திங்கள், 12 பிப்ரவரி, 2018

உலக வானொலி தினம் பிப்ரவரி 13 ( World Radio Day )


உலக வானொலி தினம் பிப்ரவரி  13 ( World Radio Day ) 

உலக வானொலி நாள் ( World Radio Day ) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.

வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக வானொலி நாள் 2012

முதலாவது உலக வானொலி நாள்
இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

2013 உலக வானொலி நாள் பாரிசில் உள்ள யுனெசுக்கோ தலைமையகத்தில் இடம்பெற்றது.
உலக வானொலி நாள் 2014
யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக
பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் வானொலியும் விளையாட்டும் ஆகும்.


உலக வானொலி தினம்...

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது.
பிறகு 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்பு சம்பந்தமான முடிவெடுப்பவர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.


ரோடியோவின் மூலகர்த்தா மார்கொனி: இன்று உலக வானொலி தினம்

ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
 (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்,மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ,ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.பின்னர்,இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.
இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை, 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்த சர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாக அறிவித்ததை, இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.
ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாட உள்ளனர். உலக வானொலி தினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் விடுத்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தகவலினை செலவின்றி கொண்டு செல்லும் மதிப்புமிக்க சாதனம் வானொலி என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக