ஞாயிறு, 28 ஜூலை, 2019

சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.




 சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.

புலிகளுடைய வாழ்வாதாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்கப்படுமா?

புலியைக் கண்டால் எல்லோருக்கும் ‘கிலி’ ஏற்பட்டது அந்த காலம். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. இன்று மனிதனைக் கண்டு புலிகள் அஞ்சி ஓடுகிற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மனிதர்கள் புலிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

20-வது நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்கு எல்லை வரை பல நாடுகளிலும் எட்டு வகை புலிகள் இருந்தன. அதில், தற்போது பாலி இனம், காஸ்பியன் இனம் மற்றும் ஜாவன் இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இந்திய இனம் (ராயல் பெங்கால் புலிகள்) இந்தோசீனா இனம், சுமித்திரன் இனம், சைபீரியன் இனம் மற்றும் தெற்கு சீன இனம் ஆகியவைகளே எஞ்சியுள்ளன. இந்த இனங்களில் தற்போது 4,600 முதல் 7,200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.


சர்வதேச அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்திய இனமான ராயல் பெங்கால் புலிகள் 60 சதவீதம் உள்ளன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீத ராயல் பெங்கால் டைகர் காணப்படுகின்றன. 20-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

அதன்பின் புலிகள் வாழ்விடம் அழிக்கப்பட்டதாலும் அவை வேட்டையாடப்பட்டதாலும் இந்தியாவின் பாரம்பரிய ராயல் பெங்கால் புலிகள் எண்ணிக்கை குறைந்து விட்டன. காடுகளின் செழிப்பு அங்கு வாழும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே புரிந்து கொள்ளப்படுகிறது. Thanks Tamil Hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக