சர்வதேச விளையாட்டுத்தினம் ஆகஸ்ட் 29
"காலையில் எழுந்த உடன் படிப்பு மாலை முழுவதும் விலையாட்டு என்பதை வழக்கப்படுதிக் கொள்ளு பாப்பா" ன்னு ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள் முலம் விளையாட்டின் முக்கியத்துவத்தை அன்றே மகாகவி பாரதி சொல்லி வைத்தார்.
வருங்கால தூண்களாக இருக்க கூடிய இளைஞர்கள் உடல் வலுவோடும், உடல் நல்மோடும் வழ்வதற்கு விளையாட்டு ரெம்பவும் அவசியமானது.அதனால்தான் பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் விளையாட்டுக்கென்று ஒரு பாடப்பிரிவை வைத்திருக்கின்றார்கள். இது தவிர விளையாட்டை முன்னேற்றவும், விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்" என்று நம்ம இந்தியா தனி அமைச்சகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இதைமாதிரி உலக அளவில் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் வழங்க,
ஓலிம்பிக் போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப்போட்டிகள் ,உலக் கிரிக்கெட் போட்டிகள்,உலக கால்பந்துப்போட்டிகள், என்று பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் உலக அளவில் நடத்தப்படுகிறது.
ஆனால், இன்றைய நவீன கல்விச் சூழலில் குழந்தைகள் விளையாடுவதை வீண் வேலையாகக் கருதி, குழந்தைகள் எந்த நேரமும் படித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று பெற்றோர்களின் துன்புறுத்துதளுக்கு ஆளாக்கப் படுகின்றார்கள். தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் நிலைப்பற்றி கவலைப்படுவதில்லை.
குழந்தைகள் விளையாடுவதின் மூலம் ரத்த ஓட்டம் சீரடைகிறது,நரம்புகள் வலிமை பெறுகின்றன, சோர்பு நீங்கிச் சுரறுசுறுப்பை உண்டாக்கி ,உடல் புத்துணச்சியோடு ஆரோக்கியமும் பெறும் என்பது ,பொற்றோர்களுக்கு புரிவதும் மில்லை.
வசதி படைத்த குழந்தைகள் விடியோ கேம்,கம்யூட்டர் கேம்,தொலைக்காட்சி,என்று பல நவீன விளையாட்டுக்கள் மூலம் நேரத்தை வீண் செலவும் செய்கின்றார்கள். இப்படி செய்வதால் நம் நாட்டில் விளையாட்டு வீரர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றனர், அதைப்போல நம் நாட்டில் கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகள் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கின்றார்கள்,நம்ம தேசிய விளையாட்டு ஹாக்கி பற்றி பலருக்கும் தெரியாது,இதைப்போல கிராம புறங்களில் விளையாடக்கூடிய கபடி,கில்லின்னு பல விளையாட்டுகள் மறைந்து வருவது வருத்தத்துகூறியது.
விளையாட்டில் அதிகம் ஈடுபடுபடுவது மூலம், இளம் தலை முறையினருக்கு விளையாட்டு ஒரு சிறந்த பொழுது போக்காக மட்டும் இல்லாமல், கவனம் சிதறி வேறு தீய செயல்கள் செய்யாமல் தடுக்கவும் உதவுகிறது.
இளைஞர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவதையும் ,விளையாட்டு உடலுக்கு மட்டும் அல்ல ஒரு நாட்டிற்கே ஆரோக்கியமானது என்பதை வலியுறுத்தவும், விளையாட்டு மூலம் நாட்டுக்கு பெருமை தேடிதந்த விளையாட்டு வீரர்களை கவ்ரவ படுத்தவும், ஆகஸ்ட் 29 ந் தேதி சர்வதேச விளையாட்டுத்தினமாக கொண்டாடப்படுகிறது.
"விளையாடுவோம் நம் பாரம்பரிய விளையாட்டுக்களை மறக்காமல் விளையாடுவோம்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக