வியாழன், 29 மார்ச், 2018

உலக இட்லி தினம் மார்ச் 30


உலக இட்லி தினம் மார்ச் 30  !! வரலாறு ஒரு பார்வை!!

இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும்.


தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.
எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும்.


இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அதில்:-
செட்டிநாடு இட்லி
மங்களூர் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
சவ்வரிசி இட்லி
சேமியா இட்லி
சாம்பார் இட்லி
குஷ்பு இட்லி
குட்டி இட்லி
சாம்பார் இட்லி
பொடி இட்லி
இந்நிலையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் (மார்ச் 30-ம் தேதி) உலக இட்லி தினமாக கொண்டாடி வருகின்றனர்.


"இட்லி" தினம் பாஸ்.. காலையில என்ன சாப்ட்டீங்க?

அந்த தினம், இந்த தினம் போல என்று இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். அப்படிப்பட்ட "சூப்பர் டூப்பர் புட்" இட்லி.
காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. கூடவே கெட்டிச் சட்னியும், கொஞ்சம் சாம்பாரும் கூடவே கடித்துக் கொள்ள வடையும் வைத்து விட்டால் ஆஹாஹா. ஓஹோஹோ என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடலாம்.

அடிச்சுக்கே ஆளே இல்லை
எந்த உணவாக இருந்தாலும் சரி, இட்லியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த உணவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு இட்லியும் சாம்பார், சட்னியும் இல்லாவிட்டால் அன்றைய நாள் பெரிய சோக நாள்தான்.
ஜீரணிக்கக் கூடியது


எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் சரி மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இதனால்தான் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளின்போது இட்லி சாப்பிடச் சொல்கிறார்கள்.
குப்புன்னு உப்பலாக
இப்போதெல்லாம் விதம் விதமான இட்லி வந்து விட்டது. குஷ்பு இட்லி என்று கூட பெயர் வைத்து கொண்டாடி குதூகலமாக சாப்பிடும் பரம்பரை நமது தமிழ்நாட்டுப் பரம்பரை.


இட்லி தினம்
ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக சமீப ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் இதுதொடர்பாக பிரமாண்ட விழா வைத்தனர். 50 கிலோ இட்லியை கத்தியால் வெட்டி கொண்டாடினர்.
விதம் விதமான இட்லிகளுடன் கண்காட்சி
இந்த முறையும் சென்னையில் வித்தியாசமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு இட்லி தினத்தை பிரமாதமாக கொண்டாடிய அதே கண்ணதாசன் நகர் 'இட்லி கிங்' இனியவன்தான் இந்த முறை பிரமாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


மல்லிப்பூ இட்லி
இனியவன் விதம் விதமான இட்லிகளை தயாரிப்பதில் கில்லாடியாவார். கடந்த 10 வருடமாக இட்லி விற்பனையில் கிங்காக இருந்து வருகிறார். இவரது மல்லிப்பூ இட்லி ரொம்பப் பிரபலமானது. தமிழகத்தின் பிரபலமான இட்லி வியாபாரிகளில் இனியவனுக்கு முதலிடம் உண்டு.


2000 வகை இட்லிகள்
இந்த ஆண்டு இனியவன் நடத்திய கண்காட்சியில் 2000க்கும் மேற்பட்ட இட்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது கடந்த ஆண்டை விட ஆயிரம் இட்லி அதிகமாகும்.
விதம் விதமாக
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும், பல்வேறு விழிப்புணர்வுகள் சம்பந்தமாகவும் இட்லி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல உருண்டையாக மட்டும் இல்லாமல் விதம் விதமான டிசைனிலும் இட்லியை வைத்திருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.


உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி

சென்னை: வானத்துக்கு கீழ் உள்ள அனைத்துக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் போது இட்லிக்கு மட்டும் கொண்டாடக் கூடாதா என்ன? ஆம் இன்று உலக இட்லி தினமாகும். அதையொட்டி 2,500 வகையான இட்லிகளின் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். கோயமுத்தூரை சேர்ந்த பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இனியவன் ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது ஒரு இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து அவர் கற்று கொண்ட தொழில் இன்று அவரை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளது.


மேலும் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நேற்று பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இட்லி வகைகளை பார்த்து ரசித்தனர்.
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.


'ஆவி' பேசுகிறது...! இன்று உலக இட்லி தினம்

இன்று, உலக இட்லி தினம். உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது.இட்லிக்கும் வரலாறு உண்டு. தென்னிந்திய உணவு என்பது பொதுவான கருத்து. கி.பி., 920ல் கன்னட மொழியில் சிவகோடி ஆச்சாரியர் எழுதிய 'வத்தாராதனை' என்ற நுாலில் இட்லி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.


கி.பி., 1130ல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நுாலில் இட்லி குறித்து கூறியுள்ளனர். பத்து மற்றும், 12ம் நுாற்றாண்டுக்கும் இடையே தென்னிந்தியா வந்த சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, இட்லியை கொண்டு வந்துள்ளதாக குஜராத்தி வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 'இட்டா' என்ற பெயரில் உளுந்துப்பருப்பும், அரிசியும் சேர்த்து ஆவியில் வேக வைத்து தயார் செய்யும் உணவு, குஜராத்தில் உருவானது என்ற வாதமும் உள்ளது. உணவு வரலாற்றாசிரியர் அசயாவின் கருத்துப்படி, இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்கிறார்.


இதிலும் பல வகை

ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி என இட்லி வகைகள் ஏராளம். தமிழக உணவகங்களில் பரிமாறப்படும் இந்த இட்லி, இப்போது கேரளாவுக்கும் வந்து விட்டது. ரச வடை தயாராவதுபோலவே ரசத்தில் மிதக்கும் இட்லி ரச இட்லி. ஆந்திர மாநிலத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று நெய் இட்லி. தமிழகத்தில் இப்போதும், குஷ்பு இட்லி பிரபலமாகவே இருக்கிறது. இதன் மாவில் சேர்க்கப்படும் இடுபொருட்கள், அதை சேர்ப்பவர்களுக்கு வெளிச்சம் என்று கூறுவோரும் உள்ளனர்.


இட்லி தினம் எப்படி?

கடந்த, 2015ம் ஆண்டு முதல் இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. 'இட்லி கிங்' என்ற பெயரில் அறியப்படும் சென்னையை சேர்ந்த இனியவனும், தமிழக கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜாமணி அய்யரும் சேர்ந்து இட்லி தினம் என்ற கருத்தை செயல்படுத்தினர். அப்படித்தான், மார்ச் 30 தேதி என்ற தினம் இட்லி தினமாக அறிவிக்கப்பட்டது.


இட்லி என்றால் ராமசேரி!

கேரளாவில், இட்லி என்றால் முதலில் வரும் பெயர் ராமசேரி இட்லிதான். பாலக்காட்டிலுள்ள ராமசேரியின் பெயர், இட்லியுடன் பின்னிப் பிணைந்து விட்டது. பொதுவாக கிடைக்கும் இட்லியை போல் இல்லாமல், ராமசேரி இட்லி, மெல்லியதாகவும், தட்டையானதாகவும் இருக்கும்; பாலக்காட்டை சேர்ந்தவர்கள், இதை அப்பம் என்றும் அழைக்கின்றனர். பாலக்காடு மட்டை அரிசி (சிவப்பு அரிசி) அல்லது பொன்னி அரிசியை பயன்படுத்தி ராமசேரி இட்லி தயார் செய்கின்றனர். சுவையே அதன் தனிச்சிறப்பு.


முற்காலங்களில் மண் பானையில் தயார் செய்துள்ளனர். தற்போது, மண் பானைகளுக்கு பதிலாக பாத்திரங்கள் வந்து விட்டன. மண் பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்த பிறகு, பானையின் வாய் பகுதியை நுாலினால் வலை போல அமைத்து மூடி கட்டி விடுவர். அதன் மீது துணி விரித்து, அதில் மாவை ஊற்றி, ஆவியில் வேகச்செய்வதே ராமசேரி இட்லி. இட்லியை பலா மரத்தின் இலையில் வைத்து விடுவர். மூலிகை தரம் வாய்ந்த இவ்விலையினால் ராமசேரி இட்லி யின் சுவை மேலும் அதிகரிக்கிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்,ஜீதமிழ்,தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக