வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பிப்ரவரி 22 வரலாற்று நிகழ்வுகள்

பிப்ரவரி 22 வரலாற்று நிகழ்வுகள்

இவர்தான் சாரணியத்தின் தந்தை... யார் இவர்?
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒரு வகை வெற்றி தான்...பேடன் பவல்


👮 தன்னலமற்ற மனிதநேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.

👮 இவர் 1907ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். முதலில் சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. பிறகு தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

👮 உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளை விரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி சிறப்பித்தது.

👮 சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1941ஆம் ஆண்டு மறைந்தார்.தில்லையாடி வள்ளியம்மை


🌹 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.

🌹 இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

🌹 'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

🌹 பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.ஜார்ஜ் வாஷிங்டன்


🌎 அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

🌎 இவர் 1753ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775ஆம் ஆண்டு அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌎 1783ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. இவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் 1789ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

🌎 அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாக கருதப்படும் பெருமைக்குரிய இவர் 1799ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக