வெள்ளி, 10 ஏப்ரல், 2020

உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10.



 உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10.

நமது தந்தை மற்றும் பாட்டன் காலத்தில் வீட்டில் பத்து குழந்தைகள் என்று இருந்து ஆறு, நான்கு என்பது சுருங்கி தற்போது இரண்டு அல்லது ஓன்று ஆகி விட்டது. பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் இருக்கும்.


இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள்.


ஒற்றைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள். அப்பா மற்றும் அம்மாவுக்கு பிடித்த உணவு, பொருள் அல்லது ஆடை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன என்பதை உணர வையுங்கள். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக