சனி, 29 பிப்ரவரி, 2020

மார்ச் 01 வரலாற்றில் இன்று

மார்ச் 01 வரலாற்றில்  இன்று

இன்று பத்திரிக்கை உலக ஜாம்பவான்... பிறந்த தினம் !

இன்றைய பொன்மொழி
'விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு... அனைத்தையும் சாதிக்கலாம்..!"ஏ.என்.சிவராமன்



📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார்.

📰 இவர் கல்லூரியில் படிக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

📰 காந்திஜியின் 'ஹரிஜன்" இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1934ஆம் ஆண்டு 'தினமணி" இதழ் தொடங்கப்பட்டபோது, இவர் உதவி ஆசிரியராக பணியாற்றினர்.

📰 கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.

📰 பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.

📰 தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், 'ஏஎன்எஸ்" என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 2001ஆம் ஆண்டு மறைந்தார்.எம்.கே.தியாகராஜ பாகவதர்



🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்.

🎼 இவர் தன்னுடைய 16வது வயதில் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. 'தியாகராஜன் ஒரு பாகவதர்" என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

🎼 திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார். அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

🎼 1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, 3 தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

🎼 தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற, உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
★ 1873ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதன்முதலில் நடைமுறை தட்டச்சுப் பொறியை ஈ.ரெமிங்டன் சகோதரர்கள் நியூயார்க்கில் தயாரித்தனர்.🌀 1912ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக