ஞாயிறு, 6 நவம்பர், 2011

கமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7,

கமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7, 

கமல்ஹாசன் சாதனை குறிப்புகள் .
பெயர் : சீ.கமல்ஹாசன்

பிறந்த தேதி : 7.11.1954

பிறந்த இடம் : பரமக்குடி

தந்தை : தியாகி டி.சீனிவாசன்

தாய் : சீ.ராஜலெட்சுமி

சகோதரர்கள் : சீ.சாருஹாசன்,சீ.சந்திரஹாசன்

சகோதரி : சீ.நளினி

மகள்கள் : க.சுருதி ராஜலெட்சுமி, க.அக்ஷ்ரா

முதல் படம் : களத்தூர் கண்ணம்மா

25 வது படம் : அபூர்வ ராகங்கள்

50 வது படம் : அவர்கள்

75 வது படம் : சிவப்பு ரோஜாக்கள்

100 வது படம் : ராஜபார்வை

125 வது படம் : எனக்குள் ஒருவன்

150 வது படம் : அபூர்வ சகோதரர்கள்

200 வது படம் : ஆளவந்தான்



1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா

2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960

3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்

4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி

5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்

6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்

7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே

8 முதல் வங்க மொழிப் படம் கபிதா

9 முதல் கன்னடப் படம் கோகிலா

10 முதல் தெலுங்குப் படம் பொன்னி

11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி

12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்

13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்

14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்

15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்

16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்

17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே

18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்

19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.

21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.

22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.

23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.

24 கமலின் 100வது படம் ராஜ பார்வை

25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை

26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.

27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்

28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.

29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.

30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.

31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.

32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.

33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்

34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.

35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.

36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.

37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.

38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.

39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.

40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி

41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.

42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.

43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.

44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.

45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.

47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126

49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)

50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.

51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்

52 இயக்கியப் படங்கள் இரண்டு

53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.

54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,

55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.

56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.

58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.

59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.

60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.

61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.

62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.

63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.

64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.

65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.

66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.

67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.

68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.

70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.

71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.

72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.

74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.

75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.

76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.

77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.

78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.

79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.

80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.

81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.

82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.

83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.

84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)

85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.

86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.

87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.

88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.

89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.

90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.

91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.

92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.

93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.

94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.

95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.

97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.

98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.

99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.

100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.

101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்

102 கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.

103 சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.

104 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.

கமல்ஹாசன் படங்களின் பட்டியல்

வ.எண். திரைப்படம் வெளியான தேதி

1 களத்தூர் கண்ணம்மா 12.08.1960

2 பார்த்தால் பசி தீரும் 14.01.1962

3 பாத காணிக்கை 28.09.1962

4 கண்ணும் கரளும்(ம) 28.09.1963

5 வானம் பாடி 09.03.1963

6 ஆனந்த ஜோதி 28.06.1963

7 அரங்கேற்றம் 09.02.1973

8 சொல்லத்தான் நினைக்கிறேன் 07.12.1973

9 பருவ காலம் 09.02.1974

10 குமாஸ்தாவின் மகள் 27.04.1974

11 நான் அவனில்லை 07.06.1974

12 கன்யாகுமரி(ம) 26.07.1974

13 விஷ்ணு விஜயம்(ம) 25.10.1974

14 அவள் ஒரு தொடர்கதை 13.11.1974

15 பணத்துக்காக 06.12.1974

16 சினிமா பைத்தியம் 31.01.1975

17 பட்டாம் பூச்சி 21.02.1975

18 ஆயிரத்தில் ஒருத்தி 14.03.1975

19 தேன் சிந்துதே வானம் 11.04.1975

20 மேல் நாட்டு மருமகள் 10.05.1975

21 தங்கத்திலே வைரம் 16.05.1975

22 பட்டிகாட்டு ராஜா 12.07.1975

23 ஞான்நின்னேபிரேமிக்குன்னு(ம) 25.07.1975

24 மாலை சூடவா 01.08.1975

25 அபூர்வ ராகங்கள்(ம) 15.08.1975

26 திருவோணம் 03.10.1975

27 மட்டொரு சீதாகுமாஸ்தாவின் மகள்(ம) 27.04.1975

28 ராசலீலா(ம) 12.12.1975

29 அந்தரங்கம் 12.12.1975

30 அக்னி புஷ்பம்(ம) 09.01.1976

31 அப்பூப்பன்(ம) 13.02.1976

32 சமஸ்ஸியா(ம) 27.02.1976

33 மன்மத லீலை 27.02.1976

34 ஸ்விம்மிங் பூல்(ம) 26.03.1976

35 அருது(ம) 26.03.1976

36 சத்யம் 06.05.1976

37 ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது 04.06.1976

38 உணர்ச்சிகள் 25.06.1976

39 குட்டாவும் சிட்சயும்(ம) 09.07.1976

40 குமாரவிஜயம் 30.07.1976

41 இதய மலர் 03.09.1976

42 பொன்னி(ம) 03.09.1976

43 நீ என்டே லஹரி(ம) 24.09.1976

44 மூன்று முடிச்சு 22.10.1976

45 மோகம் முப்பது வருஷம் 27.11.1976

46 லலிதா 10.12.1976

47 உயர்ந்தவர்கள் 14.01.1977

48 சிவதாண்டவம்(ம) 03.02.1977

49 ஆசிர்வாதம்(ம) 10.02.1977

50 அவர்கள் 25.02.1977

51 மதுர சொப்பனம்(ம) 03.03.1977

52 ஸ்ரீதேவி(ம) 25.03.1977

53 உன்னை சுற்றி உலகம் 29.04.1977

54 கபிதா(வ) 14.07.1977

55 அஷ்ட மாங்கல்யம்(ம) 22.07.1977

56 நிறகுடம்(ம) 29.07.1977

57 ஓர்மகள் மரிக்குமோ(ம) 26.08.1977

58 16 வயதினிலே 15.09.1977

59 ஆடுபுலி ஆட்டம் 30.09.1977

60 ஆனந்தம் பரமானந்தம் 30.09.1977

61 நாம் பிறந்த மண் 07.10.1977

62 கோகிலா(க) 07.10.1977

63 சத்யவான் சாவித்திரி(ம) 14.10.1977

64 ஆத்ம பாடம்(ம) 10.11.1977

65 மதனோற்சவம்(ம) 26.01.1978

66 காத்திருந்த நிமிஷம்(ம) 17.02.1978

67 அனுமோதனம்(ம) 24.02.1978

68 நிழல் நிஜமாகிறது 24.03.1978

69 மரோ சரித்ரா(தெ) 19.05.1978

70 இளமை ஊஞ்சலாடுகிறது 09.06.1978

71 சட்டம் என் கையில் 14.07.1978

72 வயசு பிலிச்சிந்தி 04.08.1978

73 வயநாடன் தம்பன் 30.10.1978

74 அவள் அப்படித்தான் 30.10.1978

75 சிகப்பு ரோஜாக்கள் 28.10.1978

76 மனிதரில் இத்தனை நிறங்களா 30.10.1978

77 ஈட்டா(ம) 10.11.1978

78 சொம்ம கொடுதி சோக்கொடுதி(தெ) 05.01.1979

79 சிவப்புக்கல் மூக்குத்தி 12.01.1979

80 நீயா 13.01.1979

81 அலாவுதீனும் அல்புத விளக்கும்(ம) 14.04.1979

82 நினைத்தாலே இனிக்கும் 14.04.1979

83 தாயில்லாமல் நானில்லை 14.04.1979

84 அந்தமைன அனுபவம் 19.04.1979

85 அலாவுதீனும் அற்புத விளக்கும 08.06.1979

86 இதி காத காது(தெ) 29.06.1979

87 கல்யாண ராமன் 06.07.1979

88 மங்கள வாத்தியம் 21.09.1979

89 நீலமலர்கள் 19.10.1979

90 உல்லாச பறவைகள் 07.03.1980

91 குரு 18.07.1980

92 குரு(தெ) 18.07.1980

93 வறுமையின் நிறம் சிவப்பு 06.11.1980

94 மரியா மை டார்லிங் 14.11.1980

95 மரியா மை டார்லிங்(க) 19.12.1980

96 ஆகலி ராஜ்யம்(தெ) 09.01.1981

97 மீண்டும் கோகிலா 14.01.1981

98 பிரேம பிச்சி 20.02.1981

99 ராம் லட்சுமண் 07.03.1980

100 ராஜ பார்வை 10.04.1981

101 உல்லாச பறவைகள் 07.03.1980

102 ஏக்துஜே கே லியே(இ) 1981

103 சவால் 03.07.1981

104 சங்கர்லால் 15.08.1981

105 அமாவாஸ்ய சந்துருடு(தெ) 1981

106 டிக் டிக் டிக் 07.11.1981

107 எல்லாம் இன்ப மயம் 05.12.1981

108 வாழ்வே மாயம் 26.01.1981

109 அந்த காடு(தெ) 1982

110 அந்தி வெயிலிலே பொன்னு(ம) 1982

111 மூன்றாம் பிறை 19.02.1982

112 சிம்லா ஸ்பெஷல் 14.04.1982

113 சனம் தேரி கஸம்(இ) 1982

114 சகல கலா வல்லவன் 14.11.1982

115 யே தோ கமால் ஹோ கயா(இ) 1982

116 பகடை பன்னிரண்டு 14.11.1982

117 ஜராஸி சிந்து 1983

118 சட்டம் 21.05.1983

119 சிநேக பந்தயம்(ம) 1982

120 சாகர சங்கமம்(தெ) 03.06.1983

121 சத்மா(இ) 1983

122 தூங்காதே தம்பி தூங்காதே 04.11.1983

123 ஏம் நயி பஹலி(இ) 29.06.1984

124 யாத்கார்(இ) 20.07.1984

125 ராஜ்திலக்(இ) 30.08.1984

126 எனக்குள் ஒருவன் 23.10.1984

127 கரீஷ்மா(இ) 07.12.1984

128 ஒரு கைதியின் டைரி 14.01.1985

129 காக்கி சட்டை 11.04.1985

130 அந்த ஒரு நிமிடம் 31.05.1985

131 உயர்ந்த உள்ளம் 27.7.1985

132 சாகர்(இ) 09.08.1985

133 கிராப்தார்(இ) 07.09.1985

134 மங்கம்மா சபதம் 21.09.1985

135 ஜப்பானில் கல்யாணராமன் 11.11.1985

136 தேகா பியார் துமாரா(இ) 20.12.1985

137 சுவாதி முத்யம்(தெ) 13.03.1986

138 நானும் ஒரு தொழிலாளி 01.05.1986

139 விக்ரம் 29.05.1986

140 ஒகராதா இத்தருகிருஷ்ணுடு(தெ) 02.10.1986

141 புன்னகை மன்னன் 01.11.1986

142 காதல் பரிசு 14.01.1987

143 விரதம்(ம) 15.05.1987

144 அந்தரி கண்டே கனுடு(தெ) 03.07.1987

145 பேர் சொல்லும் பிள்ளை 16.07.1987

146 நாயகன் 21.10.1987

147 பேசும் படம் 27.11.1987

148 சத்யா 29.01.1988

149 டெய்சி(ம) 19.02.1988

150 அபூர்வ சகோதரர்கள் 30.07.1988

151 உன்னால் முடியும் தம்பி 12.08.1988

152 சூரசம்ஹாரம் 14.04.1989

153 சாணக்யன்(ம) 01.09.1989

154 வெற்றி விழா 28.10.1989

155 இந்துருடு சந்துருடு(தெ) 24.11.1989

156 மைக்கேல் மதன காமராஜன் 17.10.1990

157 குணா 05.11.1991

158 சிங்கார வேலன் 10.04.1992

159 தேவர் மகன் 25.10.1992

160 மகராசன் 05.03.1993

161 கலைஞன் 14.04.1993

162 மகாநதி 14.01.1994

163 நம்மவர் 02.11.1994

164 சதிலீலாவதி 15.01.1995

165 சுப சங்கல்பம்(தெ) 28.04.1995

166 குருதிப்புனல் 23.10.1995

167 துரோகி(தெ) 26.10.1995

168 இநதியன் 09.05.1996

169 அவ்வை சண்முகி 10.11.1996

170 சாச்சி 420 (இ) 19.12.1997

171 காதலா காதலா 10.04.1998

172 ஹேராம் 18.02.2000

173 ஹேராம் (இ) 18.02.2000

174 தெனாலி 26.10.2000

175 ஆளவந்தான் 14.11.2001

176 அபய்(இ) 16.11.2001

177 பம்மல் கே சம்பந்தம் 14.01.2002

178 பஞ்ச தந்திரம் 28.06.2002

179 அன்பே சிவம் 15.01.2003

180 விருமாண்டி 26.02.2004

181 வசூல் ராஜா MMBS 14.08.2004

182 மும்பை எக்ஸ்பிரஸ் 15.04.2005

183 ராமா ஷாமா பாமா 09.12.2005

184 வேட்டை ஆடு விளையாடு 25.08.2006

185 தசாவதாரம் 13.06.2008

186 உன்னைப் போல் ஒருவன் 18.09.2009

தேசிய நாயகன் கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்



1 மாணவன்

2 குறத்தி மகன்

3 அந்துவேனி கதா(தெலுங்கு)

4 அவளோட ராவுகள்(மலையாளம்)

5 அவள் விஸ்வதய இருன்னு (மலையாளம்)

6 படக்குதிரா(மலையாளம்)

7 சக்கைபோடு போடு ராஜா

8 தப்பிதா தாளா(தெலுங்கு)

9 தப்புத் தாளங்கள்

10 நூல் வேலி

11 குப்பிடி மனசு(தெலுங்கு)

12 தில்லு முல்லு

13 அழியாத கோலங்கள்

14 பசி

15 நட்சத்திரம்

16 சரணம் ஐயப்பா

17 அன்பு தங்கை

18 அயனா(அரங்கேற்றம்)ஹிந்தி

19 ராணித் தேனீ

20 அக்னி சாட்சி

21 ஏழாம் ராத்திரி(மலையாளம்)

22 மீசம் கோசம் (தில்லு முல்லு)

23 நீதிதேவன் மயக்கம்

24 ஏதி தர்மமு எதி நியாயமு(தெலுங்கு)

25 மாற்றுவின் சட்டங்களே(தெலுங்கு)

26 உருவங்கள் மாறலாம்

27 யேதேஷ்(ஹிந்தி)

28 மன கணக்கு

29 பொய்கால் குதிரை

30 பெங்கி அல்லி அரவித ஹீவு(கன்னடம்)

31 அந்தரி கண்டே காடு(தெலுங்கு)

32 ஸ்நேக பந்தம்

33 மகளிர் மட்டும்

34 லேடிஸ் ஒன்லி(ஹிந்தி)

35 பார்த்தாலே பரவசம்



கமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய பாடல்கள்

வ.எண். திரைப்படம் பாடல்

1 அந்தரங்கம் ஞாயிறு ஒளி மழையில்



2 அவள் அப்படி தான் பன்னீர் புஷ்பங்களே

3 மனிதரில் இத்தனை நிறங்களா? மாமா மனசு இன்னி

4 சிவப்பு ரோஜாக்கள் நினைவோ ஒரு பறவை

5 ராஜபார்வை விழியோரது

6 சவால் தண்ணியே ! போட்டா

7 மூன்றாம் பிறை நரிக்கதை

8 எனக்குள் ஒருவன் மேகம் கொட்டட்டும்

9 ஜப்பானில் கல்யாண ராமன் அம்மம்மோய் அப்பப் போய்

10 விக்ரம் விக்ரம்,விக்ரம்

11 விக்ரம் கண்ணே தொட்டுக்கவா

12 பேர் சொல்லும் பிள்ளை அம்மம்மா....

13 நாயகன் தென்பாண்டி சீமையிலே

14 சத்யா போட்டா மடியுது

15 அபூர்வ சகோதரர்கள் ராஜா கையவச்சா

16 அபூர்வ சகோதரர்கள் அம்மாவனா கால

17 மைக்கேல் மதன காமராஜன் சுந்தரி நீயும்

18 குணா கண்மணி அன்போடு

19 குணா உன்னை நான்

20 சிங்கார வேலன் போட்டு வைத்த

21 சிங்காரவேலன் சொன்னப்படி கேளு

22 தேவர் மகன் சாந்துப் பொட்டு

23 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி

24 கலைஞன் கொக்கரக்கோ

25 மகாநதி அன்பான தாயை

26 மகாநதி எங்கோயோ

27 மகாநதி தன்மானம் உள்ள

28 மகாநதி பேய்களை

29 நம்மவர் எதிலும் வல்லவன்

30 அவ்வை சண்முகி ருக்கு ருக்கு(பெண் குரல்)

31 காதலா காதலா காசு மேலே

32 காதலா காதலா மெடோனா

33 காதலா காதலா சரவணபவ

34 ஹேராம் ராம் ராம்....

35 ஹேராம் நீ பார்த்த

36 ஹேராம் சந்நியாச மந்திரம்

37 ஹேராம் ராமரானாலும் பாபரானாலும்

38 ஆளவந்தான் கடவுள் பாதி

39 ஆளவந்தான் சிரி .....சிரி.....

40 ஆளவந்தான் கடவுள் பாதி.....

41 தெனாலி ஆழங்கட்டி மழை

42 தெனாலி இஞ்சிரங்கோ

43 பம்மல் கே.சம்மந்தம் கந்தசாமி மாடசாமி

44 பம்மல் கே.சம்மந்தம் ஏண்டி சூடாமணி

45 பஞ்சதந்திரம் வந்தேன் வந்தேன்

46 பஞ்சதந்திரம் காதல் பிரியாமல்

47 சரணம் ஐயப்பா அண்ணா வாடா

48 ஓ மானே மானே பொன் மானே

49 உல்லாசம் முத்தே முத்தம்மா

50 அன்பே சிவம் மச்சி மச்சி,

51 அன்பே சிவம் யார் யார் சிவம்,

52 அன்பே சிவம் நாட்டுக் கொரு செய்தி

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25



விஜயகாந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 25
விஜயகாந்த் நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி. 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி[1] மூலம்தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும் , 2011ல்இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவைஉறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள்

2007 - சபரி
2006 - தர்மபுரி
2006 - பேரரசு
2006 - சுதேசி
2004 - எங்கள் அண்ணா
2003 - தென்னவன்
2003 - சொக்கத்தங்கம்
2002 - ரமணா
2002 - தேவன்
2002 - இராச்சியம்
2001 - தவசி
2001 - நரசிம்மா
2001 - வஞ்சிநாதன்
2000 - வல்லரசு
2000 - சிம்மாசனம்
2000 - வானத்தைப் போல
1999 - பெரியண்ணா
1999 - கல்லழகர்
1999 - கண்ணுபடப் போகுதையா
1998 - தர்மா
1998 - வீரம் விளையும் மண்
1998 - உளவுத்துறை
1997 - தர்மச்சக்கரம்
1996 - தாயகம்
1996 - தமிழ்ச் செல்வன்
1996 - அலெக்சாண்டர்
1995 - திருமூர்த்தி
1995 - காந்தி பிறந்த மண்
1995 - கருப்பு நிலா
1994 - பெரியமருது
1994 - பதவிப் பிரமாணம்
1994 - சேதுபதி ஐபிஸ்
1994 - என் ஆசை மச்சான்
1994 - ஆணஸ்ட்ராஜ்
1993 - சக்கரத் தேவன்
1993 - ராஜதுரை
1993 - செந்தூரப் பாண்டி
1993 - கோயில் காளை
1993 - ஏழைஜாதி
1993 - எங்க முதலாளி
1992 - பரதன்
1992 - தாய்மொழி
1992 - சின்ன கவுண்டர்
1992 - காவியத் தலைவன்
1991 - மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
1991 - மாநகர காவல்
1991 - கேப்டன் பிரபாகரன்
1990 - புலன் விசாரணை
1990 - புதுபாடகன்
1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
1990 - சந்தனக் காற்று
1990 - சத்ரியன்
1990 - என் கிட்டே மோதாதே
1989 - ராஜாநாடி
1989 - மீனாட்சி திருவிளையாடல்
1989 - பொன்மனச்செல்வன்
1989 - பொறுத்தது போதும்
1989 - தர்ம வெல்லும்
1989 - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
1989 - ஊழவன் மகன்
1988 - மக்கள் ஆணையிட்டால்
1988 - பூந்தோட்ட காவல்காரன்
1988 - நீதியின் மறுப்பக்கம்
1988 - நல்லவன்
1988 - தென்பாண்டி சிமையிலே
1988 - தெக்கத்தி கள்ளன்
1988 - தம்பி தங்ககம்பி
1988 - செந்தூரப் பூவே
1988 - காலையும் நீயே மாலையும் நீயே
1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
1988 - உழைத்து வாழ வேண்டும்
1987 - வேலுண்டு வினையில்லை
1987 - வீரன் வேலுத்தம்பி
1987 - ரத்தினங்கள்
1987 - போ மழை பொழியுது
1987 - நினைவு ஒரு சங்கீதம்
1987 - சொல்வதெல்லாம் உண்மை
1987 - சிறை பறவை
1987 - சட்டம் ஒரு விளையாட்டு
1987 - கூலிக்காரன்
1986 - வீராபாண்டியன்
1986 - வசந்த ராகம்
1986 - தழுவாத கைகள்
1986 - மணக்கணக்கு
1986 - தர்ம தேவதை
1986 - கருமேட்டுக் கருவாயன்
1986 - ஒரு இனிய உதயம்
1986 - எனக்கு நானே நீதிபதி
1986 - ஊமைவிழிகள்
1986 - அன்னையின் மடியில்
1986 - அன்னை என் தெய்வம்
1986 - அம்மன் கோவில் கிழக்காலே
1985 - ராமன் சிறிராமன்
1985 - நானே ராஜா நானே மந்திரி
1985 - தண்டனை
1985 - சந்தோச கனவு
1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
1985 - அன்னை பூமி
1985 - அலை ஓசை
1985 - அமுத கானம்
1984 - நல்ல நாள்
1984 - வைதேகி காத்திருந்தாள்
1984 - வெள்ளை புறா ஒன்று
1984 - வெட்டி
1984 - தீர்ப்பு என் கையில்
1984 - சத்தியம் நீயே
1984 - குழந்தை ஏசு
1984 - குடும்பம்
1984 - ஈட்டி
1984 - 100வது நாள்
1984 - நாளை உனது நாள்
1983 - துரை கல்யாணம்
1983 - சாட்சி
1983 - ஆட்டோ ராஜா
1982 - பார்வையின் மறுப்பக்கம்
1981 - நீதி பிழைத்தது
1981 - சிவப்பு மாலை
1981 - manak kanakku
1981 - சட்டம் ஒரு இருட்டறை
1980 - தூரத்து இடிமுழக்கம்
1979 - ஓம் சக்தி
1978 - இனிக்கும் இளமை.
நன்றி - விக்கிபிடியா

ச‌ர்வ‌தேச‌ விளையாட்டுத்தின‌ம் ஆக‌ஸ்ட் 29



ச‌ர்வ‌தேச‌ விளையாட்டுத்தின‌ம் ஆக‌ஸ்ட் 29

"காலையில் எழுந்த உடன் படிப்பு மாலை முழுவதும் விலையாட்டு என்பதை வழக்கப்படுதிக் கொள்ளு பாப்பா" ன்னு ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள் முலம் விளையாட்டின் முக்கியத்துவத்தை அன்றே மகாகவி பாரதி சொல்லி வைத்தார்.
வருங்கால தூண்களாக இருக்க கூடிய இளைஞர்கள் உடல் வலுவோடும், உடல் நல்மோடும் வழ்வதற்கு விளையாட்டு ரெம்பவும் அவசியமானது.அதனால்தான் பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் விளையாட்டுக்கென்று ஒரு பாடப்பிரிவை வைத்திருக்கின்றார்கள். இது தவிர விளையாட்டை முன்னேற்றவும், விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்" என்று நம்ம இந்தியா தனி அமைச்சகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இதைமாதிரி உலக அளவில் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் வ‌ழ‌ங்க‌, 
ஓலிம்பிக் போட்டிக‌ள், காமன் வெல்த் போட்டிக‌ள், ஆசிய‌ விளையாட்டுப்போட்டிக‌ள் ,உல‌க் கிரிக்கெட் போட்டிக‌ள்,உல‌க‌ கால்ப‌ந்துப்போட்டிக‌ள், என்று ப‌ல்வேறு விளையாட்டுப்போட்டிக‌ள்  உல‌க அள‌வில் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

ஆனால், இன்றைய‌ ந‌வீன‌ க‌ல்விச் சூழ‌லில் குழந்தைக‌ள் விளையாடுவ‌தை வீண் வேலையாக‌க் க‌ருதி, குழ‌ந்தைக‌ள் எந்த‌ நேர‌மும் ப‌டித்துக் கொண்டேயிருக்க‌ வேண்டும் என்று பெற்றோர்க‌ளின் துன்புறுத்துத‌ளுக்கு ஆளாக்க‌ப் ப‌டுகின்றார்க‌ள். த‌ங்க‌ள் குழந்தைக‌ள் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற‌ வேண்டும் என்ப‌தில் ம‌ட்டுமே ஆர்வ‌ம் காட்டும் பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளின் உட‌ல் நிலைப்ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை.
குழ‌ந்தைக‌ள் விளையாடுவ‌தின் மூல‌ம் ர‌த்த‌ ஓட்ட‌ம் சீர‌டைகிற‌து,ந‌ர‌ம்புக‌ள் வ‌லிமை பெறுகின்ற‌ன‌, சோர்பு நீங்கிச் சுரறுசுறுப்பை உண்டாக்கி ,உட‌ல் புத்துணச்சியோடு ஆரோக்கிய‌மும் பெறும் என்ப‌து ,பொற்றோர்க‌ளுக்கு புரிவ‌தும் மில்லை.
வ‌ச‌தி ப‌டைத்த‌ குழ‌ந்தைக‌ள் விடியோ கேம்,க‌ம்யூட்ட‌ர் கேம்,தொலைக்காட்சி,என்று ப‌ல‌ ந‌வீன‌ விளையாட்டுக்க‌ள் மூல‌ம் நேர‌த்தை வீண் செல‌வும் செய்கின்றார்க‌ள். இப்ப‌டி செய்வ‌தால் ந‌ம் நாட்டில் விளையாட்டு வீர‌ர்க‌ள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வ‌ருகின்ற‌ன‌ர், அதைப்போல‌ ந‌ம் நாட்டில்  கிரிக்கெட் த‌விர‌ பிற‌ விளையாட்டுக‌ள் ப‌ற்றி எதுவும் தெரியாம‌ல் இருக்கின்றார்க‌ள்,ந‌ம்ம‌ தேசிய‌ விளையாட்டு ஹாக்கி ப‌ற்றி ப‌லருக்கும் தெரியாது,இதைப்போல‌ கிராம‌ புற‌ங்க‌ளில் விளையாட‌க்கூடிய‌ க‌ப‌டி,கில்லின்னு ப‌ல‌ விளையாட்டுக‌ள் ம‌றைந்து வ‌ருவ‌து வ‌ருத்த‌த்துகூறிய‌து.

விளையாட்டில் அதிக‌ம் ஈடுப‌டுப‌டுவ‌து மூல‌ம், இள‌ம் த‌லை முறையின‌ருக்கு விளையாட்டு ஒரு சிற‌ந்த‌ பொழுது போக்காக‌ ம‌ட்டும் இல்லாம‌ல், க‌வ‌ன‌ம் சித‌றி வேறு தீய‌ செய‌ல்கள் செய்யாம‌ல் த‌டுக்க‌வும் உத‌வுகிற‌து.

இளைஞர்க‌ளுக்கு விளையாட்டின் முக்கிய‌த்துவ‌தையும் ,விளையாட்டு உட‌லுக்கு ம‌ட்டும் அல்ல‌ ஒரு நாட்டிற்கே ஆரோக்கிய‌மான‌து என்பதை வ‌லியுறுத்த‌வும், விளையாட்டு மூல‌ம் நாட்டுக்கு பெருமை தேடித‌ந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ளை க‌வ்ர‌வ ப‌டுத்த‌வும், ஆக‌ஸ்ட் 29 ந் தேதி சர்வ‌தேச‌ விளையாட்டுத்தின‌மாக‌ கொண்டாட‌ப்ப‌டுகிற‌து.


"விளையாடுவோம் ந‌ம் பார‌ம்ப‌ரிய‌ விளையாட்டுக்க‌ளை ம‌ற‌க்காம‌ல் விளையாடுவோம்!"

திங்கள், 18 ஜூலை, 2011

உல‌க‌ ச‌துர‌ங்க‌ தின‌ம் julai 20.

உல‌க‌ ச‌துர‌ங்க‌ தின‌ம் julai 20.
அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.

சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு abstract போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், கழகங்களிலும், சுற்றுப்போட்டிகளிலும், இணையத்திலும், தபால் மூலமும்கூட விளையாடப்படுகின்றது. பல விதமான சதுரங்கம் விளையாட்டும், அதனுடன் தொடர்புடைய விளையாட்டுக்களும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, ஜப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.
விளையாடும் வழிமுறை
சதுரங்கம் இருவரால் விளையாடப்படும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை எதிரி தனது அரசனை பிடுத்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி, விளையாட்டு முடிவடைந்து விடும்.
சதுரங்கம் இருவரால் விளையாடப்படும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை எதிரி தனது அரசனை பிடுத்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி, விளையாட்டு முடிவடைந்து விடும்.

சதுரங்கம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும்.


இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்
ஆரம்ப நிலை
முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும்.
இதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும்

காய்கள் நகர்த்தல் முறைகள்அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகரக்கூடும். இதற்குக் காசலிங் என்பர். இப்படி இரு கட்டங்கள் நகரும் பொழுது, யானை (rook), அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரே ஆட்டத்தில் அரசரும் யானையும் நகருவதை காசலிங் என்பர்.
அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
மந்திரி அல்லது தேர்: மந்திரி அல்லது தேர் மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
குதிரை: டகர வடிவில் குதிரை நகர முடியும் ((ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது.
கோட்டை: கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
படைவீரர்: நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது. (போகும் போது பிடித்தல்)

ஆட்டம்வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஒருவித இலாபம் இருக்கும் என்று கருத இடமுண்டு.

குறுகிய கோட்டை மாற்றம்
நீண்ட கோட்டை மாற்றம்
போகும் போது பிடித்தல்

வரலாறு
செஸ்ஸின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், செஸ், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் செஸ் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.

மேற்படி மாற்றங்கள் செஸ்ஸை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள செஸ் ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செஸ் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

"ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது.

ஒரு காலத்தில் செஸ் விளையாட்டுக்கள் விபரிப்பு செஸ் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித செஸ் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation - PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும்.

மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட செஸ் விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், செஸ் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.

அக்காலத்தில் செஸ் விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட செஸ் ஆட்டத்தை ஐபிஎம்-இனுடைய செஸ் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார்.

1997ல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி program உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி program உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார்.

வியூகமும் உத்திகளும்
இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனினில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது "தொடக்கம்", வழக்கமாக இக் கட்டம் 10 தொடக்கம் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது "நடுக்கட்டம்" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக "முடிவு", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும்.

[தொகு] வியூகத்தின் அடிப்படைகள்சதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், காய்களின் நிலை, காய்களுக்கு இடையிலான தொடர்புகள், நிலையின் வகை போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு.

சதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் "படைவீரர் அமைப்பு". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம்
உத்திகளின் அடிப்படைகள்
உத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும்.

எளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர்.

திங்கள், 11 ஜூலை, 2011

க‌விபேர‌ர‌சு வைர‌முத்து உத‌ய‌ நாள் ஜூலை 13

க‌விபேர‌ர‌சு வைர‌முத்து உத‌ய‌ நாள் ஜூலை 13

வைரமுத்து  ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.


வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன

கவிதைத் தொகுப்பு

• வைகறை மேகங்கள்

• சிகரங்களை நோக்கி

• திருத்தி எழுதிய தீர்ப்புகள்

• தமிழுக்கு நிறமுண்டு

• இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

• இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

• சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

• இதனால் சகலமானவர்களுக்கும்

• இதுவரை நான்

• கொஞ்சம் தேனீர் நிறைய வானம்

• பெய்யென பெய்யும் ம‌ழை

• நேற்று போட்ட கோலம்

• ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்

• ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல்

• தண்ணீர் தேசம்

• கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

• கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

விருதுகள்

  *சாகித்ய அகாதமி விருது

• சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)

o முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)

o ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)

o கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)

o சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)

o கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)

o தென்மேற்கு பருவக்காற்று" (பாடல்:கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

* கலைமாமணி விருது (1990)
ந‌ன்றி விக்கிபிடியா

வியாழன், 7 ஜூலை, 2011

கே.பால‌ச‌ந்த‌ர் பிற‌ந்த‌ நாள் ஜுலை 09

கே.பால‌ச‌ந்த‌ர் பிற‌ந்த‌ நாள் ஜுலை 09


• கே.பாலசந்தர் தமிழ் சினிமாவின் பீஷ்மர், உறவுகளுக்கு, உணர்வுகளுக்கு புது வண்ணம் பூசிய பிதாமகன், செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.

* தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!


• சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’, `நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.

• கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.

• இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.

• ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

• தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.

• மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.

• பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!.

• தோட்டக் கலையில் ஆர்வம், யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.

• ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.

• எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.

• மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் பெயரையும் சேர்த்தவர்!.

• விநாயகர்தான் இஷ்ட தெய்வம், பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!

• பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.

• 1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!

• கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.

• தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.

• பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

• அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.

• சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.

• இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.

• படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.

• ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார், இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண முடியாது!.

• ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.

• தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!.

ந‌ன்றி -‍ல‌ஸ்ம‌ன்ஸ்ருதி.

வியாழன், 30 ஜூன், 2011

பி .சி.ராய் பிறந்த நாள் மற்றும் உலக மருத்துவ தினம் ஜூலை -01

பி .சி.ராய் பிறந்த நாள் மற்றும் உலக மருத்துவ தினம் ஜூலை -01

டாக்டர் பிதான்சந்திரராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர். மருத்துவத்துறையில் முக்கிய பணியாற்றியவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் சிறந்த கல்வியாளர். பி.சி.ராய் பிறந்ததும், மறைந்ததும் ஜீலை முதல் தேதியில் தான். மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார். இவரது சேவை மனப்பான்மையை மதிக்கும் வகையில் தான் டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது வழங்கப்படும் பி.சி.ராய் விருது மருத்துவ உலகின்மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.

திங்கள், 27 ஜூன், 2011

அகிலன் பிறந்த நாள் ஜூன் 27

அகிலன் பிறந்த நாள் ஜூன் 27
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.


அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

படைப்புகள்;

புதினங்கள்பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)

சித்திரப்பாவை

நெஞ்சின் அலைகள்

எங்கே போகிறோம் ?

பெண்

பால்மரக்காட்டினிலே

துணைவி

புதுவெள்ளம்

வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)

பொன்மலர்

சிநேகிதி

வானமா பூமியா

இன்ப நினைவு

அவளுக்கு

வேங்கையின் மைந்தன்

கயல்விழி (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)

வெற்றித்திருநகர்

கலை

கதைக் கலை

புதிய விழிப்பு

சுயசரிதை

எழுத்தும் வாழ்க்கையும்

மொழிபெயர்ப்பு நூல்கள்

தாகம் ஆஸ்கார் வைல்ட்

சிறுகதை தொகுதிகள்

சத்ய ஆவேசம்

ஊர்வலம்

எரிமலை

பசியும் ருசியும்

வேலியும் பயிரும்

குழந்தை சிரித்தது

சக்திவேல்

நிலவினிலே

ஆண் பெண்

மின்னுவதெல்லாம்

வழி பிறந்தது

சகோதரர் அன்றோ

ஒரு வெள்ளை சோறு

விடுதலை

நெல்லூர் அரசி

செங்கரும்பு

சிறுவர் நூல்கள்

தங்க நகரம்

கண்ணான கண்ணன்

நல்ல பையன்

பயண நூல்கள்

மலேசியா சிங்கப்பூரில் அகிலன்

கட்டுரை

தொகுப்புகள்நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)

வெற்றியின் ரகசியங்கள்

ஒலித்தகடு

நாடும் நமது பணியும் - அகிலன் உரை 
 
நன்றி- விக்கிபிடியா

புதன், 22 ஜூன், 2011

மெல்லிசை மன்னர் உதய நாள் ஜூலை - 16.

மெல்லிசை மன்னர் உதய நாள் ஜூலை  - 16.

எம். எஸ். விசுவநாதன் என்றும் அறியப்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படத்துறையில் பிரசித்தமாக காணப்பட்டார். இவருடைய பாடல்கள் இன்றும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார்.
1. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜூலை  - 12..

2. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.

3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.

4. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.

5. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை !.

6.மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை !

7. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார் !

8. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !

9. மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !

10. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !

11. எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !

12. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !

13. இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !

14. `புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார் !

15. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !

16. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு !

17. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !

18. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார் !

19. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
20. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !

21. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார் !
22. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !

23. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !

24. வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !

25. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

எம். எஸ். விசுவநாதன் என்றும் அறியப்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படத்துறையில் பிரசித்தமாக காணப்பட்டார். இவருடைய பாடல்கள் இன்றும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார்.

M.S.விஸ்வநாதன் இசை அமைத்த தமிழ்ப் படங்கள்
ஆண்டு திரைப்படம்
1952 பணம்
1952 மொத்த படங்களின் எண்ணிக்கை - 1

1953 சண்டிராணி (உடன் சி.ஆர்.சுப்பராமன்)
மருமகள் (உடன் ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்)
ஜெனோவா (எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக மற்றும் எம்.எஸ் ஞானமணி டி.ஏ.கல்யாணம் )
1953 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1954 சொர்க்கவாசல் (உடன் சி.ஆர்.சுப்பராமன்)
சுகம் எங்கே
போன மச்சான் திரும்பி வந்தான் (எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக மற்றும் சி.என்.பாண்டுரங்கன்)
வைரமாலை
1954 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1955 காவேரி(உடன் ஜி.ராமநாதன்), 
குலேபகாவலி
நீதிபதி
போர்ட்டர் கந்தன்
1955 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1956 தெனாலிராமன்
பாசவலை
1956 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1957 பக்த மார்க்கண்டேயா
பத்தினி தெய்வம்
புதையல்
மகாதேவி
1957 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1958 குடும்ப கௌரவம்
பதிபக்தி
பெற்ற மகனை விற்ற அன்னை
மாலை இட்ட மங்கை
1958 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1959 அமுதவல்லி
சிவகங்கைச் சீமை
தங்கப்பதுமை
கலை கொடுத்தான் தம்பி
பாகப்பிரிவினை
ராஜா மலையசிம்மன்
1959 மொத்த படங்களின் எண்ணிக்கை - 6

1960 ஆளுக்கொரு வீடு
ஒன்றுபட்டால உண்டு வாழ்வு
கவலையில்லாத மனிதன்
மன்னாதி மன்னன்
ரத்தின புரி இளவரசி
1960 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1961 மணப்பந்தல்
பாக்கியலட்சுமி
பாசமலர்
பாலும் பழமும்
பாவமன்னிப்பு
1961 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1962 ஆலயமணி
காத்திருந்த கண்கள்
சுமைதாங்கி
செந்தாமரை
தென்றல் வீசும்
நிச்சய தாம்பூலம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
படித்தால் மட்டும் போதுமா
பந்த பாசம்
பலே பாண்டியா
பாசம் 
பாதகாணிக்கை
பார்த்தால் பசி தீரும்
போலீஸ்காரன் மகள்
வீரத்திருமகன்
1962 மொத்த படங்களின் எண்ணிக்கை - 15

1963 ஆனந்த ஜோதி 
இதயத்தில் நீ
இது சத்தியம்
கற்பகம் 
நெஞ்சம் மறப்பதில்லை
பணத்தோட்டம் 
பெரிய இடத்துப் பெண்
பார் மகளே பார்
மணி ஓசை
1963 மொத்த படங்களின் எண்ணிக்கை - 9

1964 ஆண்டவன் கட்டளை
என் கடமை
கர்ணன்
கலைக்கோயில்
கறுப்புப்பணம்
காதலிக்க நேரமில்லை
கைகொடுத்த தெய்வம்
சர்வர் சுந்தரம்
தெய்வத்தாய்
பச்சை விளக்கு
படகோட்டி
பணக்கார குடும்பம்
புதிய பறவை
வாழ்க்கை வாழ்வதற்கே
1964 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1965 ஆயிரத்தில் ஒருவன்
எங்க வீட்டுப் பிள்ளை
சாந்தி 
பழநி 
பணம் படைத்தவன்
பஞ்சவர்ணக்கிளி
பூஜைக்கு வந்த மலர்
வாழ்க்கைப் படகு
வெண்ணிற ஆடை
ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார்
ஆனந்தி
கலங்கரை விளக்கம்
குழந்தையும் தெய்வமும்
நீ 
நீலவானம்
மகனே கேள்
1965 மொத்த படங்களின் எண்ணிக்கை - 16

1966 அன்பே வா
குமரிப் பெண்
கொடி மலர்
கௌரி கல்யாணம்
சந்திரோதயம்
சித்தி 
தட்டுங்கள் திறக்கப்படும்
நம்ம வீட்டு லட்சுமி
நாடோடி
நான் ஆணையிட்டால் 
பறக்கும் பாவை
பெற்றால்தான் பிள்ளையா
மோட்டார் சுந்ரரம் பிள்ளை
ராமு
1966 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1967 அனுபவம் புதுமை
அனுபவி ராஜா அனுபவி
இரு மலர்கள்
ஊட்டி வரை
உறவு
காவல்காரன்
செல்வ மகள்
தங்கை
நெஞ்சிருக்கும் வரை
பவானி
பாமா விஜயம்
பெண் என்றால் பெண்
1967 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1968 அன்பு வழி
உயர்ந்த மனிதன்
உயிரா மானமா
எங்க ஊர் ராஜா
என் தம்பி
ஒளி விளக்கு
கண்ணன் என் காதலன்
கணவன்
கல்லும் கனியாகும்
கலாட்டா கல்யாணம்
குடியிருந்த கோயில்
குழந்தைக்காக
தாமரை நெஞ்சம்
நிமிர்ந்து நில்
நீயும் நானும்
புதிய பூமி
ரகசிய போலீஸ் 115
லட்சுமி கல்யாணம்
1968 மொத்த படங்களின் எண்ணிக்கை - 18

1969 அத்தை மகள்
அன்பளிப்பு
அன்னையும் பிதாவும்
ஓடும் நதி
கண்ணே பாப்பா
கன்னிப் பெண்
சாந்தி நிலையம்
சிவந்த மண்
திருடன்
தெய்வ மகன்
நம் நாடு
நில் கவன் காதலி
பால்குடம்
பூவா தலையா
1969 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1970 எங்க மாமா
எங்கள் தங்கம்
எங்கிருந்ததோ வந்தாள்
எதிர்காலம்
காவியத் தலைவி
சொர்க்கம்
தேடி வந்த மாப்பிள்ளை
நம்ம குழந்தைகள்
நிலவே நீ சாட்சி
பாதுகாப்பு
மாலதி
ராமன் எத்தனை ராமனடி
வீட்டுக்கு வீடு
1970 மொத்த படங்களின் எண்ணிக்கை - 13

1971 அன்புக்கு ஓர் அண்ணன்
அவளுக்கென்று ஒரு மனம்
இரு துருவம்
உத்தரவின்றி உள்ளே வா
ஒரு தாய் மக்கள்
குமரிக்கோட்டம்
சவாலே சமாளி
சுடரும் சூறாவளியும் 
சுமதி என் சுந்தரி
சூதாட்டம்
தங்கைக்காக
தேனும் பாலும்
நான்கு சுவர்கள்
நீரும் நெருப்பும்
பாபு 
பிராப்தம்
புன்னகை
மீண்டும் வாழ்வேன்‘
முகமது பின் துக்ளக்
மூன்று தெய்வங்கள்
ரிக்ஷாகாரன்
வீட்டுக்கு ஒரு பிள்ளை
1971 மொத்த படங்களின் எண்ணிக்கை - 22

1972 ஆசீர்வாதம்
இதோ என்றன் தெய்வம்
என்ன முதலாளி சௌக்கியமா
கண்ணா நலமா 
காசேதான் கடவுளடா
சங்கே முழங்கு
ஞான ஒளி
தங்கதுரை
தர்மம் எங்கே 
தவப்புதல்வன்
திக்குத் தெரியாத காட்டில்
நாவப் நாற்காலி
நீதி
பட்டிக்காடா பட்டணமா
பிள்ளையோ பிள்ளை
மிஸ்டர் சம்பத்
ராஜா
ராமன் தேடிய சீதை
1972 மொத்த படங்களின் எண்ணிக்கை - 21

1973 அலைகள் 
உலகம் சுற்றும் வாலிபன்
எங்கள் தாய்
கங்கா கௌரி
கௌரவம்
சொந்தம்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சூரியகாந்தி
தலைப்பிரவசம்
தெய்வாம்சம்
நல்ல முடிவு
பாக்தாத் பேரழகி
பாசதீபம்
பாரத விலாஸ்
பொன்னூஞ்சல்
பூக்காரி
மணிப்பயல்
மனிதரில் மாணிக்கம்
ராஜபார்ட் ரங்கதுரை
வாயாடி
ஸ்கூல் மாஸ்டர்
1973 மொத்த படங்களின் எண்ணிக்கை - 21

1974 அன்பைத்தேடி
அக்கரைப் பச்சை
அத்தையா மாமியா
அவள் ஒரு தொடர்கதை
உரிமைக்குரல்
எங்கள் குலதெய்வம்
என் மகன்
கண்மணி ராஜா
சமையல்காரன்
சிரித்து வாழ வேண்டும்
சிவகாமியின் செல்வன்
தங்கப் பதக்கம்
தாய் 
தாய் பிறந்தாள்
திருமாங்கல்யம்
திருடி
தீர்க்க சுமங்கலி
நான் அவனில்லை
நேற்று இன்று நாளை
பணத்துக்காக 
பெண் ஒன்று கண்டேன்
மகளுக்காக
மாணிக்கத் தொட்டில்
ரோஷக்காரி
1974 மொத்த படங்களின் எண்ணிக்கை - 24

1975 அணையா விளக்கு
அபூர்வ ராகங்கள்
அமுதா
அன்பே ஆருயிரே
அவன்தான் மனிதன்
இதயக்கனி
டாக்டர் சிவா
தாய் வீட்டு சீதனம்
நாளை நமதே
நினைத்ததை முடிப்பவன்
பாட்டும் பரதமும்
மன்னவன் வந்தானடி
வாழ்ந்து காட்டுகிறேன்
வைர நெஞ்சம்
1975 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1976 அக்கா
இதய மலர்
உங்களில் ஒருத்தி
உழைக்கும் கரங்கள்
உண்மையே உன் விலை என்ன
உனக்காக நான்
ஊருக்கு உழைப்பவன்
ஒரு கொடியில் இரு மலர்கள்
ஓ மஞ்சு
கிரஹப்பிரவேசம் 
சந்ததி
சித்ரா பௌர்ணமி
துணிவே துணை
நீதிக்குத் தலைவணங்கு
நீயின்றி நானில்லை
பயணம் 
பேரும் புகழும் 
மகராசி வாழ்க
மன்மத லீலை
முத்தான முத்தல்லவோ 
மூன்று முடிச்சு
மேயர் மீனாட்சி
ரோஜாவின் ராஜா
லலிதா 
வாழ்வு என் பக்கம்
வீடு வரை உறவு
1976 மொத்த படங்களின் எண்ணிக்கை - 26

1977 அண்ணன் ஒரு கோயில்
அவர்கள்
அவன் ஒரு சரித்திரம்
ஆறுபுஷ்பங்கள்
இளைய தலைமுறை 
இன்று போல் என்றும் வாழ்க
என்ன தவம் செய்தேன்
எல்லாம் அவளே
காஸ்லைட் மங்கம்மா
சில நேரங்களில் சில மனிதர்கள்
தனிக்குடித்தனம்
தேவியின் திருமணம்
நாம் பிறந்த மண்
நீ வாழ வேண்டும்
பட்டினப் பிரவேசம்
புனித அந்தோணியார்
புண்ணியம் செய்தவள்
பெண்ணைச் சொல்லி குற்றமில்லை
பெருமைக்குரியவள்
மீனவ நண்பன்
1977 மொத்த படங்களின் எண்ணிக்கை - 20

1978 அக்னிப் பிரவேசம்
அதிர்ஷ்டக் காரன்
அந்தமான் காதலி
அவள் தந்த உறவு
ஆயிரம் ஜென்மங்கள்
என் கேள்விக்கென்ன பதில்
இளையராணி ராஜலட்சுமி
இறைவன் கொடுத்த வரம்
என்னைப் போல் ஒருவன்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஒரு வீடு ஒரு உலகம்
கங்கா யமுனா காவேரி
குங்குமம் கதை சொல்கிறது
சங்கர் சலீம் சைமன்
சீர்வரிசை
டாக்ஸி டிரைவர்
தங்கரங்கன்
நிழல் நிஜமாகிறது
புண்ணிய பூமி
பைலட் பிரேம்நாத்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ருத்ரதாண்டவம்
வணக்கத்திற்குரிய காதலியே
வண்டிக்காரன் மகன்
வருவான் வடிவேலன்
வயசு பொண்ணு
ஜஸ்டிஸ் கோபிநாத்
ஜெனரல் சக்ரவர்த்தி
1978 மொத்த படங்களின் எண்ணிக்கை - 28

1979 ஆடு பாம்பே 
ஆசைக்கு வயசில்லை
இமயம்
ஒரே வானம் ஒரே பூமி
காமசாஸ்திரம்
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன.
குப்பத்து ராஜா
சித்திரசெவ்வானம்
சிகப்புக்கல் மூக்குத்தி
சுப்ரபாதம்
திரிசூலம்
திசை மாறிய பறவைகள்
நினைத்தாலே இனிக்கும்
நீலக்கடலின் ஓரத்திலே 
நீலமலர்கள்
நீதிக்கு முன் நீயா நானா 
நூல் வேலி
போர்ட்டர் பொன்னுசாமி
மகாலட்சுமி
மங்கள வாத்தியம்
மாயாண்டி 
வெள்ளி ரதம்
ஸ்ரீராமஜெயம்
1979 மொத்த படங்களின் எண்ணிக்கை - 23

1980 அழைத்தால் வருவேன்
அவன் அவள் அது
இவர்கள் வித்தியாசமானவர்கள்
ஒரு கை ஓசை
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
காலம் பதில் சொல்லும்
கீதா ஒரு செண்பகப்பூ
சாவித்ரி
சுஜாதா
தர்மராஜா
தெய்வீக ராகங்கள்
பம்பாய் மெயில் 109
பாமா ருக்மிணி 
பில்லா
பொல்லாதவன்
மழலைப்பட்டாளம்
மேகத்துக்கும் தாகமுண்டு
ரத்தபாசம்
வறுமையின் நிறம் சிவப்பு
விஸ்வரூபம்
1980 மொத்த படங்களின் எண்ணிக்கை - 20

1981 அந்த 7 நாட்கள்
அமரகாவியம்
அன்புள்ள அத்தான்
அரும்புகள் 
எங்க ஊரு கண்ணகி
கல்தூண் 
கீழ் வானம் சிவக்கும்
குடும்பம் ஒரு கதம்பம்
குலக்கொழுந்து
சத்திய சுந்தரம்
சவால்
தண்ணீர் தண்ணீர்
தில்லு முல்லு
திருப்பங்கள்
தீ
பதவி 
மாடி வீட்டு ஏழை
மோகனப் புன்னகை
ராணி 
ராணுவ வீரன்
லாரி டிரைவர்
ராஜாக்கண்ணு
1981 மொத்த படங்களின் எண்ணிக்கை - 25

1982 அனு
அக்னி சாட்சி
இரட்டை மனிதன்
ஊருக்கு ஒரு பிள்ளை
ஒரு வாரிசு உருவாகிறது
கண்மணிப் பூங்கா
கருடா சௌக்கியமா
சங்கிலி
சிம்லா ஸ்பெஷல்
தாம்பத்தியம் ஒரு சங்கீதம்
தியாகி 
தீர்ப்பு
துணைவி
தேவியின் திருவிளையாடல்
நான் குடித்துக் கொண்டே இருப்பேன்
பரீட்சைக்கு நேரமாச்சு
போக்கிரி ராஜா
மணல் கயிறு
வடைமாலை வசந்தத்தில் ஓர் நாள்
வா கண்ணா வா
ஹிட்லர் உமாநாத்
1982 மொத்த படங்களின் எண்ணிக்கை - 22

1983 இது எங்க நாடு
உண்மைகள்
ஒரு இந்தியக் கனவு
சந்திப்பு 
சரணாலயம்
சில்க் சில்க் சில்க்
சிகப்புச் சூரியன்
சுமங்கலி
டௌரி கல்யாணம்
தம்பதிகள் 
நாலு பேருக்கு நன்றி
பிரம்மச்சாரிகள்
பொய்க்கால் குதிரை
போலீஸ் போலீஸ்
மிருதங்க சக்கரவர்த்தி
யாமிருக்க பயமேன்
யுத்த காண்டம்
1983 மொத்த படங்களின் எண்ணிக்கை - 17

1984 ஆலய தீபம்
இரு மேதைகள்
சரித்திரநாயகன்
சிறை
சிரஞ்சீவி
தராசு
திருப்பம்
நெஞ்சத்தை அள்ளித்தா
புயல் கடந்த பூமி
ராஜதந்திரம்
ராஜாவீட்டு கன்னுக்குட்டி
1984 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1985 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அவள் சுமங்கலிதான்
எரிமலை 
ஜனனி
சுகமான ராகங்கள்
மூக்கணாங்கயிறு
நவக்கிரகநாயகி
பார்த்த ஞாபகம் இல்லையோ
உன்னை விட மாட்டேன்
1985 மொத்த படங்களின் எண்ணிக்கை - 9

1986 கண்ணே கனியமுதே
சிவப்பு மலர்கள்
ஜீவநதி
நம்பினார் கெடுவதில்லை
நிலவே மலரே
மணக்கணக்கு மீண்டும் பல்லவி
வசந்த ராகம்
மெல்லத் திறந்தது கதவு (இளையராஜாவுடன்)
விடிஞ்சா கல்யாணம் (பின்னணி இசை மட்டும்)
1986 மொத்த படங்களின் எண்ணிக்கை - 10

1987 இலங்கேஸ்வரன் 
காலம் மாறுது
கதை கதையாம் காரணமாம்
கூட்டுப்புழுக்கள் 
சட்டம் ஒரு விளையாட்டு
தாலிதானம்
நீதிக்குத் தண்டனை
நேரம் நல்லாருக்கு
முப்பெருந்தேவியர்
வளையல் சத்தம்
வேலுண்டு வினையில்லை
1987 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1988 ஊமைத்துரை
தங்கக்கலசம்
தப்புக்கணக்கு
சுதந்திர நாட்டின் அடிமைகள்
1988 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1989 என் அருமை மனைவி
திராவிடன்
மீனாட்சி திருவிளையாடல்
ராசாத்தி கல்யாணம்
ராஜநடை
1989 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1990 ஏரிக்கரை பூங்காற்றே
சிலம்பு
1990 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1991 அவசர போலீஸ்
ஞானப்பறவை
இரும்புப் பூக்கள்(இளையராஜாவுடன்)
1991 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1992 ஜோடி சேர்ந்தாச்சு
நீங்க நல்லா இருக்கணும்
செந்தமிழ்ப் பாட்டு(இளையராஜாவுடன்)
1992 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1993 தூள் பறக்குது
பத்தினிப் பெண்
1993 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1994 எங்கிருந்தோ வந்தான்(மீண்டும் டி.கே.ராமமூர்த்தியுடன்)
இலக்கியச் சோலை(மீண்டும் டி.கே.ராமமூர்த்தியுடன்)
1994 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1996 வெற்றி விநாயகர்
1997 ஓம் சரவணபவா
2004 விஷ்வதுளசி(இளையராஜாவுடன்)
 சி.ஆர்.சுப்பராமனுடன் = 3
ஜி.ராமநாதனுடன் =2
எம்.எஸ்.ஞானமணி,டி.ஏ.கல்யாணம் இருவருடன் =1
சி.என்.பாண்டுரங்கனுடன் =1
டி.கே.ராமமூர்த்தியுடன் = 86
இளையராஜாவுடன் = 5
எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் இசைஅமைத்தவை =411
எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ்ப் இசை அமைத்த படங்கள் மொத்தம் =509

நன்றி - விக்கிப்பிடியா , ஆனந்த விகடன்  ,லஷ்மன் சுருதி .