திங்கள், 4 ஜூன், 2018

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 05. World Environment Day



உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 05.  World Environment Day

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day , WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

நோக்கம்

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

வரலாறு

இது ஐநாவின் பொது அவையினால் 1972 ஆம் ஆண்டில் மனித சூழலுக்கான ஐநா மாநாடு நடத்தப்பட்ட நாளில் ஏற்படுத்தப்பட்டது.
உலகச் சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகள்
பணியிடத்தில் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க தனி ஒவ்வொருவருக்கும் ஊக்கமூட்ட 2007இல் இருந்து சிங்கப்பூரில் சூழல் செயற்பாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
2015 சூன் 5ஆம் நாளன்று இந்தியப் பிரதமர்
நரேந்திர மோதி புதுதில்லி, பந்தயச் சாலை, 7ஆம் எண்ணிட்ட தம் இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார்.
உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடல்
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
புடவியின் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!
ஒன்றிவாழ்வோம் ஒருநிரை யாக
கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே!
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
புவியில் வாழும் உயிரினங் களோடும்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி!
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
உலக நாட்டு இணைந்த மக்கள்யாம்
எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும்
நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி! .
—"புவிப் பண்" இயற்றியது: அபே கே


"புவிப் பண்" அபே கே என்பவரால் எழுதப்பட்டு 2013 சூன் மாதத்தில் உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய அமைச்சர்கள் கபில் சிபல் , சசி தரூர் ஆகியோரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது. ஐநா பொது அவையின் அலுவல் மொழிகளான அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகளில் புவியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைவிட இந்தி, நேபால மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
கருப்பொருள்கள்
ஒவ்வோராண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கும் ஒரு தனியான முழக்கத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட்டது.இந்த முழக்கங்களைப்போலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கருப்பொருளும் உண்டு. 2009-2015 வரை பரப்பிய கருப்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.
2015
’ஏழு பில்லியன் கனவுகள்;ஒரே கோள்; விழிப்போடு நுகர்’.
2014
கருப்பொருள்:-'சிறு தீவுகளும் காலநிலை மாற்றமும்',
முழக்கம்:-'குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல.
2013
2011 சுற்றுச்சூழல் நாள்:
பிரான்டென்போர்க் வாயில் .
2011: தோனெத்ஸ்க் , உக்ரைன்
2012: எத்தியோப்பியா , கோன்சோ நகரில் மரநாட்டு நிகழ்வு.
2013இன் கருப்பொருள் சிந்தி. உண். சேமி.
பரப்புரை ஒவ்வோராண்டும் பேரளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின்பால் கவனத்தைக் குவித்தது. இந்த உணவு சேமிக்கப்பட்டால்,ஏராளமானோர்க்கு உணவு வழங்கி கரிமக் கால்தடத்தையும் குறைக்கமுடியும். உணவுப் பொருளை விரயமாக்கும் வாழ்முறைமை உள்ள நாடுகளின்பால் குறிப்பான கவனம் திருப்பப்பட்டது. உலகளாவிய உணவு விளைச்சலால் சூழலின் மீது ஏற்படும் ஒட்டுமொத்தத் தாக்கத்தைக் குறைக்க மக்கள் உண்ண விரும்பும் உணவின் தேர்வை அறிவிக்கும் உரிமையைப் பெறவைக்கும் குறிக்கோளையும் முன்வைத்தது.
2012
2012 உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள் பசுமைப் பொருளாதாரம்: நீயும் உள்ளாயா?
இந்த கருப்பொருள் மக்களை தம் செயல்பாடுகளையும் வாழ்க்கைப்பாணியையும் சீர்தூக்கிப் பார்த்து பசுமைப் பொருளாதாரத்தில் அவை எப்படி பொருந்துகின்றன எனக் கருதுமாறு கேட்டுக்கொள்ளச் செய்கிறது. இந்த ஆண்டின் விழாக்கலை விருந்தோம்பிய நாடு பிரேசில் அகும்.
2011
2011இன் கருப்பொருள் காடுகள்-உன் சேவையில் இயற்கை. கடற்கரைத் தூய்மிப்பு, கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியைப் பரந்து விரிந்த இந்தியா முன்னின்று நட்த்தியது.
உயிரியற் பல்வகைமை
2010
'பல உயிரினங்கள்; ஒரேகோள்; ஒரே எதிகாலம்.', என்பதே 2010இன் கருப்பொருள்.
2010 உலக [[உயிர்ப்பன்மைய ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியை ருவாண்டா முன்னின்று நடத்தியது.
2009
2009இன் உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள் || 'உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை ', உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடலாக மைக்கேல் ஜாக்சனின் ’புவிப் பாடல்’ அறிவிக்கப்பட்ட்து. '.இது மெக்சிகோவில் நடத்தப்பட்டது..

விருந்தோம்பிய நகரங்கள்

உலகச் சுற்றுச்சூழல் நாட்கள் உலகெங்கும் கீழ்வரும் நகரங்களில் தொடர்ந்து கொண்டாடப்பட்டன.:

ஆண்டு கருப்பொருள் ஓம்பு நகரம்

1974 ஒரே புவி எக்ஸ்போ '74 ஸ்போக்கேன், ஐக்கிய அமெரிக்கா
1975 மாந்தர் குடியேற்றம் டாக்கா , வங்காளதேசம்
1976 நீர்: வாழ்வின் அமுதம் கனடா
1977 ஓசோன் படலம் சுற்றுச்சூழல் அக்கறை; நிலங்கள் இழப்பும் மண் தரக்குறைவும் சில்ஹெட் , வங்காளதேசம்
1978 அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காளதேசம்
1979 குழந்தைகட்கான ஒரே எதிர்காலம் – அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காள தேசம்
1980 புதிய பத்தாண்டுக்கான புதிய சவால்: அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட் , வங்காள தேசம்
1981 நிலத்தடி நீர்; மாந்த உணவுத் தொடரில் நச்சு வேதிமங்கள் சில்ஹெட் , வங்காள தேசம்
1982 ஸ்டாக்கோல்முக்குப் பின் பத்ஹ்தாண்டுகள் (சுற்றுச்சூழல் அக்கறைகளைப் புதுப்பித்தல்) டாக்கா , வங்காள தேசம்
1983 தீங்கான கழிவுகளை மேலாளலும் கழித்தலும்: அமில மழையும் ஆற்றலும் சில்ஹெட் , வங்காள தேசம்
1984 பாலையாக்கம் ராஜ்சாகி, வங்காள தேசம்
1985 இளைஞர்: மக்கள்தொகையும் சுற்றுச்சூழலும் பாக்கித்தான்
1986 அமைதிக்கான தரு ஒன்ராறியோ, கனடா
1987 சுற்றுச்சூழலும் வாழிடமும்: கூரையினும் பெரிது நைரோபி , கென்யா
1988 மக்கள் சுற்றுச்சூழலை முதலில் வைத்தால் வளர்ச்சி என்றும் நீடிக்கும் பாங்காக், தாய்லாந்து
1989 புவி சூடாதலுக்கானஉலக எச்சரிக்கை பிரசெல்சு ,பெல்ஜியம்
1990 சிறுவரும் சுற்றுச்சூழலும் மெக்சிக்கோ நகரம் ,மெக்சிகோ
1991 காலநிலை மாற்றம். உலகப் பங்கேற்பின் தேவை சுடாகோல்ம் , சுவீடன்
1992 ஒரே பவி, அக்கறையோடு பகிர்ந்திடு இரியோ டி செனீரோ ,
பிரேசில்
1993 ஏழ்மையும் சுற்றுச்சூழலும் – சுழல்வட்டம் உடைப்போம் பெய்ஜிங் , சீன மக்கள் குடியரசு
1994 புவியெல்லம் ஒரே குடும்பம் இலண்டன் , ஐக்கிய நாடுகள்
1995 புவிச்சூழல் பேண ஒருங்கிணைந்த மாந்தர் யாம் பிரிட்டோரியா, தென் ஆப்பிரிக்கா
1996 நம்பூமி, நம் வாழிடம், நம் குடில் இசுதான்புல், துருக்கி
1997 புவியில் உயிர் தழைக்க சியோல் , தென் கொரியா
1998 புவி உயிர் தழைக்க, கடல்களைக் காப்போம் மாஸ்கோ , உருசியா
1999 புயொன்று – எதிர்காலம் ஒன்று – காப்பாற்றுவோம்.! டோக்கியோ, நிப்பான் (ஜப்பான்)
2000 சுற்றுச்சூழல் ஆயிரமாண்டு –செயற்படுதருணம் அடிலெய்டு , ஆசுத்திரேலியா
2001 உயிர்வைய விரிவலையில் இணை துரின், இத்தாலி; அவானா , கியூபா
2002 புவிக்கொரு வாய்ப்பு ஈவோம் சென்சென் , மக்கள் சீனக் குடியரசு
2003 நீர் –இதற்காக இரு பில்லியன் மக்கள் சாகின்றனர்! பெய்ரூத் , இலெபனான்
2004 தேவை தானே! கடல், பெருங்கடல்கள் – உயிரோடா, இல்லாமலா? பார்செலோனா ,எசுப்பெயின்
2005 பசுமை நகரங்களே நம் கோளின் திட்டம்! சான் பிரான்சிஸ்கோ , ஐக்கிய அமெரிக்கா
2006 பாலையும் பாலையாக்கமும் –வன்புலம் அகலாதே! அல்ஜியர்சு , அல்ஜீரியா
2007 உருகும் பனிக்கட்டி – சூடான தலைப்பு தான்? இலண்டன் , இங்கிலாந்து
2008 பழக்கத்தை மாற்றுt – தாழ் கரிமப் பொருளாதாரம் நோக்கி வெலிங்டன் , நியூசிலாந்து
2009 உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை மெக்சிகோ நகரம் , மெக்சிகோ
2010 பல உயிரினங்கள்; ஒரே கோள்; ஒரே எதிர்காலம். ராங்பூர், வங்காளதேசம்
2011 காடுகள்: உன் சேவையில் இயற்கை புதுதில்லி , இந்தியா
2012 பசுமைப் பொருளாதாரம்:அது உன்னை உள்ளடக்குகிறதா? பிரேசில்
2013 சிந்தி. உண். சேமி. காலடித் தடம் குறை மங்கொலியா
2014 குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல. பார்படோசு ,
2015 ஏழு பில்லிஅன் கனவுகள்; ஒரே கோள்; விழிப்புடன் நுகர். இத்தாலி
2016 பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை. சவூதி அரேபியா.



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.
மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.
புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.


ENUP இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை, சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம், சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல் இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம் ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல், புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி, பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் - வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி, ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி, நம் வசிப்பிடம், நம் வீடு
1997 - பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி - நம் எதிர்காலம், காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு - செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் - அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் - இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் - கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் - தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி - ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் - குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி
இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ் சூழல் சம்பந்தமான விடயங்களுக்கு மனிதநேயத்தை வழங்குதல், மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுப்பான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல். சூழல் சம்பந்தமான விடயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல், எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.
1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து
2009ல் உலக சூழல் தின முதன்மைக் கொண்டாட்டத்தை மெக்சிக்கோவில் நடத்துவதாக ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்ட தலைவரும் நிர்வாகப் பணிப்பாளரும், அறிவித்துள்ளார்கள். எனினும், எனினும் தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் ஆரம்பம் மெக்சிக்கோவில் இடம்பெற்றதாகக் கருதப்படுவதினால் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சில தாக்கங்கள் உருவாகலாம் என கருதப்படுகின்றது.
இன்னும் 180 நாட்களில் கோப்பன் ஹேகனில் நடைபெறவுள்ள நெருக்கடியான சூழல் மகாநாட்டில் காலநிலை மாற்றம் பற்றியும் வறுமை ஒழிப்பு பற்றியும், காடுகளின் சிறப்பான முகாமைத்துவம் பற்றியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர உள்ளனர். இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெறவுள்ளது. ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100 கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக