வியாழன், 7 ஜூலை, 2016

இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி பிறந்த நாள் ஜூலை 08.


இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி பிறந்த நாள் ஜூலை 08.
சவுரவ் சந்திதாஸ் கங்குலி (ஜூலை 08, 1972) இந்திய மட்டைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர். கொல்கத்தாவை சேர்ந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி 1991-92 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும், 1996 இல் இந்திய டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். தன் முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதங்களைப் பெற்றார். 2000 முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 2004- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கங்குலிக்கு வழங்கப்பட்டது. உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஆறாவது இடத்தைப் பெற்றார்.உலகின் மிகச்சிறந்த அணி தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 2008 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் 2008 ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 2011 ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியில் இடம் பிடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக