செவ்வாய், 3 டிசம்பர், 2019

இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4 ..


இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4 ..

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 - ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் இந்திய கடற்படை டிசம்பர் நான்காம் தேதி அன்று பாக்கித்தானின் கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பிஎன்எஸ் முஹபிஸ் மற்றும் பிஎன்எஸ் கைபர் கப்பல்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன .

இன்னொரு பாகிஸ்தானிய கப்பலான பிஎன்எஸ் ஷாஜஹான் கூட இந்திய கடற்படையால் சேதபடுத்தப்பட்டது. மேலும் இந்திய ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிப்பொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன. இந்த தாக்குதல்நடவடிக்கைகள்  'ஆபரேஷன் திரிசூலம்' எனப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்கள் 'ஆபரேஷன் மலைப்பாம்பு' என்று அழைக்கப்பட்டன.

இந்த படைநடவடிக்கைகளின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்தியா கடற்படை தினமாக கொண்டாடுகிறது.
நன்றி தினமணி.
#indian_navy_day

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக