வியாழன், 19 நவம்பர், 2009

நவ.,21ம் தேதி ஹலோ தினம்.....

ஹலோ தினம்!  இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக