சனி, 30 ஜூன், 2018

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01.


தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01.

டாக்டர் பி.சி.ராய் மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார்.

பி.சி.ராய்இ மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார். இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல்இ சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார்.

இவருக்கு 1961-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம்இ அறிவியல்இ கலைஇ இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது. இவர் தனது 80ஆவது வயதில் (1962) மறைந்தார்.

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு
மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day ) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.
மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு
இந்தியா
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும்
மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.  இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

ஜூலை1: தேசிய மருத்துவர்கள் தினம் - சிறப்பு பகிர்வு - நன்றி விகடன் .

உயிர் காப்பவர்களுக்கு ஒரு சல்யூட்..!
உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.
இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.
தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.
இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.
இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.
அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.
தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!

உலக விண்கற்கள் தினம் - ஜூன்-30.உலக விண்கற்கள் தினம் - ஜூன்-30.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்- 30 ஆம் தேதி சர்வதேச விண்கற்கள் காணும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுவே, தேசிய விண்கல் தினம் (National Meteor Day) என்றும் அழைக்கப்படுகிறது.

வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் பார்க்கலாம். 

விண்கற்கள் அபாயம்:-

1908 ஆம் ஆண்டு, ஜூன்-30 அன்று சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 2000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. எனவே தான் ஜூன் 30 உலக விண்கற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இரவில் சில சமயம் வானில் வேகமாக விரைந்து  செல்லும் பளிச் சென்ற வெளிச்சக் கீற்றுகளைப் பார்த்திருக்கிறோம்,அவைதான்   “எரிநட்சத்திரம்” என்று அழைக்கும் விண்கல் (meteor ) ஆகும். அவற்றைப்  பார்த்தால் நமக்கு ஞாபகமறதி ஏற்படும் என்றெல்லாம் மிகப்பெரிய மூடநம்பிக்கையை வேறு மக்களிடையே அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறோம். இது உண்மையல்ல.

இவைகள் எல்லாம், நமது சூரிய குடும்பத்தில் கோள்கள் உருவாகும்போது விடுபட்டுப்போனவை. இவைகளின்  வேகம் மணிக்கு
சுமாராக நொடிக்கு 11 கி.மீ.லிருந்து 70 கி.மீ வரை கூட இருக்கும்.

விண்கற்கள்:-

விண்கல் என்பது சின்ன பாறைபோன்ற உலோக பொருளாகும்.
இது வான்வெளியில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவை அஸ்டிராயிடுகளைவிட மிகச் சிறியவையே. இதன் அளவு என்பது ஒரு நெல்   அளவிலிருந்து ஒரு மீட்டர் சைசில் உள்ள கல் போலவும் இருக்கும். இவைகளின் அளவை வைத்தே, இவற்றை மைக்ரோ விண்கல், வான் துகள்/வான் தூசு  என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இவை எல்லாம், நம்ம வால் நட்சத்திரம் என்னும் வால் மீன்கள்(comets)./ அஸ்டிராய்டுகள் விட்டுவிட்டுப் போன அல்லது உதிர்த்துவிட்டுப்போன துகள்கள்.

சில சமயம், சந்திரன் மற்றும் செவ்வாய் மோதலின் போது உதிர்ந்த துகள்களாகவும் கூட இருக்கலாம்.

விண்கற்கள் பொழிவு
ஒரு விண்கல் தனது சுற்றுப்பாதையிலிருந்து நழுவி, புவியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிட்டால், அதன் தன்மையே/ வேகமே  தனிதான். அது பூமியின் வளிமண்டலம் ஈர்ப்புக்குள் வந்தாச்சு என்றால்   அதன் நகர்வு வேகம் நொடிக்கு 20 கி.மீ லிருந்து அதிகரிக்கும். சுமாராக மணிக்கு 72,000 கி.மீ வேகம் வரை பறந்து போகும். இந்த வேகத்தில் இது வளிமண்டலக் காற்றுடன் உரசுவதால், ஏரோ டைனமிக் வெப்பம் ஏற்பட்டு எரிந்து போகும் வாய்ப்பு அதிகம். அத்துடன் இது ஒளியையும் கக்கிக்கொண்டே எரிந்து கரைந்து காற்றில் கலந்துவிடும்.

அப்படியே போகிற போக்கில் அந்த ஒளி ஒரு கீற்றாகத்  தெரியும். விண்கற்களின் இந்த தன்மைக்குத்தான் எரியும் விண்மீன் என்றும் எரிநட்சத்திரம் என்று  அழைக்கின்றனர். 

அப்படிப்பட்ட ஒளித்துகள்கள் சில நொடியில்,/நிமிட நேரம்  தொடர்ந்து ஒரே இடத்திலிருந்து கொட்டுவது போல தெரிந்தால் அந்த  ஒளி , அதுவும் வண்ண வண்ண மயமான ஒளித்துகள்கள் கொட்டுவது போலவே  தெரியும் . இதனை விண்கற்கள் பொழிவு என்றே அழைக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், பூமியின் வளிமண்டலத்துக்குள் கோடிக்கணக்கான விண்கற்கள் பயணித்து  கொண்டே இருக்கின்றன.

விண்கற்கள் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது,
அது காற்றில் வேகமாக உரசி எரிந்து விடுகிறது. அப்போது அது வந்த வழியை வெளிச்சமாக விட்டுச் செல்கிறது.

ஒரே பகுதிக்குள் ஏராளமான விண்கற்கள் எரிந்து தொடர்ந்து அப்பகுதியை வெளிச்ச புள்ளிகளை விதைத்து வைப்பதை காட்சியளிப்பதை
 விண்கற்கள் பொழிவு என அழைக்கிறோம்.

இப்படி எரிந்து விழும் பொருளை , எரி நட்சத்திரம் என்ற விண்கல் வீழ்ச்சியை மனித இனம்  வானைப்   பார்க்கத் துவங்கியதிலிருந்தே  பார்த்திருக்கிறது. ஆனாலும்  கூட, அவற்றைப் பற்றிய பதிவு என்பது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்திருக்கிறது.  கவிஞர்.சாமுவேல் டெய்லர் கொலெரிட்ஜ்.. இவர் தனது பிரபலமான வரிகளில்  அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

அவர் லியோனிட் விண்கற்கள் பொழிவைப் பார்த்துவிட்டு 1797ல் செய்த பதிவுதான் இது.

விண்கற்கள் பொழிவு:-

இரவின் வானில் நிகழும் ஓர் அற்புத வானியல் நிகழ்வு. 

விண்கற்கள் பொழிவின் வண்ணங்களும் அதன் அழகும் நம்மை அதனை நோக்கி ஈர்க்கும். அது வானின் ஒரு மைய புள்ளியில் துவங்கி, அதிலிருந்து பலமுனைகளுக்கும் தெறித்து சிதறி ஓடும். இவை, வானில் வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற பொருட்கள் அல்லது அஸ்டிராயிடுகள் விட்டுச் சென்ற 5x3 001பொருட்களில் வான் துகள்கள்.

இவை சூரிய மண்டல சுற்று  வேகத்தால் அல்லது எப்படியோ தடம்  மாறி, புவியில் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டால், அவை பூமியின் ஈர்ப்பு விசையால், வேகமாக காற்றுடன் உரசி கீழே இறங்கும். அப்போது உரசலில் ஏற்படும் வெப்பத்தால் பல கோடிக்கணக்கானவை பூமியை வந்தடையுமுன் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

சுமாராக ஒவ்வொரு ஆண்டும், இந்த பூமியில் 15,000 டன்  விண்கற்கள்/மைக்ரோ விண்கற்கள் , வான் தூசுகள், பூமி மேலே பலப்பல வடிவங்களில் கொட்டிக்கொண்டே தான் இருக்கின்றன..
 
நிறம்:-

ஆரஞ்சு –மஞ்சள் நிறம், விண்கல்லில் உள்ள சோடியம்தான் காரணி.

முழு மஞ்சள் நிற விண்கல் பொழிவு அதிலுள்ள இரும்பால் ஏற்படும்.

விண்கல் பொழிவின் நிறம் நீலப்பச்சை எனில் அதில் மக்னீஷியம்/தாமிரம் ,இருப்பதால் உண்டாகிறது.

வயலட் நிறம் கால்சியம் தனிமத்தால் ஏற்படுகிறது. 

சிவப்பு நிறம் வளிமண்டலத்தின் இரும்பு/ நைட்டிரஜன் மற்றும் ஆக்சிஜனால் உருவாகிறது.

விண்கற்கள் விண்ணிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் வீழுமுன் அதற்கு விண்வீழ் (meteoroid ) என்று பெயர்.

எரிந்து விழும் விண்கல் எரிநட்சத்திரம் என்று அழைக்கபப்டுகிறது.

இது புவியின் வளிமண்டலத்தில் எரிந்து இல்லாமலே  போய்விடுகிறது.

ஒரு சில விண்கற்கள் எரிதலையும் தாண்டி, அரிதாக, சிலசமயம் பூமியை வந்து சேருவதும் உண்டு.
அது ஒரு சில மி.மீ லிருந்து பல மீட்டர்கள் பெரியதாகவும் இருப்பதுண்டு. பூமித்தரையை எட்டிப் பிடித்த விண்கல்லுக்கு விண்கற்கள் என்றே பெயர். குட்டியூண்டாக உள்ள சில மி.மீ சைஸ்
விண்கல்லுக்கு வான் தூசு என்று அழைக்கின்றனர்.

தரையில் வீழ்ந்த  விண்கற்கள் வகை:-

தரையில் வீழ்ந்த  விண்கற்களை 3 வகை, அவை இரும்பு விண்கற்கள்,
கல் விண்கற்கள் மற்றும் கல்லும் இரும்பும் இணைந்த விண்கற்கள் . பெரும்பாலும் விண்கற்கள் இரும்பு வகையைச் சேர்ந்தவையே. இதில் இரும்பும் நிக்கலும் இருக்கும்.
இவை : 90-95%. கல்லாலான விண்கற்கள் காந்த  தன்மை  உள்ளவையாகவும் கோள்களின் பாறைத்  தன்மையும் கொண்டிருக்கும்.. இவற்றில் சிலவற்றில் வண்ண வண்ண தனிமங்கள் இருக்கும்.இவை நம் சூரியகுடும்பம் உருவாவதற்கு முன் வந்தவை ஆகும்.  இவற்றிற்கு, காண்டிரைட்ஸ் ( “chondrites) என்று பெயர். இவைதான் மிகப் பழமையான  விண்கற்களாகும்.கல்லும் இரும்பும் உள்ள விண்கற்கள் Pallasites எனப்படுகிறது.

திங்கள், 25 ஜூன், 2018

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26


சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.


இன்று - ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் - சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்

1987 ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருளானது பயன்படுத்துபவரை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் இது பாதிக்கிறது. இதுதான் அனைத்து நோய்களுக்கும் முன்னோடியாக இருக்கின்றது. சிலர் இதற்கு அடிமையாக மாறிவிடுகின்றனர்.

போதைப்பொருளைப் போலவே, அதை கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவே ஜூன் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை என்றாலே, பெரும்பாலானோர் மது மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த அரக்கன்களாக போதை மருந்துகள் உள்ளன. கஞ்சா, அபின், புகையிலை, மது, கொகைன், பிரவுன் சுகர், ஹெரோயின், , ஊக்க மருந்து, ஒயிட்னர் முதலிய போதை வஸ்த்துப்பாவனை இளைஞர்களிடம் வேகமாக பரவும் பழக்கங்களாக மாறி வருகின்றன. உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்பத்தையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்து செல்லும் சமுதாய அரக்கன்கனாக இந்தப் போதைப் பொருட்கள் மாறியுள்ளன.

அறியாமை, விரக்தி, உளவியல் குறைபாடுகள், பொழுதுபோக்கு, தற்காலிக உற்சாக தேவைப்பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பாவனை அறிமுகமாகின்றது. இதுவே பின்னர் போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விiயாட்டு வீரர்கள், இரசிகர்கள் என்று அனைவராலுமே போதைப் பொருள் பாவிக்கப்படுகின்றது. அவரவர் வசதிக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு மாறுகின்றதே தவிர குறைந்தபாடில்லை.

ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு தனி நபரை திட்மிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஓர் ஆயுதம் என்கின்ற குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன.

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

ஆனாலும் இதன் பயன்பாடு, அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறன. நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது.

ஆகவே, போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். விற்பனையை தடை செய்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.

ஓவ்வொரு மனிதனது உள்ளத்திலும் நற்சிந்தனைகளை ஏற்படுத்துவற்காக உண்மையான ஆத்மீக சிந்தனைகளை மனித மனங்களில் பதிய வைத்து சீர் திருத்தங்களைச் செய்வதே ஆரோக்கியமானதும் நிரந்தரமானதுமான தீர்வாக அமையும். ஆ-ர்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஜூன் 26.( International Day in Support of Torture Victims )


சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஜூன்  26.( International Day in Support of Torture Victims ) 

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் ( International Day in Support of Torture Victims ), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் சூன் 26ம் நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.


வரலாறு

சூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.
இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு மருத்துவத்தீர்வு அளிக்கின்றன.

தலித் அரசியல் தலைவர் இளையபெருமாள் பிறந்த நாள் ஜூன் 26

தலித் அரசியல் தலைவர் இளையபெருமாள் பிறந்த நாள் ஜூன் 26

இளையபெருமாள் லட்சுமணன் (L. Ilayaperumal, ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் (1952 - ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி ஆரம்பித்து மக்களுக்காக போராடியவர்.

வாழ்க்கை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.

சாதிய எதிர்ப்பு போராட்டம்
இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்கோவிலுக்கு திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத தலித் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பல தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை.

நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். மேல்சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி உருவாக்கம்[தொகு]
இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். மேலும் 1979-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1984-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

இளையபெருமாள் கமிட்டி அறிக்கை
காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 - ல் தனது இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டி தனது நேர்மையினை பதிவு செய்தார் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவரான இளையபெருமாள். ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப்பட்டது தலித் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.

தலைவர்களிடம் நன்மதிப்பு
தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். சாதி இந்துக்களால் புறக்கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேதகர் என அழைக்கப்படுகிறார் இவர்.


அவருக்கு முன்பே மறைந்த இளையபெருமாள் அறிக்கை

அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் எல். இளையபெருமாள். இவர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டுமன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சோதிடத்தில் வல்லுநராக இருந்த தன் தந்தையிடம் சோதிடம் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரும் பார்ப்பனர்கள், உள்ளே வராமல் தோட்டத்திலேயே நிற்பதைப் பார்த்த இளைய பெருமாள், ஏன் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தனது தந்தையிடம் தொடக்கக் கல்வி பருவத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்கினார். சாதிய வேறுபாட்டை நேரில் பார்த்து அதன் பொருளைப் புரிந்து கொண்டதுதான் பின்னாளில் அவரைப் போராளியாக மாற்றியிருக்கிறது. இந்திய அளவில் தெரியக்கூடிய ஒரு தலைவராகவும், அரசியல் முன்னோடியாகவும் அவரை அடையாளப்படுத்தியது.


காட்டுமன்னார்குடி ம. குளக்குடியில் இருந்த தொழிலாளர் நலப்பள்ளியில், 1930 இல் தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், பிறகு காட்டுமன்னார்குடி கழக நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1935 இல் சிதம்பரம் வட்டத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் தான் இருந்தன. பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியும், ராமசாமி (செட்டியார்) பெயரில் இருந்த மற்றொரு பள்ளியும். இந்த இரண்டு இடத்திலுமே உயர்நிலைக் கல்வி பயிலுவதற்காக இளையபெருமாள் இடம் கேட்ட போது தர மறுத்துவிட்டார்கள். காரணம், அப்போதெல்லாம் அந்தப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்கின்ற தீண்டாமையை நடைமுறையில் வைத்திருந்தனர்.

இருப்பினும், படிப்பில் ஆர்வம் கொண்ட இளையபெருமாள் சிதம்பரத்திற்கும், கடலூருக்கும் இடையே கிழக்கில் உள்ள பரங்கிப்பேட்டை என்னும் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தார். பிறகு 1944 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்தார். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் காலங்களிலும் அவர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள் மிக அதிகம். காட்டுமன்னார்குடி கடைவீதியில் நடந்து செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டும், செருப்பு அணிவதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் தண்டனை கொடுக்கப்பட்ட அந்தக் காலத்தில், நடுநிலைப் பள்ளி பயிலும்போது அங்கே குடிதண்ணீர் வைத்திருந்த மண்பானையில் ‘பறையன் பானை' என எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அவர் கடும் கோபமுற்றார். பிறகு அதனை எதிர்க்கின்ற துணிச்சலை தனக்குள் உருவாக்கி, அதனை உடைத்தெறிந்து பறையன் பானை என்றிருந்ததை மாற்றி ‘எல்லோருக்கும் ஒரு பொதுப்பானை' என்கிற நிலையை ஏற்படுத்தினார்.

ஒரு முறை சாலையில் அவர் செருப்பு அணிந்து சென்றதற்காக அங்கு உள்ளவர்கள், செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். செருப்புப் போட்டு நடந்ததற்காக அவரை அடிப்பதற்குக் கையை ஓங்கிய போதும், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், ‘‘வெயிலில் கால் சுடுகிறது. அதனால் செருப்பு அணிகின்றேன். நீங்கள் சொல்வதற்காக என்னால் கழற்ற முடியாது'' எனக் கூறி பணிய மறுத்தார். பரங்கிப்பேட்டை ராமசாமி வீரம்மாள் அவர்களின் மகளான தையல்முத்து அவர்களை 4.6.1944 அன்று வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருந்ததினால், 1945 ஆம் ஆண்டு நடந்த உலகப் போருக்கு ஆள் எடுக்கின்ற செய்தி அறிந்து, அதில் சிப்பாயாக சேர்ந்தார். தீண்டாமைக் கொடுமை அவரை ராணுவத்திலும் விட்டு வைக்கவில்லை.

உலகப் போர் முடிந்தவுடன், தற்காலிகப் பணிக்கு சிப்பாயாக எடுத்த ஆட்களை அரசு திருப்பி அனுப்பியது. அதனால் 1946 சனவரி 16 அன்று, ராணுவத்திலிருந்து வீடு திரும்பினார். காட்டுமன்னார்குடியில் 30.10.1946 அன்று, ஆதிதிராவிடர் நலச் சீர்திருத்த சங்கம் தொடங்கப்பட்டது. பிறகு 17.1.1947 அன்று இச்சங்கத்தின் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்தபோது, அதில் பங்கேற்க வந்த சுற்றியுள்ள கிராம மக்கள் இளையபெருமாளை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

ராணுவத்திலிருந்து வந்த பிறகு அவர் பொறுப்பு வகித்த முதல் பதவி இதுவே. 1947 ஆம் ஆண்டு, கூலி உயர்வு கேட்டு கடலூர் மாவட்டங்களில் இளையபெருமாள் போராட்டங்களைத் தொடங்கிய போது, பண்ணையார்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு உருவாகியது. ஆனால், அதைப்பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை. காட்டுமான்னார்குடி அருகில் உள்ள மா. உடையூர் கிராமத்தில் ஏகாம்பரம் என்ற பண்ணையார், தாழ்த்தப்பட்ட ஒருவரைக் கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தினார். கூலியை உயர்த்திக் கேட்டதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட இந்நிகழ்வைக் கண்டித்த இளையபெருமாள், தன் சங்க நிர்வாகிகளுடன் கிராமத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏகாம்பரம் பண்ணையார் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வைத்தார். அப்போதே கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதே போன்று 1947 இல் புளியங்குடியில் மாரிமுத்து மகன் வடமலை என்ற ராணுவ வீரன் மீசை வைத்திருந்தார் என்பதற்காக, அவரைக் கட்டி வைத்து வன்னியர்கள் அவரது மீசையை நெருப்பு வைத்துக் கொளுத்தினர். அந்த ஊரில் ஆண்கள் நல்ல உடை உடுத்தக்கூடாது, கிராப் வெட்டிக் கொள்ளக்கூடாது, பெண்கள் ரவிக்கை போடக்கூடாது, நகை அணியக்கூடாது என்றெல்லாம் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தன. அம்மக்கள் அமைதியாக வாழ விரும்பிய காரணத்தினால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைக் காலி செய்து அருகில் உள்ள பிள்ளையார்தாங்கலில் குடி அமர்த்தினார்.

கீழ்வெண்மணி படுகொலையின் (1968) போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த அவர் செய்தி அறிந்த உடன் தஞ்சைக்கு வந்து, அரசு அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரினார். பிறகு அவர் கீழ்வெண்மணி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த வழக்கினைப் பற்றி இளையபெருமாள் கூறும்போது, ‘‘தமிழக அரசானது குற்றவாளிகளை விடுதலை செய்த செயல், எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அதனால் 1980 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரான பிறகு, அந்த வழக்கை மீண்டும் தொடரச் செய்து குற்றவாளிகள் சிலருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.

விழுப்புரம் கலவரத்தின் போதும், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இந்தக் கொலைக்கு நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிஷனுடன் இரண்டு மாத காலம் தங்கிப் பணியாற்றி, அதன் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். இதே போன்று பல பெரிய கலவரங்களிலும் நேரடியாகத் தலையிட்டு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அரசிடம் முறையிட்டு, நிவாரணங்கள் வழங்க வலியுறுத்தினார். குற்றவாளிகளுக்கு முடிந்த வரை தண்டனையும் வாங்கித்தர முயற்சி செய்தார். பறையடிப்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று போராடிய அவர், 1949 இல் காட்டுமன்னார்குடி நாட்டு சின்ன பண்ணையத்தார் வீட்டில் நடந்த சாவுக்குப் பறையடித்ததை தன்னுடைய தலைமையில் தடுத்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில், இளையபெருமாள் உட்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பிறகு திட்டக்குடி, காட்டுமன்னார்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 10 மாத காலம் வழக்குத் தொடரப்பட்டு, பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.


1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது. இருந்தாலும், அதற்காக ஒருபோதும் தி.மு.க. அரசைக் கண்டிக்க அவர் தவறியதில்லை. விருது கொடுக்கப்பட்டவுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; கைது செய்யப்பட்ட சேரி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி அரசிடம் கோரிக்கை வைத்தார்.

1952 இல் அரசியல் பணியில் ஈடுபட்ட அவர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் மரகதம் சந்திரசேகர் ஒத்துழைப்போடு, நேரு அமைச்சரவையில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். இக்கமிட்டியின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, 1969 சனவரி 30 அன்று இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வெளியிடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதுபற்றி இளையபெருமாள் கூறும் போது, ‘‘நான் தயாரித்துக் கொடுத்த கமிட்டி அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் இருந்து சில பிரிவுகளை நீக்கிவிட்டு அரசுக்கு ஏற்றார் போல் அதனை வெளியிட்டிருக்கிறது'' என்றார். மேலும், இந்த கமிட்டி அறிக்கையை வெளியிடுவதற்கு முதல் நாள் இவர் தங்கியிருந்த அறையிலிருந்து இந்த அறிக்கையை எடுத்து கொளுத்துவதற்கு, சிலர் ஈடுபட்ட தாகவும், இப்படி நடக்கும் என முன்பே தெரிந்திருந்த அவர் இதனை நண்பர் வீட்டில் மறைவாக வைத்திருந்து மறுநாள் வெளியிட்டதாகவும் மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வறிக்கையில் தீண்டாமை (பகுதி. 1, இயல் 1) 1.2 இல், சாதிய அமைப்பு என்பது இந்து சமயத்தின் புனிதமான அங்கம் என்றும், சாதி தெய்வீகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்த அடிப்படையைக் கொண்ட சமூக முறையைப் புனிதமானது என்றதுமான நம்பிக்கையின் இன்றியமையா உடன் நிகழ்வே தீண்டாமை எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் தீண்டாமையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. மேலும், தாள்களிலும், சுய விருப்பத்தினாலும், மேலோட்டமான அறிவுரைகளாலும், முழக்கங்களினாலும் சாதி முறைமையையும், தீண்டாமையையும் ஒழிக்க நினைப்பது அடி முட்டாள்தனம் அல்லது திசை திருப்பும் செயல் என்றும் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

1.7 இரண்டாவது பத்தியில், சமுதாயக் குற்றமான தீண்டாமையை வேறு வேறு தீய நோக்கங்களுக்காக கடைப் பிடிப்போருக்கு நிதி உதவி, கடன் வழங்குதல் போன்றவை உறுதியாக மறுக்கப்படும் என்கிற அச்சுறுத்தலை அரசு கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு குற்றவாளிகள் என்று அறியப்பட்டோருக்கு உதவித் தொகை போன்ற கல்விச் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டையும், பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும் என்கிற நம்பிக்கை கொண்ட அவர், சுவாமி சகஜானந்தாவால் 1914 இல் உருவாக்கப்பட்ட நந்தனார் கல்விக் கழகத்தை, 30.4.1959 அன்று சகஜானந்தா இறந்த பிறகு, அதன் முழு பொறுப்பேற்று நடத்தி வந்தார். 1976 முதல் மூன்றாண்டுகள் தமிழ் நாடு காங்கிரசின் ‘அரிஜன செல்' தலைவர் பதவி வகித்த அவர், 1979 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார். பிறகு, 1980 இல் எழும்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு 1989 இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கிய அவர், 2003 இல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

சேரி மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும், போராடிய பெரியவர் இளையபெருமாள், பல்வேறு கட்சிகளுடன் தொடர்பும் கூட்டணியும் வைத்திருந்தாலும் அவர்களோடு சமரசமாகாமல் எதிர்க்கின்ற நேரத்தில் அவர்களை எதிர்க்க வேண்டிய பண்பையும் பெற்றிருந்தார். இவர் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 8.9.2005 அன்று இறந்து போனார். மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்ட அளவுக்கு, இளைய பெருமாள் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதரவுக் குரல் கொடுக்கப்படவில்லை. தலித் மக்களுக்கான புரட்சிகர செயல் திட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த இளைய பெருமாள் அறிக்கை, அவர் காலத்திலேயே மறைந்து விட்டது என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை.

நன்றி -விக்கிப்பீடியா,கீற்று .

ஞாயிறு, 24 ஜூன், 2018

மாலுமிகள் தினம் ஜூன் 25. (Day of the seafarer )


மாலுமிகள் தினம் ஜூன் 25. (Day of the seafarer ) 

உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால்இ உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும்இ அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல் சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.


மாலுமிகள் தினம்  (Day of the seafarer ) ‘யாவருக்கும் கடல்’ (At Sea for All) என்னும் கருப்பொருளில் இன்று 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.
மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தை அகலமாகவும் தூரமாகவும் கொண்டுசென்று உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இதனை கருத்திற்கொண்டு ஐநாவின் கடல் சார் அமைப்பான International Maritime Organization கடந்த 2 0 1 0 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 25 ஆம் திகதியை மாலுமிகள் தினமாக (Day of the seafarer) அறிவித்து கொண்டாடிவருகின்றது.
இன்றைய மாலுமிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக இந்த வருட கருப்பொருளாக ‘யாவருக்கும் கடல்’ (At Sea for All) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி உலகின் பல பாகங்களிலும் மாலுமிகள் தொடர்பான பலவேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25.


உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25.

உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவேஇ அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தோல் நிறமி இழப்பதை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல், மற்றொன்று கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்.
உலகளவில், தோல் நிறமி இழக்கும் இந்தப் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது. [ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது, அத்துடன் சில இடங்களில் உள்ள மக்களுக்கு 16 சதவீத மக்கள் தொகையில் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் தோல் நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது. இதனைக் குணப்படுத்தும் தெளிவான முறை இல்லாவிட்டாலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்பூச்சு ஸ்டீராய்டு மருந்துகள், கால்சினெரின் தடுப்பான்கள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சைகள் போன்றவை முக்கியமானவை.


வகைப்படுத்துதல்

இந்த பாதிப்பினை, சமீபத்திய ஒருமித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் மற்றும் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் கூறுபடுத்தப்படாத
தோல் நிறமி இழத்தலால் பொதுவாக பலர் பாதிக்கப்படுகின்றனர்.
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் வகை தோல் நிறமி இழத்தலில் சமச்சீர் முறையில் நிறமி இழக்கப்பட்ட சருமத்தில் பிணைப்புகள் தோன்றும். புதிய பிணைப்புகள் பெரிய பகுதிகளில் தோற்றமளிக்கும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தோற்றமளிக்கும். கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு (ஆனால் கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் 13 முதல் 19 வயதுடைய இளம்பருவத்தினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்)
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தலின் உட்பிரிவுகள் பின்வருமாறு:
பொதுவான தோல் நிறமி இழத்தல்:
இது பொதுவாக ஏற்படும் தோல் நிறமி இழத்தல் ஆகும். நிறமிகள் இழக்கப்படும் அனைத்து உடல் பாகங்களிலும் இது ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலகளாவிய தோல் நிறமி இழத்தல்:
உடலின் பெரும்பகுதியினை தோல் நிறமி இழக்கும் நிகழ்வு சூழ்ந்துகொள்ளும்.
குவியும்படியான தோல் நிறமி இழத்தல்:
பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு பிரிவில், சருமத் தோலின் நிறப்புள்ளிகள் சிலவிடங்களில் மட்டும் குழிந்து காணப்படும்.
ஆக்ரோஃபேசியல் தோல் நிறமி இழத்தல்:
விரல்களில் அதிகமாக ஏற்படும் பாதிப்புகள்.
மியூகஸ் தோல் நிறமி இழத்தல்: கோழை போன்ற சவ்வுகளில் ஏற்படும் நிறமிகளின் இழப்பினால் ஏற்படும் பாதிப்புகள்.
கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் வகை சருமப் பாதிப்பு இதர தொடர்புடைய நோய்களுக்கான காரணங்கள் மற்றும் நோய்த்தாக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டவை. இதன் சிகிச்சை முறைகள் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பில் இருந்து வேறுபட்டவை. முதுகெலும்பு தண்டுவடத்தின், முகுகுப்புற வேர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் இவ்வகைப் பாதிப்பு ஏற்படும். [கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்புகளை விட இவை விரைவாக பரவும் தன்மை கொண்டது. பொதுவான கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் பாதிப்பினைக் காட்டிலும் இதன் பாதிப்புகள் நிலையாகவும் அதிகமாகவும் இருக்கும்.

பாதிக்கப்படுபவர்கள்
உலக மக்களில் 0.5% முதல் 2% வரை மக்கள் இந்த தோல் நிறமி இழத்தல் பாதிப்புக்குள்ளாகின்றனர். அனைத்து இன மக்களும் இதில் சரிசமமாக பாதிப்படைகின்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் சம எண்ணிக்கையிலேயே பாதிக்குள்ளாகின்றனர். இருப்பினும் அதிகப்படியான பெண் நோயாளிகள் பற்றி வெளியில் தெரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 50 சதவீதம் நோயாளிகளுக்கு அவர்களின் சருமம் வெள்ளை நிறமாக மாற்றமடைதல் 20 வயதிற்குள்ளாகவே நடந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு இதுபோன்று நடப்பது பொதுவான நிகழ்வன்று. வயது முதிர்ந்தவர்களுக்கும், குழந்த பருவத்தினருக்கும் தோல் நிறமி இழப்பு ஏற்படும் நிகழ்வு மிகவும் குறைவு.
காரணங்கள்
வித்தியாசமான மாற்றங்களுக்குட்பட்டு இது மக்களைப் பாதிப்பதால் தோல் நிறமி இழப்புகள் எப்போது ஏற்படும், எப்படி ஏற்படும் மற்றும் எவ்வளவு தூரம் ஏற்படும் என்பது பற்றி துல்லியமாக கணிப்பது கடினம். இது குழப்பமான நோய்தோன்றும் வகையினைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில மரபணு சம்பந்தப்பட்ட காரணங்களால் கூட மெலனோசைட் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் 30% நோயாளிகள் தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரை கொண்டுள்ளனர்.
தூண்டுதல்கள்
தோல் நிறமிகள் இழத்தலைப் பின்வரும் காரணிகள் அதிகரிக்கின்றன.
குடும்ப தோல் நிறமி இழத்தலுக்கான வரலாறு
பீனால் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவது
கூடுதல் தைராய்டு சுரப்பி செயலாக்கத்தினால் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் அதிகரித்து மெலனோசைட்களை அழித்துவிடுதல்.
அழுத்தமான நிகழ்ச்சிகள்
நரம்பு மண்டல காரணங்கள்
வைரஸ் காரணங்கள்.

நாங்களும் சாதாரண மனுஷங்கதான்!


ஜூன் 25 உலக வெண்புள்ளி தினம்
நன்றி குங்குமம்

பிளாக் அண்ட் ஒயிட் - ஸ்கூல்ல என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க. அந்தப் பேர்ல நான் அவ்ளோ பாப்புலர். ஆனாலும், வெண்புள்ளிப் பிரச்னையால என்னோட தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையலை. முதுகுக்குப் பின்னாடி பேசறவங்களை நான் கண்டுக்கறதே இல்லை. நீங்க நீங்களா இருங்க. அடுத்தவங்களோட கமென்டுகளை கண்டுக்காதீங்க. சிரிக்கவும் மறக்கவும் மன்னிக்கவும் கத்துக்கோங்க. வாழ்க்கை ரொம்பவே நல்லாருக்கும்...’’ 

- ஆயுஷி மேத்தா மற்றும் தரம் மேத்தா

வாழ்க்கை வாழ்வதற்கேனு நம்பறவ நான். தன்னம்பிக்கையோட இருங்க. உங்களை நீங்களே நேசிக்கக் கத்துக்கோங்க. உங்க இடத்தை வேற யாராலயும் ஈடுசெய்யமுடியாதுனு நம்புங்க. பாசிட்டிவா இருங்க... அதுதான் உங்களை உயரத்துக்குக் கொண்டு போகும்...’’ 

- மீனாட்சி

ஆரம்பத்துல இந்தப் பிரச்னையைப் பத்தி நிறைய யோசிச்சிருக்கேன். கவலைப்பட்டிருக்கேன். இப்ப அப்படியில்லை. இந்தப் பிரச்னை என்னை ஒண்ணும் செய்யாதுங்கிற மனநிலை வந்திருக்கு. முன்னைவிட இன்னும் தைரியமா மாறியிருக்கேன். வாழ்க்கைங்கிறது உங்களைக் கண்டுபிடிக்கிறதில்லை. உங்களை நீங்களே உருவாக்கிறதுனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்’’

- திவ்யபாரதி

நான் யாரு... எங்க இருக்கேன்னு தெரியாம தவிக்க வச்ச பிரச்னை விடிலிகோ. துணி வாங்கறதுலேருந்து நல்ல போட்டோ எடுத்துக்கிறது வரைக்கும் எல்லாமே பிரச்னை. இது தொற்று நோயில்லைனு தெரிஞ்சாலும் மக்கள் எங்களை ஏத்துக்க மாட்டாங்க. நாங்களும் சாதாரண மனுஷங்கதான். ஒருத்தரோட சரும நிறம் என்பது அவங்களோட கேரக்டரோட அடையாளமில்லை’’ 

- பாஸ்கர்

இன்னும் இப்படிப் பலரின் அனுபவப் பதிவுகளுடன் கவனம் ஈர்த்தது அந்த புகைப்படக் கண்காட்சி. ஜூன் 25 உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, `Vitiligo is beautiful'  என்கிற வித்தியாச புகைப்படக் கண்காட்சியை நடத்தி யிருக்கிறது வத்சன் சங்கரன், பிரவீண் லியோ, ஸ்மிதா ஜோஷி, பாஸ்கர், சுகன்யா, பரத்குமார் ஆகியோர் அடங்கிய அறுவர் குழு.

``புற அழகு பத்தின தாழ்வு மனப்பான்மை, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யறது, வேலை, புது நபர்களை எதிர்கொள்றது, சமூக வாழ்க்கைனு வெண்புள்ளியால பாதிக்கப்பட்ட என்னை மாதிரி ஆட்கள் சந்திக்கிற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமில்லை. முகநூல் மூலமா என்னை மாதிரி உள்ளவங்களையும் அவங்களோட மன அழுத்தத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். 

இதைப் பத்தின ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி, பாதிக்கப்பட்டவங்களை தன்னம்பிக்கையோட நடமாடச் செய்யற ஒரு முயற்சியாதான் இந்தப் புகைப்படக் கண்காட்சியை திட்டமிட்டோம்...’’ என்கிறார் குழுவில் ஒருவரும் மாடலுமான பாஸ்கர்.``வெண்புள்ளி பாதிச்ச நண்பர்கள் சார்பா இப்படியொரு டாகுமென்டரி செய்யறதுக்கான கோரிக்கை வந்தது. பாதிக்கப்பட்டவங்களோட குரல்களோட, மக்களுக்கு அழுத்தமான ஒரு மெசேஜை சொல்ற முயற்சியா இதைச் செய்ய நினைச்சேன்...’’ என்கிறார் பிரதான புகைப்பட நிபுணர் வத்சன்.

என்னதான் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்தாலும், வெண் புள்ளிப் பாதிப்பாளர்களை எதிர்கொள்வதில் மக்களின் தயக்கம் இன்னும் முற்றிலும் மறைந்த பாடாக இல்லை.``இது தொற்றக்கூடிய நோயல்ல... எனவே அவர்களுடன் தோழமை பாராட்டுவதில் தயக்கம் தேவையில்லை’’ என்கிறார் சரும மருத்துவ நிபுணர் விஜயலட்சுமி. இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் அவர்.

``வெண்புள்ளி எனப்படுகிற இந்தப் பாதிப்புக்கு, ‘லூகோடெர்மா’, ‘விடிலிகோ’ அல்லது ‘ஒயிட் லெப்ரசி’ என பல பெயர்கள் உண்டு.நமது சருமத்தில் மெலனின் என்ற நிறமி கள் இருக்கும். போர்க்களத்தில் போர்வீரனுக்குக் கேடயம் எப்படிப் பாதுகாப்போ, அது மாதிரி நம் சருமத்துக்கான கேடயம் இந்த மெலனின். 

வெயிலில் போகிற போது, அதன் தாக்கத்தால சருமம் பாதிக்கப்படாமலிருக்க, இந்த மெலனின் உடனடியாக விரைந்து வந்து பாதுகாப்பு தரும். சருமம் போதுமான அளவு மெலனினை உற்பத்தி செய்ய முடியாதபோதும், மெலனின் இயக்கத்தில் கோளாறு வரும்போதும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களால் அழிக்கப்படுவதால் இந்தப் பிரச்னை வரும்.

லூகோடெர்மாவுக்கான காரணங்கள் இதுதான் என இதுவரைக்கும் விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரோ, பரம்பரைத் தன்மையோ அதீத மனஉளைச்சலோ காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, ரத்தசோகை, நீரிழிவு, மயஸ்தீனியா கிராவிஸ் (Myesthenia gravis) போன்ற நோய்களும் உடனிருக்கலாம் என்பதால் அவற்றுக்கும் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.

விடிலிகோ பிரச் னை இரண்டு வகைப்படும். முதல் வகையில் உடலின் ஒரு சிறு இடத்தில் மட்டும் வெண்புள்ளிகள் தோன்றும். இதைக் குணப்படுத்துவது சுலபம்.இன்னொரு வகை, மிக வேகமாக உடல் முழுவதும் பரவிவிடக்கூடியது. 

இதற்கு தொடர் சிகிச்சை தேவை.ஒரே நாளில் இது உடம்பு முழுக்க பரவிவிடாது. கை, கால்களில், கண்களைச் சுற்றி, வாயைச்சுற்றி... இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவும். ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டு கண்டுபிடித்தால் குணப்படுத்துவது சுலபம்.இதற்குப் பல விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. 

முதல் சிகிச்சை யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் மூலமாக கொடுக்கப்படுகிற ரேடியேஷன். பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் இந்த லைட்டை காட்டினால், மெலனின் உற்பத்தியாகும். ஆரம்பக்கட்ட பாதிப்புக்கு இது மிக அருமை யான சிகிச்சை. டாக்டரிடமோ, வீட்டிலோ செய்து கொள்ளலாம்.அடுத்து பியுவி என சொல்லப்படுகிற ஊதாக்கதிர் சிகிச்சை.

 குறிப்பிட்ட ஒரு மாத்திரையை உள்ளுக்குக் கொடுத்துவிட்டு, 1 மணி நேரம் கழித்து, பியுவி லைட்டுக்கு அடியில் உட்கார வைத்தால், மெலனின் உற்பத்தியாகும். சில பக்க விளைவுகளை இதில் தவிர்க்க முடியாது.மூன்றாவதாக மெலனோசைட் டிரான்ஸ்பிளான்ட்டேஷன், கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை மாதிரியே பண்ணக்கூடியது. இது மிகவும் காஸ்ட்லியான ஒரு சிகிச்சை.

நான்காவது Camouflage, பச்சை குத்துகிற மாதிரி என வைத்துக் கொள்வோம்... ஆனால், 2 வருடங்களுக் குப் பிறகு அந்த இடத்தின் நிறம் மறுபடி மாற ஆரம்பிக்கும்.
இவை எல்லாவற்றையும்விட சிறந்த, செலவில்லாத தீர்வு தோல் மாற்று சிகிச்சை (Skin grafting). எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதை இலவசமாகவே செய்கிறார்கள்.லேசான அறிகுறிகள் தெரிந்ததுமே, உடனடியாக சரும மருத்துவரைப் பார்த்தால், அது பரவாமல், அதிகரிக்காமல் இருக்க சிகிச்சை தருவார்கள். வருடங்களைக் கடத்திவிட்டு, உடல் முழுக்கப் பரவிய பிறகு சிகிச்சை அளிப்பது சிரமம்.

ஒருசிலருக்கு உடல் முழுக்க வெள்ளையாகி, ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கருப்பாக இருக்கும். அவர்கள் அந்தப் பகுதிகளையும் வெள்ளையாக மாற்ற பிளீச்சிங் செய்து கொள்ளலாம். இது ஒரே சீரான தோற்றத்தைக் கொடுக்கும். இது தொற்று நோய் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 பொதுவாக இது அம்மாவிடமிருந்து குழந்தைக்குப் பரவாது. ஆனால், வரவும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தால், உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். பெரியவர்களைவிட, குழந்தைகளுக்கு சிகிச்சை இன்னும் சீக்கிரம் பலனளிக்கும்...’’
சில பொதுவான டிப்ஸ்...

நிறைய பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
மனதை ஒருமுகப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றைச் செய்யவும்.
பாதுகாப்பின்றி வெயிலில் போகவேண்டாம்.
குடி, சிகரெட் பழக்கங்களைத் தவிர்க்கவும்.
சிகிச்சை அளிக்கிற மருத்துவரையோ, சிகிச்சை முறைகளையோ அடிக்கடி மாற்றக் கூடாது.

புற அழகு பத்தின தாழ்வு மனப்பான்மை, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யறது, வேலை, புது நபர்களை எதிர்கொள்றது, சமூக வாழ்க்கைனு வெண்புள்ளியால  பாதிக்கப்பட்ட என்னை மாதிரி ஆட்கள் சந்திக்கிற பிரச்னைகள்  கொஞ்சநஞ்சமில்லை...


சனி, 23 ஜூன், 2018

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் ஜூன் 24 1927 .


கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் ஜூன் 24 1927 .

கண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17
1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பிறப்பு முத்தையா
சூன் 24 , 1927
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு , இந்தியா
இறப்பு அக்டோபர் 17, 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய் , ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்) சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக
சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள் 15

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
தமிழ்நாடு , சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம்
பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு: மே 31 , 2012 ) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.
இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர் .
கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே
பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல்
அமெரிக்காவிலிருந்து அவரது சடலம்
சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் [8] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கதை எழுதிய திரைப்படங்கள்
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன்
மகாதேவி
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
1. மாங்கனி
2. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
3. ஆட்டனத்தி ஆதிமந்தி
4. பாண்டிமாதேவி
5. இயேசு காவியம்
6. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
1. அம்பிகை அழகுதரிசனம்
2. தைப்பாவை
3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
4. கிருஷ்ண அந்தாதி
5. கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
1. கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
அரங்கமும் அந்தரங்கமும்
அதைவிட ரகசியம்
ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
ஒரு கவிஞனின் கதை
காமினி காஞ்சனா
காதல் கொண்ட தென்னாடு
சிவப்புக்கல் மூக்குத்தி
சிங்காரி பார்த்த சென்னை
சுருதி சேராத ராகங்கள்
சுவர்ணா சரஸ்வதி
ரத்த புஷ்பங்கள்
நடந்த கதை
மிசா
முப்பது நாளும் பவுர்ணமி
தெய்வத் திருமணங்கள்
வேலங்குடித் திருவிழா
விளக்கு மட்டுமா சிவப்பு
பிருந்தாவனம்
சிறுகதைகள்
1. குட்டிக்கதைகள்
2. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
3. செண்பகத்தம்மன் கதை
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
சமயம்
அர்த்தமுள்ள இத்து மதம் (10 பாகங்கள்)
01. 02. 03. 04. 05. ஞானம் பிறந்த கதை 06. நெஞ்சுக்கு நிம்மதி 07. 08. போகம் ரோகம் யோகம் 09. 10. உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1. பகவத் கீதை
2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3. திருக்குறள் காமத்துப்பால்
4. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
பேட்டிகள்
1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2. சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
1. ஐயம் அகற்று
2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது ( சேரமான் காதலி படைப்பிற்காக)


தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு!கவிஞர் கண்ணதாசன்

"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.
ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.
ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.
 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.
“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.
ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.
”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.
”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்
* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.


மனைவி எப்படி இருக்க வேண்டும் ? என்கிறார் கவிஞர் கண்ணதாசன்

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

வெள்ளி, 22 ஜூன், 2018

உலக விதவைகள் தினம் ஜூன் 23.


உலக விதவைகள் தினம் ஜூன் 23.

உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் ) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.


உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.
உலக விதவைகள் தினம் ஒரு பார்வை
பத்திரிக்கையாளர்-பா. மிருனாளினி
விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? அல்லது கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு கடைப்பிடிக்கத்தான் முடியும் ”விதவைகள் தினத்தை” கொண்டாட முடியாது என்பது தான் உண்மை நிலை.
உலக விதவைகள் தினம்
’விதவைத் தன்மை’ ஒவ்வொரு பெண்ணையும் வறுமையில் தள்ளி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இத்தகைய விதவைத் தன்மையின் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே ’உலக விதவைகள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் எண்ணிக்கை
தற்போது உலகம் முழுவதும் சுமார் 258 மில்லியன் விதவை பெண்கள் இருக்கின்றனர், அவர்களில் 115 மில்லியன் பெண்கள் கணவனை இழந்து வறுமையில் வாடுகின்றனர், 85 மில்லியன் விதவை பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்லாமல் 1.5 மில்லியன் குழந்தைகள், தந்தையை இழந்து தாய்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அக்குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதைத் தாண்டும் முன்பாகவே தனது தாயையும் இழந்து விடுகின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம்
குறிப்பாக கணவனை இழந்த ஒரு பெண் இந்த சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறாள். எந்த வித சுபக்காரியங்களிலும் அவள் பங்கேற்க விரும்புவதில்லை, அப்படி அவள் பங்கேற்க நினைத்தாளும் சில சமூகம் அவளை ‘அபசகுணம்’ எனக் கருதியும் ‘பாவம்’ எனக் கருதியும் அங்கீகரிக்க மறுக்கிறது. சில இடங்களில், தனது இறந்த கணவனின் உடலை கழுவியத் தண்ணீரைக் குடிக்கும் அளவிற்குக் கொடுமைப்படுத்தப்படுகிறாள். இத்தகைய விதவை நிலை அவர்களை மட்டும் பாதிப்பதில்லை, அவர்கள் குழந்தைகளையும் பாதிக்கிறது.
விதவைப் பெண்கள் நிலை மாற
’சிறுபான்மை’ எனும் வட்டத்தில் கூட, சிறிய இடத்தை பெற்றிருக்கும், கணவனை இழந்த பெண்களின் நிலை மாற, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றியான நடைமுறை அறிவு மேம்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, பல விதவைப் பெண்கள் இன்றும் கூட சமூகத்தின் பிடியைத் தகர்தெறிந்து தைரியமான பெண்களாக உலா வருகின்றனர்.

புதன், 20 ஜூன், 2018

உலக இசை தினம்: ஜூன் 21


உலக இசை தினம்: ஜூன் 21

நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்து; சிறந்த பொழுதுபோக்கு அம்சம். வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் திகதி உலக இசை தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.
தோற்றம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன், பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.
பலவிதம்
பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை.
இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும்.


இசைக்கு இசைந்திடுவோம்: -உலக சர்வதேச இசை தினம்

வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இன்பம், துன்பம் என்று அனைத்து தருணங்களிலும் மனித வாழ்வில்
இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர்.
 "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின.
நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது.
நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது.
இசையை ஒரு பூசையாகச் செய்யும் போதுதான் அது அதிக சக்தி பெறுகிறது.''

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே
Image
முகலாய பேரரசர் அக்பரின் அவையில் சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் தன் குருவான ஹரிதாசரிடம் கற்ற ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, அணைந்து இருந்த விளக்குகளை ஒளிரச் செய்தாராம்..!.
இசையால் வசமாக இதயமேது?
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை
நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
தியாகராஜ சுவாமிகளும் ‘ஜோதிஸ்வரூபிணி’
என்ற ராகத்தைப் பாடி தீபத்தை எரியச் செய்துள்ளார்.
மும்மூர்த்திகள் எனப் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள்; ராமதாசர், கபீர்தாசர், துளசிதாசர், மீராபா இப்படிப் பலர் இசையால் இறைவனின் பேரருளைப் பெற்றதுடன், நமக்கும் வழிகாட்டினார்கள்.
அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம்.
‘இசைந்த பண் எழுத்தும் நீ’ என்று இறைவன் போற்றித் துதிக்கப்படுகிறார் ..
முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு சமயம் எட்டயபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் மரங்கள் பட்டுப்போய், பயிர்கள் காய்ந்து மக்கள் குடிதண்ணீர் இன்றித் தவிப்பதைக் கண்டு வருந்தினார். ‘அம்ருத வர்ஷினி’ ராகத்தில் ஆனந்தாம் ருதவர்ஷிணி என்ற பாடலைப் பாடினார்.
‘வர்ஷா, வர்ஷா’ என்று அவர் பாடுகையில், மழை கொட்டித் தீர்த்தது.
பின்பு அவர் ‘ஸ்தம்பய’ என்று பாடியதும்தான் மழை நின்றதாம்!
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் மூடிய கதவு திறக்கவும், மீண்டும் மூடவும் தேவாரம் பாடினார் என்பது வரலாறு.
‘சம்பந்தர் பெருமான் இயற்றிய கோளறு பதிகமும், அருணகிரிநாதர் இயற்றிய ‘நாள் என் செய்யும்’ என்னும் கந்தரலங்காரப் பாடலும் கிரக தோஷங்களைப் போக்கவல்லவை.
திருமாலின் கரத்தில் சங்கு;
கண்ணனிடம் புல்லாங்குழல் என்று இசைக்கருவிகள்.
தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவனும் வீணையுடன் காட்சி தருகிறார்.
கலைமகள் வீணையையும் நாரதர் தம்பூராவையும் மீட்ட,
நந்தி மத்தளம் வாசிக்க, நடராசர் ஆடுகின்றார்.
தெய்வங்களும் இசையுடன் ஒன்றும்போது, அந்த இசையின் பெருமை எல்லை காணமுடியாமல் திகழ்கிறது ...!
நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்ட தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், இசைப்பண்கள் யாவும் தமிழும் இசையுமாக இணைந்த கலந்த பொக்கிஷங்கள்.
வீணை கொடியுடைய வேந்தன்
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் பத்துத்தலை ராவணன்
கயிலை நாதரை தன் கானத்தால் கவர்ந்த ராகம் - காம்போதி
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு,
தனிமையை விரட்டும் கருவி
கவலையை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது குறையும்
அதே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.
அப்படி தான் இசையும். கவலையாக இருக்கையில் பிடித்த பாடல்களை கேட்டால் கவலை குறையும்.
மகிழ்ச்சியாக இருக்கையில் இசையைக் கேட்டால் அது அதிகரிக்கும்.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா’ என்று மனத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் உற்சாகத்தையும் தரவல்லது இசை.
எந்த எல்லையும் கட்டுப்படுத்த பொழுதுபோக்கு அம்சமாகவும்
அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும் என்கிற பொறுப்பு இசை கலைஞர்களுக்கு உள்ளது. இசைக்கும், சமூக பொறுப்பு உள்ளது.
இசை எனது மதம்
இசை உள்ளவரை, நீ இசையாகவே இரு -
இசை உணர்ச்சியின் சுருக்கெழுத்தாக இருக்க வேண்டும்
இசை கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டம்
இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது -
இசையால் விளைந்த அதிசயங்கள்தான் எத்தனை எத்தனை?!
இசையில் தன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என்று கர்வம் கொண்டு, ‘பாண்டிய நாட்டில் என்னை வெல்ல யாராவது இருக்கிறார்களா’ என்று அறைகூவல் விடுத்த பாடகர் ஹேமநாதனின் கர்வம் போக்க, சொக்கநாதர் மதுரையில் புரிந்த லீலை இசையின் மேன்மையை விளக்கும் ..
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல்
இசை, வேறுபாடு இல்லாத எல்லையற்ற வானம் போன்றது.
கிராமப்புற மக்கள் வயல்களில் வேலை செய்து கொண்டே பாடும் எளிமையும் இனிமையுமான நாட்டுப் பாடல்கள் முதல் திருமணம் என்றால் நலங்கு, ஊஞ்சல், வாழ்த்துப் பாக்கள்... அந்தந்தப் பண்டிகைகளுக்குரிய பாடல்கள் எல்லாமே இசை வடிவானவை!

வாடிய பயிர்கள் இசையைக் கேட்டுத் துளிர்க்கவும்,
நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் கூட இருக்கிறது இசை இன்பம்!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
இசை ஒரு வேள்வி...

ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’,
மன அழுத்தத்துக்கு ‘லதாங்கி’,
ஞாபகமறதி, அம்னீஷியா போன்ற நோய்களுக்கு ‘ரேவதி’,
பால்வினை நோகளுக்கு ‘மார ரஞ்சனி’,
சர்வரோக நிவாரணியாக ‘ஸ்வேதாம்பரி’. ..
இப்படி பற்பல ராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன.
இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே
கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர்.
ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின்
இசை குணமாக்கி விடுகிறதாம்.

அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.
பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது.
இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.
இசைக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு..


உலக இசை தினம் இன்று!
‘இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது மற்றும் அமைதியாகவும் இருந்திட முடியாது’ என்று இசை குறித்து பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். அதேபோல், இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை.
இசையில் வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ஆம் தேதி (இன்று) உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் இருவிதமான இசைகள்தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை. மற்றொன்று, தென்னிந்தியாவின் கர்னாடக இசை. இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும்.
கலைமகள் வீணையையும் நாரதர் தம்பூராவையும் மீட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, நடராசர் ஆடுகிறார். சரஸ்வதி வீணைக் கொண்டு மீட்டிக்கொண்டிருக்கிறார்.
முகலாய மன்னரான அக்பரின் அரசவைப் பாடகர் தான்சேன். இவர், தன் குருவான ஹரிதாசரிடம் கற்ற ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, அணைந்து இருந்த விளக்குகளை ஒளிரச் செய்தார்.
பக்தி இலக்கியங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசையை உயிர்ப்பித்தனர். திருமணத்துக்காக ஓர் இளைஞர் தயாராக இருக்கிறார். ‘நீ என் அடிமை வா’ என்று வயதான முதியவர் ஒருவர் பத்திரம் காண்பித்து அவரை தன் அடிமையென மெய்ப்பிக்க நீதிமன்றத்துக்கு அழைத்து செல்கிறார். முதியவர் வெற்றி பெற்று அந்த இளைஞரை கரடு முரடு என எல்லா இடங்களுக்கும் அழைத்துச்சென்று இறுதியில் மலைமேல் இருக்கும் கோயிலுக்குள் சென்றதும் மறைந்து விடுகிறார். ‘நீ யார் பித்தனா, பேயனா?’ என்று அந்த முதியவரை வசைபாடுகிறார் இளைஞர். பின்பு ஒரு ஔி தோன்றுகிறது. முதியவர் சிவபெருமானாக காட்சியளிக்கிறார். ‘என்னை பாடு’ என்று வேண்டுகிறார். ‘பித்தா பிறைசூடி பெருமானே’ என பாடுகிறார் அந்த இளைஞர். அவர் சுந்தரர்பெருமான். இப்படி இறைவனே ஆட்கொண்டு இசையை வளர்த்ததாகப் பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன.
திருவிளையாடல் புராணம்தனில் மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்கநாதப்பெருமானே இசையில் வல்லவர் என நிரூபிக்க லீலை செய்த அற்புதங்களையும் வாரி வழங்குகிறது பக்தி இலக்கியங்கள். அதைப்போன்று இன்னும் ஒவ்வொரு கோயில்களிலும் இசைத்தட்டுகள் எனும் தூண்களும் காணப்படுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் வடக்கு கோபுர வாசலுக்கு அருகிலும் உள்ளது. இவ்வாறு மன்னர்களும் வளர்த்தனர் என்றே கூறலாம்.
‘மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன்’ என்று கூறிய கிருஷ்ண பரமாத்மாவுக்காக மார்கழி மாதம் முழுவதும் அந்தக் குளிரில் திருப்பாவை பாடி, இசையை வளர்த்தார் ஆண்டாள்.
மும்மூர்த்திகள் எனப் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இசைக்கு செய்த அற்புதங்கள் ஏராளம். அவர்களைப் பின்பற்றியே கர்னாட்டிக் இசையும் வளர்ந்தது. அவர்களோடு மற்றோரும் அதன்பின் வந்த சந்ததியினரும் வளர்த்தார்கள்.
கிராமப்புற மக்கள் வயல்களில் வேலை செய்துகொண்டே பாடும் எளிமையும் இனிமையுமான நாட்டுப் பாடல்கள், கிராமப்புற கோயில்களில் பாடக்கூடிய கும்மியோடு கூடிய பாடல்கள்... இப்படி தமிழர்களோடு தொன்றுதொட்டு கூடவே வந்தது இசை.
இசை தமிழனின் வாழ்வியலில் ஒவ்வொரு நிமிடமும் கலந்தேதான் இருக்கிறது. திருவாசகத்தை தன் சிம்பொனி இசையால் உலகத்துக்கே தமிழனின் எழுத்தைக்கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசை. அதைப்போலவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் தன் கைகளில் கொண்டுவர காரணமாக இருந்தது இசை.
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு, தனிமையை விரட்டும் கருவி... கொண்டாடுவோம் இசையை. உலக இசை தினத்தன்று, இசையால் இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.
- வீரசோழன் க.சோ.திருமாவளவன்


ஜூன் 21: உலக இசை தினம் இன்று கொண்டாடப்படுகிறது
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளை பகிர்வோம்..
உங்களுக்கு பிடித்த இசைக் கலைஞரை இங்கே நினைவுப்படுத்தி அவருக்கும் வாழ்த்துகளை பகிர்வோம்....
நன்றி தினமலர்.விகடன்