புதன், 18 ஆகஸ்ட், 2010

இந்திய தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி பிறந்த நாள் ஆகஸ்டு 20 ..

இந்திய தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி பிறந்த நாள் ஆகஸ்டு 20 ..
நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம வீபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இளமை.
திரு நாராயண மூர்த்தி, 1946ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 20ம் நாள் கன்னட மத்வபிராமண குடும்பத்தில் பிறநதார்.மின் பொறியியல் பட்டத்தை மைசூர் பல்கலைகழகம் சார்ந்த தேசிய பொறியியல் கழகம்

தேசிய பொறியியல் கழகத்தில் 1967ம் ஆண்டு பெற்றார். பொறியியலில் முதுநிலை பட்டத்தை 1969ம் ஆண்டு இந்திய தொழிற்நுட்பக் கழகம், கான்பூரில் பெற்றார்.

1 கருத்து: