ஞாயிறு, 28 ஜூலை, 2019

நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?


நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

Friendship Day 2019 : நண்பர்கள் தின வரலாறு தெரியுமா உங்களுக்கு?

Friendship Day 2019 :  நாம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சிறப்பான நாளை நம் அம்மாவிற்காக, அப்பாவிற்காக, மற்றும் நம் உடன்பிறப்புகளுக்காக நாம் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நண்பர்கள் தினம் என்பது மிகவும் சிறப்பான நாளாகும். ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது இந்த நண்பர்கள் தான்.

Friendship Day 2019 : சிறப்புக் கட்டுரை
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுவது வழக்கம். இவ்வருடம் ஆகஸ்ட் 4 ஆன இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஹிட்லரின் உற்ற நண்பர் யாரென்று தெரியுமா ?

ஒவ்வொரு நாட்டிலும் இந்த நண்பர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக ஓஹியோவில் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் சபை ஜூலை 30ஐ நண்பர்கள் தினம் என்று அறிவித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தின வரலாறு
உலக நண்பர்கள் தினம் 1958ல் கொண்டாடுவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு நண்பர்கள் தினத்தினை உருவாக்கியவர் ஜாய்ஸ் ஹால் என்பவராவார். ஆனால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் கூட வாழ்த்து அட்டைகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் நண்பர்கள் தினம் நல்ல வரவேற்பினைப் பெற்ற பின்பு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் மனைவி நானே அன்னன் நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.

ஜூலை 20 தேதியில் பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்தியா, நேபாளம், தென்னமெரிக்க நாடுகளில் இந்நாள் வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள், மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக