திங்கள், 26 டிசம்பர், 2016

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பிறந்த நாள் டிசம்பர் 27 .


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள் டிசம்பர் 27 .

 நாஞ்சில்நாடன் (பிறப்பு: திசம்பர் 27 , 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

பெருமைகளும் விருதுகளும்

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது.

படைப்புகள்
புதினங்கள்

1977 தலைகீழ் விகிதங்கள்
1979 என்பிலதனை வெயில்காயும்
1981 மாமிசப்படைப்பு
1986 மிதவை
1993 சதுரங்க குதிரை
1998 எட்டுத் திக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்[தொகு]
1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
1985 வாக்குப்பொறுக்கிகள்
1990 உப்பு
1994 பேய்க்கொட்டு
2002 பிராந்து
2004 நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க
முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
கான் சாகிப்
கொங்குதேர் வாழ்க்கை
கவிதை[தொகு]
2001 மண்ணுள்ளிப் பாம்பு
பச்சை நாயகி
வழுக்குப்பாறை
கட்டுரைகள்[தொகு]
2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
தீதும் நன்றும்
திகம்பரம்.
காவலன் காவான் எனின்
அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
அகம் சுருக்கேல்
எப்படிப் பாடுவேனோ?
2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)

கருத்துக்கள்

இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக