வெள்ளி, 20 மார்ச், 2020

காடுகள் தினம் மார்ச் 21


வனம்... வாழ்வின் அங்கம் - உலக காடுகள் தினம் !மார்ச் 21

இவ்வுலகை விட்டு தான் சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும், கண்டுபிடிப்புகளையும் நினைவுகூறுவதே வரலாறு.
உலக காடுகள் தினம்


🌳 வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக பொம்மலாட்ட தினம்


🎎 உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🎎 உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.நா.மகாலிங்கம்


🏢 ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.

🏢 இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.

🏢 சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுப்படுத்தினார்.

🏢 காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.

🏢 இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🏢 பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த 'அருட்செல்வர்" என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.
✍ 1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை 'பாரத் ரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார். ✍ 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக