ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தொல்.திருமாவளவன் உதய நாள் ஆகஸ்ட் 17

தொல்.திருமாவளவன் உதய நாள் ஆகஸ்ட் ௧௭..
பிறந்த நாள் : 17.08.1962
குடும்பம் : திருமணமாகாதவர்
அப்பா : இராமசாமி (எ) தொல்காப்பியன்
அம்மா : பெரியம்மாள்
தம்பிகள் : செங்குட்டுவன், பாரிவள்ளல்
அக்கா : வான்மதி
முகவரி : அங்கனூர் & அஞ்சல்
செந்துரை வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம் - 621 709
கல்வி:
புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79)
அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்.
பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82)
மாநிலக் கல்லூரி, சென்னை.
பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85)
சென்னை பல்கலைக் கழகம், சென்னை
சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88)
சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.
அரசுப்பணி :
தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.
பொதுவாழ்க்கை:
1983
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.

தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் போராட்டங்களில் பங்கேற்பு.
1984
'கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை' யின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு. பேரவையின் சார்பில் 'ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 'விடுதலை புலி' எனும் கையெழுத்து ஏட்டை பொறுப்பேற்று நடத்தியது.
1985
கடலோர பகுதியை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் , மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ' இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தியது. அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்க்கு ஆதரவாக மிதிவண்டிப் பேரணி, ஆர்பாட்டங்கள், கருத்தரங்கள் நடத்தியது.
1986
ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னின்று நடத்தியது.

புதிய கல்வி கொள்கை (நவோதயா) திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக் கல்லூரி முன் கைதானது.

திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பபு. 1987 ஈழத் தமிழர் பாதுகாப்பு க் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப் பகுதியில் தலைமை யேற்று நடத்தியது.
1990
விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் தலைமை பொற்ப்பேற்றது.

1990-99
தீவிரமான பல்வேறு போராட்டங்களை வழிநடத்தியது.

1999
முதன் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.
2001
சட்டமன்றப் பொதுதேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது.
2004
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க அணியில் தாழ்தப்பட்ட சமுகத்தினருக்கு உரிய 'அரசியல் மதிப்பு' மறுககப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.(3.2.2004).
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்,ஐக்கிய சனதாதளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி' அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. அத்தேர்தலில் சுமார் 2,57,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. 2006: அ.தி.மு.க கூட்டணியுடன் அமைத்து தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, தமிழகத்தில் 2 இடங்களில் (காட்டுமன்னார் கோயில், மங்களூர்) வெற்றிபெற்றது.
2007‍ - 08
ஈழத்தமிழர் ஆதரவு, மனித நேயப்பேரணி, கருத்துரிமை மீட்பு மாநாடு உள்ளிட்ட கட்சியின் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.
2009
ஈழத்தமிழர்களுக்காக சென்னை மறைமலை நகரில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம்.

ஈழத்தில் போர்நிறுத்தத்திற்காக "நாம் தமிழர்" நடைப்பயணம்.

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக