செவ்வாய், 25 ஜூலை, 2017

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பிறந்த நாள் ஜூலை 25, 1939.


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பிறந்த நாள் ஜூலை 25, 1939.

ச. இராமதாசு (ராமதாஸ், பி. ஜூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்  ஆவார். இந்தக் கட்சியை 1990களில்   தொடங்கினார். முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார்.
வரலாறு
இவர் 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக் கவுண்டர். தாயார் நவநீத அம்மாள். இவரது உடன்பிறந்தோர் நால்வர். ஒருவர் சகோதரி. மூவர் சகோதரர்.
கல்வியும் தொழிலும்
மருத்துவக் கல்வி கற்று எம். பி. பி. எஸ். பட்டம் பெற்ற இராமதாசு, 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரியத் தொடங்கினார்.
1980ல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1989 வரை இச்சங்கத்தின் நோக்கங்களை அடைவதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். 1990ல், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
திருமணமும், குடும்பமும்
சரசுவதி அம்மாளைத் திருமணம் செய்துகொண்ட இராமதாசுக்கு இரண்டு பெண் மக்கள். ஒருவர் ஸ்ரீகாந்தி, மற்றவர் கவிதா.இவரது மகனான அன்புமணியும் ஓர் அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். அன்புமணி 2004 இல் இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக