வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

குடை தினம் - பிப்ரவரி 14




குடை தினம் - பிப்ரவரி 14

சூரியன் கதிர் வீச்சு, மழையிலிருந்து நம்மை காப்பாற்றும் குடைக்கு அமெரிக்காவில் தனித் தினமே இருக்கிறது. அது குடைத் தினமாக (Umbrella Day, February 14 ) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.

பழங்காலத்தில் சூரியனின் நிழல் மனிதர்களின் மேல் விழாமல் தடுக்கவே குடை பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து, கிரேக்கம், சீனா போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே குடை இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றன.

மழையிலிருந்து பாதுகாக்க தண்ணீர் புகாத குடையை முதன் முதலில் சீனர்கள் தான் கண்டறிந்தனர். தண்ணீர் சிதறி ஓட வேண்டும் என்பதற்காக மெழுகு பூசப்பட்டது. அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.

 16 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் குடை பிரபலமானது. குறிப்பாக வடக்கு ஐரோப்பாவில் மழைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் குடை பெண்களுக்கு ஏற்ற ஒரு சாதனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

பெரிஷிய நாட்டு சுற்றுலாப் பயணி மற்றும் எழுத்தாளர் ஜோனாஸ் ஹன்வே [Jonas Hanway) என்பவர் குடையை ஆண்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். ஆங்கிலயர்கள் தங்களின் குடையை ஹன்வே என்று குறிப்பிட்டனர்.

உலகின் முதல் குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830 ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கடை 53, நியூ ஆக்ஸ்ஃபோர்ட் தெரு என்ற முகவரியில் லண்டனில் இயங்கி வருகிறது.

ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் மரம் அல்லது திமிங்கலத்தில் எலும்பால் தயாரிக்கப்பட்டு ஆயில் கேன்வாஸால் மூடப்பட்டிருந்தது. மேலும், குடை கம்பியில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப விலை இருந்தது. 1852 ஆம் ஆண்டில் ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார். மேலும். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இன்றைக்கு குடை விதவிதமான வடிமைப்பில் பல்வேறு பொருட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இருட்டில் ஒளிரும் ரேடியம் குடை கூட விற்பனைக்கு கிடைக்கிறது.  அமெரிககாவில் இந்தத் தினம் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக