செவ்வாய், 13 டிசம்பர், 2016

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் நினைவு தினம் டிசம்பர் 14 ,

விடுதலைப் புலிகளின்
தத்துவாசிரியர் அன்டன்
பாலசிங்கம் நினைவு தினம் டிசம்பர் 14 ,

அன்ரன் பாலசிங்கம் ( அன்டன்
பாலசிங்கம் மார்ச் 4, 1938 - டிசம்பர் 14 ,
2006 ) விடுதலைப் புலிகளின்
தத்துவாசிரியராக  அறியப்பட்டவர். இவர்
இங்கிலாந்து குடியுரிமைமைக்
கொண்ட இலங்கைத்
தமிழராவார். இலங்கை அரசுடன்
நடத்தப்பட்ட பெரும்பாலான
பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல்
பெப்ரவரி 22 -23 இல்
ஜெனிவாவில் நடைபெற்ற,
ஜெனிவா முதல் சுற்றுப்
பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின்
குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார்.
இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க்
பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம்
பெற்ற இவருக்கு வேறு பல கல்வி
நிலையங்களும் கௌரவ பட்டங்களை
அளித்துள்ளன.
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை
ஆரம்பக்காலத்தில் இலங்கையின்
வீரகேசரியின் பத்திரிகையாளராக
பணியாற்றிய பாலசிங்கம் பின்னர்
கொழும்பின் பிரித்தானிய
தூதரகத்தில் மொழி
பெயர்ப்பாளராகவும்
கடமையாற்றினார்.  இங்கு
பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள்
கடமையாற்றியதனால் இங்கிலாந்து
குடியுரிமை பெற்றார்.
மணவாழ்க்கை
அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை
இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த
பின் காதல் திருமணம்
செய்துக்கொண்டார்.
விடுதலைப்புலிகளுடன்
தொடர்பு
1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில்
இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை
குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத்
தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன்
தொடர்புக் கொண்டதன்
மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள்
அமைப்புடன் தொடர்புகள்
ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம்
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த
தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை
நடத்தும் போது பிரபாகரனுடனான
தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983 ,
கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில்
இருந்து வெளியேறிய பாலசிங்கம்
தம்பதியினர் இந்தியாவுக்கு குடிப்
பெயர்ந்தனர்.
1985 , திம்பு பேச்சுவார்த்தையில்
பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக
செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை
காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில்
பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின்
தலைமை பேச்சுவார்த்தையாளராகவும்
அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த
அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய
நண்பராகவும் மாறினார்.
ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும்
விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர்
வேலுப்பிள்ளை பிரபாகரனுடன்
அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில
தடவையே நடைபெறும் பத்திரிகையாளர்
மகாநாட்டில் கலந்து கொண்டு
மொழி பெயர்ப்பு
உதவிகளையும் செய்தார்.
உடல் நிலை பாதிப்பு
2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக
இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப்
போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை
செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு
கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த
மருந்துகளின் பக்க விளைவாக, 2006
நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை,
எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய
அவயவங்கள் எங்கும் புற்று நோய்
பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள்
உறுதி செய்தனர்.
மறைவு
தொடர்ச்சியாக வைத்திய
பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி
அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006
அன்று தனது 68வது வயதில் லண்டனில்
காலமானார்.
தேசத்தின் குரல் விருது
மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு
"தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரன் அறிவித்தார் .
அன்ரன்
பாலசிங்கத்தின்
மிதவாத போக்கு
அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சிய
வாதியாக இருந்தவர். பின்னர் அதில்
இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த்
தேசியத்தை வரையறை செய்பவர்களில்
ஒருவரானார். தமிழீழ விடுதலைப்
புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு,
ஆங்கில மொழி அறிவு, மிதவாதத்
தன்மை . வெளிஉலக பார்வைத்
தொடர்பு, நகைச்சுவை உணர்வு
ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக
முக்கியத் தலைவராக விளங்கினார்.
முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த
ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள்
இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில்
சுட்டிக் காட்டியுள்ளனர் . இறுதி வரைக்கும்
ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப்
போராளியாக தமிழீழ விடுதலைப்
புலிகளுக்குள் இருந்து
செயலாற்றியதும் இவரின் மிதவாத
போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.
இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி,
விடுதலைப் புலிகளை பேச்சுக்கு
கொண்டு வருவதில் முக்கியப்
பங்காற்றி வந்ததோடு 2002 இல்
கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்துக்கு பாலசிங்கம் உழைப்பு
முக்கியமானதாகும். புலிகள்
இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள
தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல்
தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த
முக்கியத் தலைவராவார்
இவரது நூல்கள்
Balasingham, Anton. (2004) 'War and Peace
- Armed Struggle and Peace Efforts of
Liberation Tigers', Fairmax Publishing Ltd,
ISBN 1-903679-05-2
போரும் சமாதானமும்
விடுதலை - நூலகம் திட்டத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக