சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.
🌷 நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. எனவே இத்தகைய இளைஞர்களின் பிரச்சனைகளையும்இ செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையிலும்இ விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 இதன்படி 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இளைஞர்கள் வாழ்வாதாரங்களுக்காக இடம்பெயர்வு.
அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஓகஸ்ட் 12ம் திகதியன்று இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாசார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம்.
ஐக்கிய நாடுகள் சபையினால் 1999 இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்வி, அரசியலில் பங்கு, வேலைவாய்ப்பு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும். சுமார் 20 சதவீதமான இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் மனஉளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிகாலத்திற்கு வழிகாட்டுவதே இளைஞர் தினத்தின் நோக்கமாகும்.
எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஓகஸ்ட் 12ம் திகதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா சபையால் 1999இல் இத்தினம் தொடங்கப்பட்டது. 'வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகில் உள்ள இளைஞர்களில், 2.70 கோடி பேர் வாழ்வாதாரங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா அறிக்கையின்படி 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தர வேண்டும். குடும்பத்தை முன்னேற்ற வேண்டியது, இவர்கள் கையில் உள்ளது.
எனவே இளைஞர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் சிலர், இளைமைப் பருவத்தில் மதுபானம், புகைத்தல், போதைப் பொருள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். மாறாக திறமைகளை வளர்த்துக் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.
வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறையை வழிநடத்த தன்னலமற்ற தலைவர்களும், இளைஞர்களும் சேர்ந்தால் எந்த நாடும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக