வியாழன், 22 ஜூன், 2017

உலக விதவைகள் தினம் ஜூன் 23.



உலக விதவைகள் தினம் ஜூன் 23.

உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் .   (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் ) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.  இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான. கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.



உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும் வகையிலும் சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஐ.நா பொது சபைக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
சர்வதேச விதவை தினத்தை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா. சபையில் பல தடவை பேசியுள்ளனர்.காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வியா போங்கோ ஒனடிம்பாவின் கோரிக்கைப்படி, ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23 ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.இன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைகள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து தீர்வுக்கு வழி வகுத்து வருகிறது.
உலகம் முழுக்க சுமார் 245 கோடி கைம்பெண்கள் இருக்கிறார்கள்.இவர்களில் கிட்டத்தட்ட 11.5 கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள்.குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஆண் இறக்கும் நிலையில்,சமூக நீதி அடிப்படையில் விதவை பெண்களுக்கு அரசு வேலை அளிப்பது அவசியமாகிறது.அப்போதுதான் நாட்டில் வறுமையில் வாடும் கைம்பெண்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
அதே நேரத்தில் நிறுவனங்களும், தனிநபர்களும் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் கைம்பெண்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலைக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்...!
பொருளாதார ரீதியில் கைம்பெண்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மன ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்வது, குடும்ப பெண்களை விட விதவை பெண்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது.இது காலம் கொடுத்த வல்லமை என்றே சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக