புதன், 22 ஜூன், 2011

மெல்லிசை மன்னர் உதய நாள் ஜூலை - 16.

மெல்லிசை மன்னர் உதய நாள் ஜூலை  - 16.

எம். எஸ். விசுவநாதன் என்றும் அறியப்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படத்துறையில் பிரசித்தமாக காணப்பட்டார். இவருடைய பாடல்கள் இன்றும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார்.
1. எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜூலை  - 12..

2. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.

3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.

4. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.

5. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை !.

6.மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை !

7. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார் !

8. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !

9. மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !

10. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !

11. எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !

12. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !

13. இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !

14. `புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார் !

15. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !

16. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு !

17. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !

18. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார் !

19. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
20. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !

21. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார் !
22. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !

23. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !

24. வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !

25. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

எம். எஸ். விசுவநாதன் என்றும் அறியப்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படத்துறையில் பிரசித்தமாக காணப்பட்டார். இவருடைய பாடல்கள் இன்றும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார்.

M.S.விஸ்வநாதன் இசை அமைத்த தமிழ்ப் படங்கள்
ஆண்டு திரைப்படம்
1952 பணம்
1952 மொத்த படங்களின் எண்ணிக்கை - 1

1953 சண்டிராணி (உடன் சி.ஆர்.சுப்பராமன்)
மருமகள் (உடன் ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்)
ஜெனோவா (எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக மற்றும் எம்.எஸ் ஞானமணி டி.ஏ.கல்யாணம் )
1953 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1954 சொர்க்கவாசல் (உடன் சி.ஆர்.சுப்பராமன்)
சுகம் எங்கே
போன மச்சான் திரும்பி வந்தான் (எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக மற்றும் சி.என்.பாண்டுரங்கன்)
வைரமாலை
1954 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1955 காவேரி(உடன் ஜி.ராமநாதன்), 
குலேபகாவலி
நீதிபதி
போர்ட்டர் கந்தன்
1955 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1956 தெனாலிராமன்
பாசவலை
1956 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1957 பக்த மார்க்கண்டேயா
பத்தினி தெய்வம்
புதையல்
மகாதேவி
1957 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1958 குடும்ப கௌரவம்
பதிபக்தி
பெற்ற மகனை விற்ற அன்னை
மாலை இட்ட மங்கை
1958 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1959 அமுதவல்லி
சிவகங்கைச் சீமை
தங்கப்பதுமை
கலை கொடுத்தான் தம்பி
பாகப்பிரிவினை
ராஜா மலையசிம்மன்
1959 மொத்த படங்களின் எண்ணிக்கை - 6

1960 ஆளுக்கொரு வீடு
ஒன்றுபட்டால உண்டு வாழ்வு
கவலையில்லாத மனிதன்
மன்னாதி மன்னன்
ரத்தின புரி இளவரசி
1960 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1961 மணப்பந்தல்
பாக்கியலட்சுமி
பாசமலர்
பாலும் பழமும்
பாவமன்னிப்பு
1961 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1962 ஆலயமணி
காத்திருந்த கண்கள்
சுமைதாங்கி
செந்தாமரை
தென்றல் வீசும்
நிச்சய தாம்பூலம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
படித்தால் மட்டும் போதுமா
பந்த பாசம்
பலே பாண்டியா
பாசம் 
பாதகாணிக்கை
பார்த்தால் பசி தீரும்
போலீஸ்காரன் மகள்
வீரத்திருமகன்
1962 மொத்த படங்களின் எண்ணிக்கை - 15

1963 ஆனந்த ஜோதி 
இதயத்தில் நீ
இது சத்தியம்
கற்பகம் 
நெஞ்சம் மறப்பதில்லை
பணத்தோட்டம் 
பெரிய இடத்துப் பெண்
பார் மகளே பார்
மணி ஓசை
1963 மொத்த படங்களின் எண்ணிக்கை - 9

1964 ஆண்டவன் கட்டளை
என் கடமை
கர்ணன்
கலைக்கோயில்
கறுப்புப்பணம்
காதலிக்க நேரமில்லை
கைகொடுத்த தெய்வம்
சர்வர் சுந்தரம்
தெய்வத்தாய்
பச்சை விளக்கு
படகோட்டி
பணக்கார குடும்பம்
புதிய பறவை
வாழ்க்கை வாழ்வதற்கே
1964 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1965 ஆயிரத்தில் ஒருவன்
எங்க வீட்டுப் பிள்ளை
சாந்தி 
பழநி 
பணம் படைத்தவன்
பஞ்சவர்ணக்கிளி
பூஜைக்கு வந்த மலர்
வாழ்க்கைப் படகு
வெண்ணிற ஆடை
ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார்
ஆனந்தி
கலங்கரை விளக்கம்
குழந்தையும் தெய்வமும்
நீ 
நீலவானம்
மகனே கேள்
1965 மொத்த படங்களின் எண்ணிக்கை - 16

1966 அன்பே வா
குமரிப் பெண்
கொடி மலர்
கௌரி கல்யாணம்
சந்திரோதயம்
சித்தி 
தட்டுங்கள் திறக்கப்படும்
நம்ம வீட்டு லட்சுமி
நாடோடி
நான் ஆணையிட்டால் 
பறக்கும் பாவை
பெற்றால்தான் பிள்ளையா
மோட்டார் சுந்ரரம் பிள்ளை
ராமு
1966 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1967 அனுபவம் புதுமை
அனுபவி ராஜா அனுபவி
இரு மலர்கள்
ஊட்டி வரை
உறவு
காவல்காரன்
செல்வ மகள்
தங்கை
நெஞ்சிருக்கும் வரை
பவானி
பாமா விஜயம்
பெண் என்றால் பெண்
1967 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1968 அன்பு வழி
உயர்ந்த மனிதன்
உயிரா மானமா
எங்க ஊர் ராஜா
என் தம்பி
ஒளி விளக்கு
கண்ணன் என் காதலன்
கணவன்
கல்லும் கனியாகும்
கலாட்டா கல்யாணம்
குடியிருந்த கோயில்
குழந்தைக்காக
தாமரை நெஞ்சம்
நிமிர்ந்து நில்
நீயும் நானும்
புதிய பூமி
ரகசிய போலீஸ் 115
லட்சுமி கல்யாணம்
1968 மொத்த படங்களின் எண்ணிக்கை - 18

1969 அத்தை மகள்
அன்பளிப்பு
அன்னையும் பிதாவும்
ஓடும் நதி
கண்ணே பாப்பா
கன்னிப் பெண்
சாந்தி நிலையம்
சிவந்த மண்
திருடன்
தெய்வ மகன்
நம் நாடு
நில் கவன் காதலி
பால்குடம்
பூவா தலையா
1969 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1970 எங்க மாமா
எங்கள் தங்கம்
எங்கிருந்ததோ வந்தாள்
எதிர்காலம்
காவியத் தலைவி
சொர்க்கம்
தேடி வந்த மாப்பிள்ளை
நம்ம குழந்தைகள்
நிலவே நீ சாட்சி
பாதுகாப்பு
மாலதி
ராமன் எத்தனை ராமனடி
வீட்டுக்கு வீடு
1970 மொத்த படங்களின் எண்ணிக்கை - 13

1971 அன்புக்கு ஓர் அண்ணன்
அவளுக்கென்று ஒரு மனம்
இரு துருவம்
உத்தரவின்றி உள்ளே வா
ஒரு தாய் மக்கள்
குமரிக்கோட்டம்
சவாலே சமாளி
சுடரும் சூறாவளியும் 
சுமதி என் சுந்தரி
சூதாட்டம்
தங்கைக்காக
தேனும் பாலும்
நான்கு சுவர்கள்
நீரும் நெருப்பும்
பாபு 
பிராப்தம்
புன்னகை
மீண்டும் வாழ்வேன்‘
முகமது பின் துக்ளக்
மூன்று தெய்வங்கள்
ரிக்ஷாகாரன்
வீட்டுக்கு ஒரு பிள்ளை
1971 மொத்த படங்களின் எண்ணிக்கை - 22

1972 ஆசீர்வாதம்
இதோ என்றன் தெய்வம்
என்ன முதலாளி சௌக்கியமா
கண்ணா நலமா 
காசேதான் கடவுளடா
சங்கே முழங்கு
ஞான ஒளி
தங்கதுரை
தர்மம் எங்கே 
தவப்புதல்வன்
திக்குத் தெரியாத காட்டில்
நாவப் நாற்காலி
நீதி
பட்டிக்காடா பட்டணமா
பிள்ளையோ பிள்ளை
மிஸ்டர் சம்பத்
ராஜா
ராமன் தேடிய சீதை
1972 மொத்த படங்களின் எண்ணிக்கை - 21

1973 அலைகள் 
உலகம் சுற்றும் வாலிபன்
எங்கள் தாய்
கங்கா கௌரி
கௌரவம்
சொந்தம்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சூரியகாந்தி
தலைப்பிரவசம்
தெய்வாம்சம்
நல்ல முடிவு
பாக்தாத் பேரழகி
பாசதீபம்
பாரத விலாஸ்
பொன்னூஞ்சல்
பூக்காரி
மணிப்பயல்
மனிதரில் மாணிக்கம்
ராஜபார்ட் ரங்கதுரை
வாயாடி
ஸ்கூல் மாஸ்டர்
1973 மொத்த படங்களின் எண்ணிக்கை - 21

1974 அன்பைத்தேடி
அக்கரைப் பச்சை
அத்தையா மாமியா
அவள் ஒரு தொடர்கதை
உரிமைக்குரல்
எங்கள் குலதெய்வம்
என் மகன்
கண்மணி ராஜா
சமையல்காரன்
சிரித்து வாழ வேண்டும்
சிவகாமியின் செல்வன்
தங்கப் பதக்கம்
தாய் 
தாய் பிறந்தாள்
திருமாங்கல்யம்
திருடி
தீர்க்க சுமங்கலி
நான் அவனில்லை
நேற்று இன்று நாளை
பணத்துக்காக 
பெண் ஒன்று கண்டேன்
மகளுக்காக
மாணிக்கத் தொட்டில்
ரோஷக்காரி
1974 மொத்த படங்களின் எண்ணிக்கை - 24

1975 அணையா விளக்கு
அபூர்வ ராகங்கள்
அமுதா
அன்பே ஆருயிரே
அவன்தான் மனிதன்
இதயக்கனி
டாக்டர் சிவா
தாய் வீட்டு சீதனம்
நாளை நமதே
நினைத்ததை முடிப்பவன்
பாட்டும் பரதமும்
மன்னவன் வந்தானடி
வாழ்ந்து காட்டுகிறேன்
வைர நெஞ்சம்
1975 மொத்த படங்களின் எண்ணிக்கை - 14

1976 அக்கா
இதய மலர்
உங்களில் ஒருத்தி
உழைக்கும் கரங்கள்
உண்மையே உன் விலை என்ன
உனக்காக நான்
ஊருக்கு உழைப்பவன்
ஒரு கொடியில் இரு மலர்கள்
ஓ மஞ்சு
கிரஹப்பிரவேசம் 
சந்ததி
சித்ரா பௌர்ணமி
துணிவே துணை
நீதிக்குத் தலைவணங்கு
நீயின்றி நானில்லை
பயணம் 
பேரும் புகழும் 
மகராசி வாழ்க
மன்மத லீலை
முத்தான முத்தல்லவோ 
மூன்று முடிச்சு
மேயர் மீனாட்சி
ரோஜாவின் ராஜா
லலிதா 
வாழ்வு என் பக்கம்
வீடு வரை உறவு
1976 மொத்த படங்களின் எண்ணிக்கை - 26

1977 அண்ணன் ஒரு கோயில்
அவர்கள்
அவன் ஒரு சரித்திரம்
ஆறுபுஷ்பங்கள்
இளைய தலைமுறை 
இன்று போல் என்றும் வாழ்க
என்ன தவம் செய்தேன்
எல்லாம் அவளே
காஸ்லைட் மங்கம்மா
சில நேரங்களில் சில மனிதர்கள்
தனிக்குடித்தனம்
தேவியின் திருமணம்
நாம் பிறந்த மண்
நீ வாழ வேண்டும்
பட்டினப் பிரவேசம்
புனித அந்தோணியார்
புண்ணியம் செய்தவள்
பெண்ணைச் சொல்லி குற்றமில்லை
பெருமைக்குரியவள்
மீனவ நண்பன்
1977 மொத்த படங்களின் எண்ணிக்கை - 20

1978 அக்னிப் பிரவேசம்
அதிர்ஷ்டக் காரன்
அந்தமான் காதலி
அவள் தந்த உறவு
ஆயிரம் ஜென்மங்கள்
என் கேள்விக்கென்ன பதில்
இளையராணி ராஜலட்சுமி
இறைவன் கொடுத்த வரம்
என்னைப் போல் ஒருவன்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஒரு வீடு ஒரு உலகம்
கங்கா யமுனா காவேரி
குங்குமம் கதை சொல்கிறது
சங்கர் சலீம் சைமன்
சீர்வரிசை
டாக்ஸி டிரைவர்
தங்கரங்கன்
நிழல் நிஜமாகிறது
புண்ணிய பூமி
பைலட் பிரேம்நாத்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ருத்ரதாண்டவம்
வணக்கத்திற்குரிய காதலியே
வண்டிக்காரன் மகன்
வருவான் வடிவேலன்
வயசு பொண்ணு
ஜஸ்டிஸ் கோபிநாத்
ஜெனரல் சக்ரவர்த்தி
1978 மொத்த படங்களின் எண்ணிக்கை - 28

1979 ஆடு பாம்பே 
ஆசைக்கு வயசில்லை
இமயம்
ஒரே வானம் ஒரே பூமி
காமசாஸ்திரம்
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன.
குப்பத்து ராஜா
சித்திரசெவ்வானம்
சிகப்புக்கல் மூக்குத்தி
சுப்ரபாதம்
திரிசூலம்
திசை மாறிய பறவைகள்
நினைத்தாலே இனிக்கும்
நீலக்கடலின் ஓரத்திலே 
நீலமலர்கள்
நீதிக்கு முன் நீயா நானா 
நூல் வேலி
போர்ட்டர் பொன்னுசாமி
மகாலட்சுமி
மங்கள வாத்தியம்
மாயாண்டி 
வெள்ளி ரதம்
ஸ்ரீராமஜெயம்
1979 மொத்த படங்களின் எண்ணிக்கை - 23

1980 அழைத்தால் வருவேன்
அவன் அவள் அது
இவர்கள் வித்தியாசமானவர்கள்
ஒரு கை ஓசை
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
காலம் பதில் சொல்லும்
கீதா ஒரு செண்பகப்பூ
சாவித்ரி
சுஜாதா
தர்மராஜா
தெய்வீக ராகங்கள்
பம்பாய் மெயில் 109
பாமா ருக்மிணி 
பில்லா
பொல்லாதவன்
மழலைப்பட்டாளம்
மேகத்துக்கும் தாகமுண்டு
ரத்தபாசம்
வறுமையின் நிறம் சிவப்பு
விஸ்வரூபம்
1980 மொத்த படங்களின் எண்ணிக்கை - 20

1981 அந்த 7 நாட்கள்
அமரகாவியம்
அன்புள்ள அத்தான்
அரும்புகள் 
எங்க ஊரு கண்ணகி
கல்தூண் 
கீழ் வானம் சிவக்கும்
குடும்பம் ஒரு கதம்பம்
குலக்கொழுந்து
சத்திய சுந்தரம்
சவால்
தண்ணீர் தண்ணீர்
தில்லு முல்லு
திருப்பங்கள்
தீ
பதவி 
மாடி வீட்டு ஏழை
மோகனப் புன்னகை
ராணி 
ராணுவ வீரன்
லாரி டிரைவர்
ராஜாக்கண்ணு
1981 மொத்த படங்களின் எண்ணிக்கை - 25

1982 அனு
அக்னி சாட்சி
இரட்டை மனிதன்
ஊருக்கு ஒரு பிள்ளை
ஒரு வாரிசு உருவாகிறது
கண்மணிப் பூங்கா
கருடா சௌக்கியமா
சங்கிலி
சிம்லா ஸ்பெஷல்
தாம்பத்தியம் ஒரு சங்கீதம்
தியாகி 
தீர்ப்பு
துணைவி
தேவியின் திருவிளையாடல்
நான் குடித்துக் கொண்டே இருப்பேன்
பரீட்சைக்கு நேரமாச்சு
போக்கிரி ராஜா
மணல் கயிறு
வடைமாலை வசந்தத்தில் ஓர் நாள்
வா கண்ணா வா
ஹிட்லர் உமாநாத்
1982 மொத்த படங்களின் எண்ணிக்கை - 22

1983 இது எங்க நாடு
உண்மைகள்
ஒரு இந்தியக் கனவு
சந்திப்பு 
சரணாலயம்
சில்க் சில்க் சில்க்
சிகப்புச் சூரியன்
சுமங்கலி
டௌரி கல்யாணம்
தம்பதிகள் 
நாலு பேருக்கு நன்றி
பிரம்மச்சாரிகள்
பொய்க்கால் குதிரை
போலீஸ் போலீஸ்
மிருதங்க சக்கரவர்த்தி
யாமிருக்க பயமேன்
யுத்த காண்டம்
1983 மொத்த படங்களின் எண்ணிக்கை - 17

1984 ஆலய தீபம்
இரு மேதைகள்
சரித்திரநாயகன்
சிறை
சிரஞ்சீவி
தராசு
திருப்பம்
நெஞ்சத்தை அள்ளித்தா
புயல் கடந்த பூமி
ராஜதந்திரம்
ராஜாவீட்டு கன்னுக்குட்டி
1984 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1985 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அவள் சுமங்கலிதான்
எரிமலை 
ஜனனி
சுகமான ராகங்கள்
மூக்கணாங்கயிறு
நவக்கிரகநாயகி
பார்த்த ஞாபகம் இல்லையோ
உன்னை விட மாட்டேன்
1985 மொத்த படங்களின் எண்ணிக்கை - 9

1986 கண்ணே கனியமுதே
சிவப்பு மலர்கள்
ஜீவநதி
நம்பினார் கெடுவதில்லை
நிலவே மலரே
மணக்கணக்கு மீண்டும் பல்லவி
வசந்த ராகம்
மெல்லத் திறந்தது கதவு (இளையராஜாவுடன்)
விடிஞ்சா கல்யாணம் (பின்னணி இசை மட்டும்)
1986 மொத்த படங்களின் எண்ணிக்கை - 10

1987 இலங்கேஸ்வரன் 
காலம் மாறுது
கதை கதையாம் காரணமாம்
கூட்டுப்புழுக்கள் 
சட்டம் ஒரு விளையாட்டு
தாலிதானம்
நீதிக்குத் தண்டனை
நேரம் நல்லாருக்கு
முப்பெருந்தேவியர்
வளையல் சத்தம்
வேலுண்டு வினையில்லை
1987 மொத்த படங்களின் எண்ணிக்கை - 11

1988 ஊமைத்துரை
தங்கக்கலசம்
தப்புக்கணக்கு
சுதந்திர நாட்டின் அடிமைகள்
1988 மொத்த படங்களின் எண்ணிக்கை - 4

1989 என் அருமை மனைவி
திராவிடன்
மீனாட்சி திருவிளையாடல்
ராசாத்தி கல்யாணம்
ராஜநடை
1989 மொத்த படங்களின் எண்ணிக்கை - 5

1990 ஏரிக்கரை பூங்காற்றே
சிலம்பு
1990 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1991 அவசர போலீஸ்
ஞானப்பறவை
இரும்புப் பூக்கள்(இளையராஜாவுடன்)
1991 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1992 ஜோடி சேர்ந்தாச்சு
நீங்க நல்லா இருக்கணும்
செந்தமிழ்ப் பாட்டு(இளையராஜாவுடன்)
1992 மொத்த படங்களின் எண்ணிக்கை - 3

1993 தூள் பறக்குது
பத்தினிப் பெண்
1993 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1994 எங்கிருந்தோ வந்தான்(மீண்டும் டி.கே.ராமமூர்த்தியுடன்)
இலக்கியச் சோலை(மீண்டும் டி.கே.ராமமூர்த்தியுடன்)
1994 மொத்த படங்களின் எண்ணிக்கை - 2

1996 வெற்றி விநாயகர்
1997 ஓம் சரவணபவா
2004 விஷ்வதுளசி(இளையராஜாவுடன்)
 சி.ஆர்.சுப்பராமனுடன் = 3
ஜி.ராமநாதனுடன் =2
எம்.எஸ்.ஞானமணி,டி.ஏ.கல்யாணம் இருவருடன் =1
சி.என்.பாண்டுரங்கனுடன் =1
டி.கே.ராமமூர்த்தியுடன் = 86
இளையராஜாவுடன் = 5
எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் இசைஅமைத்தவை =411
எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ்ப் இசை அமைத்த படங்கள் மொத்தம் =509

நன்றி - விக்கிப்பிடியா , ஆனந்த விகடன்  ,லஷ்மன் சுருதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக