உலக நாடாளுமன்றம் தினம் ஜூன் 30.
#WorldParliamentDayJune30
நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் (parliament) என்பது ஒரு நாட்டின் சட்டவாக்க அவை (சட்டங்களை ஆக்கும் இடம்) ஆகும். பொதுவாக இது மக்களாட்சிக்கான அரசு ஒன்றின் சட்டவாக்க அவையைக் குறிக்கும்.
ஒரு நாடாளுமன்றம் பொதுவாக பின்வரும் மூன்று வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்: பிரதிநிதிகள் அவை, சட்டவாக்கம், மற்றும் நாடாளுமன்றக் கட்டுப்பாடு.
தோற்றம்
சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது. ஐசுலாந்து பரோயே ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.
நாடாளுமன்ற அரசாங்கம்
நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் நாடாளுமன்ற முறையின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, செயலாட்சியரே நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக ஈரவை அல்லது ஓரவை முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.
நாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.
உலக நாடுகளின் பாராளுமன்ற பெயர்கள்:
இந்தியா - மக்களவை, மாநிலங்களவை
இங்கிலாந்து - பார்லிமென்ட்
ஆஸ்திரியா - ரெய்ஸ்ராத்
பல்கேரியா - சோப்ராஞ்சி
டென்மார்க் - ரிக்ஸ்தாக்
அயர்லாந்து - டய்ல்ஜரான்
பிரான்சு - தேசிய அசெம்ப்ளி
ஜெர்மனி - ரெய்ஸ்டாக்
ஐஸ்லாந்து - அல்திங்
இஸ்ரேல் - நெஸ்ட்
இத்தாலி - செனேட்
ஜப்பான் - டையட்
நெதர்லாந்து - ஸ்டேட்ஸ் ஜெனரல்
நார்வே - ஸ்டேர்டிங்
பெர்சியா - மஜ்லிங்
போலந்து - செஜம்
போர்சுகல் - கோர்ட்ஸ்
ரஷ்யா - சுப்ரீம் சோவியத்
ஸ்பெயின் - கோர்ட்ஸ்
ஸ்வீடன் - ரிக்ஸ்டாக்
சுவிட்சர்லாந்து - பெடரல் அசெம்ப்லி
சிரியா - மஜ்லிங் - அய்-நெளவம்
அமெரிக்கா - காங்கிரஸ்
மேற்கு ஜெர்மனி - புன்தஸ்டாக்
பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament)
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள் செனட்டர்கள் என்றோ பிரபுக்கள் என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம்.பி" (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
வெஸ்ட்மினிஸ்டர் முறை
இந்தியா
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
இலங்கை
இலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.
இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறியப்படுவர்.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பாகிஸ்தானின் தேசிய அவை(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
இந்திய நாடாளுமன்றம்
இந்திய சின்னம்
வகை
நிறுவிய ஆண்டு
26 சனவரி 1950 (69 ஆண்டுகளுக்கு முன்னர்)
வகை
ஈரவை
அவைகள்
மாநிலங்களவை
மக்களவை
தலைமை
குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த்
25 ஜூலை 2017 முதல்
மாநிலங்களவைத் தலைவர்
வெங்கையா நாயுடு
11 ஆகஸ்ட் 2017 முதல்
மாநிலங்களவை துணைத்தலைவர்
ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஐக்கிய ஜனதா தளம்
9 ஆகஸ்ட் 2018 முதல்
பெரும்பான்மைத் தலைவர்
(மாநிலங்களவை)
அருண் ஜெட்லி, பாஜக
2 ஜூன் 2014 முதல்
மக்களவைத் தலைவர்
சுமித்ரா மகாஜன், பாஜக
6 ஜூன் 2014 முதல்
அமைப்பு
Council of States, India.svg
மாநிலங்களவை அரசியல் குழுக்கள்
தேஜகூ (தனிப்பெரும் கூட்டணி)
ஐமுகூ
House of the People, India, 2019.svg
மக்களவை அரசியல் குழுக்கள்
தேஜகூ (பெரும்பான்மைக் கூட்டணி)
ஐமுகூ
தேர்தல்
கூடும் இடம்
Indian Parliament Bhavan.jpg
சன்சத் பவன்
வலைத்தளம்
parliamentofindia.nic.in
அமைச்சரவை நாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
நாடாளுமன்ற விதிகளும் நடைமுறையும்
பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவை
மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையை தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர்.
தற்பொழுது 17 வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை
இந்திய நாடாளுமன்றம்
மாநிலங்களவை
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.
நாடாளுமன்ற கட்டடம்
நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.[8]
இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக