வியாழன், 10 அக்டோபர், 2019

உலக மனநல நாள் (World Mental Health Day) அக்டோபர் 10


உலக மனநல நாள் (World Mental Health Day) அக்டோபர் 10 

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.

கருப்பொருட்கள் தொகு
1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.

ஆண்டு கருப்பொருள்
2017 பணியிடங்களில் மனநலம்
2016 உளவியல் முதலுதவி
2015 மனநலத்தில் கண்ணியம்
2014 மனப்பித்துடன் வாழ்தல்.


உடலும், உள்ளமும் நலந்தானா? இன்று உலக மனநில தினம்!

உலகம் முழுவதிலும், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
samayam-tamil
உடலும், உள்ளமும் நலந்தானா? இன்று உலக மனநில தினம்!
 
மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, உலக நல மருத்துவ அமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை உலக மனநல பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆரோக்கியம்' குறித்து உலக சுகாதர நிறுவனம்!

உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

மன நல பாதிப்புக்கான காரணங்கள்!
‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணங்கள். இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.


மன நோயிலிருந்து விடுதலை!

மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, மனநல மருத்துவர் அல்லது மனநல உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.

எனவே மனநலத்தை பேணுவோம்..ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!!!


உலக மனநல தினம்: பின்பற்ற வேண்டிய 4 தெரபிக்கள்!
ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் மனநலக் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, வழிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் நாம் கொண்டாடுகிறோம்.

இத்தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது

இத்தினத்தின் தனித்துவம் என்னவெனில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளில் உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு மனநலத்தில் கண்ணியம், 2016ஆம் ஆண்டு உளவியல் முதலுதவி, 2017ஆம் ஆண்டு பணியிடங்களில் மனநலம், 2018ஆம் ஆண்டு மாறிவரும் உலகில் இளைஞர்களும் மன ஆரோக்கியமும் என இதன் கருப்பொருள் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வரும்.

இவ்வருடம், மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

மன ஆரோக்கியம் குறித்த விவாதங்களும், விழிப்புணர்வுகளும் கடந்த சில ஆண்டுகளில் அதன் முக்கியத்துவம் கொண்ட நல்ல காரணத்திற்காக மைய நிலைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் மனநலன் குறித்த தங்கள் சந்தேகங்களை நண்பர்களுடன் தெரிவிக்க தயங்கியவர்கள் கூட சமீப காலங்களில் தயக்கம் எனும் எதிரியை வீழ்த்தி பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் மெதுவாக தங்களைச் சுற்றியுள்ள மனநல பிரச்சினைகளின் களங்கத்தைத் துடைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுகிறார்கள்.

சமீப காலங்களில் முன்னணி இடத்தில் வலம் வரும் பிரபலங்கள் கூட தாங்கள் சந்தித்த மனநலப் பிரச்சனைகளை பொது வெளியில் பகிரும் போது, இது அனைவருக்குமான பிரச்சனையாக பார்க்கப்படும் ஆரோக்கியமான மனப்பான்மை நம் சமூகத்தில் வளரத் துவங்கியிருக்கிறது. தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், ஆண்டிரியா போன்ற நடிகைகள் தாங்கள் சந்தித்த மனநல சிக்கல்கள், அவற்றிலிருந்து சிகிச்சை மூலமும், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் பகிர்ந்ததன் மூலமும் எவ்வாறு அவற்றிலிருந்து வெளியே வந்தோம் என சமூக வலைதளங்கள் பகிர்ந்ததை இங்கே முக்கியமானதாக குறிப்பிட்டுக் கூற வேண்டும்.

நல்ல மன ஆரோக்கியத்திற்கான சற்று சுவாரஸ்யமான பாதைகளை தேடுபவர்களுக்காக, சில முக்கியமான உளவியல் சிகிச்சைகள் இங்கே பார்க்கலாம்.

செல்லப்பிராணி சிகிச்சை

பெட் தெரபி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சிகிச்சை, உண்மையில் பல நல்ல ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. வீட்டுப் பிராணிகளான நாய்கள் அல்லது பிற விலங்குகளை வளர்க்கும் போதும், அவற்றுடன் நேரத்தை செலவிடும் போதும்: நம்முடைய கவலை, மனச்சோர்வு ஆகியவை அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தி நீண்டகால சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உதவுகிறார்கள்.

கலை சிகிச்சை

கலை உளவியல் சிகிச்சையின் கருவிகள் ஆக: ஓவியம் வரைதல், களிமண்ணில் கலைப் பொருட்கள் செய்வது, பொம்மைகள் செய்வது என எதுவாகவும் இருக்கலாம். சிகிச்சையாளர்கள் உணர்ச்சிகரமான சிக்கல்களை வெளிப்படுத்தவும் உரையாற்றவும் ஒரு ஊடகமாக கலையைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் துன்பகரமான நிலை அல்லது குழப்பமாக இருக்கும் போது இவற்றை முயற்சி செய்து பார்க்கும் போது, ஒரு நிம்மதி உணர்வை நம்மால் அடைய முடியும். இந்த நடைமுறை, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, சமூக திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் சுயமரியாதையை வளர்க்கிறது.

இசை சிகிச்சை

மியூசிக் தெரபி எனப்படும் இது, இயலாமையால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும், வளர்ச்சி மற்றும் உணர்ச்சி சிக்கல்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும். புற்றுநோய் மையங்கள், ஆல்கஹால் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களில் மருத்துவ இசை சிகிச்சையாளர்கள் இந்த இசை சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்.

எழுத்து சிகிச்சை

எழுத்து சிகிச்சை மிக எளிமையான ஒன்று, ஜர்னல் தெரபி என்று இது அழைக்கப்படுகிறது. அதாவது உங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி எழுதுவது உங்களை அறிந்து கொள்ளவும் மன சிக்கல்களில் இருந்து வெளியேறவும் உதவும். பொதுவாக மனநல மருத்துவர்கள் இந்த சிகிச்சைகளை பரிந்துரைப்பது உண்டு.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையுடன் பெரிதும் வேறுபடுகிறது, எனவே மன ஆரோக்கியத்திற்கான பாதையும் ஒரே மாதிரி அமைவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். நமக்குப் பிடித்த பல சிகிச்சை முறைகள் இருக்கும் நிலையில், நம் வாழ்வு முறைக்கு ஏற்ற சிகிச்சை வடிவத்தை முயற்சிப்பதில் நாம் எப்போதும் தயங்கக்கூடாது என்பதைத் தான் இந்த உலக மனநல தினம் நம்மிடம் கூறுகின்றது.


இன்று உலக மன நல நாள் - மன நோயை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள் -அஸ்ட்ரோ சுந்தரராஜன்(Thanks oneindia)

 உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 10ம் தேதியை உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும் மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்க்கும் மன நலத்திற்க்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதே உலக மனநல நாளில் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.


மனநலம் குன்றுதல்:
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!).


மன நலம் பற்றிய விழிப்புணர்வு:
மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று மனநலம்

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் கொடுமை. தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அதற்கடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது.

கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் அதிகளவில் மனநோய்க்கு பாதிப்படைபவர்கள் அதிகமாக உள்ளனர் என்கின்றனர். மனநலம் பாதிப்பை நோய் என சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனநலம் சார்ந்தது, அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிச்செய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே அதிலிருந்து விடுபட சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களை சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும்.



மன நலப் பிரச்சினைக்களுக்கு கீழ்க்காணுவது போன்று பல காரணிகள் உள்ளன:
தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம்.

போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம்.

வலை தளங்கள் மற்றும் சோஷியல் மீடியா எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குறியதாக உள்ளது.

மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள்

விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள்

மரபியல் பிறழ்ச்சிகள்,மூளைக்காயம்/குறைபாடு

மது, போதைப் பழக்கம்,தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு


ஜோதிடத்தில் சந்திரனுக்கும் மனதிற்க்கும் உள்ள தொடர்பு:
ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது , சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது , ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும் , ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும் , உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும் .


வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது. "சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத" . பொதுவாக முழு நிலவு அன்று மன.நோயளிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள்.

மனோகாரகன் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சி கொடுப்பவர். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் (மனம் தொடர்புடையவர்) என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்க்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும்.


ஜோதிடமும் மனோவசியமும்:

•மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும்.

•பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.

ஜோதிடத்தில் மன நோய்க்கான கிரஹ நிலைகள்:

ஜோதிடத்தில் மனதிற்க்கு சந்திரனையும், புத்திசாலிதனத்திற்க்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலிதனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புன்னியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம்பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநி்லைக்கு முக்கியமானதாகு. ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்ச்ஙகளாகும்.

1. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.

2. ஒருவருடைய ஜாதகத்தில் பக்‌ஷ பலமற்ற சந்திரன் லக்னத்திற்க்கு 6/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது.

3. சந்திரன் விருச்சிக ராசி மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி 6/8/12 அதிபதிகளாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது.

4. சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜென்ன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது.

5. ஆத்ம காரகனாகிய சூரியன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜென்ன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது

6. லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது.

7. சந்திரனும் புதனும் 6/8/12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களூடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது.

8. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது.

9. கோப உணர்ச்சியை தூண்டும் கிரஹஙகளான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது.

மனபாதிப்பு எப்போது ஏற்படும்?
சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்

ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்,சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்

சந்திரன் கேது புத்தி காலங்கள்,சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.

ஜோதிட பரிகாரங்கள்:
குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு.

ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும்

ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.

ராகு கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம், திருகீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புறம், கேரளாவில் உள்ள மண்ணார்சாலா ஆகிய ஸ்தலங்களில் ஸர்ப வழிப்பாடு செய்வது.

கும்பகோணம் நாச்சியார் கோவிலை அடுத்துள்ள திருநாறையுரில் மாந்தியோடு சேர்ந்து அருள் புரியும் குடும்ப சனி பகவான்.

கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க ஸ்வாமிகோயிலில் ஜென்ம நக்‌ஷதிர நாளில் சென்று வழிபடுவது.

மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசிலம் மற்றும் திருப்பதி போன்ற சந்திர ஸ்தலஙளுக்கு சென்று வருவதும் சிறந்த பலனளிக்கும்.

சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.

மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பது.

உளவியல் ஆலோசனை:

மனநலம் முக்கியமானது எனத் தெரிந்தும், உடல் நலத்திற்கு மருத்துவரை பார்ப்பது போல் நாம் மன நலத்திற்கான பணியாளர்களை அணுகுவதில்லை. பைத்தியக்கார்கள் தான் உளவியல் ஆலோசகர்கள், உளவியலாளர்கள், மன நல மருத்துவர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள் போன்ற மனநல பணியாளர்களை அணுகுவார்கள் என்ற தவறான கருத்து நம் சமுதாயத்தில் பரவலாக உள்ளது.

உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள். உளவியல் ஆலோசனையின் போது, அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம்

உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்சனைகளை வரையறுத்து, உங்களை தெளிவாக சிந்திக்க தடுக்கும் தடைகளை கண்டுபிடிக்கக்கூடியவர். அந்த குறிப்பிட்ட தடைகளை போக்க, உங்களுடன் (தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும்) இணைந்து, நடைமுறைக்கு ஒத்துவரும் உளவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுபவர். மனச்சிதைவு, மனச்சோர்வு, அடிமைப் பழக்கங்கள் போன்ற சில மன பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சை அளிப்பதுண்டு.

பல ஜோதிடர்களும் சிறந்த உளவியல் ஆலோசகர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மன நலம் பாதிக்கப்பட்டோரை தகுந்த சிகித்சையோடு ஜோதிட ரீதியான ஆலோசனைகளை கடைபிடிப்பது மற்றும் ஜோதிடதில் கூறப்பட்ட பரிகாரஙகளை கடைபிடிப்பது ஆகியவை மன நோயிலிருந்து விரைவில் விடுபட வழி வகுக்கும் என்பது உண்மை.

 மனநலம்பைத்தியம்சந்திரன்ஜோதிடம்




Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக