உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27
(World Tourism Day)
உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா.
2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).
உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.
கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள், புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா, சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில், எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.
நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால், சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும் பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத, கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள் அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
ஹோட்டல் கழிவுகள், நீர்மாசமடைதல், சட்டவிரோத குடிசைகளும், விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா, கடற்கரைச் சிறுவர்கள், போதைவஸ்து பாவனையும் கடத்தலும், அந்நியரின் அரைநிர்வாணப்பவனி, கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும்.
இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த காலம் இன்று மாறி விட்டது. அதே வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும். இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.
1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)
சுற்றுலா செல்ல விரும்பாத, புதிய இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பாத மனிதர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. சுற்றுலா எனபது மனிதனுக்கு பல்வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. பல்வேறு புதிய இடங்களை காண்பதால் மனிதன் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
சுற்றுலா மூலம் மனித சமூகத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகாரம் செய்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது சுற்றுலா என்பது சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல்வேறு வகைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன.
Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக