.
- கட்டுரையாளர்
கர்நாடக சங்கீதக் கலைஞர், சமூக -அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: tmkrishnaoffice@gmail.com
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: ஆசை

 நன்றி விக்கிப்பீடியா.விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக