சனி, 7 ஜூலை, 2018

இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தா இளவரசர் ‘தாதா’ கங்குலிக்கு பிறந்தநாள் ஜூலை 08 ,1972


இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தா இளவரசர் ‘தாதா’ கங்குலிக்கு பிறந்தநாள்  ஜூலை 08 ,1972

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly pronunciation ( சூலை 08 ,1972 ) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். 
சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார். 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒவராகத் திகழ்கிறார்.இவர் உச்ச நீதிமன்றத்தினால் சனவரி 2016 இல் நியமனம் செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். 
சௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் துடுப்பாட்ட உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். நவீன துடுப்பாட்ட வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார்.

 அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். 
 இவரின் பள்ளிக்கூட துடுப்பாட்ட அணி மற்றும் மாநிலத் துடுப்பாட்ட அணிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் , இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அளித்த தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ் , சச்சின் டெண்டுல்கர் ,பிறயன் லாறா ,டீன் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இவரின் பெயரை அறிவித்தது. 

இந்தியத் துடுப்பாட்ட அனியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை ,துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131 இலக்குகள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் துடுப்பாட்ட அணி , பாக்கித்தான் துடுப்பாட்ட அணி , ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது.
1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்டப் புகார் பிரச்சினைகள் மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தினால் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகினார். இதனால் தலைவர் பொறுப்பு கங்குலியிடம் வந்தது. 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவரின் மேலாடையைக் கழற்றியது மற்றும் வெளிநாடுகளில் அணி தோல்வியைத் தழுவியது போன்ற காரணங்களினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரின் தலைமையில் இந்திய அணி 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை சென்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிடம் வீழ்ந்தது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான
பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார்.


1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் உதித்த சௌரவ் கங்கூலி என்ற 'பெங்கால் டைகர்', ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "தாதா"வின் கிரிக்கெட் வாழ்வு, அவரே எதிர்பார்த்ததைப்போல இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது மூலம் மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்துள்ளது.
தோனி தலைமையில் இந்திய அணி அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த உயர்விற்கு தனது தலைமைப் பொறுப்பின் கீழ், நியாயமற்ற அவப்பெயர்களுடன், அடித்தளமிட்டுக் கொடுத்த கங்கூலியை நாம் மறக்க முடியாது.
குறிப்பாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் நாக்பூர் டெஸ்டிற்கு முன்னால் பேசிய வீர வசனத்தில், நாங்கள் டெஸ்டை வென்று கங்கூலிக்கு மகிழ்ச்சியான ஓய்வு தினங்களை மறுப்போம் என்றார். அவரது பேச்சு வெறும் பேச்சு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டு இந்த வெற்றி கங்கூலிக்கும் அவரது மன உறுதிக்கும், அவர் கிரிக்கெட்டை ஆடிய விதத்திற்கும், அவர் அணியை வழி நடத்திய திறனிற்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பேட்ஸ்மெனாக கருதப்படும் டான் பிராட்மேன் போலவே தன் கடைசி இன்னிங்சில் கங்கூலி ரன்கள் எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆனால் நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 89 ரன்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
கங்கூலிப் "ஆஃப் திசையின் கடவுள்" - அதாவது ஆஃப் திசையில் அவர் ஆடும் டிரைவ்கள், கட் ஷாட்கள் ஆகியவை அவரை டேவிட் கோவருக்கு பிறகு அழகாக விளையாடும் இடது கை ஆட்டக்காரர் என்று அழைக்க வைத்தது. நம் அனைவருக்கும் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமைப் பொறுப்பு பிடித்தமானது, அவரது அணித் தலைமையில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய அணியை தற்போது இருக்கும் உயர்வு நிலைக்கும், போட்டி உத்வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் அடிக்கல் நாட்டியது என்ற வகையில் பலருக்கும் பிடித்தமான ஒரு வீரர் கங்கூலி. .
இந்தியாவின் மிகச்சிறந்த அணித் தலைவர் கங்கூலி என்பதை உலகின் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டிய இலங்கை வீரர்களான சங்ககாரா, ஜெயவர்தனே, ரணதுங்கா ஆகியோர் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி புகழ்ந்து கூறியுள்ளனர். ஒரு வீரராக கங்கூலியை நாம் முதலில் பார்ப்போம்:
ஒரு வீரராக கங்கூலி
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸில் அவர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை எடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன் வருகையை அறிவித்தார். பிறகு அடுத்த டெஸ்டில் மீண்டும் ஒரு சதம், இப்படித்தான் அவர் துவங்கினார்.
இவருடன் திராவிடும் தன் முதல் டெஸ்டை விளையாடினார். இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டிங் சேர்க்கை அமைந்தது அப்போதுதான்: சச்சின், கங்கூலி திராவிட். டெஸ்ட் போட்டியில் இவ்வாறு அபாரமாக துவங்கியவர், ஒரு நாள் போட்டிகளில் அப்போதைய கேப்டன் அசாருதீனின் முடிவின் படி சச்சின் டெண்டுல்கருடன் களமிறக்கப்பட்டார். பிற்பாடு சச்சினும் கங்கூலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளும் அஞ்சும் ஒரு துவக்க ஜோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய உலக சாம்பியன் அணியான இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்களை விளாசி தன் முதல் சதத்தை எட்டினார். அதன் பிறகு அதே ஆண்டில் சகாரா கோப்பை கிரிக்கெட்டில் 4 ஒரு நாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் இந்திய அணியை தொடரை வெல்லச் செய்தார்.
இந்த தொடரில்தான் அவரது சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சு அமைந்தது. 10 ஓவர்களில் வெறும் 16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு சதங்களை அடித்தார். ஆனால் இவரது போராட்ட குணம் கிரிக்கெட் உலகிற்கு தெரிய வந்த போட்டி டாக்காவில் நடந்த சுதந்திரக் கோப்பை இறுதிப் போட்டியே. பாகிஸ்தான் நிர்ணயித்த 315 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியை தன் 124 ரன்கள் அதிரடி இன்னிங்சினால் வெற்றி பெற வைத்தார். 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை இந்தியா முதன் முதலாக துரத்தி வெற்றி பெற்றது அப்போதுதான். அதன் பிறகு சில 300 ரன்களை இந்தியா துரத்தும் போதும், இலக்காக நிர்ணயிக்கும்போது கங்கூலியின் பங்கு அபரிமிதமானது.
1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக 158 பந்துகளில் 17 பவுண்டரிகள் 7 சிக்சர் சகிதம் 183 ரன்களை விளாசினார் கங்கூலி. உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிக பட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாகும். ராகுல் திராவிடும் கங்கூலியும் இணைந்து குவித்த 318 ரன்கள் எந்த ஒரு விக்கெட்டிற்கு இடையேயும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒரு நாள் போட்டிகளில் அந்த சீசனில் மட்டும் 5 சதங்களை எடுத்து ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசையில் அவர் முதலிடத்தை பிடித்தார்.
பிறகு 272 ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார் கங்கூலி.


டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது பங்களிப்பு அவரது தலைமையின் கீழ் அபாரமாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தன் பேட்டிங்கிற்கு புதிய பரிமாணம் அளித்த கங்கூலி, அங்கிருந்து தொடங்கி, 2002 இங்கிலாந்து தொடரில் அபாரமான இரண்டு அரை சதங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்திய அணி டெஸ்ட் தொடரில் 0- 1 என்று பின் தங்கியிருந்தபோது லீட்சில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இவர் அடித்த 138 ரன்களும், சச்சினுடன் சேர்ந்து எடுத்த 200-க்கும் அதிகமான ரன்களும் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது.
பிறகு 2003 உலகக் கோப்பை போட்டிகளில் 3 சதங்களை அடித்தார். 2004ஆம் ஆண்டு புகழ் பெற்ற ஆஸ்ட்ரேலிய தொடரில் பிரிஸ்பேனில் அவர் அடித்த 144 ரன்கள் அணியின் உத்வேகத்தை அதிகரித்து. அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா தன் பேட்டிங்கின் மூலம் வறுத்து எடுத்தது நம் அனைவரின் நினைவையும் விட்டு அகலாதது.
ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்களையும் 72 அரைசதங்களையும் 41.02 என்ற சராசரியிலும், டெஸ்ட் போட்டிகளில் 113 டெஸ்ட் 7212 ரன்கள் சராசரி 42.17 என்றும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40திற்கும் மேற்பட்ட சராசரியை வைத்திருக்கும் உயர்வான நிலையில் அவர் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவரது பேட்டிங் திறன் மீது கடுமையாக விமர்சனம் வைத்த கிரேக் சாப்பல் முதல் தொடங்கி நம் பிஷன் சிங் பேடி வரையிலும், 2006 ஆம் ஆண்டு அணிக்கு மீண்டும் அவர் நுழைந்த பிறகு ஆடிய விதத்தில் நிச்சயம் குறைகாண இடமில்லை. இந்த காலக்கட்டத்தில் கங்கூலியின் சராசரி 60 ரன்களுக்கு அருகில் உள்ளது என்பதும், இதே காலக் கட்டத்தில் அணியின் மற்ற வீரர்களின் சராசரி இவருக்கு அருகில் இல்லை என்பதும் இவரது பேட்டிங் பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் கங்கூலி
சச்சின், கங்கூலி கனிட்கர் தவிர அனைவரும் கர்நாடகா வீரர்கள். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்று தோற்றது. உடனேயே தென் ஆப்பிரிக்க அணி இங்கு வந்தது, சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்டை தோற்றவுடன் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி வரை அணித் தலைமையில் நீடித்தார். அந்த டெஸ்டிலும் இந்தியா தோல்வி. தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா தோற்றது.
அடுத்தடுத்து தோல்விகள், 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியே, மொஹமது ஆசாருதீன், சலீம் மாலிக் பற்றி கிரிக்கெட் சூதாட்டப் புகாரை எழுப்பி, தான் அதில் சிக்கி சின்னா பின்னமானதையும் வெளியிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அணிச்சேர்க்கையும் பலமாக இல்லை. கிரிக்கெட் ஊழலில் சிக்கி இந்திய அணியின் பெயருக்கும் இழுக்கு ஏற்பட்டது. சச்சின் டெண்டுல்கர் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். கபில்தேவ் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்கள் தன்னம்பிக்கை இழந்து நின்றனர். இந்த ஒரு பெருங்குழப்ப நிலையில் கங்கூலி தலையில் இந்த பொறுப்பு சுமத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை அவர் கைப்பற்றினாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை நிலைகுலையச் செய்தன. சவால்களை சந்திக்கத் துணிந்தார் கங்கூலி.
புதிய பயிற்சியாளர் ஜான் ரைட் பொறுப்பேற்றார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் கென்யாவில் நடைபெற்றன. கங்கூலி தலைமையில் அதன் இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைந்தது. முதல் போட்டியிலேயே ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்தி கங்கூலி தன் தலைமைப் பொறுப்பு வருகையை உலகிற்கு அறிவித்தார். அந்தப் போட்டியில்தான் ஜாகிர் கானையும், யுவ்ராஜ் சிங்கையும் கங்கூலி அறிமுகம் செய்கிறார்.
அதன் பிறகே ஸ்டீவ் வாஹ் தலைமையில் புத்துணர்வு பெற்ற அதிரடி ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவிற்கு தன் 16 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றியுடன் வருகை தருகிறது.
தொடர்ச்சியான 17ஆவது டெஸ்டையும் ஸ்டீவ் வாஹ் தலமையின் கீழ் ஆஸ்ட்ரேலியா மும்பை வெற்றி மூலம் பெற்றது. கொல்கத்தாவில் துவங்கியது, அதாவது ஆஸ்ட்ரேலியாவிற்கு இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை துவங்கி வைத்தது கங்கூலிதான், அது கொல்கத்தா டெஸ்டிலிருந்து துவங்குகிறது. ஃபாலோ ஆன் ஆடினாலும், அடித்து ஆடுமாறு கூறிய கங்கூலியின் அணுகுமுறையால் லக்ஷ்மணும், திராவிடும் உலக சாதனை ரன் குவிப்பில் ஈடுபட்டு அதன் பிறகு சரியான நேரத்தில் டிக்ளேர் செய்து, ஹர்பனை வைத்து ஆஸ்ட்ரேலியாவின் தொடர் வெற்றி சாதனைக் கனவுகளை தகர்த்தவுடன் கங்கூலியைக் கண்டு உலக அணிகள் அஞ்சத் துவங்கின. பிறகு சென்னையில் வெற்றி. தொடரை ஆஸி. தோற்றதை இன்னமும் ஸ்டீவ் வாஹ் நம்பியிருக்க மாட்டார்.
அதன் பிறகு அயல் நாட்டுத் தொடர்கள் தொடங்கின. இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது, இதில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்றவர்களை வைத்து ஒரு டெஸ்ட் போட்டியை வென்றார் கங்கூலி இந்தியா முன்னிலை பெற்றது. அப்போது அதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.
அயல் நாட்டில் வெற்றிபெறும் ஒரு கேப்டன் கிடைத்து விட்டார் என்பதாகத்தான் அப்போது அந்த வெற்றி இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்திய அணி மாற்றத்தின் காலக்கட்டத்தில் இருந்ததால் அடுத்த டெஸ்ட்களை தோல்வியடைந்து 1- 2 என்று தோல்வி தழுவியது, ஆனால் சில நம்பிக்கைகள் பிறந்தன.
பிறகு 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டிகளில் இலங்கையுடன் கோப்பையை இந்தியா பகிர்ந்து கொண்டது கங்கூலியின் தலைமையின் கீழ்தான்.

பிறகு அந்த புகழ் பெற்ற இங்கிலாந்து தொடர். இதில்தான் விரேந்திர சேவாக் என்ற இணையற்ற வீரரை துவக்க வீரராக களமிறக்கி கங்கூலி இந்திய அணிக்கு புதிய திருப்பத்தை கொடுக்கிறார். அதன் பிறகே ராகுல் திராவிட் என்ற ஒன்றாம் நிலை ஆட்டக்காரர் தன் முழுத் திறமையுடன் ஆடியுள்ளார் என்பது புள்ளி விவரங்களைப் பார்ப்பவர்களுக்கு தெளிவாக புரியும்.
அந்த டெஸ்ட் தொடரை கங்கூலி டிரா செய்தார். அதுவும் இங்கிலாந்திற்கு அதன் சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி. அது மிகப்பெரிய தோல்வி. அந்த போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்தில் கங்கூலி பேட்டிங் செய்தபோது வெளிச்சம் இன்மை பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் கங்கூலி வெளிச்சம் போதும் விளையாடுவோம் என்றார். அடுத்த 8 ஓவர்களில் இவரும் சச்சினும் 85 ரன்களைக் குவித்தனர். கங்கூலி சதம் எடுத்தார். சச்சின் 193 ரன்களை எடுத்தார். மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி தழுவச்செய்தார்.
பிறகு அந்த புகழ் பெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு ஒரு நாள் தொடர். இறுதிப் போட்டியில் 325 ரன்கள் இலக்கு. இந்தியா 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு யுவ்ராஜ், கயீஃப் ஆடிய புகழ் பெற்ற அந்த அபார இன்னிங்ஸினால் 325 ரன்களை இந்தியா எடுத்து கோப்பையைக் கைப்பற்றியது
கங்கூலி இங்கிலாந்தின் விக்டோரியா ஒழுக்கத்தை தகர்த்தெறிந்து தன் சட்டையை கழற்றி வீசினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பிறகு கங்கூலி கூறினார், பிளின்டாஃப் இந்தியாவில் தொடரை டிரா செய்ததற்கே மரியாதையில்லாமல் மைதானத்தில் சட்டையைக் கழற்றினார், நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம், லார்ட்ஸ் மைதானமாக இருந்தால் என்ன சட்டையைக் கழற்றகூடாதா என்று காட்டமாக பதில் அளித்தார்.
இது மட்டுமல்ல, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து போன்ற வெள்ளைக்கார அணிகள் தொடருக்கு முன்பு எதிரணி வீரர்களை மனோபலமிழக்கச் செய்யும் விதமாக பேசி வந்தனர். அதற்கு பதிலடியாக கங்கூலி முதன் முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் எதிரணித் தலைவர்கள், அதன் முக்கிய வீரர்கள் பற்றி மனோ பலம் இழக்கச் செய்யும் கருத்துக்களை கூறத் துவங்கி புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தார். இதெல்லாம் ஆதிக்க வெள்ளை மனோபாவங்களிடம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஆம்! மெக்ராத் இல்லாமல் பிரட் லீ ஒன்றும் இல்லை. ஷேன் வார்ன் இல்லாமல் ஆஸ்ட்ரேலியா சப்பை, ஸ்டீவ் வாஹ் வெற்றியுடன் ஓய்வு பெற முடியாது. அவரது ஆசை நிறைவேறாது என்றெல்லாம் அவர் கூறினார். நாசர் ஹுஸ்ஸைனுக்கு எதிராகவும், ஃபிளின்டாஃபிற்கு எதிராகவும் இது போன்ற அதிர்ச்சிக் கூற்றுக்களை கூறியுள்ளார் கங்கூலி. கிரிக்கெட் மூலம் மட்டுமல்லாமல், வரிக்கு வரியும் அவர்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள முடியும் என்ற புதிய வழக்கத்தை அவர் அன்று உருவாக்கினார்.
அப்போது இந்திய அணி ஒரு மிகப்பெரிய அணியாக உருவாகும் அமைப்பில் இருந்தது. 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போது இந்திய அணி மீதும் கங்கூலி மீதும் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுடன் தோல்வியடைந்த போது இந்தியாவில் கங்கூலி வீடு உட்பட அனைவரது வீட்டிலும் கல் எறியப்பட்டது. அப்போதும் அவர் ரசிகர்களை வசை பாடாமல் அமைதி காக்குமாறு கோரினார். அதன் பிறகு ஒரே வெற்றி மயம், அதுவும் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வெற்றி பெற்ற விதம் அப்போதைய ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை அச்சப்பட வைத்தது. இறுதிப் போட்டிக்கு முன் அவர் கூறும்போது, இந்திய அணித் தலைவர் கங்கூலி தங்கள் அணியை சுலபத்தில் கோப்பையை கைப்பற்ற விடமாட்டார் என்றார்.
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் துவங்கிய தலைமைப் பொறுப்பு, பல்வேறு மாற்றங்கள், பரிசோதனைகளுக்கு பிறகு யுவ்ராஜ் சிங், கயீஃப், சேவாக், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா என்று இளம் உத்வேகங்களை அணிக்குள் புகுத்தி மூத்த வீரகளின் மனோபலத்தை தட்டி எழுப்பி பல மாற்றங்களை செய்து உலக அளவில் பேசக்கூடிய ஒரு தலைமையாக, வழிகாட்டியாக உருமாறியது.
அதன் பிறகு 2004 ஆஸ்ட்ரேலிய பயணம், 2001 தோல்விக்கு பழி தீர்க்க காத்திருந்த ஸ்டீவ் வாஹிற்கு தன் தலைமைப் பொறுப்பின் மூலம் பாடம் கற்பித்தார்.
தொடரை ஏறக்குறைய வென்று ஸ்டீவ்வாகின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு பெருமை பெற்றுச் செல்லாமல் தடுத்தார். இதனால் கங்கூலி எப்போதுமே ஆஸ்ட்ரேலியர்கள் வெறுக்கும் ஒரு அணித் தலைவராகவே மாறியிருந்தார்.
அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்ட்ரேலிய தொடருக்கு பிறகு பாகிஸ்தானில் முதன் முறையாக அந்த அணியை 2- 0 என்று வெற்றி பெற்று அதுவரை இந்தியா பாகிஸ்தானில் செய்ய முடியாததை சாதித்துக் காட்டினார்.
49 டெஸ்ட்களில் 21 வெற்றிகளை பெற்று, அயல் நாடுகளில் இந்தியா இனி சோடை போகாது என்பதை கங்கூலி-ஜான் ரைட் கூட்டணி உறுதி செய்தது. ஒரு நாள் போட்டிகளிலும் 146 போட்டிகளில் 76 போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ளார் கங்கூலி.
இந்தியாவின் ஈடு இணையற்ற ஒரு வீரர், அணித் தலைவர், வழிகாட்டியாக திகழ்ந்தார் கங்கூலி.
நாக்பூர் டெஸ்ட் போட்டியின் இறுதி கட்டங்களில் அணித் தலைவர் தோனி, கங்கூலியை அழைத்து அவரது கையில் பந்தைக் கொடுத்து தலைமைப் பொறுப்பை அவரிடம் அளிக்கச் செய்தது கங்கூலிக்கு மட்டுமல்லாது, அணி இன்று அடைந்துள்ள இந்த உயர்ந்த நிலைக்கு அடித்தளமிட்ட சிறந்த வழிகாட்டி என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்த மாபெரும் கௌரவமாகக் கருதலாம்.
ஆனால் இந்திய கிரிக்கெட்டின் அணுகுமுறையிலும், வீரர்கள் மனோ நிலையிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கும் (அதன் தற்போதைய செல்வ வளர்ச்சிக்கும்!) இந்திய கிரிக்கெட் அணி உலக அரங்கில் இன்று மதிக்கப்படுவதற்கான காரணமாக திகழ்ந்தவருமான சௌரவ் சண்டிதாஸ் கங்கூலியை கடைசி ஒரு 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் மிக மோசமானது. அவருக்கு கிடைத்தைவிட பன் மடங்கு மரியாதைக்கும் மதிப்பிற்கும் தகுதியானவர்தான் கங்கூலி என்பதை நாம் மறுக்க முடியாது.


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரை மறைக்கவும் முடியாது.
கங்குலி - இந்திய கிரிக்கெட்டின் கபாலி

‘தாதா’ – இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர். இந்திய கிரிக்கெட்டிற்கு முகவரி அளித்த பெயர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் பெயர். சினிமா ரசிகனை ஆட்டுவிக்க பாட்ஷா, கபாலி என்று எத்தனையோ தாதாக்கள் இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் ரசிகன் உச்சிமுகரும் ஒரேயொரு தாதா – சவுரவ் கங்குலி. ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என இவரைக் கொண்டாடிய ரசிகர்களெல்லாம் இன்னும் இவரது ரசிகர்கள் தான். இவரது ஓய்வுக்குப் பிறகு தோனியின் பின்னாலோ, கோலியின் பின்னாலோ அவர்கள் செல்லவில்லை. தாதாவின் கிரிக்கெட் வர்ணனையை கேட்க, அவரது ஆளுமையை ஏன் அவரது பேட்டிகளைக் கூட இன்னுமும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் கங்குலி வெறியர்கள். ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் அடித்த சிக்ஸரை பார்த்த பலரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கடவுள் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர். ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று 46வது பிறந்தநாள் கொண்டாடும் தாதாவை ஏன் ரசிகர்கள் இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள். தாதாவை இந்திய கிரிக்கெட் ரசிகனால் மிஸ் செய்ய முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது அவற்றில் சில இதோ...
அசத்தல் அறிமுகம்:
கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை அறிவித்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.
களம் தாண்டிய பந்துகள்
இன்று கெயிலோ, வார்னரோ 100 மீட்டருக்கு சிக்சர் அடித்தாலே வாய்பிளக்கும் நாம், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்திருந்தால்?! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை சச்சினும் கங்குலியுமே ரவுண்டு கட்டி அடித்தனர். அதிலும் கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில் மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார். ஒவ்வொரு முறையும் பந்து ஸ்டாண்டுகளைத் தாண்டிப் பறந்த போது ரசிகர்கள் மிரண்டே போயினர். கெயில் போன்று பலம் கொடுக்காமல், வெறும் கிளாசிக்கல் ஷாட்களால் சிக்சர் அடிக்கும் கங்குலியின் ஸ்டைலைக் காணக் கண் கோடி வேண்டும். அதாவது பரவாயில்லை 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார். பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை.கங்குலி ஆடியது இன்று உள்ளது போல் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல...பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்...
அவுட்ஸ்டேண்டிங் ஆல் ரவுன்டர்
கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் பெங்கால் டைகர் தான். எதிரணியை கடித்துக் குதறிவிடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய தாதா அந்த 4 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டும் 205 ரன்களும் எடுத்து அல்ரவுண்டராக ஜொலித்து, அந்தத் தொடரைத் தனக்கான இரையாக்கினார். இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

கேப்டன் அல்ல லீடர்

கேப்டன் – ஒரு அணியை வழிநடத்துபவர். ஆனால் கங்குலியோ இந்திய அணியை வடிவமைத்தவர். சூதாட்டப் புகாரால் சின்னா பின்னமான அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தார் தாதா. அதுவரை இந்தியாவிற்கு என்று இருந்த முகத்தை மாற்றினார். மற்ற அணிகளெல்லாம் பார்த்துச் சிரித்த இந்திய அணியை ஆங்க்ரி பேர்டு மோடுக்கு மாற்றினார் தாதா. அதில் தானே முன்மாதிரியாகவும் விளங்கினார். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவு அணியை சிறப்பாக்கினார் தாதா. அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர் கங்குலி. சேவாக், யுவி, ஜாகிர், பாஜி என அந்தப்படை நீண்டு கொண்டே போகும். மிடில் ஆர்டரில் தவித்த சேவாக்கின் திறமையறிந்து, தனது ஓப்பனிங் ஸ்லாட்டையே அவருக்காக விட்டுக்கொடுத்தார் தாதா. அதுதான் தாதா. அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர். எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. வெற்றிகளை கூலாக அணுகும் தோனிக்கும், மைதானத்தில் ஆக்ரோஷம் காட்டும் கோலிக்கும் இன்ஸ்ப்ரேஷன் தாதா தான்.
ஆஸியை ஸ்விட்ச் ஆஃப் செய்தவர்:
அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்லெட்ஜிங்கால் எதிரணியை மனதளவில் தாக்கி வந்த ஆஸி வீரர்களையும், அவர்கள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையுமே கலங்கடித்தவர் தாதா. 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. மேலும் அத்தொடரில் டாஸ் போடுவதற்கு லேட்டாக வந்து பிறரை எரிச்சலூட்டும் ஸ்டீவ் வாக்கையே எரிச்சலூட்டினார் தாதா. அப்போதுதான் வெற்றியாலும் தலைகனத்தாலும் பறந்து கொண்டிருந்த ஆஸி அணி தரை தொட்டது. 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா.
மெக்காவை மெரசலாக்கியவர்
தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பை தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருனம். பிளின்டாப் வான்கடே மைதானத்தில் செய்ததற்காகத் தான் இப்படிச் செய்ததாக தாதா விளக்கம் கூறியிருப்பார். அதற்கு இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி செய்யலாமா?” என்று கேட்டிருப்பார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா” என்று கவுன்டர் சொன்னதெல்லாம் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல்.

உலக நாயகன்!
எத்தனையோ வீரர்கள், பிற போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு உலகக்கோப்பை போன்ற மிகமுக்கிய தொடர்களில் சொதப்புவார்கள். ஆனால் தாதாவோ வோர்ல்டு கப் என்ற பிரஷெரை ஃபீல் செய்ததே இல்லை. இதுவரை 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தாதா 1006 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரியோ 50க்கும் மேல். அதுமட்டுமின்றி 4 சதங்களும் அடித்துள்ள தாதா தான் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் (183), ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்தவர் (3) என்ற சாதனைகளையெல்லாம் தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தான் கேப்டனான போது தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த அணியை 2003 உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்துச் சென்றவர் இந்த கொல்கத்தா பிரின்ஸ்.
நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்
“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடவெல்லாம் லாயக்கற்றவர். கேப்டன் பதவியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பலரும் தாதாவின் டெஸ்ட் பேட்டிங்கை தூற்றினார்கள். சிங்கத்தின் பிடரியைப் பிடித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? எதுக்குமே கவுண்டர் கொடுத்து பழகிய தாதா இதற்கும் பதில் சொல்லக் காத்திருந்தார். அவரிடம் அடிபட பாகிஸ்தானும் அணியும் காத்திருக்க , அவர்களை வேட்டியாடியது வங்க சிங்கம். யுவியோடு இணைந்து 300 ரன்கள் குவித்த தாதா, அந்த இன்னிங்சில் 239 ரன்கள் குவித்து, தன்னை சந்தேகித்தவர்களிடம் திரும்ப வந்துருக்கேன்னு போய் சொல்லு என்று தன்னை நிரூபித்தார். அவ்வாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் கங்குலி தான் இரண்டாம் இடத்தில். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், அவரது சராசரி 40க்குக் குறைந்ததில்லை என்று சொல்லும்போதே அவரது திறமை நமக்குத் தெரிய வேண்டும்.
கண்கள் கலங்கிய கடைசி தருணம்
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். ஒரு அணியை உருவாக்கி அழகாக்கிய அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனது தான் சோகம். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!
நோ கங்குலி நோ கிரிக்கெட்
கொல்கத்தா – கங்குலியின் கோட்டை. மும்பையில் சச்சினுக்கு இருக்கும் ஆதரவை விட கங்குலிக்கு இங்கு இரண்டு மடங்கு ஆதரவு. 2011 ஐ.பி.எல் ஏலத்தில் கங்குலியை புறக்கணித்த கே.கே.ஆர் அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஆதரவளிக்க மறுத்தனர். தங்களிம் சொந்த ஊர் அணியாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் நாயகனுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என் நினைத்தார்கள். ‘NO DADA NO KKR’ என்ற கோஷத்தோடு தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் போட்டிகளை புறக்கணிக்க, கங்குலியின் செல்வாக்கை உலகறிந்தது. ஒருமுறை ரவி சாஸ்திரி விளையாட்டாக கங்குலியிடம், “மைதானத்தின் ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் வைக்கப்படவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?” என்று கேட்க “அந்த மைதானமே என்னுடையது” என்று கொக்கரித்தவர் தாதா. அது உண்மைதான். கொல்கத்தா ஒருகாலத்தில் எப்படி சுபாஷின் கோட்டையாக விளங்கியதோ அப்படி இப்போது இவரின் கோட்டையாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட்டார் கங்குலி மொத்த மைதானமும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவளித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்தது. இவர்கள் தாதா ரசிகர்கள் அல்ல தாதா வெறியர்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினுக்கு கூட இப்படி டை ஹார்டு ரசிகர்கள் இல்லை.
தாதா – இந்திய கிரிக்கெட்டின் கபாலி
இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. கிரிக்கெட்டே கங்குலியை ஒதுக்க நினைத்தாலும், தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை ஒதுக்கிவிட முடியாது. அதனால் தான் இப்பொழுதும் ஐ.பி,எல் குழுவிலும், பி.சி.சி.ஐ ஆட்சி மன்றக் குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்.
தைரியத்தின் மறுபெயர்
புலியைப் பற்றிக் கூறும்போது அதன் வரியைப் பற்றிக் கூறாமல் விட்டால் எப்படி? தாதா – தைரியத்தின் மறுபெயர். எதற்காகவும் எப்பொழுதும் அஞ்சாதவர். உடனுக்குடன் எதையும் எதிர்க்கும் மனதைரியம் கொண்டவர். அதனால் தான் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு அணியை அவரால் மீட்டெடுக்க முடிந்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட தகராறாகட்டும், லார்ட்ஸ் நிகழ்வாகட்டும் அங்கு தாதாவின் சீற்றம் குறைந்ததில்லை. தாதாவின் சொற்கலெல்லாம் அவரது ஆஃப் சைடு கவர் டிரைவ் போலத்தான் அவ்வளவு நேர்த்தியானவை. அதற்கு எடுத்துக்காட்டாக போன வாரம் நடந்த இந்தியப் பயிற்சியாளர் தேர்வு சம்பவம். கங்குலி நேர்கானலில் பங்குபெறவில்லை என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்ட, கூலாக பாங்காக்கில் விடுமுறை கழித்தவர் என்று ரவியை ஆஃப் செய்துவிட்டார்.
இன்றைக்கு அவரது ஆளுமைகளை ரசித்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் மீண்டும் கங்குலி மட்டையோடு மைதானத்தில் நுழைந்து பந்தை மைதானத்துக்கு வெளியே விரட்ட மாட்டாரா என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து ஒரு பந்தை வீசிப்பாருங்கள். ஆஃப் சைடில் ப்ந்து பவுண்டரிக்கு செல்லும். ஒருசமயம் தாதா கூறிய வார்த்தை “ எனது சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்சனை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் மட்டுமல்ல தாதா நாங்களும் தான்! ஹேப்பி பர்த்டே டு தி காட்ஃபாதர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்!- மு.பிரதீப் கிருஷ்ணா.
நன்றி விகடன்.


இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தா இளவரசர் ‘தாதா’ கங்குலிக்கு பிறந்தநாள்...

‘பெங்கால் டைகர்' என்ற செல்லப்பெயரோடும் கொல்கத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சௌரவ் கங்குலியின் 43வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டுவிட்டரில்
#HappyBirthdayDada என்ற ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் கங்குலியின் ரசிகர்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சௌவுரவ் சந்திதாஸ் கங்குலி . ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார்.

Read more about: sourav ganguly happy birthday cricket பிறந்தநாள்

கிரிக்கெட் பயணம்
தொண்ணூறுகளில் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. மைதானத்தின் ஓரத்தில் அமைதியாய், நின்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு விசயம் கங்குலியை கவனிக்கத் தக்கவராய் மாற்றியது. அந்த அலட்சியமான தலை அலங்காரம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையுமாய் மைதானத்தில் வலம் வந்த கங்குலி மீது முதலில் ஒரு பேட் பாய் லுக்தான் இருந்தது. அதுவே பின்னர் குட்பாய் லுக்கிற்கு உயர்த்தியது.
கேப்டன் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் காலம் முடிந்துவிட்டது. இந்திய அணியை முன்னணி வீரர்களால் கூட வழிநடத்த முடியவில்லை என்ற நிலையில், கேப்டனாக்கப்பட்டார் கங்குலி. இந்திய அணி என்றால், அந்நிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் நாட்டிலேயே வென்று இந்திய அணியில் அயல்நாட்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கங்குலி.
கொல்கத்தா இளவரசர்
இரண்டாயிரமாவது ஆண்டுகளில் கேப்டன் கங்குலியின் வெற்றி இன்னிங்ஸ் தொடங்கியது. அவரது அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது. தொடர் வெற்றிகளால் சாதனை படைத்த கங்குலியை கொல்கத்தா இளவரசர் என்று இளசுகள் கொண்டாடினர்.
சும்மா டி சர்ட்டை கழற்றி...
கேப்டன் ஆனவுடன் பொறுப்பும் கூடியது. ஆனால் முனுக் என்ற கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். லண்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்தை வெற்றி பெற்று டி சர்ட்டை கழற்றி சுற்றிய வேகத்தில் கங்குலியின் கம்பீரம் வெளிப்பட்டது. ஊடகங்களில் சில நாட்களுக்கு இது பற்றிய பேச்சுதான். இந்த மைதானத்தில் தான் கங்குலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார்.
என்னா தைரியம்
எத்தனை பேர் வரலாம் யாரை வேண்டுமானாலும் கடவுளாக கொண்டாடலாம். ஆனால் அவங்க ஊர்ல போய் சட்டையை கழற்றி சுத்துற தைரியம் யாருக்கு வரும்? என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.
என்னா தத்துவம்
"உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' என்று அவ்வப்போது தத்துவமாக பேசி அசத்துவார் கங்குலி.
உலகின் மிகச்சிறந்த கேப்டன்
இந்திய அணியை 20 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே உலக அரங்கில் மாற்றினார் பெங்கால் டைகர் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் கங்குலியின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
சச்சின் வாழ்த்து
கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் அவருடன் பல ஆண்டுகள் பயணித்த சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்க இப்பவும் எப்பவும் இளமைதான் தாதா என்று கங்குலியின் பிறந்தநாளுக்காக வாழ்த்து கூறியுள்ளார். நன்றி ஒன் இந்தியா தமி்ழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக