ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உலக இதய தினம் செப்டம்பர் 29.


உலக இதய தினம் செப்டம்பர் 29.
இதயம் பற்றிய சில செய்தி துளிகள்

 உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.

* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.

கவனிக்க வேண்டியவை:

* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.

* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.

* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.

* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது

* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.

* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக