வெள்ளி, 24 ஏப்ரல், 2020

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25 World Malaria Day April 25.


 உலக மலேரியா தினம் ஏப்ரல் 25
World Malaria Day April 25.

உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் வழக்கத்தில் இருக்கிறது.

அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்

இந்த மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசு.

 மலேரியாவின் வரலாறு :
மலேரியாவின் வரலாறு :
கொசுக்கள் மூலம் மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்பதை திரு. ரொனால்டு ரோஸ் என்ற இங்கிலாந்து மருத்துவர் கண்டுபிடித்தார். இவருக்கு 1902 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன.

 நோய்த்தாக்கம் :
நோய்த்தாக்கம் :
நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது

 மலேரியா ஒட்டுண்ணிகள் :
மலேரியா ஒட்டுண்ணிகள் :
இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.

 பாதிப்பு :
பாதிப்பு :
கிட்டத்தட்ட 105 நாடுகளில் 330 கோடி பேர் மலேரியாவின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிரார்கள். ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மலேரியாவால் மரணம் அடைகிறார்கள்.

 காரணிகள் :
காரணிகள் :
குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர், சாக்கடை போன்ற இடங்களில் வரும்ம் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன. வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

 இந்தியாவில் பாதிப்பு :
இந்தியாவில் பாதிப்பு :
இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 அதிக உயிரிழப்பு :
அதிக உயிரிழப்பு :
2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர் என மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியான மலேரியா ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 2013ம் ஆண்டுக்கான மலேரியா தின வாசகம்:
2013ம் ஆண்டுக்கான மலேரியா தின வாசகம்:
மலேரியாவை ஒழிக்க முதலீடு செய்யுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்
Thanks One India tamil.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக