சனி, 31 மார்ச், 2018

ஈஸ்டர் பண்டிகை


ஈஸ்டர் பண்டிகை
மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்து!

இயேசு ‌கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ‌கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ‌கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
எனினும் ‌‌கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் ‌பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை ‌விளக்கி தனியாக சட்டமும் ‌பிறப்பிக்கப்பட்டது.
ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் ‌விடியலுக்கான தேவதையாக ‌சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம ்'என்ற அர்த்தமும் உண்டு.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும ் ‌ஈஸ்டர் பற்றி ‌விரிவாக அறிய ‌கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல ‌ஜீவராசிகளையும் ‌சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும்,ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் ‌திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக ‌வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் ‌விழுந்தார்.
உலகின் ‌‌மீட்பிற்காக அனுப்பி வைத்தார் .
தன்னுடைய சாயலாக ஆசை,ஆசையாக படைத்த மனிதன்,பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் ‌சில தண்டனைகளை ‌விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி ‌விட்டார் தேவன்.
அதன்பின் ஆதாமும்,ஏவாளும் ஆணும
்,பெண்ணுமாக ஏராளமான ‌பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது. அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் ‌மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் ‌வீணாய் அழிந்தன.
ஆதாமும ்,ஏவாளும் தன்னை ‌விட்டு ‌விலகினாலும் மனிதகுலத்தின் ‌மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவ
ா,ஆபிரகாம் என ‌சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் ‌சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிதவித்த பரம ‌பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் ‌‌‌மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு ‌கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் ‌பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு ‌கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் ‌பின் உலக ‌மீட்பிற்கான ‌இறைவனின் திட்டத்தை மக்களுக்கு ‌விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
சப்பாண ி,குருடன்,குஷ்டரோகிகள் என ஏராளமான நோயாளிகளை இறையருளால் சுகமாக்கினார். கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட லாசர் என்பவரை உயிரோடு எழுப்பினார். வேதாகமத்தை வாசித்தால் அவர் செய்த அற்புதங்கள்,அதிசயங்களை இன்னும் ‌விரிவாய் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உடலில் 5,466 காயங்கள ்!
மரித்தோரை உயிர்பித்து தான் தேவகுமாரன் என்பதை ‌நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி ‌சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். அவர் ‌சிலுவைப்பாடுகளை அனுபவித்த போது அவர் உடல் முழுவதும் ‌‌கிட்டத்தட்ட 5,466 விழுப்புண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதனாகப் ‌பிறந்து உயிரோடு எழும்பிய ஒரே நபர் அவர் மட்டுமே. இந்த நேரத்தில் சாமானிய மனிதர்கள் மனதில் ஒரு கேள்வி எழும ்.
இறைவன் ஏன் 3 நாள்கள் கழித்து உயிரோடு எழும்ப வேண்டும். உயிர் ‌நீத்த அதே நொடியில் ‌மீண்டும் உயிர்த்தெழக் கூடாதா என்பதே அது. இந்தக் கேள்வி பலரின் ‌விசுவாசத்தை அலைக்கழிக்கிறது.
ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்தை படித்தால் 6 நாட்களில் தேவன் உலகத்தையும் அதன் சகல ‌‌ஜீவராசிகளையும் படைத்தார் என்பதை அறிய முடியும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிதான் உலகம் உண்டானதாக ‌விஞ்ஞானிகள் உறுதிப்பட கூறுகின்றனர். இதனால் அறிவியலுக்கும் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கும் இடையில் ‌மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக தோன்றும். உண்மை அப்படியல்ல.
அன்பை ருசித்து பார ்!
இறைவனின் கால நேர கணக்குப்படி பல கோடி ஆண்டுகள் அவருக்கு ஒரு நாள் போல் இருக்கலாம். அவருடைய கணக்குப்படி இயேசு ‌‌கிறிஸ்து இறந்த அதே நொடியில் உயிர்தெழ செய்திருப்பார ்.ஆனால் நம்முடைய கால,நேர கணக்குப்படி 3 நாள்கள் போல் தோன்றுகிறது.
நாம் மனித மூளையின் சக்திக்கு தகுந்தாற்போல் ‌சிந்திக்கிறோம். தேவனுடைய அறிவை அறிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் போதாத ு.மனித குலத்திற்கு ‌மீட்பிற்காக மரித்து உயிர்ந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ‌ஜீவிக்கிறார். தம்மை நோக்கி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மன்னிப்பை அருள
ி,பரலோகத்தில் ‌அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுக்கிறார்.
அவருக்கு ‌பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே ‌விரும்புகிறார். ஆனால் மனிதர்கள் உலகத்தின் இச்சைகளால் இழுப்புண்டு பாவசேற்றில் ‌சிக்கி அமிழ்ந்து போகிறார்கள்.
ஒரே ஒரு முறை இயேசு ‌கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஈஸ்டர் ‌திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு ‌திரும்ப வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.


ஈஸ்டர் முட்டை

ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.
பேகன் நம்பிக்கையைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டத்தில், பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது, இதனை தழுவி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றனர்.
பழங்கால வழக்கங்களில் சாயம் பூசப்பட்ட அடிக்கப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்கால வழக்கில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும். இல்லையென்றால், அவை பொதுவாக புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.
தோற்றம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள்
சொர்பியன் ஈஸ்டர் முட்டைகள்
போலிஷ் ஈஸ்டர் முட்டைகள்
ஃபேபெரெஜ் முட்டைகள் என்பவை, ரஷ்யாவைச் சார்ந்தா ஜார் மன்னர் அலக்ஸாண்டர் III -ஆல் அவருடைய மனைவி மரியா ஃப்யோடோரோவானவுக்கு பரிசளிப்பதற்காக உருவாக்கப்பட்டது
முட்டையானது, ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
பழங்கால ஜோரோஸ்டிரியன்கள், அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டமான நவ்ரூஸுக்காக முட்டைகள் மீது வண்ணம் பூசினார்கள், இந்த கொண்டாட்டம் வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது. நவ்ரூஸ் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்தது. ஜோரோஸ்டிரியன்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படும்,
ஹாஃப்ட் சீன் என்பதில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெர்ஸெபோலிஸ் சுவர்களில் உள்ள சிற்பங்களில், நவ்ரூஸ் கொண்டாட்டத்தில் மன்னனுக்கென மக்கள் முட்டைகள் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
யூத இனப் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் என்பதில், வேக வைக்கப்பட்ட முட்டை உப்பு நீரில் முக்கப்பட்டு, ஜெருசலேம்
கோயிலில் பண்டிகைக் கால காணிக்கையாகத் தரப்படுகிறது.
கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய, சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர் இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வணங்கினார்கள், இந்த தேவதையின் விருந்து, வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த தேவதையின் விலங்காக, வசந்தகால முயல் கருதப்படுகிறது. இயோஸ்டர் முட்டைகள் மற்றும் முயல்களுடன் இணைந்தது என்று சிலர் கூறுகின்றனர், மற்றும் வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது என்றும் நம்புகின்றனர். [3] பீட் வெனராபிலிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனக்டிக்டைன் துறவி எழுதிய புத்தகங்களிலிருந்து இயோஸ்டர் தேவதையைப் பற்றி தெரியவருகிறது. ஆங்கிலோ-சாக்ஸோன்கள் இடையே நடந்த இயோஸ்டரின் பேகன் வழிபாடு முறைகள் இவர் எழுதத் தொடங்குவதற்கு முன்பே அழிந்து விட்டதாக பீட் என்பவர் கூறுகிறார். பீட் எழுதிய டி டெம்போரம் ரேஷனெ என்பது இந்த தேவதையுடைய பெயர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதை விவரிக்கிறது, ஆனால் முட்டைகளைப் பற்றி எந்த விவரங்களும் அதில் இல்லை. [4]
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாக்கப் கிரிம் போன்றவர்களின் கருத்துப்படி, ஜெர்மானிய தேவதையான ஆஸ்டாரா என்பவர் மூலமாகத்தான் ஈஸ்டர் முட்டைகள் பேகன் நம்பிக்கையுடன் இணைந்தது என்று நம்பப்படுகிறது.
ஜெர்மானிய சொல்லான இயோஸ்டர் என்பதிலிருந்து இந்த விழாவுக்கான ஆங்கிலப் பெயர் ஈஸ்டர் என்பது மருவி வந்தது. ஜெர்மானிய மொழிகளில் மட்டும் இயோஸ்டர் என்பதன் மருவுகள் விடுமுறையைக் குறிக்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரூ பண்டிகையான கடந்து செல்லுதல் என்று பொருள்படும், பாஷ் என்பதிலிருந்து இதற்கான சொல்லப் பெற்றன. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ் மொழியில் பாஸ்குவா ; பிரெஞ்சில்
பாக்வஸ் ; டச்சு மொழியில் பாசன் , கிரேக்கம், ரஷ்ய மறும் பெரும்பாலான கிழக்கத்திய பழமையான நாடுகளில்,
பாஷ்ஷா . இடைக்கால ஆங்கிலத்தில், இந்த சொல் பாஷ் என்றே அழைக்கப்பட்டன, இது நவீனகால ஒலிப்பு சார் சொற்களில் வைக்கப்பட்டுள்ளது. செர்பியன் உஸ்க்ர்ஸ் போன்ற சில மொழிகளில், உயிர்த்தெழுதல் என்று பொருள்படும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
போப் கிரிகோரி தி கிரேட் என்ற மதகுரு மிஷனரிகளிடம், பழங்கால மத இடங்கள் மற்றும் பண்டிகைகளைப் பயன்படுத்துமாறு கூறினார் மற்றும் அவற்றை சாத்தியமான இடங்களில் கிறிஸ்தவ சடங்குகளுடன் சேர்க்குமாறு கூறினார். [ சான்று தேவை] கிறிஸ்துவின் மறுபிறப்பு கொண்டாட்டங்களானது, இயோஸ்டரின் பேகன் விருந்துடன் இணைப்பதற்கு பொருத்தமாக இருந்தது. மேலும் பல மரபுகளும் கிறிஸ்தவ விழாக்களுடன் சேர்க்கப்பட்டன. [5] மேலும், நாட்டுப்புற கதைகளில், முயல்களின் (பின்னர் ஈஸ்டர் முயல்கள் என்றழைக்கப்பட்டன) வளர்ச்சி (அவை எங்கு தன்னுடைய குட்டிகளை வளர்க்கின்றன) மற்றும் ப்ளோவர் பறவைகளின் கூடுகள் ஆகியவை தொடர்பாக இருந்த குழப்பங்கள் மூலமாக முயல்களையும் முட்டைகளையும் கூட இணைப்பது சாத்தியமாயிற்று.
கிறிஸ்தவ அடையாளங்கள் மற்றும் நடைமுறைகள்
உக்ரைனின், லிவிவ் நகரத்தில், பஸ்கா (ஈஸ்டர்) பண்டிகையில் ஒரு பரம்பரிய மதகுறி ஈஸ்டர் கூடைகளை ஆசீர்வதிக்கிறார்.
முட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. முட்டையானது மறுபிறப்பின் குறியீடாகும்: செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது, அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.

பாரம்பரிய மற்றும் கிழக்கத்திய கத்தோலிக்க திருச்சபைகளில், பாஸ்கால் விரதத்தின் இறுதியில் ஈஸ்டர் முட்டைகள் சபை குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலிருந்து, ஈஸ்டர் கூடைகளும், தேவாலயத்துக்கு கொண்டு வரப்படும், அதில் ஈஸ்டர் முட்டைகள் மட்டுமின்றி, பஸ்கா, குலிச் அல்லது ஈஸ்டர் ரொட்டிகள் போன்ற பிற பஸ்கா உணவுகள் கொண்டுவரப்பட்டு அது சபைகுருவால் ஆசீர்வதிக்கப்படும்.

சில மரபுகளில், பாஸ்கால்டைடின்போது, ஈஸ்டர் முட்டைகளுடனான பஸ்கா வாழ்த்துக்கள் இறந்தவர்களுக்காகவும் கூறப்படுகிறது. பஸ்காவின் இரண்டாவது திங்கள் அல்லது செவ்வாய் அன்று, நினைவுகூறுதல் சேவையில் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட முட்டைகளை கல்லறைக்கு கொண்டுவந்து, மகிழ்ச்சியான பஸ்கா வாழ்த்தான, "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்", என்று இறந்துபோன தங்கள் உறவினர்களிடம் கூறுவார்கள்.
தெய்வீக புராணங்கள் குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் சார்ந்து, ஈஸ்டர் முட்டைகளின் தோற்றத்தை மேலே கூறப்பட்டவாறு விவரிக்கலாம். ஆனால் கிழக்கத்திய கிறிஸ்தவ மார்க்கத்தினர், கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்தபோது, மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வதற்காக மகதலேனா மரியாள் வேகவைக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்தவுடன் அந்த முட்டைகள் சிவப்பாக மாறி விட்டதாகவும் கூறுகின்றனர்.


ஒரு வேறுப்பட்ட, ஆனால் முரண்பாடுகள் ஏதுமற்ற புராணத்தின்படி, மகதலேனா மரியாள் நற்செய்தியைப் பரப்புவதற்காக செய்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த மரபின்படி, இயேசு விண்ணுலகிற்கு சென்ற நாளுக்கு பின்னர், மரியாள் ரோம மன்னனிடம் சென்று, அவனை வாழ்த்தி, "இயேசு உயிர்த்தெழுந்தார்" என்று கூறினாள் என்றும், அங்கு மன்னன், மேசை மேல் இருந்த ஒரு முட்டையைச் சுட்டிக்காட்டி, "இந்த முட்டை சிவப்பாக மாறாத வரை, இயேசு உயிர்த்தெழுந்திருக்கவில்லை" என்று கூறினான். அவன் இவ்வாறு கூறிய உடனே, முட்டையானது இரத்த சிவப்பாக மாறியது.
அலங்கரித்தல் நுட்பங்கள்
ஹனாக்கே கிராஸ்லைஸ், செக் குடியரசைச் சேர்ந்த ஹனா பகுதியினரின் ஈஸ்டர் முட்டைகள், மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டவை
துளையிடப்பட்ட முட்டை, தூங்கும் அழகி
பல்கேரியா, ரஷ்யா, ருமேனியா, உக்ரைன், போலந்து மற்றும் பிற ஸ்லாவிக் நாடுகளின் நாட்டுப்புற வழக்கங்களின்படி ஈஸ்டர் முட்டைகள் புதிய வாழ்வின் பிரசித்திப் பெற்ற அடையாளமாகும். ஒரு பட்டிக் (மெழுகுப் பொருள்) செயல்முறையின் மூலம் அழகான, சிறந்த வண்ணங்கள் கொண்ட முட்டைகள் உருவாக்கப்படுகின்றன, இதற்கான பிரபலமான எடுத்துக்காட்டு, உக்ரேனியன் பியாஸான்கா. ரஷ்யன் இம்பீரியல் கோர்ட்டிற்காக, பேபெர்ஜ் வொர்க்ஷாப்கள் சிறப்பாக நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் இந்த பொருட்களில், சிறிய பறவைகள் அல்லது கப்பல்கள் போன்றவை மறைவாக வைக்கப்படுகின்றன. அல்பெர்ட்டாவில் உள்ள வெஜிரிவில்லே என்ற இடத்தில் 27 அடி (9 மீ) பியாஸான்கா சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
நட்பு, அன்பு அல்லது நல்வாழ்த்துக்களின் அடையாளமாக தரப்படுவதர்காக இவற்றை அலங்கரிக்கும் பல வழிமுறைகளும் மரபுகளும் உள்ளன. யுனைடெட் கிங்டமில் சில பகுதிகளில் ( ஸ்காட்லாந்து மற்றும் வட கிழக்கு இங்கிலாந்து) ஈஸ்டர் ஞாயிறுகளில் உயரமான செங்குத்தான
மலைகளிலிருந்து வண்ணம் பூசப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும் பழக்கம் தற்போதும் காணப்படுகிறது. அமெரிக்காவில் இது போன்ற ஈஸ்டர் முட்டை உருட்டிவிடுதல் நிகழ்வு பெரும்பாலும் சமதளத்தில் நடத்தப்படுகிறது, இது ஒரு ஸ்பூனால் தள்ளி விடப்படுகிறது. ஈஸ்டர் முட்டை உருட்டி விடுதல், வெள்ளை மாளிகையின் கூடத்தில் நடத்தப்படும், அனைவரால் விரும்பப்படும் ஆண்டு நிகழ்வாக மாறி விட்டது. ஈஸ்டர் முட்டை வேட்டை என்பது, பொதுவானதொரு விழாக்கால நிகழ்வாக மாறி விட்டது, இதில் சிறுவர்கள் வெளிப்புறங்களில் (அல்லது தட்பவெப்பம் மோசமாக இருந்தால் உட்புறங்களில்) மறைத்து வைக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் அதிகம் முட்டைகளைச் சேகரிக்கிறார்கள் என்ற போட்டியும் உண்டு.
ஈஸ்டருக்காக முட்டைகளை வேக வைக்கும்போது, அவற்றுடன் வெங்காய சருகுகளைச் சேர்த்து வேக வைப்பதன் மூலம் சிவப்பு நிறத்தைப் பெற முடியும். வெவ்வேறு நிறமான உல்லன் நூற்கண்டுகளுடன், வெங்காய தோலைச் சேர்த்து கட்டுவதன் மூலம் பல வகைகளில் நிறங்கள் பெறப்படுகின்றன. இங்கிலாந்திற்கு வடக்கே இவற்றை பேஸ் முட்டைகள் அல்லது பேஸ்ட் முட்டைகள் என்று அழைக்கின்றனர், இது இடைக்கால ஆங்கில சொல்லான பேஸ்க் என்பதிலிருந்து தோன்றியது. இவை பெரும்பாலும் ஒரு முட்டை உடைத்தல் போட்டிக்கு பின்னர் உண்ணப்படுகின்றன.
ஈஸ்டர் முட்டை மரபுகள்
ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவின் ஈஸ்டர் முட்டைகள்
முட்டை வேட்டையின்போது வீட்டினுள்ளும், வெளியேயும் வேகவைக்கப்பட்ட அல்லது செயற்கை முட்டைகளில் சாக்லெட் மிட்டாய்கள் நிரப்பப்பட்டு பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் குழந்தைகள் கண்டுபிடிப்பதற்காக மறைத்து வைக்கப்படுகின்றன.
இந்த வேட்டை முடிந்தவுடன், அதிகப்படியான முட்டைகளைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மிகப்பெரிய அல்லது மிகச்சிற முட்டையைக் கண்டுபிடித்தவர் என்ற வரிசையில் பரிசுகள் வழங்கப்படலாம்.
உண்மையான முட்டைகளைக் கொண்டு முட்டை உடைத்தல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
வடக்கு இங்கிலாந்தில், ஈஸ்டர் காலங்களில், வேகவைக்கப்பட்ட பேஸ் முட்டைகள் எல்லாருக்கும் தரப்பட்டு, அவர்கள் மற்றவர்களுடைய முட்டைகளை உடைக்க வேண்டும் என்பது ஒரு விளையாட்டாக கடைபிடிக்கப்படுகிறது. இது "முட்டை தட்டுதல்", "முட்டை அமுக்குதல்" அல்லது "முட்டை ஜார்ப்பிங்" என்றழைக்கப்படுகிறது. உடையாத முட்டையை வைத்திருப்பவரே வெற்றியாளர். தோல்வியடைந்தவர்கள் உடைந்த முட்டையை உண்ண வேண்டும். ஈஸ்டரை முன்னிட்டு வருடாந்திர முட்டை ஜார்ப்பிங் உலக சாம்பியன்ஷிப் பீட்டர்லீ கிரிக்கெட் கிளப்பில் நடத்தப்படுகிறது. பல்கேரியா, ஹங்கேரி, குரோஷியா, லெபனான், மாசிடோனியா, ருமேனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் இதனை டுகாஞ்சி என்றழைக்கின்றனர். ஆஸ்திரியாவின் சில பகுதிகள், பவாரியா மற்று ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகள் ஆகியவற்றில் இதனை ஆஸ்டெரீயர்டிட்சென் அல்லது
இயர்பெக்கன் என்றழைக்கின்றனர். தெற்கு லூசியானாவில், இந்த நடைமுறைக்கு, போக்கிங் எக்ஸ் என்று பெயர், இது சற்று வேறுபட்டது. காஜுன்ஸ் வழக்கத்தின்படி வெற்றிபெறுபவர் தோற்றவரின் முட்டையை ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் உண்ண வேண்டும்.
முட்டை உருட்டுதல் என்பதும், ஈஸ்டர் நாளில் முட்டைகளால் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய முட்டை விளையாட்டாகும். இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில், ஈஸ்டர் காலத்தில் சிறுவர்கள் முட்டைகளை மலைகளிலிருந்து உருட்டு விடுவார்கள்.
ஐரோப்பாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களால் இது புதிய உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விளையாட்டை வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு விதமாக விளையாடுகின்றனர்.
முட்டை நடனம் என்பதும் ஜெர்மனியில் தோன்றிய ஒரு பாரம்பரிய ஈஸ்டர் விளையாட்டாகும், இதில் தரையில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளை உடைக்காமல் அதன் நடுவே நடனம் ஆட வேண்டும். இதற்கு யுகேவில் ஹாப்-எக் என்று பெயர்.
பேஸ் எக் நாடகங்கள் என்பவை மறுபிறப்பை கருப்பொருளாகக் கொண்ட பாரம்பரிய கிராம நாடகங்கள் ஆகும். இதில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே சண்டை நடக்கும், அதில் ஹீரோ கொல்லப்படுவார் பின்னர் மீண்டும் உயிர்த்தெழுவார், இது இங்கிலாந்தில் ஈஸ்டர் காலங்களில் நடத்தப்படுகிறது.
உணவாக பயன்படுத்துவது
கேட்பர்ரியின் சாக்லெட் ஈஸ்டர் முட்டைகள்
மேற்கத்திய நாடுகளில், ஈஸ்டர் முட்டை மரபானது, லெந்து காலத்தின் இறுதி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. வரலாற்றில், வீட்டிலுள்ள எல்லா முட்டைகளையும் லெந்து காலம் தொடங்குவதற்கு முன்பாக பயன்படுத்தி விட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. மேற்கத்திய கிறிஸ்தவ மரபுகளின்படி, பாரம்பரியமான விரத நாட்கள் மற்றும் லெந்து காலத்தில் முட்டை தடைசெய்யபட்ட உணவாக இருந்தது (சில கிழக்கத்திய கிறிஸ்தவ திருச்சபைகளில் இந்த மரபு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது). இதேபோல, கிழக்கத்திய கிறிஸ்தவ மரபில், லெந்து விரத நாட்களில் இறைச்சி மற்றும் பால் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன, முட்டையும் "பால்பொருளாகவே" (ஒரு விலங்கின் ரத்தத்தைச் சிந்தாமல் அதிலிருந்து பெறப்படும் உணவு) கருதப்படுகிறது பாவ மன்னிப்பின் செவ்வாயில் இந்த விரிவான பான்கேக் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், லெந்து காலம் ஆரம்பமாகும், சாம்பல் புதன் கிழமைக்கு முன்பான செவ்வாய் ஆகும், இதனை பிரஞ்சில் "ஃபேட் செவ்வாய்" என்ற பொருள்பட மார்டி கிராஸ் என்றும் அழைக்கின்றனர், இந்த நாளில்தான் லெந்துகாலம் தொடங்குவதற்கு முன்பு கடைசியாக முட்டையை உண்பார்கள்.
பாரம்பரியமான திருச்சபையின்படி, கிரேட் லெந்து என்பது புதன்கிழமைக்கு பதிலாக சுத்தமான திங்கள் முதலே தொடங்குவதாக நம்பப்படுகிறது, இதனால் வீட்டிலுள்ள பால்பொருட்களை அடுத்த வாரம் வரைப் பயன்படுத்தலாம், அந்த வாரம் சீஸ்ஃபேர் வீக் என்றழைக்கப்படுகிறது. லெந்து காலத்தின்போது, கோழிகள் முட்டையிடுவதை நிறுத்துவதில்லை என்பதால், அவை அடைக்காக்கும்படி வைக்கப்படவில்லை என்றால், கடைகளில் அதிக அளவிலான முட்டைகள் இருப்பில் இருக்கும். இந்த கூடுதல் முட்டைகள், அழுகிவிடாமல் தவிர்ப்பதற்காக உடனடியாக உண்ணப்பட வேண்டும். எனவேதான் பஸ்காவில் முட்டைகள் உண்ணப்படுவது மீண்டும் தொடங்குகிறது.
முட்டைகளையும் உணவையும் வீணாக்காமல் தவிர்க்க அனைவரும் கட்டாயமாக முட்டையை உண்பது அவசியமாகிறது. இதற்காக, ஹார்னாஜோ (பொதுவாக ஈஸ்டர் அன்று அதை சார்ந்த நாட்களில் உண்ணப்படுகிறது) என்ற முட்டையை முதற்பொருளாக கொண்ட ஸ்பானிஷ் உணவு தயாரிக்கப்படுகிறது. ஹங்கேரியில், ஈஸ்டர் முட்டைகள் நறுக்கப்பட்டு உருளைக்கிழங்கு கேஸர்ரோல்களில் வைத்து உண்ணப்படுகின்றன.
கண் பார்வை இல்லாதோருக்கான ஈஸ்டர் முட்டைகள்
ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் என்பவை, பலவகையான கிளிக் மற்றும் இரைச்சல் சத்தங்களை வெளிவிடும் முட்டைகளாகும், இவற்றை கண்பார்வை இல்லாத சிறுவர்கள் எளிதாக கண்டறிய முடியும்.
சில ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் ஒரே, அதிக சத்தமான ஒலியை எழுப்புகின்றன, சிலவற்றில் இனிமையான ஒலி வெளிவிடப்படுகின்றன.
இதையும் பாருங்கள்
ஸ்லாவிக் கலாச்சாரத்தின்படி முட்டை அலங்காரம்
ஃபேபெர்கி முட்டை
ஃபெஸ்டம் ஓவரம்
பாஸ்
பிஸானிக்கா (குரோஷியன்)
பிஸான்கா (போலிஷ்)
பியாஸ்ன்கா (உக்ரைனியன்)
ஷாம் எல் நெஸ்ஸிம்
ஸ்வெய்கோன்கா


ஈஸ்டர் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்
மேலும் கற்றுக்கொள்ள
அச்சிடவும் அனுப்பு
எங்களைப் பற்றி
இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி
ஒவ்வொரு வருஷமும் லட்சகணக்கான ஆட்கள் இயேசுவின் மரணத்தை நினைத்து பார்க்க ஒன்றாக கூடிவருகிறார்கள். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?
ஈஸ்டர் என்பது ஒரு கிறிஸ்தவப் பண்டிகை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஏன் அதைக் கொண்டாடுவதில்லை?
இயேசு மறுபடியும் உயிரோடு வந்தது நிஜமா?
பைபிள் தரும் பதில்
ஈஸ்டர் பண்டிகை என்பது பைபிள் அடிப்படையிலான பண்டிகை அல்ல. ஈஸ்டரின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள்—பூர்வகால கருவள சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரியப் பழக்கமே அது. கீழே உள்ள குறிப்புகளைக் கவனியுங்கள்:
1. பெயர்: “ ஈஸ்டர் என்ற ஆங்கிலப் பெயரின் ஆரம்பம் சரியாகத் தெரியவில்லை; 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலோ-ஸாக்ஸன் குருவான வெனரபிள் பெடெ என்பவர், ஈஸ்ட்ரா என்ற ஆங்லோ-ஸாக்ஸன்களின் வசந்தகால பெண் தெய்வத்தின் பெயரிலிருந்து இந்தப் பெயரை எடுத்தார்” என தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. வேறுசில ஆராய்ச்சிப் புத்தகங்கள், இந்தப் பெண் தெய்வத்தின் பெயரை அஸ்டார்டே என்ற பெனிக்கேயர்களின் கருவள பெண் தெய்வத்தின் பெயருடன் சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன; இந்தப் பெண் தெய்வம் பாபிலோனிய தெய்வமான இஷ்டாரின் மறுவடிவமாக இருந்தது.
2. முயல்கள்: இவை கருவளத்திற்கான அடையாளச் சின்னங்களாக இருக்கின்றன; “ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு தேசங்களில் வசந்தகாலத்தின்போது கொண்டாடப்பட்ட புறமத பண்டிகைகளின் பூர்வகால சடங்காச்சார, அடையாளப்பூர்வ சின்னங்களிலிருந்து இவை வந்திருக்கின்றன.”—
என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா.
3. முட்டைகள்: ஈஸ்டர் முயல்களால் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிற ஈஸ்டர் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிற வழக்கம், “வெறும் சின்னப் பிள்ளைகளுக்கான விளையாட்டு அல்ல, ஆனால் ஒரு கருவள சடங்கச்சாரத்தின் சுவடு அது” என்கிறது ஃபங்க் & வேக்நல்ஸ் ஸ்டான்டர்டு டிக்ஷனரி ஆஃப் ஃபோக்லோர், மித்தாலஜி அண்டு லெஜென்டு. அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் “அவற்றின் மாயசக்தியால் சந்தோஷத்தையும், செழிப்பையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் கொண்டுவருவதாக” சில கலாச்சரங்களில் நம்பப்பட்டது. —ட்ரெடிஷனல் ஃபெஸ்டிவல்ஸ்.
4. புதிய ஈஸ்டர் உடை: “வசந்த காலத்திற்கான ஸ்கேண்டினேவிய பெண் தெய்வத்தை, அதாவது ஈஸ்ட்ராவை, புதிய உடையோடு வரவேற்காவிட்டால், அது அவமரியாதையாகக் கருதப்பட்டது, துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருகிற செயலாக எண்ணப்பட்டது.” —தி ஜயன்ட் புக் ஆஃப் சூப்பர்ஸ்டிஷன்ஸ்.
ஈஸ்டரின் ஆரம்பத்தைப் பற்றி தி அமெரிக்கன் புக் ஆஃப் டேஸ் என்ற புத்தகம் இப்படி விவரிக்கிறது: “ஆரம்ப நாட்களில், சர்ச் பழமையான புறமத பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குக் கிறிஸ்தவ சாயத்தைப் பூசின என்பதில் சந்தேகமே இல்லை.”
கடவுளுக்குப் பிடிக்காத பாரம்பரியங்களையோ பழக்கவழக்கங்களையோ பின்பற்றக் கூடாதென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. ( மாற்கு 7:6-8 ) “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்கிறது 2 கொரிந்தியர் 6:17 . அதனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் ஈஸ்டர் என்ற புறமத பண்டிகையைக் கொண்டாட மாட்டார்கள்.

உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 01.


உலக  முட்டாள்கள் தினம் ஏப்ரல்  01.

ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது .

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர்
1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய
கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜெர்மனி , டென்மார்க் , நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.


புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.


ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம்!
-புன்னியாமீன் .

சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.
"The first of April is the day we remember what we are the other 364 days of the year " - Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.
"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.


புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், " பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.
இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.
இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.
எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.


புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.
இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.
இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் 'பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.


கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் April Fool's Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.
ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்", இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.
1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்..
ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.
அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.
(ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை நம் அரசியல்வாதிகள் முட்டாள்களாக்கி வருவதால் பேசாமல் தேர்தல் நாளையே ஏப்ரல்-1ம் தேதிக்கு மாற்றிவிட்டால் என்ன?!)


ஏப்ரல் ஃபூல்... ஏமாந்த ஃபூல்...- எப்படி வந்தது?
தி இந்து தமிழ்.

“ஏய் இன்னைக்கு ஸ்கூல் லீவு…”, “காலுக்கிட்ட தேளு கிடக்கு...” “முகத்துல என்ன கரையா இருக்கு, பாரேன்…”- இப்படியெல்லாம் சொல்லி உங்கள் நண்பரை நீங்கள் இன்றைக்கு ஏமாற்றுவீர்கள் இல்லையா? ஏமாந்தவரைப் பார்த்து “ஏப்ரல் ஃபூல்... ஏமாந்த ஃபூல்...'' என்று கைக்கொட்டி சிரித்து மகிழ்வீர்கள்.
சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். இந்த நாள் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா?
கி.பி. 16-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.
1582-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி புதிய காலண்டரை 13-ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் என்று சொல்கிறோம். இந்தக் காலண்டரில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும்.
அதேபோலச் சட்டையின் பின்னால் ‘ நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள்.
பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய காலண்டரை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள்.
இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.


ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் - ஜாலி பகிர்வு... விகடன்.

எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது. கவனமாக படியுங்கள் :
ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள் !

ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.
ஏப்ரல் 1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல் அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும் 9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர் !
அதே பிபிசி 1957 இல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன
1980 இல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார் !
ஆறு வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் பென்குயின்கள் பறக்கின்றன பாஸ் என்று இன்னொரு போலி வீடியோவோடு வந்தது பிபிசி. அதையும் நம்பினார்கள் மக்கள் !


பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள்
பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின !
ஐரீஷ் டைம்ஸ் 1995 இல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது !
The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன.
முதல் உலகப்போரின் April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே,அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்தை சியிருக்கிறார்கள் ! அதில் "ஏப்ரல் ஃபூல் !" என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள் !
பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.
கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004 இல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள் ! இப்படியும் ஏமாற்றலாம் பாஸ் !
லண்டன் டைம்ஸ் இதழ் 1992 இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு!
இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள்.
லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும் டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள் !

ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் மார்ச் 30

 

ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் மார்ச் 30

ஆனந்தரங்கம் பிள்ளை (1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் #துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். #பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய #பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.
      1736 முதல் 1761 வரை ஏறத்தாழ #இருபத்தைந்து ஆண்டுகள் #நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் #இந்தியாவின் பெப்பீசு எனவும் #நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர்.
    இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு #தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், #முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
ஆனந்தரங்கம் #இந்திய மன்னர்களுக்கும் #பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு #மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு #செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் #ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார்.
   
பாராட்டுக்கள்:

* அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.

* "ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புக்கள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி"- கே. கே. பிள்ளை.

,*. "தான் நேரில் கண்டும் கேட்டும்
 அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்." - வ. வே. சு. ஐயர். (தமது ‘பால பாரதி’ இதழில்)

வெள்ளி, 30 மார்ச், 2018

புனித வெள்ளி - #Good Friday


  புனித வெள்ளி - #Good Friday

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. மரணம் என்பது முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான விடுதலை தொடங்குகிறது. மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசு கிறிஸ்துவின் மரணம்.

💘தங்களது பாவங்கள், குற்றங்கள், குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு அல்லது மாடு ஒன்றை பலி செலுத்துவதை பாரம்பரியமாகச் செய்து வந்தனர். உலகின் எல்லா நாகரிகங்களிலும் இந்த பரிகாரப் பலியைக் காணமுடியும். இவ்வாறு ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை பலியாகத் தரும்போது அது ஆடு எனில் அதை ’ பலியாடு’ என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை அவதானிக்க முடியும்.இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக தனது இன்னுயிரை அவர் ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை விவிலியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கும்போது இன்னும் பல புனித உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.


💔அந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி. அவரை சிலுவையில் அறைந்த பிறகு சிலுவையோடு கல்வாரி மலையில் தூக்கி வைத்தார்கள். ஒரு புறம் சதுசேயர்கள், பரிசேயர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மறுபுறம் அவரைச் சுற்றி அரசு அலுவலர்கள், சேவகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தூரத்தில் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு எல்லாம் தம்மை கைவிட்டதாகத் தோன்றியது. அப்போது தான் தன் தந்தையை நோக்கி தந்தையே இவர்களை மன்னியும் (லூக்கா 23:24) என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு கள்வர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது. அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் (லூக்கா 23:43) என ஆறுதலாகக் கூறப்பட்டது. மூன்றாவதாகத் தம் சிலுவை அடியில் பார்த்த போது தம் அன்பு அம்மா நின்று கொண்டிருப்பதையும் தம் அன்புச் சீடர் நின்று கொண்டிருப்பதையும் கண்டார்.

❤அப்போது தான் அம்மாவை நோக்கி அம்மா இவரே உம் மகன் என்றும், சீடரை நோக்கி இவரே உன் தாய் என்றும் (யோவா 19:26) மொழிந்தார். தாம் அழைத்த சீடர்கள், தம்மால் குணம் பெற்ற மக்கள் தம்மைப் பின்தொடர்ந்தவர்கள் என்று எல்லாத் தரப்பினரும் தம்மைக் கைவிட்டதாய் உணர்ந்தார் இயேசு. ஒரு வேளை தந்தையும் தம்மைக் கைவிட்டாரோ என்று எண்ணிய போது தான் என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று உரக்கக் கத்தினார். எல்லாவற்றையும் முடித்ததாய் எண்ணிய போது, அவருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தாகமாய் இருக்கிறது (யோவா 19:28) என்று சொன்னார். அவர்கள் கொடுத்த புளித்த திராட்சை இரசத்தைக் குடித்து விட்டு எல்லாம் நிறைவேறிற்று (யோவா 19:30) என்று கூறினார். இந்த எல்லாம் நிறைவேறிற்று என்று அவர் கூறியதில் தான் பல இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் நிறைவேறின.


💞அதாவது அவருடைய சரீர வாழ்வு நிறைவேறியது. முன் குறித்து வைக்கப்பட்ட அடையாளங்கள், இறைவாக்குகள் நிறைவேறின. தந்தையாகிய கடவுள் அனுப்பிய, மனித இரட்சிப்பின் பணி முடிந்தது. உயிர்ப்பு என்ற தொடக்கம் பிறக்க அவருடைய பாடுகள் நிறைவேறின. எல்லாவற்றையும் நிறைவேற்றிய பிறகு தான் தந்தையை நோக்கி இறுதியாக அவர் அழைத்தார். அப்போது தான் தந்தையே உமது கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்(லூக்:23:46) என்று ஜெபித்து உயிர் துறந்தார். இயேசுவின் வாழ்வு இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே ஒரு ஜெபமாக இருந்தது. இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே ஒரு பாலமாக அமைந்தது. அவருடைய ஜெபம் மனிதனை இறை தந்தையிடம் அழைத்துச் செல்வதாக இருந்தது. மனிதனையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக அமைந்தது.


✝சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்.

1. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)

ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.

2. “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)

3.“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).

4.“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).

ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.

5. “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார்.

6. “முடிந்தது” (யோவான் 19:30)

கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

 (i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.

(ii) பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.

(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.

(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.

(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.

(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

7. “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)

இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக் கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார்.

வியாழன், 29 மார்ச், 2018

உலக இட்லி தினம் மார்ச் 30


உலக இட்லி தினம் மார்ச் 30  !! வரலாறு ஒரு பார்வை!!

இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும்.


தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.
எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும்.


இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அதில்:-
செட்டிநாடு இட்லி
மங்களூர் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
சவ்வரிசி இட்லி
சேமியா இட்லி
சாம்பார் இட்லி
குஷ்பு இட்லி
குட்டி இட்லி
சாம்பார் இட்லி
பொடி இட்லி
இந்நிலையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் (மார்ச் 30-ம் தேதி) உலக இட்லி தினமாக கொண்டாடி வருகின்றனர்.


"இட்லி" தினம் பாஸ்.. காலையில என்ன சாப்ட்டீங்க?

அந்த தினம், இந்த தினம் போல என்று இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். அப்படிப்பட்ட "சூப்பர் டூப்பர் புட்" இட்லி.
காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. கூடவே கெட்டிச் சட்னியும், கொஞ்சம் சாம்பாரும் கூடவே கடித்துக் கொள்ள வடையும் வைத்து விட்டால் ஆஹாஹா. ஓஹோஹோ என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடலாம்.

அடிச்சுக்கே ஆளே இல்லை
எந்த உணவாக இருந்தாலும் சரி, இட்லியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த உணவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு இட்லியும் சாம்பார், சட்னியும் இல்லாவிட்டால் அன்றைய நாள் பெரிய சோக நாள்தான்.
ஜீரணிக்கக் கூடியது


எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் சரி மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இதனால்தான் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளின்போது இட்லி சாப்பிடச் சொல்கிறார்கள்.
குப்புன்னு உப்பலாக
இப்போதெல்லாம் விதம் விதமான இட்லி வந்து விட்டது. குஷ்பு இட்லி என்று கூட பெயர் வைத்து கொண்டாடி குதூகலமாக சாப்பிடும் பரம்பரை நமது தமிழ்நாட்டுப் பரம்பரை.


இட்லி தினம்
ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக சமீப ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் இதுதொடர்பாக பிரமாண்ட விழா வைத்தனர். 50 கிலோ இட்லியை கத்தியால் வெட்டி கொண்டாடினர்.
விதம் விதமான இட்லிகளுடன் கண்காட்சி
இந்த முறையும் சென்னையில் வித்தியாசமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு இட்லி தினத்தை பிரமாதமாக கொண்டாடிய அதே கண்ணதாசன் நகர் 'இட்லி கிங்' இனியவன்தான் இந்த முறை பிரமாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


மல்லிப்பூ இட்லி
இனியவன் விதம் விதமான இட்லிகளை தயாரிப்பதில் கில்லாடியாவார். கடந்த 10 வருடமாக இட்லி விற்பனையில் கிங்காக இருந்து வருகிறார். இவரது மல்லிப்பூ இட்லி ரொம்பப் பிரபலமானது. தமிழகத்தின் பிரபலமான இட்லி வியாபாரிகளில் இனியவனுக்கு முதலிடம் உண்டு.


2000 வகை இட்லிகள்
இந்த ஆண்டு இனியவன் நடத்திய கண்காட்சியில் 2000க்கும் மேற்பட்ட இட்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது கடந்த ஆண்டை விட ஆயிரம் இட்லி அதிகமாகும்.
விதம் விதமாக
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும், பல்வேறு விழிப்புணர்வுகள் சம்பந்தமாகவும் இட்லி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல உருண்டையாக மட்டும் இல்லாமல் விதம் விதமான டிசைனிலும் இட்லியை வைத்திருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.


உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி

சென்னை: வானத்துக்கு கீழ் உள்ள அனைத்துக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் போது இட்லிக்கு மட்டும் கொண்டாடக் கூடாதா என்ன? ஆம் இன்று உலக இட்லி தினமாகும். அதையொட்டி 2,500 வகையான இட்லிகளின் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். கோயமுத்தூரை சேர்ந்த பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இனியவன் ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது ஒரு இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து அவர் கற்று கொண்ட தொழில் இன்று அவரை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளது.


மேலும் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நேற்று பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இட்லி வகைகளை பார்த்து ரசித்தனர்.
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.


'ஆவி' பேசுகிறது...! இன்று உலக இட்லி தினம்

இன்று, உலக இட்லி தினம். உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது.இட்லிக்கும் வரலாறு உண்டு. தென்னிந்திய உணவு என்பது பொதுவான கருத்து. கி.பி., 920ல் கன்னட மொழியில் சிவகோடி ஆச்சாரியர் எழுதிய 'வத்தாராதனை' என்ற நுாலில் இட்லி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.


கி.பி., 1130ல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நுாலில் இட்லி குறித்து கூறியுள்ளனர். பத்து மற்றும், 12ம் நுாற்றாண்டுக்கும் இடையே தென்னிந்தியா வந்த சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, இட்லியை கொண்டு வந்துள்ளதாக குஜராத்தி வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 'இட்டா' என்ற பெயரில் உளுந்துப்பருப்பும், அரிசியும் சேர்த்து ஆவியில் வேக வைத்து தயார் செய்யும் உணவு, குஜராத்தில் உருவானது என்ற வாதமும் உள்ளது. உணவு வரலாற்றாசிரியர் அசயாவின் கருத்துப்படி, இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்கிறார்.


இதிலும் பல வகை

ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி என இட்லி வகைகள் ஏராளம். தமிழக உணவகங்களில் பரிமாறப்படும் இந்த இட்லி, இப்போது கேரளாவுக்கும் வந்து விட்டது. ரச வடை தயாராவதுபோலவே ரசத்தில் மிதக்கும் இட்லி ரச இட்லி. ஆந்திர மாநிலத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று நெய் இட்லி. தமிழகத்தில் இப்போதும், குஷ்பு இட்லி பிரபலமாகவே இருக்கிறது. இதன் மாவில் சேர்க்கப்படும் இடுபொருட்கள், அதை சேர்ப்பவர்களுக்கு வெளிச்சம் என்று கூறுவோரும் உள்ளனர்.


இட்லி தினம் எப்படி?

கடந்த, 2015ம் ஆண்டு முதல் இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. 'இட்லி கிங்' என்ற பெயரில் அறியப்படும் சென்னையை சேர்ந்த இனியவனும், தமிழக கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜாமணி அய்யரும் சேர்ந்து இட்லி தினம் என்ற கருத்தை செயல்படுத்தினர். அப்படித்தான், மார்ச் 30 தேதி என்ற தினம் இட்லி தினமாக அறிவிக்கப்பட்டது.


இட்லி என்றால் ராமசேரி!

கேரளாவில், இட்லி என்றால் முதலில் வரும் பெயர் ராமசேரி இட்லிதான். பாலக்காட்டிலுள்ள ராமசேரியின் பெயர், இட்லியுடன் பின்னிப் பிணைந்து விட்டது. பொதுவாக கிடைக்கும் இட்லியை போல் இல்லாமல், ராமசேரி இட்லி, மெல்லியதாகவும், தட்டையானதாகவும் இருக்கும்; பாலக்காட்டை சேர்ந்தவர்கள், இதை அப்பம் என்றும் அழைக்கின்றனர். பாலக்காடு மட்டை அரிசி (சிவப்பு அரிசி) அல்லது பொன்னி அரிசியை பயன்படுத்தி ராமசேரி இட்லி தயார் செய்கின்றனர். சுவையே அதன் தனிச்சிறப்பு.


முற்காலங்களில் மண் பானையில் தயார் செய்துள்ளனர். தற்போது, மண் பானைகளுக்கு பதிலாக பாத்திரங்கள் வந்து விட்டன. மண் பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்த பிறகு, பானையின் வாய் பகுதியை நுாலினால் வலை போல அமைத்து மூடி கட்டி விடுவர். அதன் மீது துணி விரித்து, அதில் மாவை ஊற்றி, ஆவியில் வேகச்செய்வதே ராமசேரி இட்லி. இட்லியை பலா மரத்தின் இலையில் வைத்து விடுவர். மூலிகை தரம் வாய்ந்த இவ்விலையினால் ராமசேரி இட்லி யின் சுவை மேலும் அதிகரிக்கிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்,ஜீதமிழ்,தினமலர்.

திங்கள், 26 மார்ச், 2018

உலக நாடக அரங்க தினம் ( World Theater Day ) மார்ச் 27


உலக நாடக அரங்க தினம் ( World Theater Day )  மார்ச் 27 .

உலக நாடக அரங்க நாள் ( World Theater Day ) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


எக்காலத்திலும் அழியாது நாடக கலை

சினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாட கம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள்.
ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடு த்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம். இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள்.
இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. 1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது. சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடி யோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.
இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றோர் காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை. ‘தியேட்டர் ஆஃப் மகம்‘ மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருகிறார் மதுவந்தி அருண். ‘சக்தி’, ‘சிவசம்போ’ நாடகங்களை தொடர்ந்து தற்போது, ‘பெருமாளே’ என்ற நாடகத்தை நடத்தி வரும் அவரிடம், இன்றைய நாடகம் பற்றி பேசியபோது... ‘’நாடகம் நலிந்து போய்விட்டது.
நாடகக் கலை மறைந்து போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். எங்கள் குடும்பம் கல்வி நிறுவனங்களை நல்ல நிலையில் நடத்தி வருகிறது. நான் நினைத்தால் சினிமாவுக்கோ, தொலைக்காட்சிக்கோ சென்றிருக்க முடியும். ஆனால் நாடகத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். இன்றைய இளை ஞர்களிடம் நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறது. சபாக்களில் நாடகம் போட்டால் இளைஞர்கள் அதிகமாக வருகிறார்கள். எனது அப்பா (ஒய்.ஜி.மகேந்திரன்), எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றவர்கள் சினிமாவிலும் நாடகத்திலும் பயணிக்கிறார்கள்.
பாலிவுட்டில் நசிருதீன் ஷா உள்பட பல திரைப்பட கலைஞர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள நாடகத்தில் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா நட் சத்திரங்கள் மட்டும் நாடகம் என்றால் விலகிப் போகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் நாடகம் பார்க்கவாவது வரவேண்டும். கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை.
நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலையை ஒப்பி டும்போது இப்போது சற்று மாற்றம் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், சினிமாவை விட பத்து மடங்கு நாடகத்தின் மேல் மதிப்பும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர்களை கொண்டாடுகிறார் கள். நாடகம் ஒன்றில்தான் பாராட்டோ, திட்டோ நேருக்கு நேர் கிடைக்கும். அதிலிருக்கும் த்ரில்லே தனி. நாடக கலை அழிகிற கலையாக இருந்திருந்தால் சினிமா வந்த பத்து ஆண்டுக்குள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். என் தலைமுறை வரை அது வந்திருக்கிறது என்றால் எந்த காலத்திலும் அழியாத அற்புத கலை நாடக கலைதான்’’ என்கிறார் மதுவந்தி அருண்.


உலக அரங்க தினமும் (World Theater Day) அது தொடர்பான சிந்தனைகளும்
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என்று வருஷம் முழுதும் ஏதாவது ஒரு நாள் எது குறித்தாவது அல்லது யார் குறித்தாவது கொண்டாடப் பட்டு வருகிறது. சில பரவலாக அறியப் படுகின்றன. சில நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அதன் சர்ச்சைத் தன்மையைப் பொருத்து ஊடகங்களாலேயே பிரபலப் படுத்தப் படுகின்றன. சில அப்படி ஒன்று இருப்பதே அறியப்படாமல், உலகின் எங்கோ சில மூலைகளில் சின்னச் சின்னக் குழுக்களால் மட்டுமே அனுசரிக்கப் பட்டு நமக்கும் தெரியாமல் நம்மைக் கடந்து போய் விடுகின்றன. அந்த அளவில், ஒவ்வொரு வருஷமும் மார்ச் இருபத்தேழாம் நாள் ‘உலக அரங்க தினமாக’(World Theater Day) அறிவிக்கப் பட்டு உலகின் பல நாடுகளில் நடனம், நாடகம் போன்ற நிகழ்கலைகளின்(Performing Arts) வழியாக விளம்பரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ எதுவும் இன்றிக் கொண்டாடப் பட்டு வருவது, நிகழ்கலைத் துறை சார்ந்த ஆர்வலர்களிலேயே நிறைய பேருக்குத் தெரியாது.
சர்வ தேச அரங்கப் பயிலகம்(International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-
ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப் பட்டது.
இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல், ஹெல்சிங்கியில் நடந்த ITI-இன் ஒன்பதாவது உலக சம்மேளனத்தின் போது, ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அது 1962-
ஆம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது.
1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட நூறு ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது..
\இந்த உலக அரங்க தினத்தின் முக்கியமானதும் கவனத்துக்குரியதுமான அம்சம், ஒவ்வொரு வருஷமும் இந்த நாளில், சர்வதேசத் தரம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவரின் மூலம் உலக அரங்க தினச் செய்தி என்று ஒன்று வெளியிடப் படுவதாகும்.. முதலாம் ஆண்டுச்செய்தி(1962), நாடகம் மட்டும் அல்லாது, கவிதை, ஓவியம், நாவல், சினிமா என்று பல்துறைகளிலும் முத்திரை பதித்த ஃபிரெஞ்சு இலக்கியகர்த்தாவான Jean Cocteau என்பவரால் வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தி-ஆசிரியர்களின் வரிசையில், ஆர்தர் மில்லர், பீட்டர் ப்ரூக், பாப்லோ நெருடா, ரிச்சர்ட் பர்டன், யூஜின் அயனஸ்கோ, மார்டின் எஸ்லின், எட்வர்ட் ஆல்பி, கிரீஷ் கர்னார்ட் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இந்த ஆண்டின் செய்தியை அளித்திருக்கும் Dario Fo ரொம்பவுமே விசேஷமானவர். 1997-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் இந்த ஃபோ. அமைப்பு சாரா இடது சாரி நாடகாசிரியரான இவர், நாடக நடிகையும் பெண்ணிய வாதியுமான தனது மனைவி
Franca Rame–உடன் இணைந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய கால கட்டத்தில் இத்தாலி முழுவதும் தனது அதிகார-எதிர்ப்பு நாடகங்களை நிகழ்த்திப் பரபரப்பை உண்டு பண்ணியவர்.
இவரது நாடகங்கள், இத்தாலியில் பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி-இயக்கக் காலத்தில் பிரபலமாக இருந்த ‘காமெடியா டெல் ஆர்ட்டீ’ என்ற நாடோடித் தெருநாடகக் குழவினரின் அங்கத(Satire) நாடக வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மூலம் சமகால அரசியல், சமூக, மத அமைப்புக்களை நையாண்டி செய்ததாலும், இத்தாலியின் பாசிச அதிகார மையத்தைக் கேள்வி கேட்டதாலும் இவர் அரசின் கோபத்துக்கு ஆளானார். இவரது நாடகக்குழு பல வருஷங்களுக்குத் தடை செய்யப் பட்டது.
1970-இல், அமைப்பை எதிர்த்துக் கலகம் செய்த ஓர் இத்தாலிய ரயில்வே தொழிலாளி போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டு, அதை வெறும் விபத்தாய்ச் சித்தரித்து மூடி மறைக்க முயற்சிகள் நடந்த போது,
‘ஒரு கிளர்ச்சிக்காரனின் அகால மரணம்’(The Accidental Death of an Anarchist) என்ற நாடகத்தை எழுதி, ஃபோ இத்தாலி முழுதும் மேடை ஏற்றினார். ஃபோவின் இத்தகைய கடும் அரசியல் விமர்சன நடவடிக்கைகளால் எல்லாம் கோபம் கொண்ட இத்தாலிய போலீஸ், நாடக நடிகையும் இவரது மனைவியுமான ஃப்ராங்கா ரேமைக் கடத்திக் கொண்டு போய் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைத்துப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியது. இது நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே மீண்டும் மேடையில் தோன்றிய ரேம் இன்னும் அதிக ஆவேசத்தோடும் புது உத்வேகத்தோடும் பாசிச எதிர்ப்புத் தனி-வசனங்களை(Monologue) மேடைகளில் நடித்துக் காட்டி அரசின் நரம்புகளை அதிர வைத்தார்.
(கிட்டத்தட்ட இதற்கு இணையான சம்பவம் இந்தியாவிலும் நடந்தது. 1989-ஆம் ஆண்டு, டில்லியருகே, ஒரு தெரு நாடக நிகழ்வின் போது தெருநாடகக் கலைஞர் சஃப்தார் ஆஸ்மி ஓர் அரசியல் கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் நடந்து முடிந்த இரண்டாவது நாளே, மனம் தளராத அவரது மனைவி மொல்லாய்ஷ்ரீ ஆஸ்மி அதே இடத்தில், பாதியில் நின்று போன அதே நாடகத்தைத் தைரியமாக மீண்டும் நடத்திக் காட்டினார்.) ஒத்த எண்ணங்களும், மன இணக்கமும், அசாத்தியக் கொள்கை உறுதியும் கொண்ட இத்தகைய நாடகத் தம்பதியர், உலக நாடக வரலாற்றில் மிகவும் அபூர்வமாகவே தென்படுகிறார்கள்.
அந்த அளவில் டேரியோ ஃபோவின் இந்த ஆண்டைய உலக அரங்க தினச் செய்தி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில், அவர் எப்படிக் கத்தோலிக்க மத அமைப்பு, தனது மறுமலர்ச்சி எதிர்வினைகளாகப் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ‘காமெடியா’ தெருநாடகக் குழுவினரை இத்தாலியை விட்டே ஓடஓட விரட்டியது என்பதையும், அப்போதிருந்த போப்பாண்டவர் எப்படி மற்ற மத குருமார்களின் தூண்டுதலின் பேரில் ரோம் நகரத்து Tordinona நாடக அரங்கைத் தகர்த்தெறிய உத்தரவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் நாடகம் என்பது சமயத்துக்கு எதிரானதும், அபசாரமானதும், ஆபாசமானதும், யாருக்கும் பயனற்றதுமான மக்களைத் திசை திருப்பும் மலிவான ஒன்றாகவே சித்தரிக்கப் பட்டிருந்தது. அதனால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு அதன் வளர்ச்சி கவலையை அளித்தது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் நாடகம் பற்றி எவரும் லட்சியம் கூடப் பண்ணுவதில்லை என்கிற விஷயம் ஃபோவை மிகவுமே வேதனை கொள்ளச் செய்கிறது. ஒரு மிகப் பெரிய ‘கலாச்சார நெருக்கடி’க்கு ஆளாகி இருக்கும் இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், அழிந்து கொண்டிருக்கும் அரங்கத்தை மீட்டெடுத்து, அன்றைய காமெடியா டெலார்ட்டீயைப் போலவே மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இன்றைய இளம் நாடகக் காரர்கள் முனைப்பாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம் என்பதே ஃபோ விடுக்கும் செய்தியின் சாராம்சமாகும்.
உலக அரங்க தினம் கொண்டாடப் படுவதென்பது ஒரு கலை வடிவை அழியாமல் காப்பாற்றிக் கொடுப்பது, அல்லது அன்றைய நாளில் மக்களைப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்விப்பது என்கிற மாதிரியான வெறும் ஒரு அடையாள நிகழ்வாய்க் குறுகி விடாமல் பார்த்துக் கொள்வதிலேயும் ஐ.டி.ஐ. கவனமாக இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஐ.டி.ஐ.-ஜெர்மனியும் ஐ.டி.ஐ.-சூடானும் இணைந்து, 2004-இல் சூடானின் உள்நாட்டுப் போர் வெடித்திருந்த பழங்குடிப் பகுதிகளில் போய்த் தெரு நாடகங்களை நிகழ்த்தியது. அது மட்டுமல்லாமல் அந்தப் பிரதேசத்தில் அதுவரை சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு பழங்குடி மக்களிலிருந்தே ஆட்களைத் திரட்டி, அவர்களை அந்த நாடகங்களில் பங்கேற்கிறவர்களாகவும், பார்வையாளர்களாகவும் ஈடுபடுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படிப் பங்கேற்றவர்களில் இரண்டு தரப்பையும் சேர்ந்த போர் வீர்களும். போலீஸ்காரர்களும் கூட இருந்தனர். இத்தகைய கலை நிகழ்ச்சிகளின் போது, இரண்டு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இந்த வகையில் உலக அரங்க தினம், பிற தினங்களைப் போலன்றிப் பல தளங்களில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறது. இது அருகிக் கொண்டிருக்கும் ஒரு கலை வடிவைப் பாதுகாப்பது என்ற அளவோடு மட்டும் நின்று விடாமல், அதை மண்ணும் மாந்தரும் பயன் பெறுமாறு எப்படி வளர்த்தெடுப்பது என்பதிலும் நமக்கு அக்கறை இருக்கிறது. சங்க காலத்தில், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மன்னர்களிடையே போய்க் கவிதை பாடிப் போரை நிறுத்திய புலவர்களைப் பற்றியெல்லாம் நாம் படித்திருக்கிறோம். தனி மனிதச் செயல்பாடான கவிதைக்கே அத்தனை ஆற்றல் இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த குழுச் செயல்பாடான நாடகத்திற்கு அதை விட இன்னும் அதிக ஆற்றல் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கலை வடிவின் மொத்த உள்-ஆற்றலையும் சமூகம் சரியாய்ப் பயன் படுத்திக் கொண்டதா என்பது சந்தேகமே.
Theater என்னும் சொல்லை நாடகம் என்று மொழி பெயர்ப்பது சரியாகப் படவில்லை. அப்படிச் செய்தால், அது மேடை நாடகம் போன்ற ஒரு குறிப்பிட்ட வடிவத்தையே சுட்டும் சொல்லாகக் குறுகி விடுகிற அபாயங்கள் உண்டு. மாறாக, அது நாடகம், நாட்டியம், இசை-நாடகம்(Opera), நிழல்க்கூத்து(Shadow theater),
பாவைக்கூத்து(puppet theater),
தெருக்கூத்து(Folk Theater) என்று பல விரிந்த வெளிகளில் பரவி நிற்பதால்,
Theater-ஐ அரங்கம் என்றே எழதுவது சரி என்று தோன்றுகிறது. இந்த அரங்கம் என்னும் சொல் நான்கு புறமும் சுவர்கள் சூழ்ந்த ஒரு மூடிய கான்க்ரீட் கூடமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிரற்ற சுவர்களுக்குப் பதிலாக, அது நாலாபுறமும் உயிருள்ள மக்களே சூழ்ந்த திறந்த வெளியாகத் தோற்றம் கொள்வதும் இதில் சாத்தியம் என்பதால், ‘அரங்கத்தின்’ வீச்சு இன்னும் அதிக ஆற்றல் கொண்டதாகிறது.
உலகில் நாடகம் தோன்றிய விதம் பற்றிய சுவாரஸ்யமான புராணக் கதை ஒன்று இருக்கிறது. பிரம்மன் ஐந்தாவது வேதமாக நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கி, அதைப் பரத முனிவரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட பரதரும் தனது நூறு புத்திரர்களையும், பிரம்மன் அனுப்பிய சில தேவலோகத்துக் கந்தர்வர்களையும் வைத்து உலகின் முதல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அதன் பார்வையாளர்களாகத் தேவர்களும், அசுரர்களும் மனிதர்களும் அரங்கில் கூடி யிருக்கின்றனர்.
நாடகத்தின் போக்கு தேவர்களுக்கு சாதகமாக இருக்கவே அசுரர்கள் கோபம் கொண்டு நடிகர்களின் பேச்சு, உடல் இயக்கம் முதலியவற்றைத் தங்களது மாய சக்தியால் செயலிழக்கச் செய்து நாடகத்தைத் தொடர முடியாமல் செய்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தேவர்கள் அசுரர்களைத் தாக்க, நாடகம் பாதியில் நின்று போய்க் கலகத்தில் முடிகிறது. இந்த சமயத்தில், நாட்டிய சாஸ்திரத்தைப் பரதரிடம் கொடுத்த பிரம்மன் தலையிட்டு, அசுரர்களை அழைத்துப் பேசி, நாடகத்தின் மேன்மைகளைப் பிரசங்கம் செய்து, நாடகத்தைத் தொடர்ந்து நடத்த விடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இந்தக் கதையைத் தனது ‘உலக அரங்க தினச் செய்தி’யில்(2002) மேற்கோள் காட்டும் கிரீஷ் கர்னார்ட், தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார். “அதற்கப்புறம் அந்த நாடகம் தொடர்ந்து நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், நாடகாசிரியன், நடிகன், பார்வையாளன் ஆகிய மூவரும் இடைவெளியற்ற ஒரு தொடர்ச்சியாய் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரு நாடகத்தில் இவற்றில் எந்த ஒன்று ஸ்திரத் தன்மை இழந்து வெடிக்கிற போதும் அது அந்த நாடகத்தின் போக்கையே மாற்றி எழுதி விடுகிறது. இந்த அதிசயம் வேறு எந்த ஊடகத்திலும் சாத்தியம் இல்லை."
உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து இசையும், இசையிலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் பிறந்ததாய்ச் சொல்லும் சுவையான பழந்தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அப்படியானால், அடுத்த கட்டமாக நாடகத்திலிருந்து என்ன பிறக்கும்? பரதர் நிகழ்த்திய முதல் நாடகத்தில் நேர்ந்தது போல் கலகமும் பிறக்கலாம். அல்லது, சூடானின் கலகப் பிரதேசங்களில் நிகழ்த்தப் பட்ட நவீன நாடகங்களில் நேர்ந்த மாதிரித் தீர்வுகளும் பிறக்கலாம். (அவை தற்காலிகமானவயாக இருந்தாலும் கூட). கலகம் இன்றித் தீர்வுகள் இல்லை. கேள்விகள் இன்றிக் கலகம் இல்லை. கேள்வியிலிருந்தே கலகம் பிறக்கிறது. கலகத்திலிருந்தே தீர்வு பிறக்கிறது. அந்த அளவில். கேள்வி, கலகம், தீர்வு அனைத்துமே ஏதோவொரு விதத்தில் எதிர்வினைகளே. இந்த எதிர் வினைகள் தான் அரங்கத்தை, எத்தனை சோதனைகளுக்கிடையேயும், எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


மார்ச் 27. உலக அரங்காற்று தினம்
அ.ராமசாமி.

இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை  உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது. 1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக்  கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.
புதிய நாடகங்களை நிகழ்த்துதல், கருத்தரங்குகள்,  மாநாடுகளை நடத்துதல் என அரங்கியலாளர்கள் திட்டமிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான  அரங்கியல் செய்தியை அளிப்பதற்கு ஒரு அரங்கியலாளனைத்  தேர்வு செய்வது தான் அந்த நாளின் முக்கியத்துவம். தேர்வு செய்யும் பொறுப்பைத் தன்வசம் வைத்திருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனம் யாரைத் தேர்வு செய்கிறது என ஒவ்வொரு அரங்கியலாளனும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். தேர்வு செய்யப்பட்டவர் உலக சமாதானப் பண்பாட்டிற்கு அரங்கியல் ஆற்றவேண்டிய செய்தியை வழங்குவார்.
இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரங்க விரும்பிகளும் நாடக நிகழ்வுகளின் தொடக்கமாக நினைக்கின்றனர். அதன் முனைப்பு காட்டுபவர்கள் பாரிஸ் நகரத்தினர். இப்போது ஏறத்தாழ 100 கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனங்கள் அந்நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.முதல் ஆண்டிற்கான(1962) செய்தியை எழுதியவர் பிரெஞ்சு நாட்டின் ழான் காக்தோ. அந்த நிகழ்வு நடந்தது ஹெல்சிங்கியில். அவரைத் தொடர்ந்து அரங்காற்று தினச் செய்தியை வழங்கியோர் பட்டியல் வருமாறு:
1962 - ழான் காக்டௌ
1963 - ஆர்தர் மில்லர்
1964 லாரன்ஸ் ஒலிவர் -ழான் லூயிஸ் பர்ரோல்
1965 - யாரோ / யார் வேண்டுமானாலும்
1966 _ ரெனெ மாஹெ ( யுனெஸ்கோவின் இயக்குநர்)
1967 - ஹெலன் வெய்கல்
1968 - மிகுயெல் ஏஞ்சல் ஆஸ்ட்ரியஸ்
1969 - பீட்டர் புரூக்
1970 - டி. சாஸ்டகோவிச்
1971- பாப்லோ நெருடா
1972 - மவுரிஷ் பிஜார்ட்
1973- லூசினோ விஸ்கோண்டி
1974 - ரிச்சர்ட் பர்டன்
1975 - எலைன் ஸ்டீவர்ட்
1976- யூஜின் அயனெஸ்கோ
1977 - ரடு பெலிகன்
1978 - தேசியச் செய்தி
1979 -  தேசியச் செய்தி
1980 -  ஜனுச் வார்மின்ஸ்கி
1981 - தேசியச் செய்தி
1982- லார்ஸ் அப்மல்ம்போர்க்
1983- அமடோவ் மக்தர் ம்பொவ் (யுனெஸ்கோ இயக்குநர்)
1984 - மிகைல் ட்சரெவ்
1985 - அந்த்ரெ லூயிஸ் பெரினெட்டி
1986 - வொலெ ஷொயுங்க
1987- அண்டொனியொ களா.  Antonio GALA
1988- பீட்டர் புருக்
1989 - மார்டின் எஸ்லின்
1990 - கிரில் லவ்ரோவ்
1991 - பெடரிக்கோ மேயர்  (யுனெஸ்கோ இயக்குநர்)
1992 - ஜார்ஜ் லவெல்லி - ஆர்த்ரோ உஸ்லர் பெய்ட்ரி
1993 -எட்வர்ட் ஆல்பி
1994- வல்லெவ் ஹவெல்
1995 - ஹம்பெர்டோ ஒர்ஸ்னி
1996 - ஷாடல்லா வான்னொஸ்
1997- ஜ்யெங் ஓக் கிம்
1998 - சர்வதேச அவைக்காற்று நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டின் செய்தி
1999 -விக்டிஸ் ஃபின்பகடடோட்டிர்
2000 - மைக்கேல் ட்ரெம்ப்ளே
2001 - லகோவோஸ் கம்பனெல்லிஸ்
2002 - க்ரிஷ் கர்னாட்
2003 - டன்க்ரெட் டோர்ஷ்ட்
2004- ஃபாதியா எல் அஸ்ஸெல்
2005- அரிய்னெ ம்னொச்கினெ
2006 - விக்டர் ஹ்யுகோ ரஸ்கொன் பண்டா
2007 - சுல்தான் பின் மொகம்மது அல் ஹாஸிமி
2008 - ராபர் லெபச்
2009 - அகஸ்டோ போவெல்
2010 - ஜுடி டென்ச்
2011 - ஜெசிகா எ. காஹ்வா
2012 ஜான் மால்கோவிச்
2013 டெரியோ போ
2014 -ப்ரெட் பெய்லி.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் அரங்கியல் ஆளுமையால் எழுதப்படும் நாடகதினச் செய்தி 20க்க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னால் வாசிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்கள் மூலம் பரப்படும் அரங்கியல் செய்தியை அனைத்துக் கண்டத்து மக்களும் கேட்டுப் பரிமாறிக் கொள்ளும்போது அன்பையும் அமைதியையும் பரிமாற்றம் செய்யும் உணர்வு நிலையை உருவாக்குவார்கள். இந்த ஆண்டுச் செய்தியையார் வழங்கப்போகிறார்கள்.?