வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மனை­வியர் தினம் ஆகஸ்ட் 30, Wife_Day_August_30


மனை­வியர் தினம் ஆகஸ்ட் 30, Wife_Day_August_30.

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை!

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த    ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.


உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர்.


சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் திகதி    ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

“கணவன் – மனைவி உறவு” பற்­றியும், சிறந்த தம்­பதி எப்­படி இருக்க வேண்­டு­மென்றும் அருட்தந்தை அழ­காக விப­ரித்­துள்ளார்.


மனைவி அமை­வ­தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞன் அழ­காக வர்­ணித்­துள்ளான். குடும்ப அமை­திக்கு வித்­திட்ட என் மகான் மனை­விக்குக் கொடுத்த அன்பு பரிசு” மனைவி நல­வேட்பு”

இரு மனங்கள் இணை­கிற வைபோ­கமே திரு­மணம். இது மனித வாழ்வில் புனிதம் நிறைந்த உறவின் திற­வுகோல். ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஆத­ர­வா­கவும், ஆதா­ர­மா­கவும் அமையும் இந்த உற­வில்தான் நிறைவு வரும். ஞானம் வரும்.

ஒரு ஆணின் வாழ்வு பெண்ணின் வரு­கை­யாலும், ஒரு பெண்ணின் வாழ்வு ஆணின் வரு­கை­யாலும் இனிமை காண வேண்டும்.: இன்னால் காணக் கூடாது. கண­வனும், மனை­வியும்  ஒரு­வரை ஒருவர் மன­தார விரும்ப வேண்டும்..

முழு­மை­யாக நம்ப வேண்டும்..இரு­வரின் ரச­னையும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.ஒருவர் ரச­னையில் ஒருவர் குறுக்­கி­டாமல் இருக்கும்  பெருந்­தன்­மையே போதும்.

இந்த உலகில் பெற்ற தாய் தந்­தைக்கு அடுத்­த­படி ஆறுதல் தரு­கின்ற, அக்­க­றைப்­ப­டு­கின்ற உறவு கண­வ­னுக்கு மனை­வியும்,மனை­விக்கு கண­வனும் தான்.

ஆண்,பெண் உற­வு­களில் நிலவும் ஒழுக்­கத்தின் மூலமே உயர்ந்த நாக­ரிகம் உண்­டாகும். இந்த ஒழுக்­கத்தை பாது­காக்கும் கவ­சமே திரு­ம­ண­மாகும். ஓவ்­வொரு கணவன் – மனைவி உறவை உயி­ரிலும் மேலா­ன­தாக மதித்துப் போற்ற வேண்டும்.

உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்­றையும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன­தார அர்ப்­ப­ணித்து, இன்ப, துன்­பங்­களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதி­க­மாக அடங்­கி­யுள்­ளது.


தமது பண்­பாட்­டின்­படி பார்த்தால்,பெண்கள் இயற்­கை­யி­லேயே தியா­கிகள் என்று சொல்­லலாம். கணவன் வீட்­டுக்கு வரும்­போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்­நிலை எல்­லா­வற்­றையும் துறந்­து­விட்­டுத்தான் வரு­கி­றார்கள். திரு­மண வாழ்­க­கையைத் தொடங்­கு­வ­தற்கு முன்பே, துறந்து வரக்­கூ­டிய ஒரு இயல்பு அவர்­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றது.

இப்­படி எல்­லா­வற்­றையும்;     துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்­ணுக்கு ஆத­ரவு கொடுக்க வேண்­டி­யது அவ­சியம். இந்த உண்மையை ஒவ்­வொரு கண­வனும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

ஒரு மனைவி என்ற மதிப்பு மட்­டு­மல்ல.. பெண்­மையும், தாய்­மையும் ததும்பும் எல்­லோ­ருக்கும் தர வேண்­டிய அதே மதிப்பு நம் வீட்­டுக்கு வாழ வந்த பெண்­ணுக்கும்  உண்டு என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்- – மனைவி உறவில் இந்தப் பண்­பாடும் தியா­கமும் இருந்தால் போதும் அதை­விடப் பெரிய இன்பம் இந்த உல­கத்­தில் வேறு இருக்க முடி­யாது.

ஒரு­வ­ருக்­கொ­ருவர் சச்­ச­ரவு இல்­லாத குடும்­பத்­தில்தான் குழந்­தை நன்­றாக இருக்கும். பிரச்­சினை உள்ள குடும்­பங்­களில் அடக்கு முறைக்கு குழந்­தை­களின் சுதந்திரம் பறி­போகும்.

இந்தப் போராட்­டத்தால் குழந்­தையின் உடல்­ந­லமும்,மன­ந­லமும் கெடும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்­வ­துதான் திருமண பந்தம் என்­பதைப்  புரிந்து கொண்ட வீடு­களில் இந்தப் போராட்டம் இல்லை.

விட்­டுக்­கொ­டுப்­ப­தற்குப் பதி­லாக, ஒவ்­வொ­ரு­வரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்­துதான் உயர்ந்­தது” என பிடி­வாதம் காட்­டினால் பிணக்­குதான் வரும்.

கண­வனும்,மனை­வியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷ­யங்­களில் எந்தக் குறையும் இருக்­காது.

ஒரு குடும்­பத்தில் கணவன், மனைவி இரு­வரின் உற­வி­னர்­களும்; விருந்­தி­னர்­க­ளாக வர­வாய்ப்­புகள் உண்டு. அவர்­களை ஒத்த மதிப்­போடு இரு­வரும் உப­ச­ரிப்­பது கணவன் – மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உண­வே­யா­யினும் விருந்­தி­னரை உப­ச­ரிப்­பதில் இன்­முகம் காட்­டுங்கள்.

‘இறை­வனே மனைவி வடி­வத்தில் வந்து எனக்குத் துணை­யாக இருக்­கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனை­வியும் கண­வனை இப்­படி கடவுளின் வடி­வ­மா­கவே தனக்கு உற­வாகி வந்­த­தாக நினைக்க வேண்டும். இப்­படி ஒரு­வ­ரிடம் இன்­னொ­ருவர் தெய்­வ­நி­லையைக் கண்­டு­விட்டால் போதும்.

எத்­தனை துன்­பங்கள் வந்­தாலும் அவற்றை சமா­ளிக்கும் வலிமை கிடைக்கும். இல்­லற வாழ்க்­கையில் யாரும் அனு­ப­வித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.

மனித இனம் வியப்­பா­னது. ஒரு பொருளை விரும்­பினால், அதை அடை­வ­தற்கு முன்பு அது பற்றி பல நன்­மை­க­ளையும், மேன்­மை­க­ளையும் கற்­பனை செய்­து­கொண்டு இன்பம் அடையும். ஆனால், அதை அடைந்­த­பி­றகு, எப்­போதும் குறை­களைக் கண்­டு­பி­டித்து சோர்ந்து போகும்.

கணவன் – மனைவி உறவில் முக்­கி­ய­மாக தவிர்க்க வேண்­டி­யது இதைத்தான். உங்கள் துணை­யிடம் இருக்கும் நல்ல விஷ­யங்­க­ளையும், உயர்ந்த குணங்­க­ளையும் பாராட்­டுங்கள். குறை­களை மனதை புண்­ப­டுத்­தாமல் எடுத்துச் சொல்லி நிறைவு செய்ய முயற்­சி­யுங்கள். வாழ்வு வளம் பெறும், குடும்பம் தழைத்­தோங்கும்.

உல­கத்­தி­லேயே நட்பு மிக மிகச் சிறந்­தது.: பய­னு­டை­யது. அதிலும் கணவன் – மனைவி நட்பு பற்றி சாதா­ர­ண­மாகச் சொல்­லி­விட முடி­யாது. புனி­த­மான உறவில் தோன்­றிய உன்­ன­த­மான நட்பு.

இரு­வ­ரு­டைய வாழ்க்­கையும் மேன்மை பெறவும், குடும்பம் வளர்ச்சி பெறவும், இந்த நட்பே பிர­தா­ன­மாக தேவைப்­ப­டு­கி­றது. இப்­ப­டிப்­பட்ட குடும்­பத்தில் வளரும் குழந்­தைகள் எத்­த­கைய நற்­பண்­பு­க­ளுடன் திகழும் என்­பதை நினைத்துப் பாருங்கள்!

கண­வனை மனை­வியும், மனை­வியை கண­வனும் பாராட்ட வேண்­டி­யது மிக மிக அவ­சியம். .சிறப்­பாக எதை­யா­வது செய்­தாலும், உயர்­வான பண்­பு­களை வெளிப்­ப­டுத்­தி­னாலும் மனம்­தி­றந்து பாராட்­டுங்கள். இது அன்­பையும், நட்­பையும் இறுக்­க­மாக்கும்.

இதற்­காக எப்­போதும் எல்­லா­வற்­றையும் பாராட்­டிக்­கொண்டு இருக்க வேண்டும். என்­ப­தில்லை. அப்­ப­டிச்­செய்து கொண்­டி­ருந்தால் அது வெறும் முகத்­துதி ஆகி மதிப்பு இழந்து விடும்.    உள்­ளதைப் பாராட்­டி­னாலே போதும்.

ருசி­யாக மனைவி சமைத்துப் பரி­மா­றினால், “நன்­றாக இருக்­கி­றது” என்று சொல்­லலாம். இல்­லையா? பல­ருக்கு இதைச் சொல்ல வராது. .மாற்றிக் கொள்ள வேண்டும். காலை முதல் மாலை வரை நல்ல விஷ­யங்­களைப் பாராட்டிக் கொண்டே இருங்கள். அதுவே பண்­பாட்டின் உயர்வு.

சில குடும்­பங்­களில் கண­வனோ, மனை­வியோ பலரால் பாராட்­டப்­படும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யா­ள­ராக இருக்­கலாம். இப்­படி ஊரே தங்­களைப் பாராட்­டும்­போது, தங்கள் வாழ்க்கைத் துணையும் பாராட்­டப்ப­ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருக்கும். ஆனால், அப்­படி நினைப்­ப­வர்கள் ஒரு உண்­மையை உணர வேண்டும்.

தன் கண­வரை   ஊரே பாராட்­டும்­போது அதில் சந்­தோ­ஷமும், பூரிப்பும் அடைந்­தி­ருப்பார் மனைவி. கண­வனும், மனைவியும் இரண்டு உடல்­க­ளாகப் பிரிந்தி­ருக்கும் ஒற்றை உயிர்தான் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு இருக்கும். கண­வ­னுக்குக் கிடைக்கும் பாராட்டு தனக்கும் சொந்­த­மா­னதே என்ற பூரிப்பில் திளைத்­தி­ருப்பார்.

அந்த நினைப்பில் இருக்­கும்­போது அவ­ருக்கு கண­வனைப் பாராட்டத் தோன்­றாது. எனவே இதைக் குறை­யா­கவும் எடுத்­துக்­கொள்ளக் கூடாது. அலட்­சியம் செய்­வ­தா­கவும் நினைக்கக் கூடாது.

இதே­போல இன்­னொரு விஷ­யத்­தையும் புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் சொல்லும் கருத்து சரி­யா­ன­தாக இருந்­தாலும், அது எத்­தனை உயர்­வா­ன­தாக இருந்­தாலும், உங்கள் வாழ்­க்­கைத்­துனை ஒப்­புக்­கொள்ளா விட்டால்

அதை ஒதுக்­கி­வைத்து விடுங்கள். அவர் ஏற்­றுக்­கொள்­ளும்­வரை காத்­தி­ருங்கள். குடும்ப அமை­தியை இழந்­து­விட்டுப் பெறும் எந்த விஷ­யத்­தாலும் பயன் இல்லை.

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில் பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.
நன்றி இலக்கியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக