ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

உலக யானைகள் நாள் ஆகஸ்ட் 12 . World Elephant Day August 12.



உலக யானைகள் நாள் ஆகஸ்ட் 12 .
 World Elephant Day August 12.

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்  12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.


உலக யானைகள் தினத்தை முன்னிட்டு2017ம் ஆண்டின் யானைகள் கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கையை மத்திய வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வெளியிட்டார். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கண க்கெடுப்பின்சுமார் 30 ஆயிரம் யானைகள் இருந்தது.ஆனால் தற்போது 27 ஆயிரம் யானைகள் மட்டுமே உள்ளது. எனினும் தற்போதைய கணக்கெடுப்பு பணி அறிவியல் பூர்வமாக நடத்தப்படுகிறது. அதனால் இது முதற்கட்ட தகவல் தான். அடுத்த 2 அல்லது3 மாதங்களில் இறுதி அறிக்கை வெளியிடப்படும்’’ என்றார்.மத்திய சுற்றுசூழல் துறையின் யானைகள் பிரிவு மாற்றும் மாநில வனத்துறையினரும் இணைந்து கடந்த ஆண்டு நவம்பரில் யானைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கி, கடந்த மே மாதம் நிறைவு செய்தனர்.கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு போல் இல்லாமல் அறிவியல் பூர்வமாக கணக்கெ டுக்கப்பட்டுள்ளது. சானம் சிதைவு முறை, பிளாக் வாரியான எண்ணிக்கை முறை, யானை விநியோக வரைபடம்,நீர் துளை எண்ணிக்கை தொழில்நுட்பம் போன்ற முறைகளில் அறிவியல் பூர்வமாக கணக்கெ டுக்கப்பட்டது.2007ம் ஆண்டு 27 ஆயிரத்து 670 யானைகளும், 2012ம் ஆண்டில் 30 ஆயிரம் யானைகளும் இருந்துள்ளது. அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து சர்வதேச யானைகள் அமைப்புநிபுணர் சந்தீப் திவாரி கூறுகையில், ‘‘ இந்தியாவில் யானை வழிபாட்டு விலங்காக உள்ளது. எனினும் சமீப காலமாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவது கவலை அளிக்கிறது.இதன் காரணமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விலங்குகள் தங்களது பழக்க வழ க்கங்களை விட்டுவிட்டு மக்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றார்.கடந்த 4 ஆண்டுகளில் யானைகள் தாக்கி தினமும் ஒருவர் இறப்பதாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. 2013-14 முதல் 2016-17 வரையிலான 4 ஆண்டுகளில் ஆயிரத்து 465 பேர் யானைகள் தாக்கியதில் இறந்துளளனர். இதை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டங்கள் தீட்டி வருகிறது.எனினும் ‘‘வளர்ச்சி மீதான அழுத்தம் இருப்பதால் இயற்கையின் பழக்க வழக்க முறை பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள்-யானைகள் மோதலை தடுக்க தேனீக்கள் மற்றும் மிளகாய் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று யானைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளைபாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு'என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒருதனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது.Loading Advertisement...அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும்32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள்அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும்32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள்அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வு களை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும். யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரைஉயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்

.உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக