புதன், 28 பிப்ரவரி, 2018

ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர் பிறந்த நாள் மார்ச் 01.


ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர் பிறந்த நாள் மார்ச் 01.

எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் ( மார்ச் 1 , 1910 - நவம்பர் 1 , 1959 ) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு
பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான
ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1 , 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார் . தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை   என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.
வாழ்க்கைச் சுருக்கம்
தியாகராஜன் இந்தியாவின்
தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல நடித்த கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்துடன்
திருச்சிக்குச் சென்று உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலத்திற்கு நகைவேலை செய்தார். தியாகராஜனுக்கு கோவிந்தராஜன் என்னும் தம்பியும் தங்கையும் இருந்தனர்.
சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
எப். ஜி. நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
கர்நாடக இசையில் தேர்ச்சி
தியாகராஜர், பிடில் வித்வான் பொன்னுவய்யங்கார், திருவையாறு ராமசாமி பத்தர் ஆகியோரிடம் இசைபயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
நாடக நடிகராக
1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

திரைப்படத்தில் அறிமுகம்

1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது),
சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937),
திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941),
சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன.
லட்சுமிகாந்தன் கொலை
முதன்மை கட்டுரை: லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
இலட்சுமிகாந்தன் என்பவர் "சினிமா தூது" என்ற ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர் சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது. அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.
1944 நவம்பர் 9ம் நாள் சென்னையில் இலட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும்,
என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
மீண்டும் நடிப்பில்
சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
நடிப்பு மற்றும் சங்கீதம்
பாட்டு
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்[1] , இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
உன்னை அல்லால் ,
நீலகண்டா ,
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்) ,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன் ,
ஞானக்கண் இருந்திடும் போதினிலே ,
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
மன்மத லீலையை வென்றார் உண்டோ ,
தீன கருணாகரனே நடராஜா
ராஜன் மஹராஜன்
வதனமே சந்திரபிம்பமோ
போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 4 1/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசைக்கு சான்றாக
தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில்  இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார் . மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.
அரிதாஸ் படத்தில் வரும் பாடலான
மன்மதலீலை  என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா)) இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர்
சுப்புடு  "சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர . அனைவருக்கும் புரியும்படி பாடினார்.

நடிப்பு

அன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் [1] . ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்  என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.
அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.
தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி , முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம்
சிவகாமி

மறைவு

சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார்  . சிந்தாமணியில் பாடிய
“ ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ ”
என்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.
இறுதியில் நவம்பர் 1 , 1959 , சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

1. பவளக்கொடி (1934)
2. நவீன சாரங்கதாரா (1935)
3. சத்தியசீலன் (1936)
4. சிந்தாமணி (1937)
5. அம்பிகாபதி (1937)
6. திருநீலகண்டர் (1939)
7. அசோக்குமார் (1941)
8. சிவகவி (1943)
9. ஹரிதாஸ் (1944)
10. ராஜ முக்தி (1948)
11. அமரகவி (1952)
12. சியாமளா (1952)
13. புது வாழ்வு (1957)
14. சிவகாமி (1959)
இவரைப் பற்றிய நூல்கள்
எம். கே. டி. பாகவதர் கதை - விந்தன்
பாகவதர் வரலாறு - மாலதி பாலன்.



எம்.கே.டி. என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910) மாயவரத்தில் விஸ்வகர்மா குடும்பத்தில் கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் (உயர் நட்சத்திர) அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்னாடக சங்கீத தமிழ்ப் பாடகரும் ஆவார். இவருடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே.கோவிந்தராஜ பாகவதர், கர்னாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம்.
1934ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி. சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் ஆறு படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக வலம்வந்தவை. 1944இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் மூன்று வருடங்கள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியப் படம் என்கிற சாதனை படைத்தது.
எம்.கே.டியின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப் பற்றுடனும், தென்னிந்தியப் பாரம்பர்ய இசையைச் சார்ந்ததாகவும் இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்குப் பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றிய பல பாடல்கள் எம்.கே.டியின் புகழை உயர்த்தின. மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றுள் ஞானக்கண் இருந்திடும் போதினிலே, மன்மத லீலையை வென்றார் உண்டோ ஆகியவை மிகவும் குறிப்பிடத் தகுந்தவை.
குரலின் மாயம்
எம்.கே.டி. நாலரை கட்டை சுருதியில் பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும். சுருதியின் உச்ச நிலையிலிருந்து உடனே கீழே இறங்கிப் பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லின மெய் தெரியாமல் பாடக்கூடியவர். அவரின் கர்நாடக இசை சாதகத்துக்குச் சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வைக் கூறுவர்.
தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும்போது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான நேரச் சங்கொலி (மாவு மில் சங்கு) முழங்கியது. அந்த இடையூறைப் பொருட்படுத்தாமல் (பாடுவதை நிறுத்தாமல்), அந்தச் சங்கொலிக்கு நிகராகத் தன் குரலை இழுத்து (மூச்சுப் பிடித்து) அது முடியும்வரை பாடினாராம்.
ஹரிதாஸ் படத்தில் வரும் மன்மதலீலை என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பர்ய ராகத்தில் பாடப்பட்டது. அந்தப் பாடலுக்குப் பிறகே பிற கர்னாடக இசை வித்துவான்கள் சாருகேசி இசையைக் கச்சேரியில் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்னாடக இசை விமர்சகர் சுப்புடு கூறுகையில், “சாருகேசியைப் பிரபலமாக அறிமுகப்படுத்தியவர் தியாகராஜ பாகவதர் என்றால் அது மிகையாகாது” என்று வர்ணிக்கின்றார்.
எம்.கே.டியின் இசையைச் செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தனர். அனைவருக்கும் புரியும்படி எளிய தமிழில் தெளிவாகப் பாடியவர் அவர்.
எம்.கே.டியின் காலத்தில் நாடக மோகம் அதிகமிருந்ததால், திரைப்படத்துக்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் பாரம்பர்ய இசைக் கலைகளைத் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். எம்.கே.டியும் அவ்வாறு தேர்ச்சி பெற்றவர். அவரின் இசைப் புலமையால், அவரை வைத்துப் படமெடுக்கப் பல செல்வந்தர்கள் முன்வந்தனர்.
மதுரை செல்வந்தர் ஒருவர் மதுரை டாக்கீஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். பாகவதர் நடிப்பில் அந்நிறுவனம் எடுத்த சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகிறது.
பாகவதர் தலைமுடி, பாகவதர் சிகையலங்காரம் என்று அன்று அனைவராலும் வியந்து போற்றப்பட்டது. பலரும் அதுபோலவே தம் சிகையை அலங்கரித்துக் கொண்டனர்.
புகழின் உச்சமும் வீழ்ச்சியும்
புகழை வெகு விரைவில் அடைந்த அவருக்கு வீழ்ச்சியும் வெகு விரைவில் வந்தது.
சென்னையில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இந்த வழக்கில் எம்.கே.டியும் அவரின் திரையுலகத் தோழரான என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு, நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றனர். தண்டனைக் காலத்திலேயே வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிரபல வழக்கறிஞர் எத்திராஜின் வாதாடலில், 1948இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு பாகவதரைக் கடுமையாகப் பாதித்துவிட்டது.
விடுதலைக்குப் பின் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அப்படியும் அவரை வைத்துப் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத் துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார். அதன் பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார்.
பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் செய்துவந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை. காரணம், கர்னாடக இசைக் கச்சேரி சூழல் ஒரு சாதிப் பிரிவினரின் கையிலிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். தெலுங்கு கீர்த்தனைகள் பாடுபவர்கள் மத்தியில் தமிழிசைப் பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று கடைசிவரை பிடிவாதமாக இருந்தவர் எம்.கே.டி.
பாகவதரின் புகழ் உச்சத்தில் இருந்தபோது அவர் கச்சேரிகளை மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்றுகொண்டு கேட்டனர் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவமும் நிகழ்ந்தது. எம்.கே.டி. அச்சிறுவனின் குடும்பத்துக்கு 5,000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாள்களில் மிகப் பெரிய தொகை.
ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமானபோது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டிப் பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான கூட்டம் இவரின் காரைச் சூழ்ந்துகொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு எம்.கே.டியைப் பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறு வழியின்றி அங்கு பாடிய பிறகுதான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. அந்தளவுக்கு இவர் மீதும், இவர் இசையின் மீதும், மோகம் கொண்டவர்கள் இருந்தனர்.
இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய மதுரை டி.பி.சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார்.
தாராள மனம்
பிறருக்கு உதவி செய்வதில் தயாள குணம் கொண்டவராகவும் சேமிப்பு குணம் அற்றவராகவும் திகழ்ந்தவர் எம்.கே.டி. படங்களிலிருந்து ஓய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கத் தட்டையே கொடுத்து உதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்கறிஞர் எத்திராஜுக்கு ஒரு தங்கத் தட்டை அளித்துப் பெருமைப்படுத்தியவர்.
இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது. ஜாம்பவான்கள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகைகூடக் கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்துக்காகக்கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பல திரைக் கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் நடித்த சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டன. அக்காட்சிகளின்போதே அவர் அதிக நலிவடைந்திருக்கிறார். தன் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்குத் தள்ளப்பட்டார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார்.
சிந்தாமணியில் அவர் பாடிய ”ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே... ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ” என்ற வரிகளே அவர் வாழ்க்கையின் இறுதி நிலையாயிற்று. ஈரல் நோயினால் பாதிப்படைந்த அவர் சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதி காலமானார்.
இன்றும் அவரின் திரைப்பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்திலும் இன்றளவிலும் இவரது ரசிகர்கள் உள்ளனர். இவருக்கெனத் தனி ரசிகர் மன்றமும் அங்கு உள்ளது என்பது இவரின் மங்காதப் புகழுக்குச் சான்று.


தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் (M.K.Thyagaraja Bhagavathar) பிறந்த தினம் இன்று (மார்ச் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு வயதிலேயே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.
* 10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார்.
* 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.
* 1926-ல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934-ல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
* இவரது வெற்றிப் பயணத்தில் 1944-ல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் எம்.கே.டி.க்கும் அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
* நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். 1948-ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இவரது பாடல்கள் பிரபலமடைந்தன.
* எம்.கே.டி. மனித நேயம், தயாள குணம் கொண்டவர். மற்றவர்களின் உதவியை விரும்பாத அவர், வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டார்.
* அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன. இவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றது.
* தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர் கருதப்படுகிறார். 1944-ல் வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.
* தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வயதில் உடல்நலக் குறைவால் (1959) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக