ஞாயிறு, 2 ஜூலை, 2017

தேசிய டாக்டர்கள் தினம்' - ஜூலை 1.



'தேசிய டாக்டர்கள் தினம்' - ஜூலை 1.

 டாக்டர்.சி.ராய் இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1.
மேற்கு வங்கத்தின் 2 வது முதல்வராக 14 ஆண்டுகள் பதவி வகித்தவர் டாக்டர் பி.சி.ராய்.இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதி அதனால் தான் இவரது நாளை போற்றும் விதமாக 'தேசிய டாக்டர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.
டாக்டர் பி.சி.ராய். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த அனைத்து துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது சேவைகளை போற்றும் வகையில், இவரது பிறந்த தினம் 'தேசிய டாக்டர்கள் தினம்' என கடைபிடிக்கப்படுகிறது.. உயிரை காப்பாற்றும் உன்னத பணியை செய்வதால்,மருத்துவர்கள் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகின்றனர்..
 'டாக்டர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்' என இத்தினம் வலியுறுத்துகிறது.
டாக்டர் பி.சி.ராய்..இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு 'பி.சி.ராய் தேசிய விருது' வழங்கப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக