வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16


சர்வதேச பொறுமை தினம் நவம்பர் 16.

உலகளாவிய ரீதியில் சர்வதேச பொறுமை தினம் இன்று நவம்பர் 16 கொண்டாடப்படுகிறது.

UNESCO ஆனது சர்வதேச பொறுமை தினத்தினை 1995 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இத்தினமானது வன்முறைகளை அழித்தொழித்து பொறுமையினை கடைப்பிடிப்பதை வலியுறுத்தி ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு சமூகங்கள் வாழும் இவ்வுலகில் ஒரே நாளில் பொறுமை குணத்தினை கட்டியெழுப்ப முடியாது. அதனை ஒவ்வொருவரும் இளமையிலிருந்தே தங்களது சிறந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும் .

பொறுமை (Patience)

பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

அறிவியல் பார்வை

பரிணாம உளவியலிலும் அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணையதளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நூல்களில் குறிப்புகள்

திருக்குறள்

திருக்குறளில், பொறையுடைமை என்ற அதிகாரத்தில் பொறுமையின் பெருமைகளை திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.

எடுத்துக்காட்டாக:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள் விளக்கம்:
தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக