உலக தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை...
தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காககொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம்
முழுமையடையச் செய்கிறது.
வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த
தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது. மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.
இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்களில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது. அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது. தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது. சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.
1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார். மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.
தந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.
வணிகமயமாக்கல்
1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன. மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும். இந்த கவுன்சிலுக்கு டோடின் ஆதரவு எப்போதும் இருந்தது. இந்த விடுமுறையை வணிகமயமாக்குதலால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேலும் பரிசுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான பல்வேறு ஊக்குவித்தலுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த விஷயத்தில் அன்னையர் தினதிற்கான அனைத்து வணிகமயமாக்குதல்களையும் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும் அன்னா ஜார்விஸுக்கு எதிரானவராக இவரைக் கருதலாம்.
வணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது. எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு "இரண்டாவது
கிறிஸ்துமஸ்" போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது. 1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்.
உச்சரிப்பு
இந்த நிகழ்ச்சியின் பெயர் வழக்கமாக பன்மை உடைமையாகவே புரிந்து கொள்ளப்பட்டது (எ.டு. "தந்தையர்களுக்கு உரிய தினம்"), வழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது "பாதர்ஸ்' டே" என உச்சரிக்கப்பட்டது. மேலும் அதிகமாக ஒருமை உரிமைப் பொருளைக் கொண்டு "பாதர்'ஸ் டே" என்றே உச்சரிக்கப்பட்டது (எ.டு. "தந்தைக்கு உரிய தினம்"). டோட் அவரது தொடக்க விண்ணப்பத்தில் "பாதர்ஸ்' டே" என்ற உச்சரிப்பையே பயன்படுத்தியிருந்தார்,ஆனால் 1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் "பாதர்'ஸ் டே" என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்'ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.
உலகம் முழுவதிலுமான தேதிகள்
தந்தையர் தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தந்தையர் தினம் கடைபிடிக்கப்படும் தேதியைக் கொண்டு இந்தப் பிரிவில் சில குறிப்பிட்ட எடுத்துகாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான்
*இந்த விடுமுறை ரஷ்ய ஆயுதப் படைகளில் (ஆண் பெண் இருவரும்) பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மக்களுக்காக கொண்டாடப்படுவதற்காக இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சம்பிரதாய முறையாக தேசமக்களால் அனைத்து தந்தையர்களும் பிற ஆண்களும் ஆண்குழந்தைகளும் இந்த மகிழ்ச்சியை ஒப்புக்கொண்டனர்.
**சீனாவில் (சீனக்குடியரசின் ஆட்சியின் கீழ், தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில்), ஆகஸ்ட் 8 அன்று கடைபிடிக்கப்பட்ட முதல் தந்தையர் தினம் 1945 ஆம் ஆண்டில் சாங்காயில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்
சில கத்தோலிக்க நாடுகளில், சென். ஜோசப் தினத்தில்இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜோஸ் டே சன் மார்டின் அந்த நாட்டின் "தேசியத் தந்தையாக" கருதப்பட்டு தந்தையர் தினத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவரது நினைவு விழாவாக மாற்றிக் கொண்டாட பல்வேறு முயற்சிகள் நடந்தது.
1953 ஆம் ஆண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆகஸ்ட் 24 அன்று தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்மொழியப்பட்டது. ஜோஸ் டே சன் மார்டினை கெளரவப்படுத்துவதற்காக இது கொண்டாடப்பட வேண்டுமென மெண்டோசா புரொவின்ஸின் கல்வியகங்களின் பொது இயக்ககத்திற்கு இது அனுப்பப்பட்டது. 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் முதன் முதலில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியின் காரணமாக பள்ளி காலெண்டரில் இந்த தினம் சேர்க்கப்படவில்லை.
மெண்டோசா புரொவின்சில் இருந்த பள்ளிகளில் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாடின. மேலும் 1982 ஆம் ஆண்டில் மாநில ஆளுநர் அந்த மாகாணத்தில் தந்தையர் தினம் அதே நாளில் கொண்டாடப்படும் என சட்டமியற்றினார்.
2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு மாற்றுவதற்கு பல்வேறு முன்மொழிதல்கள் தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டமாக அர்ஜென்டினே கேமரா டே டிபுடடஸில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அனுமதியைப் பெற்றபிறகு இந்த செயல்திட்டம் அர்ஜென்டினா ஆட்சிப் பேரவைக்கு இறுதி மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆட்சிப்பேரவையானது புதிய முன்மொழியப்பட்ட தேதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றி அமைத்தது. எனினும் ஆட்சிப்பேரவையின் குறிப்பிட்ட பருவத்தில் இந்த செயல்திட்டத்தைப் பற்றி எந்த சொற்பொழிவும் நடக்கவில்லை. அதனால் இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.
கோஸ்டா ரிகா
கோஸ்டா ரிகாவில் த யுனைடடு சோசியல் கிர்ஸ்டினா கட்சியானது இந்த தினத்தை ஜூன் மாத மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுவதற்கு பதிலாக சென் ஜோசப் தினமான 19 மார்ச்சில் கொண்டாடுவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாட்டின் தலைநகரமான சான் ஜோஸ், கோஸ்டா ரிக்காவிற்கு பெயரளித்த புனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மசோதா செயல்படுத்தப்பட்டது. மேலும் அதன் மூலம் குடும்பத்தினர் தொண்டரான செயிண்ட் ஜோசப்பின் பெருவிருந்து தினத்திலேயே தந்தையர் தினத்தையும் கொண்டாடுவதற்கு இது வழிசெய்யும். ஆனால் இன்றும் அதிகார்வப்பூர்வ தேதியாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையே உள்ளது.
ஜெர்மனி
ஹெரண்டக் அருகில் குடித்து விட்டு உலாவரும் நிகழ்ச்சி
ஜெர்மனியரின் தந்தையர் தினம் உலகத்தின் மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பழைய இனத்தவரிலிருந்து இரண்டு சொற்கள் மற்றும்/அல்லது நிகழ்ச்சிகள் இதே பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக வேறுவிதமான கருத்தைக் கொண்டுள்ளது. அஸ்சென்சன் தினத்தில் மட்டுமே எப்போதும் வேட்டர்டக் கொண்டாடப்படுகிறது (ஈஸ்டர் முடிந்து நாற்பது நாளுக்கு பின்பு வரும் வியாழக்கிழமை). அது அரசாங்க விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இது மேனர்டக் எனப்படும் ஆண்களின் தினம் என்றும் அல்லது ஹெரன்டக் எனப்படும் நன்மகன் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டும் நடைபயணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பார வண்டிகளான பொல்லர்வேகனை மனித ஆற்றலைக் கொண்டு இழுத்துச் செல்வது பராம்பரியமாகும். இந்த பாரவண்டிகளானது வைன் அல்லது பியர் (பிராந்தியங்களைப் பொருத்து) மற்றும் பராம்பரிய பிராந்திய உணவுகள்,
சவுமகென் உணவு வகையான
ஹவுஸ்மன்கோஸ்ட் , லிபெர்வொர்ஸ்ட் (லிவர்ஒர்ஸ்ட்), ப்ளட்ஒர்ஸ்ட் (ப்ளட் சசஜ்), காய்கறிகள், முட்டைகள், மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். பல ஆண்கள் இந்த விடுமுறை தினத்தை மிகவும் அதிகமாக குடித்துவிட்டு தெருக்களில் குழுவாக அலைவதற்காக பயன்படுத்துகின்றனர். இதில் பங்குகொள்ளாமல் இருக்கும் மாறுதலை விரும்பாத ஜெர்மன் மக்கள் அதிகமான தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். காவல்துறை மற்றும் அவசர நிலை சேவைகள் போன்றவை இந்த நாளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர். மேலும் சில இடது சாரிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த விடுமுறையை தடை செய்யும் படி கோரி வருகின்றனர்.
ஜெர்மனியின் சில பகுதிகளில் (பவரியா மற்றும் ஜெர்மனியின் வடக்கு பகுதி போன்றவை) தந்தையர் தினத்தை ஒப்பிடும் படியான இந்த நாளை "வேட்டர்டக்" என அழைக்கின்றனர்.
நியூசிலாந்து
நியூசிலாந்தில், தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.
பிலிப்பைனஸ்
பிலிப்பைன்ஸில் தந்தையர் தினமானது ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறை அல்ல. ஆனால் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. 1960கள் மற்றும் 1970களில் பிறந்த பெரும்பாலான பிலிப்பைன் மக்கள் தந்தையர் தினத்தை கொண்டாடவில்லை. ஆனால் அமெரிக்காவைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தறிந்து அந்தத் தாக்கத்தினால் பிலிப்பைன் மக்கள் அமெரிக்காவின் பாரம்பரியத்தை பின்பற்ற மிகவும் விரும்பினர். மேலும் இதைப் போன்ற பிற அமெரிக்க விடுமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இணையத்தின் வருகையும் பிலிப்பைன் மக்களுக்கு இந்த விடுமுறைகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தது.
ரோமன் கத்தோலிக்க பாரம்பரியம்
ரோமன் கத்தோலிக்க பாரம்பரியத்தில் செயின்ட் ஜோசப் தினத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் 19 அன்று வழக்கமாக இது செயிண்ட் ஜோசப் விருந்து என அழைக்கப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட நாடுகளில் தந்தையர் தினமானது மதச்சார்பற்ற கொண்டாட்டமாக உள்ளது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.
தைவான்
தைவானில் தந்தையர் தினம் ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறைதினம் அல்ல. ஆண்டின் எட்டாவது மாதத்தின் எட்டாவது நாளான ஆகஸ்ட் 8 இல் இந்த தினம் பரவலாக அனுசரிக்கப்படுகிறது. மண்டரைன் சைனிஸில் எண் 8 ஆனது பா என உச்சரிக்கப்படுகிறது. "பாபா" அல்லது "தந்தை" என்ற அர்த்ததில் இந்த உச்சரிப்பு "爸" "பா" என்ற எழுத்தை மிகவும் ஒத்துள்ளது. அதனால் தாய்வானியர்கள் ஆகஸ்ட் 8 ஐ அதன் செல்லப்பெயரில் "பாபா தினம்" (爸爸節) என வழக்கமாக அழைக்கின்றனர்.
தாய்லாந்து
தாய்லாந்தில் ராஜாவின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். தற்போதைய ராஜாவான புயிமிபொல் அடல்யதேஜிற்கு (ராமா IX) டிசம்பர் 5 ஆம் தேதி பிறந்த நாளாகும். தாய்ஸ் இந்த தினத்தை ஆண்தன்மையுடைய மலராக கருதப்படும் கன்னா மலரை (கோக் புட் ட ருக் சா) அவர்கள்து தந்தை அல்லது தாத்தாக்களுக்கு கொடுத்து கொண்டாடுகின்றனர். தாய் மக்கள் ராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையாக இந்த நாளில் மஞ்சள் நிற ஆடையை உடுத்துவர். ஏனெனில் மஞ்சள் நிறமானது திங்கள் கிழமையின் அந்த நாளின் நிறமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ராஜா புயிமிபொல் அடல்யதேஜ் பிறந்தார்.
இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் இருந்து கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. அன்னையர் தினமானது ராணியான சிரிகிட் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் இதன் முதல் கொண்டாட்டம் தொடங்கியது. தந்தையர்களைக் கெளரவப்படுத்துவதற்கான பிற கொண்டாட்டங்கள் பேர்மோண்ட் மற்றும் கிரெஸ்டனில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நவீன விடுமுறை இந்த இரண்டிலும் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது அல்ல.
வாஷிங்டனில் உள்ள கிரெஸ்டனில் பிறந்த சொனொரா ஸ்மார் டோடினால் இந்த நவீன தந்தையர் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை நிறுவுவதற்கு இவரே இயக்கு சக்தியாக இதற்குப் பின்னால் இருந்தார். அவருடைய அப்பாவான உள்நாட்டுப் போரில் அனுபவமுள்ள வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் தனி மனிதராக அவரது ஆறு குழந்தைகளையும் வளர்த்துள்ளார். அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு உழைத்த அன்னா ஜர்விஸால் இவர் ஊக்கமூட்டப்பட்டார். எனினும் தொடக்கத்தில் அவரது அப்பாவின் பிறந்த நாளான ஜூன் 5 ஆம் தேதியையே அறிவுறுத்தினார். இவர் நிறுவனர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தகுந்த காலம் தராததால் இந்த கொண்டாட்டம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனின் ஸ்போக்கன் YMCAவில் முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
பிரபலங்களான வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரைன்போன்றோரின் அதிகார்வப்பூர்வமற்ற ஆதரவால் விரைவாக இது பரவியது. 1916 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவரது குடும்பத்தாருடன் தனிப்பட்ட முறையில் இந்த தினத்தைக் கொண்டாடினார். 1924 ஆம் ஆண்டு ஜனாதிபதி கெல்வின் கூலிட்ஜ் இந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் படி பரிந்துரைத்தார். 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகக் கொண்டாட வழிவகை செய்தார். ரிச்சர் நிக்சனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 1972 ஆம் ஆண்டு வரை இந்த விடுமுறை தினம் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அண்மை ஆண்டுகளில் விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட பரிசுகளான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகளை இந்த விடுமுறை நாளில் அளிப்பதற்கு ஊக்கமளித்து வருகின்றனர். தந்தையர் தினப் பரிசுகளை அளிப்பதற்காக வழக்கமாக பள்ளிகளிலும் மற்றும்பிற குழந்தைகள் நிகழ்ச்சி நிரல்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
முன் வரலாறு
முதல் நவீன "தந்தையர் தின" கொண்டாட்டமானது ஜூலை 5, 1908 அன்று மேற்கு வெர்ஜினியாவில் உள்ள பேர்மோண்ட்டில் மத்திய யுனைட்டட் மெத்தொடிஸ்ட் தேவாலயம் என இப்போது அறியப்படும் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் தெற்கு தேவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. கிரேஸ் கோல்டன் கிளைடன் அவருடைய அப்பாவான, மெத்தொடிஸ்ட் மதகுருவான ஃப்ளெட்சர் கோல்டன் பிறந்த நாளுக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். இந்த நகரத்தில் பிற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தக் கொண்டாட்டம் அவர்களது நகரத்தைத் தாண்டி ஊக்குவிக்கப்படவே இல்லை. மேலும் எந்த அரசுப் பொது அறிவிப்பும் நகர கவுன்சிலால் மேற்கொள்ளப்படவில்லை. வேறு இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியின் மேல் ஆதிக்கம் செலுத்தின. அவை: ஜூலை 4 ஆம் தேதியில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் 12,000 பேர் கலந்து கொண்டு வெப்பமான காற்று பலூன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஒரு 16 வயது இளம் பெண் இறந்திருந்தார் அது ஜூலை 5 ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த நாள்களில் இது முக்கிய செய்தியாக இருந்தது. உள்ளூர் தேவாலயமும் கவுன்சிலும் ஆர்வமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை. மேலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய போதனை மீண்டும் நிகழ்த்தப்படாமல் இது கைவிடப்பட்டது. மேலும் கிளைடன் இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கவோ மற்றவர்களிடம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசக்கூட செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார்.
கிளைடன் அவருடைய அப்பாவின் இழப்பினால் துயருற்றிருந்தார். மேலும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மோனோநக் அருகில் உள்ள மோனோநக் சுரங்கத்தொழில் சேதத்தில் 361 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதில் 250 பேர் அப்பாக்கள் இந்த சம்பவத்தால் ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பா இல்லாத குழந்தைகள் ஆனார்கள். கிளைடன் அவருடைய மதகுருவான ராபர்ட் தாமஸ் வெப்பை இறந்த அனைத்து அப்பாக்களையும் கெளரவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
பேர்மோண்ட்டில் இருந்து 15 மைல்கள் (24 கிமீ) தொலைவில் இருக்கும் நகரமான கிரப்டன், மேற்கு விர்ஜினியாவில் அவரது அம்மா இறந்ததற்கான சடங்குகளை இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னா ஜர்விஸ் செய்திருந்தார். மேலும் அன்னா ஜர்விஸ்' அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு அறப்போர் நடத்தியதில் கிளைடனும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
‘‘அன்னையி நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினா ஊரை வாங்கலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக்காட்டியிருப்பார்.
ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
இருந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையைவிட, அன்பை பொழியும் தாயைத்தான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகம் பிடிக்கிறது.
உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், ‘தந்தையர் தினம்’ என்பது 1910–ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது.
அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார்.
அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர கவர்னர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமையே (இன்று) ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தங்களது தந்தையை கவுரவித்து பரிசுகளை வழங்க, தமிழகத்தில் உள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
சென்னையில் உள்ள வாழ்த்து அட்டை கடைகளில், தந்தையர் தினத்திற்கு என்றே பிரத்யேக வாழ்த்து அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, தந்தைக்கு வாழ்த்து மடல் போன்று வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதேபோல், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் தந்தையர் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில், தங்களது தந்தைக்கு பிடித்த உணவை கூறினால், தயாரித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். சென்னையை போன்ற பெரு நகரங்களில் குடும்பத்துடன் இருந்தாலும், காலையில் குழந்தை கண்விழிக்கும் போது வீட்டை விட்டு வேலைக்கு புறப்படும் தந்தைமார்கள், இரவு குழந்தை தூங்கும் நேரத்தில் தான் வீடு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் உடனான உறவை வேலைப்பளு பிரிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் தனது சிறு வயது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லிவிட்டு பல தந்தைமார்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அந்த குழந்தையோ, பொம்மைக்கு பதிலாக தனது தந்தையே, அருகில் இருந்து விளையாட மாட்டாரா? என்று ஏங்குகிறார்கள். பொருளாதார தேவை அந்த அளவுக்கு குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுகிறது. இருந்தாலும், தந்தை மீதான பாசம் அந்த குழந்தைகளுக்கு குறைந்து போய்விடுவதில்லை.
சிறு வயதில், தாய்–தந்தையின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய்–தந்தைக்கு அவர்கள் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்போம்.
தெய்வங்கள் எல்லாம் தோற்கும் தந்தை அன்பின் முன்னே...
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை.
தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
வழிகாட்டி
தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை. சில தந்தைகள் தன் குழந்தைக்கு
நண்பனை போல இருப்பர். 'அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும்.
எப்படி வந்தது
அமெரிக்காவில் 1909ல் 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு துாண்டியது.
இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்
பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தந்தையர் தினம்: முதல் ஹீரோ அப்பாதான்!
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.
தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம். நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.
நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.
தந்தைக்கு மரியாதை
உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம்.
தந்தையின் தியாகம்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் அனுப்புங்கள்.
தந்தைக்கு மரியாதை
தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.
மெழுகுவர்த்தி
ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக