ஞாயிறு, 8 ஜூலை, 2018

நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை..



நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை..

அன்பின் கோலாகலம்... நண்பர்கள் தினம்..!
ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன?
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.
நண்பர்கள் தின வரலாறு..!
இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..!
சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..?
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும் வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..?
அதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்... இதையும் நாம் மறக்கமுடியுமா..? அதேப்போல், ''நட்பு'' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்... இதையும் நாம் மறக்கமுடியுமா...?
நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை..!
நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம். நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர். அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


நண்பர்கள் தினம்: இந்த வாழ்த்துகளை அனுப்பி உங்கள் நண்பர்களை மகிழ்வியுங்கள்...

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை இன்று நண்பர்கள் தினம். வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். நண்பர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்தான். அப்படியான நம் நண்பர்களுக்கு ‘நண்பர்கள் தினம்’ அன்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, நிலைத்தகவல்களாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை இங்கு காண்போம்.

1. பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். பணம் தேய்ந்துகொண்டே செல்லும். ஆனால், நண்பர்கள் நம்மை ஊக்கப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருப்பர்.
2. உனக்கு அறிவுரை வேண்டும் என்றால், எனக்கு குறுஞ்செய்தி அனுப்பு. உனக்கு நண்பன் வேண்டும் என்றால் என்னை தொடர்புகொள். உனக்கு நான் தேவைப்பட்டால் வந்து என்னை சந்தி. உனக்கு பணம் வேண்டும் என்றால் மட்டும், ”நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்.”. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
3. கடவுள் மிக அற்புத்மானவர். அதனால்தான், அவர் நண்பர்களுக்கு விலைப்பட்டியலுடன் அனுப்பவில்லை. அவ்வாறு செய்திருந்தால், நான் உன்னை பெற்றிருக்க முடியாது. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
4. நண்பர்கள் மாம்பழங்களை போன்றவர்கள். யார் இனிப்பார், யார் இனிக்கமாட்டார் என்பது தெரியாது. ஆனால், நான் அதிர்ஷ்டம் நிறைந்தவர். நான் உன்னிடம் மிக இனிப்பான மாம்பழங்களை கண்டிருக்கிறேன்.
5. நட்பு என்பது விளையாடுவதற்கான விளையாட்டு அல்ல,
சொல்வதற்கான வார்த்தை அல்ல,
மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் நட்பு முடியாது,
நட்பு நாளை, நேற்று, இன்று, எப்பொழுதும்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
6. நட்பு என்பது கம்ப்யூட்டர் போன்றது;
நான் உன் வாழ்க்கையில் ‘எண்டர்’ ஆனேன்,
என் இதயத்தில் உன்னை ‘சேவ்’ செய்தேன்,
உன் பிரச்சனைகளை ‘ஃபார்மட்’ செய்தேன்,
& என்னுடைய ‘மெமரியிலிருந்து’ உன்னை எப்பொழுதும்
‘டெலீட்’ செய்ய மாட்டேன்!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
7. எல்லோராலும் இனிமையான வார்த்தைகளை பேச முடியும்,
எல்லோராலும் இனிப்பான சாக்லேட்டுகளை வாங்க முடியும்,
எல்லோராலும் அருமையான ரோஜாப்பூவின் வாசனையை உணர முடியும்,
ஆனால், உன்னைப்போல அருமையான நபர் எல்லோருக்கும் நண்பராக முடியாது.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அன்பே.


நண்பர்கள் தினம்: அறிஞர்கள் சொல்லும் பொன்மொழிகள்...
#Friendship day
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் ஆகும். நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.
நண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.
நண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்
"பனைமரம்" தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
"தென்னைமரம்" தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
"வாழைமரம்" தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். -
கவிஞர்.கண்ணதாசன்


ஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் - எமர்சன்
புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் - புல்லர்
நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் - வில்லியம் ஜேம்ஸ்
நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது - பிரான்சிஸ் பேகன்
நல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது - காந்தியடிகள்
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் - தோமஸ்.ஏ பெக்கட்
பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் - பீட்டர் வெல்ஸ்
வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் - இங்கர்சால்
நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே - ஜெசி
எல்லா நட்புகளுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.


இன்று பிரண்ட்ஷிப் டே 'நண்பேன்டா'..

இன்று நண்பர்கள் தினம்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் நண்பர்களின் கையில் பட்டை அணிவித்து வாழ்த்து அட்டைகளுடன் பரிசு பொருட்களை கொடுத்து நட்பை பரிமாறிக் கொள்வது ‘பிரண்ட்ஷிப் டே’ இலக்கணமாக இருக்கிறது.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன். நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.


உலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை. நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.
1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக