புதன், 1 ஆகஸ்ட், 2018

இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள் ஆகஸ்ட் 2, 1876.


இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள் ஆகஸ்ட்  2, 1876.

பிங்கலி வெங்கைய்யா , (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆவார்.  வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார்.
மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார். பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், இலாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் சப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.
நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.
தென்-ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
காக்கினாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார்.
முதலில் கொடியின் நடுவில் ஓர்
இராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியைப் பருத்தித் துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.


இந்திய தேசிய கொடி; சில அரிய தகவல்கள்

இந்திய தேசியக் கொடி, ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும், 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு.
கொடியை உருவாக்கியவர்அசோக சக்கரம், கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில், நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.
வாழ்வை குறிக்கும் சக்கரம் அசோக சக்கர சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறி செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். தேசியக் கொடியின் காவி நிறம், துாய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படுகிறது.
கொடி உருவான வரலாறு 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.
23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது.
இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது.
இந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை, சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப, மெட்ரிக் அளவு முறையாக 1964-ல் மாற்றப்பட்டது.இந்த அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கிறது.
கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.கொடிக்கு பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம் (உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்க வேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக