திங்கள், 19 ஜூன், 2017

உலக யோக தினம் ஜூன் 21


உலக யோக தினம் ஜூன்  21

உலக யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதல் சர்வதேச யோகா தினம்
முதல்முறையாக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.
யோகா தரும் யோகம்
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நீங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடினாலும் சரி; உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் சரி, உள்நிலை மாற்றம்தான் உங்கள் நோக்கம் என்றாலும் சரி, இங்கு வழங்கப்படும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய் கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
கிடைக்கும் பலன்கள்
* ஞாபக சக்தி, மனம்குவிப்பு திறன், செயல்திறன், மேம்படுகிறது
·* உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன
·* முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது
·* முதுகு வலி, மன அழுத்தம், பயம் மற்றும் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை
·* நாட்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
·* வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது.
·* அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்கச் செய்கிறது.
அனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா.
மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப்பயிற்சி எனும் அறிவியல் தோன்றிவிட்டது சிவனே ஆதியோகி என்றும் ஆதி குரு என்றும் யோக வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறார் இமய மலைத்தொடரில் உள்ள காந்தி சரோவர் ஏரியின் கரையில் சப்தரிஷிகளுக்கு சிவபெருமான் தனது யோக ஞானத்தை வழங்கியதாகச்சொல்லப்படுகிறது சப்தரிஷிகளம் அந்த யோக ஞானத்தை ஆசியாவின் பிற பகுதிகள் மத்தியக்கிழக்கு நாடுகள் வடக்கு ஆப்பிரிக்கா தென்அமெரிக்கா போன்ற பல்வேறு இடங்களில் பரப்பினர்
தற்கால ஆராய்ச்சியாளர்கள் அந்த பண்டைய பண்பாட்டிற்கு இணையான போக்குகளை உலகின் பல பகுதிகளிலும் தற்காலத்தில் கண்டறிந்துள்ளனர் எனினும் இந்தியாவில் தான் யோகப்பயிற்சி முறை தனது முழுப்பரிமாணமும் வெளிப்படுமாறு ஆழ வேரூன்றி உள்ளது சிவ பெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற சப்தரிஷிகளில் ஓருவரான அகத்தியர் பாரத கண்டத்தில் யோகப்பயிற்சியை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கிவிட்டார் மனித குல நாகரிகம் தோன்றிய போதே யோகப்பயிற்சி முறைகளும் தோன்றிவிட்டதாக நம்பப்படுகிறது
கி.மு.2700ல் நிலவிய சிந்து சரஸ்வதி சமவெளி நாகரிகம் வழங்கிய அழிவில்லாத பண்பாட்டுக்கொடை என்று யோகப்பயிற்சியை போற்றுகின்றனர் லிங்க வடிவங்கள் தேவி உருவங்கள் போன்றவை தாந்த்ரீக யோக முறைக்குச் சான்றாக திகழ்கின்றன மேலும் வேத உபநிஷத மரபுகள் பௌத்த சமண மரபுகள் போன்றவற்றிலும் யோகப்பயிற்சிக்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன சைவ வைணவ நெறிகளிலும் யோகப்பயிற்சி பற்றி பல செய்திகள் இருக்கின்றன
மனதையும் உடலையும் ஓன்றினைக்கும் மிக நுட்பமான அறிவியல் கூறுகள் அடங்கிய ஆன்மிக அனுபமே யோகா எனப்படுகிறது ஆரோக்கிய வாழ்வுக்கலை என்றும் அறிவியல் என்றும் அதனைக்கூறலாம் யோகா என்ற சொல் சமஸ்கிருத மூலமான யுக் என்ற பதத்தில் இருந்து தோன்றியது இதற்குப்பொருள் இணை கட்டு ஒன்று சேர் என்பதாகும் யோகப்பயிற்சி செய்வதன் மூலம் தனி மனிதனின் உணர்வுகள் இந்த பிரபஞ்சத்தின் உணர்வோடு ஒன்றிணையைச்செய்யும் என்கின்றன
யோக சாஸ்திரங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஒன்றிணைப்பு உருவாகி அப்படியே மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒத்திசைவு ஏற்படுத்துவதே யோகப்பயிற்சியாகும் மோட்சம் அல்லது கைவல்யம் என்ற வீடு பேற்றைப்பெறுவதற்கு சுயத்தை அறியும் வழியே யோகப்பயிற்சியின் நோக்கம் எனலாம் வேத காலம் தொட்டே யோகப்பயிற்சிகள் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்குப்படுத்தி தொகுத்தவர் பதஞ்சலி மகரிஷி ஆவார் யோக சூத்திரங்கள் என்ற அவருடைய தொகுப்புக்கு பிறகு பல்வேறு யோகக்கலை நிபுணர்களும் யோகிகளும் தமது தொண்டுகளால் உலகம் முழுவதும் யோகக்கலையை பரப்பியுள்ளனர் பொதுவாகப்பலரும் பின்பற்றும் யோக பயிற்சிகள் யாமம். நியமம். ஆசனம். பிரணாயாமம். ப்ரத்யாஹாரம.; தாரணம். தியானம். சமாதி. பந்தங்கள். முத்திரைகள். ஷத்-கர்மாயுத்த-ஆஹாரம். யுத்தகர்மா. மந்திரஜபம். போன்றவையாகும்
யோகத்தத்துவங்கள் மரபுகள் குரு-சிஷ் பரம்பரைகளுக்கு ஏற்றவாறு ஞானயோகம் பக்தியோகம் கர்மயோகம் தியானயோகம் பதஞ்சலியோகம் குண்டலினியோகம் ஹாதாயோகம் மந்திரயோகம் லயயோகம் ராஜயோகம் ஜைனயோகம் புத்தயோகம் என்று பல வடிவங்கள் தோன்றிவிட்டன
யோகாவின் தாயகமான இந்தியாவில் வழங்கும் பல்வேறான சமூகப்பழக்கங்களும் சடங்குகளும் எல்லா உயிரினங்களிடமும் பரிவும் பிற சிந்தனைப்போக்குகளுடன் சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதோடு சூழல் சமநிலையைப்பேணுவதில்; அக்கரையும் கொண்டுள்ளன எந்தவிதமான யோக சாதனைகள் ஆனாலும் அது அரத்தமுள்ள வாழ்வுக்காக அதுவே சர்வரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது இது போன்ற பல வரலாறுகளை கொண்டது யோகக்கலை ஆனால் உலகத்தில் இருப்பவர்களில் அதிகமானோர்க்கு இதன் பயன் தெரியாது என்றே கூறலாம்
இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர்27ம் தேதி நடைபெற்ற ஜக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஜக்கிய நாடு சபையில் உலகத்தில் உள்ள அனைவரும் ஜீன் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்மொழிந்தார் அதன் அடிப்படையில் டிசம்பர் 11ம்தேதி 193நாட்டு உறுப்பினர்களைக்கொண்ட ஜக்கிய நாடு சபை இந்த முன் மொழிவிற்கு 177இணை ஆதரவு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஓரு மித்தகருத்தின் அடிப்படையில் ஜீன்மாதம் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது
ஜக்கிய நாடுகள் சபையி;ன் தீர்மானத்தில் யோகாவானது மக்கள் நல்வாழ்விற்கான முழுமையான அனுகு முறையாக விளங்குகிறது மேலும் யோகா பயிற்சி பெறுவதால் உருவாகும் நன்மைகளை பெறுவதற்கும் அடிப்படையான கருத்துகளை பரப்புவதற்கும் உரிய வழிகளை அளிக்கிறது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லிணகத்தை ஏற்படுத்துகிறது நோய் வருமுன் தடுத்தல் பாதுகாத்தல் நல்வாழ்வு மேம்பாடு மற்றும் நவீன வாழ்க்கை முறை தொடர்பான நோய்களையும் குறைபாடுகளையும் போக்கும் மேலாண்மை முறையாகவும் விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது நமது நாட்டின் ரிஷி முனிவர்களாலும் யோகாச்சாரியர்களாலும் மனித சமுதாயம் நலன்களும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட இந்த யோகா முறையானது கண்டுப்பிடிக்கப்பட்டு முயற்சி செய்யப்படுவதை இன்று உலகமே ஏற்றுள்ளது தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நலன் பயப்பதே யோகப்பயிற்சியின் நோக்கம் என்பதால் எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த சமயமாக இருந்தாலும் சரி அனைவரும் எந்த வித பேதமும் இல்லாமல் யோகப்பயிற்சியை மேற்கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக