வியாழன், 2 பிப்ரவரி, 2017

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) பெப்ரவரி 4 .


உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) பெப்ரவரி 4 .

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

பிப்.4 - இன்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் 

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத் துக்காக, கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர் பி.குகனை சந்தித்து பேசினோம். அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

உலக புற்றுநோய் எதிர்ப்பு தினம் எதற்காக? எப்போது ஏற்படுத்தப்பட்டது?

புற்றுநோய் வரும் முன் எப்படி பாதுகாப்பது? ஆரம்பத்திலேயே அந்த நோயை கண்டுபிடிப்பது எப்படி? இந்நோய் உருவாக்கும் சக்திகள், சூழ்நிலைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வது. எல்லோரையும் புற்று நோய் குறித்த விஷயத்தை அறிந்தவர்களாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம்.

2000-ம் ஆண்டில் ‘world submit against cancer’ என்ற அமைப்பினர் பாரீசில் கூடி ‘govt agency cancer organizations charter of paris, advance cancer research article 10’ என்ற ஒன்றை உருவாக்கினார்கள். அந்த ஆர்டிகிள்-10-ன் படி பிப்ரவரி 4-ம் தேதியை உலக புற்றுநோய் தினமாக குறிப்பிட்டார்கள். கடந்த ஆண்டு `அறியாமையை விட்டொழித்தல்’ என்ற தலைப்பில் உலகமெங் கும் பிரச்சாரம் நடந்தது. இந்த ஆண்டு, ‘நாட் பியாண்ட் அஸ்’ அதாவது ‘நம்மைத் தாண்டி வேறொன்றுமில்லை’ என்ற மையப் பொருள் அடிப்படையில் பிரச்சாரம் நடைபெறுகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த அளவு பலன் அளித்துள்ளது?

புற்றுநோய் யாருக்கும் வரலாம். அதன் அறிகுறி தென்படும்போதே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் குணப்படுத்தியும் விடலாம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நோயின் தீவிரமும், பிரச்சாரமும் இந்தியாவில் எப்படி?

2010-ல் 9 லட்சத்து 79 ஆயிரத்து 786 புற்றுநோயாளிகள் இந்தியாவில் கண்டறிப்பட்டதாக இந்தியன் மெடிக்கல் கவுன்சில் சொல்கிறது. புகையிலை பயன்படுத்தியதால் ஒரு லட்சத்து 90 ஆயிரம் புற்றுநோய் இறப்பு நிகழ்ந்ததாக அதன் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் பெண்கள் மட்டும் 2010-ல் 76 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புற்றுநோய் வருமுன் காக்க... எப்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது?

இந்தியாவில் இந் நோய் வருவதற்கு உணவு முறை, சூழல் மாற்றமே முக்கியக் காரணம். சுகாதாரக் கேடு, வாகனப்புகை, பாக்டரி புகை, கெமிக்கல் கலப்பில் குடிக்கும் தண்ணீர் உள்ளிட்டவற்றில் மாசுபடுதல், காற்றில் கார்பன் மிகுதியாகிக் கொண்டிருப்பது, உணவுப் பயிர்களில் ரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு, உணவில் ரசாயன கலரிங் பயன்படுத்துவது, இது எல்லாமே காரணம்தான்.

ஒரு மருவோ, ஒரு புள்ளியோ தன் கட்டுப்பாட்டை இழந்து அபரிமித மாக வளர ஆரம்பிப்பதே புற்று நோய் என்றும் புற்று வளர்ச்சி என்றும் கொள்ளப்படுகிறது. ஆடு, கோழி, மாட்டுக்கு அப்படி ஓர் ஆர் மோன் நச்சு கொடுத்து, அதை மனிதன் உட்கொள்ளும்போது அதன் தாக்கமே இத்தகைய விளைவு களை ஏற்படுத்தி விடுகிறது. மெட்ஸ்டாஸிஸ் (metstasis) என்று இதற்கு பெயர். இந்தப்போக்கு மற்ற உறுப்புகளுக்கு பரவிவிட்டால், நோயைக் குணப்படுத்த முடியாது.

அறிகுறிகளும், மருத்துவப் பரிசோதனைகளும்...

உடம்பில் திடீர் என்று மச்சமோ, மருவோ பெரிதாகி, அதில் ரத்தக்கசிவு ஏற்படும்போது, தீராத காய்ச்சல், இருமல், உடம்பில் ஏதாவது ஒரு மூலையில் கட்டி இருந்து வேகமாக வளருவது, குரல்வளையில் மாற்றம் ஏற்படுதல், மலஜலம் கழிக்கும்போது ரத்தப்போக்கு (சிலர் ஃபைல்ஸ் என்று அலட்சியமாக இருந்துவிடுவர்) இதெல்லாம் காணப் பட்டால் உடனே கேன்சர் பரிசோதனை அவசியம். 40 வயதுப் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களை இந்த பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது, மார்பக புற்றுநோய், கர்ப்ப வாய்ப்புற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

50 வயது தாண்டும் ஆண்கள் என்றால் பிஎஸ்ஏ என்ற மருத்துவப் பரிசோதனையை செய்து கொண்டால் ஆரம்பத்திலேயே இந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

விழிப்புணர்வில் தற்காத்துக் கொள்ளுதல் எப்படி?

வெளிநாடுகளில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு தினத்தன்று, ஒவ்வொருவரும் தன் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், குடும்பத்தவர்களுக்குள் இந்த நோய் குறித்த விஷயங்களையும், அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். இவ்வாறு டாக்டர் குகன் கூறினார்.
நன்றி- விக்கிபீடியா ,தமிழ் தி இந்து .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக