வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அற்புதமான நடிகர் டி.எஸ்.பாலையா..பிறந்த நாள் ஆகஸ்ட் 23 ,

அற்புதமான நடிகர் டி.எஸ்.பாலையா..பிறந்த நாள் ஆகஸ்ட் 23 , 
டி. எஸ். பாலையா அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் (ஆகத்து 23, 1914 - 1976), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என தமிழ் சினிமா உலகமே வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள்.அதிலும் ராதாவும்,பாலையாவும் வில்லனாகவும்...நகைச்சுவையிலும் கொடிகட்டி பறந்தவர்கள்.
பாலையா...1936 ஆம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார்.இவர் கதானாயகனாக நடித்த படம்'வெறும் பேச்சல்ல"
பின்..வில்லன் பாத்திரங்களும்..நகைச்சுவை பாத்திரங்களுமே இவரைத் தேடி வந்தன.மணமகள் படத்தில் பத்மினிக்கு பாட்டு வாத்தியாராக வந்து..'சின்னஞ்சிறு கிளியே' பாடலை அழுதுக் கொண்டே பாடி..தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியில்..அவர் அழுது அற்புதமாக நடிக்கும் போது...நாம் அடக்கமுடியாமல் சிரிப்போம்.
தூக்கு தூக்கி படத்தில்...சேட்ஜியாக வந்து...நம்மள்...நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார்.இதற்குப் பின்னரே..இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும்...நாடகங்களிலும் பேசப்பட்டது எனலாம்.
பின்...வேலைக்காரி,மதுரை வீரன்,புதுமைப்பித்தன்,தாய்க்குப்பின் தாரம்,அன்பு, காத்தவராயன் என பல படங்களிலும் அவர் நடித்தார்.
கே.ஆர்.ராமசாமி,டி.ஆர்.மஹாலிங்கம்,ஜெமினி,எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.,சிவாஜி என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர்.
பாகப்பிரிவினையில்..இவர் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட்டது.பாமா விஜயம் காமெடி தூள் கிளப்பி இருப்பார்..இவரைப் பற்றி எழுதும் போது...நம்மால் மறக்கமுடியாத இரண்டு படங்கள்..காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள்.
தி.மோ.வில் நாதஸ்வர கலைஞராக வந்து..ரயிலில்..சி.கே.சரஸ்வதியுடன் இவர் செய்யும் குறும்புகள்....இருங்கள்..சிரித்து விட்டு வருகிறேன்..
காதலிக்க நேரமில்லை படத்தில்...நாகேஷுடன் இவர் கதைக் கேட்கும் காட்சி..சிரித்து..சிரித்து..வயிறு புண்ணாகும் காட்சியாகும்.
திருவிளையாடலில்...ஹேமாநாத பாகவதராய் வந்து..அலட்சியத்துடன்...இவர் பாடும்'ஒரு நாள் போதுமா" இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
டி.எஸ்.பாலையா..என்ற அற்புதநடிகர்..1976ல் காலமானார்.
அவரின் புகழ்பெற்ற  படங்கள்:
*வேலைக்காரி (1949)
*உத்தம புத்திரன் (1940)
*ஆர்யமாலா (1941)
*மனோன்மணி (1942)
*மீரா (1945)
*வால்மீகி (1946)
*மோகினி (1948)
*ஏழை படும்பாடு (1950)
*ஓர் இரவு (1951)
*மதுரை வீரன் (1956)
*பாகப்பிரிவினை (1959)
*திருவிளையாடல் (1968)
*பாமா விஜயம் (1967)
*தில்லானா மோகனாம்பாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக