செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தேவ மாதா உதய நாள் செப்டம்பர் 8 ,

தேவ மாதா உதய நாள் செப்டம்பர் 8 ,
மரியாள்  புதிய ஏற்பாட்டின் படி நாசரேத்தூர் இயேசுவின் தாயாவார். புனித யோசேப்பு இவரது கணவனாவார். புனித யோக்கீம் மற்றும் புனித அன்னம்மாள் இவரது பெற்றோராவார்கள். மரியாள் கிறிஸ்தவர்களால் அதுவும் கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாக நடைபெறும் இறையியல் கல்வி மாரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பை கத்தோலிக்க கிழக்கு மரபுவழித்திருச்சபை,அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8 இல் கொண்டாடுகின்றன.
தமிழில் மரியாள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார், இப்பெயர்கள் அவரது குணாதியசங்களை கொண்டும் அவர் செயத்தாக கிறிஸ்தவர் நம்பும் புதுமைகளைக் கொண்டும், அவரது ஆலயங்கள் அமைந்துள்ள இடப் பெயர்களைக் கொண்டும் புணையப்பட்டுள்ளன. புனித மரியாள், கன்னி மரி, மாதா, வியாகுல மாதா, அன்னை வேளாங்கன்னி, மடுமாதா என்பவை சில உதாரணங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக