செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand, ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.


இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand,  ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி : ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும் ஓர்
இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.

சிறப்பு நிகழ்வுகள்

ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக என சுவரொட்டிகள் எழுந்தன.
1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).
ஹாலந்தில் அவரது வளைதடியில் காந்தம் ஏதேனும் உள்ளதா என அறிய தடியை உடைத்து பரிசோதித்தனர்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர்.
வாழ்க்கை வரலாறு
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பத்ம பூசண் விருது
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்.


பாரத் ரத்னா
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா 2014 வரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.
பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தியான் சந்த் விருது (Dhyan Chand Award)

இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற
வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து
இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர் பட்டியல்
எண் பெயர் ஆண்டு விளையாட்
1. அபர்ணா கோஷ் 2002 கூடைப்பந்த
2. அசோக் திவான் 2002 வளைதடிப் பந்தாட்டம்
3. சாகுராஜ் பிரஜ்தார் 2002 குத்துச்சண்ட
4. சார்லசு கார்னியலசு 2003 வளைதடிப் பந்தாட்டம்
5. தரம் சிங் மான் 2003 வளைதடிப் பந்தாட்டம்
6. ஓம் பிரகாஷ் 2003 கைப்பந்தாட்ட
7. ராம் குமார் 2003 கூடைப்பந்த
8. சிமிதா யாதவ் 2003 துடுப்பு படகோட்டம்
9. அர்தயாள் சிங் 2004 வளைதடிப் பந்தாட்டம்
10. லாப் சிங் 2004 தடகளம்
11. மெகெந்தளே பரசுராம் 2004 தடகளம்
12. மனோஜ் கோத்தாரி 2005
பில்லியர்ட்சு மற்றும்
மேடைக் கோற்பந்தாட்ட
13. மாருதி மானே 2005 மற்போர்
14. ராஜிந்தர் சிங் 2005 வளைதடிப் பந்தாட்டம்
15. அரிச்சந்திர பிரஜ்தார் 2006 மற்போர்
16. நந்தி சிங் 2006 வளைதடிப் பந்தாட்டம்
17. உதய் பிரபு 2006 தடகளம்
18. ராஜேந்திர சிங் 2007 மற்போர்
19. சம்சேர் சிங் 2007 கபடி
20. வரீந்தர் சிங் 2007 வளைதடிப் பந்தாட்டம்
21. கியான் சிங் 2008 மற்போர்
22. அக்கம் சிங் 2008 தடகளம்
23. முக்பெய்ன் சிங் 2008 வளைதடிப் பந்தாட்டம்
24. இஷார் சிங் தியோல் 2009 தடகளம்
25. சத்பீர் சிங் தயா 2009 மற்போர்




“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.”
என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர்
“He scores goals like runs in cricket” – Bradman
தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக அறியப்படுபவர். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தேசம் தாண்டியும் அறிமுகம் கொண்ட இவரை இந்தியாவில் பலர் இன்னமும் அறியாமல் இருப்பது ஆச்சர்யமே.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அங்கீகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் என்றால் அது மிகையல்ல. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 இவரது பிறந்த நாளிலே கொண்டாடப்படுகிறது.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுவது போல, விளையாட்டில் சிறந்த விளங்கியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தயான் சந்த் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
சந்திரன் வருகை
ஆரம்பத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது 16 வயதில் அப்போதைய பிரிட்டன் இந்திய ராணுவத்தில் இணைந்த பின்னர் தான் ஹாக்கி விளையாட துவங்கினார்.
ராணுவ நண்பர்கள் இவரை சந்த் என செல்லமாக அழைக்கத் துவங்கினர். சந்த் என்றால் சந்திரன் என அர்த்தம், பணி நேரம் முடிந்ததும் எல்லோரும் உறங்கும் வேளையில் தயான் மைதானத்தில் தனித்து நிற்பார்.
மின்விளக்குகள் அற்ற அக்காலத்தில் இரவு சந்திரன் வெளிச்சத்திற்காக அலைகளைப் போல இவர் காத்திருப்பார். இரவெல்லாம் பயிற்சி செய்வார்.
பல வருடங்களுக்கு பிறகு 1928 ல் ஒலிம்பிக்கில் ஹாக்கி மீண்டும் சேர்க்கப்பட்டது.ஆங்கிலேயர்களால் பிரிட்டன் இந்திய அணி உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் பயிற்சி பெற்ற அணி இங்கிலாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய அணியுடன் இங்கிலாந்து தேசிய அணி விளையாடியது.
11-0 என இங்கிலாத்தை சிதறடித்தது பிரிட்டிஷ் இந்திய அணி. இதன் காரணமாக தி கிரேட் பிரிட்டன், 1928 ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் அணியை அனுப்பவில்லை.
அவர்கள் தேசிய அணி இந்தியாவிடன் தோல்வியுற்றதையும் தாண்டி இங்கிலாந்து சர்வதேச களத்தில் அடிமை நாடான இந்தியாவை சந்திக்க அஞ்சியது ஒரு காரணமாகலாம்.
தயான் சந்த் பற்றி அதுவரை உள்ளுர் மக்கள் மட்டுமே அறிந்திருந்தனர். தயான் சந்த ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் பந்தை தட்டிக்கொண்டே 2 கிமீ தொலைவிற்கு விடாமல் பயிற்சி செய்வார் என மக்களால் கிசுகிசுக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியா
1928 ல் பிரிட்டிஷ் இந்தியா தன் முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரியா நாட்டை 6-0 என வென்றது. சந்த் 3 கோல்கள் அடித்தார், அடுத்தடுத்து தொடர் வெற்றி காண இறுதி போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும் உடல் நல குறைவால் சந்த் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை.
நெதர்லாந்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-0 கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை வசமாக்கி முதல் தங்கத்தை ருசித்தது. அந்த ஒட்டுமொத்த தொடரிலும் இந்தியாவிற்கு எதிராக எந்த கோலும் அடிக்கப்படவில்லை என்பது சரித்திரம்.
தன் வல்லமையான மட்டை திறனால் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவராக பெருமை அடைந்தார் சந்த். அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
This is not a game of hockey, but magic.
Dhyan chand is in fact the magician of hockey.
செல்லும் போது 3 நபர்கள் வழியனுப்பிய அணிக்கு, நாடு திரும்பிய போது பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்றனர்.
உள்ளுர் போட்டி ஒன்றில் எவ்வளவு முயன்றும் தயானால் கோல் அடிக்க முடியவில்லை, உடனே அவர் நடுவரிடம் சென்று கோல் கம்பத்தை அளக்க சொன்னாராம்.
அதிசயதக்க வகையில் சர்வதேக விதிமுறைகளை விட அதன் அகலம் குறைவாக இருந்தது.
அரண்ட அமெரிக்கா
1932 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. வழக்கம் போல ஜப்பான் போன்ற அணிகளை 11-0 கணக்கில் தோற்கடித்து இறுத்திக்குள் நுழைந்த இந்திய அணி போட்டி நடத்தும் அமெரிக்காவை எதிர் கொண்டது.
தயான் 8 கோல்கள், ரூப் சிங் 10 கோல்கள் உட்பட 24-1 என்ற கணக்கில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்தை சூரையாடியது. அந்த நேரத்தில் அதிக கோல்கள் அடித்த உலக சாதனை போட்டியாக இது அமைந்தது.
கதற விடப்பட்ட அமெரிக்க ஹாக்கி அணி அப்போது விட்ட விளையாட்டை இன்னும் சரிவர பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.
தயானின் சகோதரர் ரூப் சிங் பற்றி கூறிய ஆக வேண்டும். அவரை போன்ற ஒரு இடது உள்பக்க வீரர் இந்தியாவிற்கு இன்னமும் கிடைக்கவில்லை.
தயானிற்கு துணை நிற்கும் இவர் எப்போதும் அணியின் நம்பிக்கையை ஏமாற்றியது இல்லை. ஹாக்கி வரலாற்றில் நடுவரோடு வாதிட ஆட்டக்கார்களில் இவரும் ஒருவர்.
1932 ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோல்களில் தயான்-ரூப் அடித்த கோல்கள் மட்டுமே 25. ஹாக்கியின் இரட்டையர்களாக இவர்கள் வர்ணிக்கப்பட்டார்கள்.
காந்தம் இருக்கிறதா
தொடர்ந்து இந்த அணி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாது என பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றது.
ஒருமுறை ஹாலாந்து சென்ற போது இவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருப்பதால சந்தேகம் கொண்ட மக்கள் அவரது மட்டையை உடைத்தே பார்த்தார்களாம்.
ஒரு பெண் இவரிடம் தனது கைத்தடியை கொடுத்து விளையாட சொல்ல அதை வைத்துக் கொண்டும் எப்படியோ ஒரு கோல் அடித்தார் இந்த சாம்பவான்.
அந்த பெண் இங்கிலாத்தின் ராணி எனவும் சிலரால் கூறப்படுகிறது.பயண முடிவில் 37 போட்டிகளில் கலந்து கொண்டு 34 வெற்றி, 2 சமன்,1 ரத்து என உலகை பிரமிக்க வைத்தது இந்திய ஹாக்கி. 338 கோல்கள் அடித்த அணியில் 133 கோல்களை சந்த் அடித்திருந்தார்.
கேப்டன் தயான்
1934ல் சந்த் இந்திய ஹாக்கி அணியுன் கேப்டனாக பொறுப்பேற்று நடத்தினார்.
1935 ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் கிரிக்கெட் சாம்பவான் பிராட்மேன் இவர் ஆட்டத்தை காண நேர்ந்தது.
வியந்து போன பிராட்மேன் ஹாக்கி என சொல்லிவிட்டு கிரிக்கெட்டை காட்டுகிறார்கள், அவர் நாங்கள் ரன் எடுப்பது போல கோலகளை அடித்து கொண்டே இருக்கிறார் என்றார்.
1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பணத்தை தயார் செய்து செல்ல வேண்டிய காட்டாயம் இருந்தது.
இந்திய அணி கப்பலில் போக 50000 வரை செலவு பிடிக்கும். அவர்கள் பலரிடம் ஸ்பான்சர் கேட்டுச் சென்றனர். காந்தி இந்த ஹாக்கி பொருள் என்பது என்னவென்று கேட்டாராம், அன்றைய அரசியல் சூழல் அப்படி.
டாட்டா பிர்லா போன்றோர் உதவினர். பெரும் கடல் பயணத்திற்கு பின் ஒருவழியாக பெர்லினை சென்றடைந்தார்கள்.


தயான் vs ஹிட்லர்
அன்று வரை தோற்கடிக்கவே முடியாத பலம் வாய்ந்த இந்திய அணி பயிற்சி போட்டியில் ஜெர்மனியிடம் 1-4 என அதிர்ச்சி தோல்வியுற்றது.
இவர்கள் ஆட்டம் அடங்கிவிட்டது என மற்றவர் எண்ண தயான் தன் அணியுடன் பலவீனத்தை ஆலோசித்தார்.
தங்கள் வலது பக்க ஆடுநபர் சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்தவர்கள் டாரா என்பவரை அழைத்து வர கேட்டுக் கொண்டார். முதலாவதாக விமானத்தில் பறந்து வந்தவர் அவர் மட்டுமே.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் என்ற போஸ்டர் பெர்லின் தெருவெங்கும் ஒட்டப்பட்டது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள்.
ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்த அந்த ஒலிம்பிக் போட்டி நாசி ஒலிம்பிக்(Nazi Olymbic) என அறியப்பட்டது.
ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திதால் ஜெர்மன் அணி மிக வலுவான மனநிலையில் இருந்தது.
ஹிட்லர் தன் நாட்டு ரசிகர்களோடு ஆட்டத்தை ஆர்வத்தோடு கவனிக்க வந்திருந்தார்.
அன்றும் ஆகஸ்ட் 15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மற்ற மூவர்ண கொடியை வணங்கி களத்தில் வீரர்கள் இறங்கினர்.
போட்டி துவங்கியதும் இந்திய அணி பெரும் ஆக்ரோஷத்தை சந்தித்தது. ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது, ரசிக ஆரவாரங்கள் மண்ணை பிளந்தன.
சுற்றி வளைப்பட்ட தயான் எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் சற்று காட்டுத்தனமான கோல்கீப்பரால் அவர் பல் பறி போனது தான் மிச்சம்.
ஜெர்மனி வீரர்களின் உடல் வலிமை சிறப்பாக இருந்தது. இந்தியர்கள் வலிமையானவர்கள் அல்ல என்ற கூற்றை ஹிட்லர் விரும்பியதும் ஒரு காரணம்.
இந்தியர்களின் வாழ்வா சாவா போராட்டமாக இரண்டாவது பாதி தொடங்கியது. தயான் சந்த் தனது காலணிகளை கழற்றி வீசி வெற்று கால்களோடு களத்தில் இறங்கினர்.
>நீங்கள் ஹாக்கி விளையாட்டை கவனித்திருந்தால் காலுறை உள்ளே பலமான அட்டையை பொருத்திருப்பார்கள்.
அது மட்டையை வீசும் வேகத்தில் கால் எலும்புகள் உடையாமல் வீரர்களை பாதுகாக்கும், அதுவும் அப்போதைய காலத்தில் மாற்று வீரரெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அடிபட்டால் அவ்வளவுதான்.
ஆனால் அந்த நிமிடத்திலிருந்து தான் போட்டி சூடுபிடித்தது. இந்திய அணி ஒரு நேர்த்தியான ஹாக்கி விளையாட்டை ஜெர்மனுக்கு சொல்லி தர விரும்பியது.
புராதாண இந்திய ஹாக்கி ஒன்று அங்கே அரங்கேறியது. பந்து லாவகமாக ஜெர்மன் வீரர்களை தாண்டி இலக்கை சென்றடைந்தது.

தயான் சந்த் தன் மந்திர ஜாலத்தை பந்தாடினார். தொடர்ச்சியாக ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஜெர்மன் வீரர்களை மிரள வைத்தார், போட்டி முடிவடிகையில் இந்தியா 8 கோல்கள்.
ஜெர்மனி அடித்த ஒரு கோல் தான் பெர்லினின் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை.
திருடி விட்டு மாட்டிக் கொண்ட குழந்தை போல ஹிட்லர் முகம் மாறியிருந்தது. 50000 ரசிகர்களும் ராணுவ அமைதியில் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.
தயான் சந்த் என்ன சொன்னார் தெரியுமா. “ நான் ஒரு ஹாக்கி வீரன் தான், ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவ வீரன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அவரது சூரத்தனமாக ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான் சந்தின் மட்டையை விலைக்கு வாங்க விரும்பினாராம்.
ஜெர்மன் பத்திரிக்கைகள் இந்திய ஹாக்கி அணியை இதுபோல் உலகின் தலைசிறந்த நேர்த்தியான அணி இனிமேல் உருவாக போவதில்லை,தயான் சந்த் யை போன்ற ஆட்டக்காரரும் என்றது.
அடையாளம்
வியான்னா வில் தயான் சந்த்ற்கு நான்கு கைகளும் அதில் நான்கு ஹாக்கி மட்டையோடு இருப்பது போன்ற சிலை உருவாக்கப்பட்டது.
அப்படிபட்ட ஒருவரால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என பொருள் தருமாறு அது உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை அது ஒரு மர்மமாகவே உள்ளது , பல பத்திரிக்கைகளில் குறிப்பிட்டிருந்தும் அச்சிலையை யாருமே பார்த்தது இல்லை.
அவரது மகன் அசோக் சந்த் 1975 ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுடம் முக்கிய கோல் அடித்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கி தந்தவர்.
அவர் ஒருமுறை நியூசிலாந்து செல்கையில் அங்கிருந்த உணவக நிறுவாகி நீங்கள் இந்திய ஹாக்கி அணியா என விசாரித்து தான் சிறுமியாக இருந்தபோது தயான் சந்தின் அனைத்து போட்டிகளையும் பார்த்துள்ளேன், அந்த மாயத்தை என்னால் மறக்க முடியாது என்றாராம்.
டெல்லியில் தேசிய மைதானத்திற்கு தயான் சந்த் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூசன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர் இவர் மட்டுமே.
>அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவின் உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது. பதம் பூஷன் விருது வாங்கிய ஒரே ஹாக்கி வீரர் இன்று வரை இவர் மட்டுமே. இவரது பிறந்த நாளை(ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமான இந்தியா அறிவித்தது.
லண்டன் ஜிம்கானா கிளப்பில் ஹாக்கி அரங்கித்திற்கும் லண்டன் சுரங்க ரயில் பாதை நிலையம் ஒன்றிற்கும் இவர் பெயர் சூடிடப்பட்டுள்ளது.
அவரது மாநிலத்தில் அவரது உயரிய சிலை ஒன்று மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது, தற்போது அதனடியில் அமர்ந்தே இளைஞ்ர்கள் கஞ்சா அடிக்கின்றனர்.
இந்தியாவின் முகம்
1956 க்கு பிறகு அவர் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றார். அவரது இறுதி காலங்கள் வறுமையிலே வாடியது.
உலக புகழ் பெற்ற இந்தியன் ஆனாலும் உள்ளூர் மக்களிடம் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.
22 வருடம் ஹாக்கி சகாப்தத்தினை அகமதாபாத் உள்ள நகர போட்டியின் போது யாரென தெரியவில்லை என மக்கள் கூறினார்கள்.
தன் முதுமை பருவத்தில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டார் சந்த். 1978 அவரது சகாப்தம் முடிவுற்றது.
நியாப்படி சொல்லப்போனால் முதல் பாரத ரத்னா இவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும், சச்சின் 21 நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் என்றால் உலக களத்தில் இந்தியாவை பெருமையடைய வைத்த இவர் 20 நூற்றாண்டு மட்டுமல்ல ஆல்-டைம் தலைசிறந்த வீரராக இருப்பார்.
ஹாக்கி உள்ளவரை இவர் பெயரும் நுணுக்கமும் உலக ஒசையில் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
இறப்பதற்கு சில காலம் முன்பு அவர் சொன்னது, “நான் மரணித்த பிறகு உலகில் பலரும் எனக்காக கண்ணீர் சிந்துவார்கள் என எனக்கு தெரியும், ஆனால் என் இந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.”



ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்

இந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவு கூறப்படலாம். சிலர் காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஓய்வுபெற்ற 66 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு சென்றுவிட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால், அந்த மகத்தான வீரர் வேறு யாருமல்ல அவர்தான் “மேஜிக் மேன்” மேஜர் தயான் சந்த்.
ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு “மேஜிக் ஷோ” போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் “மேஜிக் மேன்” என்றழைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த்.
சந்தும் சந்திரனும்…
தனது 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் மல்யுத்த விளையாட்டை மறந்து ஹாக்கியில் காலடி வைத்தார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். பெயருக்கேற்றாற்போலவே இந்த சந்துக்கும், அந்த சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இரவில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தயான் சந்த். ஆனால் அப்போது மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், சந்திரன் ஒளிவீசத் தொடங்கிய பிறகுதான் இந்த சந்தின் ஆட்டமே தொடங்கும். அதனால் அவருடைய நண்பர்கள் தயான் சந்தை “சந்திரனே” என்றுதான் அழைப்பார்களாம்.
திருப்புமுனை
1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர் பெற்றார் தயான் சந்த்.
ஒலிம்பிக் பயணம்
ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த்.
முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. அப்போதே இந்திய ஒலிம்பிக் அணியில் அவருடைய இடமும் உறுதியானது.
ஒலிம்பிக்கில் நிகழ்ந்த மேஜிக்
1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.
ஆனால் தயான் சந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரால் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் விளையாட இயலாமல் போனது. எனினும் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கோல் கீப்பர் ரிச்சர்ட் ஆலன், எதிரணிகளிடம் ஒரு கோல்கூட வாங்காமல் புதிய சாதனை படைக்க, அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை தயான் சந்துக்கு (14 கோல்கள்) கிடைத்தது. அப்போது இந்தியாவின் வெற்றியைப் புகழ்ந்த பத்திரிகை ஒன்று, “இது ஹாக்கி விளையாட்டல்ல, மேஜிக். ஹாக்கியின் வித்தைக்காரர் தயான் சந்த்” என்று குறிப்பிட்டது.
1932-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.
இந்தியாவின் கேப்டன்
1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது.
பயிற்சி ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றிருந்ததால், இந்திய வீரர்கள் மிகுந்த பதற்றத்தோடு இருந்தனர். மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.
ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
வறுமையான வாழ்க்கை
ஓய்வுக்குப் பிறகும் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது.
இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த், பணத்திற்காக எப்போதுமே விளையாடியதில்லை. அதனால்தான் ஹிட்லரின் அழைப்பைக்கூட அவர் மறுத்தார். வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ்
மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.
தயான் சந்த் வாழ்வார்
தயான் சந்த் மறைந்துவிட்ட போதிலும், அவர் ஆடிய ஆட்டமும், காட்டிய மேஜிக்கும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வீரர்கள் இன்னும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகைவிட்டு சென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் அவருடைய மேஜிக்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
தேசிய விளையாட்டு தினம்
வாழும்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

“மேஜிக் மேனு”க்கு இன்று 109-வது பிறந்த நாள்.
ஹிட்லரை கவர்ந்த தயான் சந்த்
*22 ஆண்டுகால ஹாக்கிப் பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*ஒருமுறை ஹாக்கி விளையாடியபோது தயான் சந்தால் கோலடிக்க முடியவில்லை. அப்போது நடுவர்களிடம் சென்ற அவர், கோல் கம்பத்தின் அளவு தொடர்பாக வாதிட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச விதிமுறைப்படி இரு கோல் கம்பம் இடையிலான அகலம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதிலிருந்து தயான் சந்தின் ஆட்டம் எவ்வளவு துல்லியமானது என்பதை அறியலாம்.
*1936 ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் இப்போது “மேஜிக் ஷோவையும்” பார்க்கலாம். இந்திய “மேஜிக் மேன்” தயான் சந்தின் ஆட்டத்தைக் காண செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
*கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனும், தயான் சந்தும் 1935-ம் ஆண்டு அடிலெய்டில் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தயானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோலடிக்கிறார் என புகழ்ந்தார்.
*ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் இருப்பார். அவரின் அபாரத் திறமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
*லண்டனில் உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு நிறுத்தத்துக்கு தயான் சந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தயான் சந்த் விளையாடியபோது அவருடைய மேஜிக் ஆட்டத்தைப் பார்த்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. அவருடைய மட்டையின் உள்புறத்தில் காந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது.
*1936 ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து ஜெர்மனியை அப்போது ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரே, அசந்து போனார். அதன் எதிரொலியாக ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க நூல்விட்டார் ஹிட்லர். ஆனால் தயான் சந்தோ, சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக